16 June 2012

மலையகத்தில் முகம் தொலைந்தவன்...-79


எல்லா மதங்களும் அஹிம்சையைத் தான் பேசுகின்றன .ஆனால் இலட்சக்கணக்கான மண்டையோடுகளைத்தான் அந்த மதங்கள் தங்கள் அகிம்சைக்கு அத்திவாரமாக அமைத்துக் கொண்டு இருக்கின்றன.!
                          (நேற்றுப்போட்ட கோலம் வைரமுத்து) 


மதத்தூண்டல் என்ற தீ அடுத்த நாள் விஸ்வரூபம் எடுத்தது . அறிவுச் சோலையில் இந்து ஆசிரியைகள் வசந்தா டீச்சர் மீதும் மட்டக்களப்பில் இருந்து வந்து தமிழ் படிப்பிக்கும் சரோஜினி டீச்சரும் தான் மதம் மீது காழ்ப்புணர்வில் இப்படிச் செய்கின்றார்கள் என்று இஸ்லாமிய மங்கைகள் கொடிபிடிக்கும் அரசியல் தொடங்கிய போது .


 அது தவறு சட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொறுப்பதிகாரிகள் மீது எப்படி சட்டத்திற்கு கட்டுப்படாமல் வெளிநடப்புச் செய்வது . அப்போது சட்டம் இயற்றியவர்களை ஆதரித்து விட்டு வெளியில் வந்து ஊடகங்களுக்கு திரித்துக் கூறும் சட்டவல்லூணர்களா இவர்கள் ?


இல்லை .படிப்பிக்கும் ஆசிரியர்கள் .என இந்து மாணவிகள் ஒரு புறம் இறங்க ,அங்கே இரு பிரிவு .என் மதமா உன் மதமா 
என்று இடையில் நிறுத்த வேண்டிய மாகாண கல்வி நிறுவாகம் மதவாதிகளின் ஓட்டு அரசியல் பின் தூண்டல் செய்ய . கல்வியில் நுண்ணறிவு தேடாமல் உணர்ச்சியில் பிள்ளைகளை தூண்டிவிட்ட பெற்றோர் . .படிப்பறிவு இல்லாத மதவாதிகள் இது வாழ்வா ?சாவா ?என்று மந்திரிச்சுவிட்ட போதை விற்கும் வியாபாரிகள் .மாணவிகளுக்கு மதப்போதையை வித்துவிட. அதற்கு ஆதரவாக பள்ளிக்கூட வாசலுக்கு வரத்தகுதியில்லாத காடையர்கள் கூட்டம் எல்லாம் ஆதரவு எதிர்ப்பு என்று வர்ண அலங்காரம் பூசி கல்லுவீச்சும் கண்டிப்பும் , உருட்டல் ,மிரட்டல்கள் என்றும் வர அன்பும் அறிவும் போதிக்கும் அறிவுச் சோலை அயோத்தி இராமர் பூமி போல ஆட்டம் கண்டது .



பள்ளி காலவரையின்றி மூடப்பட்டது. 10 வருடம் படித்த படிப்பைக்கொண்டுதான் சாதாரண பரீட்சை எழுதுவார்கள் மூன்று மணித்தியாள தேர்வாக. அது மொத்தப்படிப்பின் சோதனைக்கூடம் . ஆனால் மூடப்பட்டதன் வலி வருட முடிவில் எழுதிய பரீட்சையில் தோற்றவர்களுக்குத் தான் தெரியும்? 


கொடிபிடித்த மதவாதிகள் தூண்டலில் பலியான தம் கனவுகளின் பெறுமதி.! பாடசாலை மூடிய நிலையில் படிப்பிக்க இடம் இல்லை. வசந்தா டீச்சருக்கு. குமரன் சேரிடம் எல்லாரும் எல்லாரும் போய் படியுங்கோ என்ற போது ராகுல் போகவில்லை. சில தினங்களில் கலைத்தாயின் கல்லூரிக்கு அருகில் இருக்கும் கல்வியமைச்சுக்கு சொந்தமான கட்டிடத்தில் டியூசன் அரம்பித்தா வசந்தா டீச்சர் . ஆனால் அதையும் மதவாதிகள் தங்கள் அரசியல் சதுரங்கத்தில் மூடிவிட ஒருத்தரும் படிக்க இடம் இல்லை. குமரன் சேர் சின்னக்கலைத்தாயின் பள்ளியில் டியூசன் எடுத்துக்கொண்டு இருக்க 



.ராகுல் கல்பான என யாரும் படிக்க போகவில்லை. குமரன் சேர் வகுப்பில் படிக்கும் தினேஸ் பிரியாவிற்கு ஹீரோவாக அவதாரம் எடுக்க குமரன் சேர் வகுப்பில் கூடிய மாணவர்கள்குழு தூண்டிவிட கலைத்தாயின் கல்லூரியிலும் மதத்தீ பரவியது . விளைவு 



கலைத்தாயின் கல்லூரியில் கழுத்தறுப்பு ,சந்தேகம் ,பிரிவு என எல்லாம் குட்டையுல் ஊரிய அரசியல் மட்டைகள் என்றதைப் போல ஆளுக்கு ஒரு சிந்தனை 27 மாணவர்கள் மாணவிகளும் மாற்றுச்சிந்தனை. யார் ?யாரை நம்புவது ? இவர்கள் தானே அடுத்த சந்ததிக்கு வரலாறு காட்டிச் செல்ல வேண்டியவர்கள் . ஆனால் வரலாற்றில் பல தவறுகளை ஆசிரியர்கள் சுட்டிக்காட்டுவது இல்லை .முடிவை மட்டும் சொல்லுவார்கள் இந்த ஆண்டில் படித்த எவரும் பல்கலைக்கழகம் போகமாட்டார்கள். என்று " நான் அப்பவே சொன்னேன் என் சாபம் பலித்திட்டது என்று எழுதி வையுங்கோ! 




" எகத்தாளம் போடும் குமரன் சேர் முகம் தெரியாத விட்டில்பூச்சிகள் நம்பும் இவரின் கணிப்பூ வெறும் காதில் பூ .சரிதான் என்று நம்பும் ஆனால் முகம் தொலைந்தவன் ராகுல் கணிப்பூ இவர் வெறும் உலகப்படிப்பில் பூச்சியம் தான் 



. அந்த வகுப்பில் படித்த பலர் இன்று பல்வேறு நிறுவனங்களில் நிமிர்ந்து நின்று வேலைவாங்கும் அதிகாரிகள் பொறுப்பில் இருக்கின்றார்கள். பல்கலைக்கழகம் கொடுக்காத பட்டங்கள் எல்லாம் அவர்களுக்கு வாழ்க்கைப்பாடம் .நல்ல தந்தை, நிறுவாகி ,நண்பர்கள் ,தொழில் வல்லூனர்கள் என்று கொடுத்து இருக்கின்றது . 



ஆனால் அன்று கலைத்தாயின் பள்ளியில் தினேஸ் மதத்தீயைப் பற்றிவைத்த போது இவர் சாபம் ஏன் தூண்டதல் பக்கம் போனது ? தயாளன் தம்பி இதை விடக்கூடாது சட்டம் எல்லாருக்கும் பொது. " இப்படியே போனால் நம் கல்லூரியும் உருப்படாது என்று சொன்னவர் சொல்ல மறந்தது பல! தம்பி எல்லாரும் ஒற்றுமையாக அணிதிரளணும் எங்கள் கல்லூரியும் காப்பாத்தணும் இல்லை மதவாதிகள் கரம் ஓங்கி விடும் என்றபோது தெரியவில்லை இன்னும் 2மாதத்தில் இந்த மாணவர்கள் மாணவிகளுக்கு உயர்தரப் பரீட்சை வரப்போகுது என்று ?"" ?


ஏன் ஏன் இந்த கபட நாடகம் குமரன் சேர்? உங்க வருவாய் ,பதவி ஆசைக்கு நண்பர்களிடம் வன்மம் வலர்த்த கதைக்கு ராகுல் சாட்சி இருக்கு. குறித்து வையுங்கோ நீங்க இருக்கும் வரை இந்தப்பள்ளி நிறுவாகம் ஒரு போதும் திருந்தாதது பாவம் இந்த மின்மினிப்பூச்சிகள் வழிகாட்ட ஒரு ! ஒழுங்கான பொருளியல் ஆசிரியர் அன்றுஇல்லை . இந்தக்கல்லூரியில் அது ஒரு குறை .


மதத்தீ மூட்டிய அல்லக்கைகள் எல்லாம் அறியாது மலையகத்தில் நிலவும் ஆசிரியர் தட்டுப்பாடு . மதப்போதை விற்கும்.வியாபாரிகள் அறியாத செய்தி விஞ்ஞானம் படிக்க ஒழுங்கான பரிசோதனைக்கூடம் இல்லை ,வாக்கு அரசியல் தேடும் வங்குரோத்து மாமாக்கள் எல்லாம் அறியாதது மாணவிகள் இயற்கை உபாதைக்குப் போக உருப்படியான கழிப்பறைகள் நேர்த்தியாக இல்லை. இருப்பதில் எல்லாம் நேற்றுக்கிறுக்கிய பிரவச அறையின் குறியீடுகள் போல கெட்டக்கெட்ட வார்த்தைகள். கரித்துண்டு எழுதிய பேராசியர் மு.வரதராஜான் எழுதா வார்த்தை எல்லாம் அதில் இருக்கும். அதைத் துப்பரவு செய்ய போதிய நீர்த்தடாகம் இல்லை 


.ஐரோப்பிய கழிப்பறையில் ஒரு காலை நாளிழதல் இருந்து படிக்கும் நேரம் எந்த மணமும் வருவதில்லை. 

துப்பரவில் தூய்மை. ஆனால் மனத்தூய்மை, உடல் தூய்மை படிப்பிக்கும் கல்லூரிகளில் வார்த்தைத்தூய்மை எழுத்தில் தூய்மை சொல்லத்தெரிந்த ஆசிரியர்கள் மதத்தீ தூய்மை .மற்றவர்களுக்கு எப்படி சுதந்திர தூய்மையுடன் எப்படி நடக்கணும் என்பதை ஏன் மறந்து போகின்றார்கள்???


15 comments :

கவி அழகன் said...

மனசுக்கு கஷ்டமான பழைய நினைவுகள்

கலா said...

ம்ம்மம்ம் கலோ..கலோ..யாரது உளளே! நான் கதவு தட்டுவது கேட்கவில்லையோ.........?

கலா said...

இன்று எதேச்சையாக... தொலைக்காட்சியில் ஒரு திரைப்படம்
"தோனி" பார்த்தேன் பிரகாஷ்ராஜ் நன்றாக நடித்திருந்தார் பாத்துக்கொண்டா இருந்தேனா... நேரமாகிவிட்டது நளளிரவு 12மணியாகிவிட்டது .பரவாயில்லை
இங்கு யார் இருக்கிறார்களெனப் பார்த்துவிட்டுத் தூங்கலாமெனப் பார்த்தால்... ஒரு காக்கா,குருவியைக்கூடக் காணோம்...
அனைவருக்கும் அதிகாலை வணக்கம்

Yoga.S. said...

இரவு வணக்கம்,நேசன்!மறந்தே விட்டேன் இன்று சனி பதிவு காலையில் வருமென்று.நல்ல வேளை,இப்பவாவது,கலா வந்து தட்டி எழுப்பி விட்டுப் போகிறா,ஹ!ஹ!ஹா!!!!!!!!

Yoga.S. said...

துப்பரவில் தூய்மை. ஆனால் மனத்தூய்மை, உடல் தூய்மை படிப்பிக்கும் கல்லூரிகளில் வார்த்தைத்தூய்மை எழுத்தில் தூய்மை சொல்லத்தெரிந்த ஆசிரியர்கள் மதத்தீ தூய்மை .மற்றவர்களுக்கு எப்படி சுதந்திர தூய்மையுடன் எப்படி நடக்கணும் என்பதை ஏன் மறந்து போகின்றார்கள்???////அதைக் கற்பித்திருந்தால்/கற்றிருந்தால்,இலட்சக் கணக்கில் இழந்திருக்க வேண்டாமே,உயிர்களை??????????????????

Yoga.S. said...

கலா said...
இங்கு யார் இருக்கிறார்களெனப் பார்த்துவிட்டுத் தூங்கலாமெனப் பார்த்தால்... ஒரு காக்கா,குருவியைக்கூடக் காணோம்!////யார் கலையைக் கேட்கிறீர்களா?ஊரில் தான் ஊர் உலா!!!தெரியாதா?ஹ!ஹ!ஹா!!!!!!!

Yoga.S. said...

நல்லதொரு படம் பார்த்திருக்கிறா,கலா!பிரகாஸ் ராசா (பிரகாஷ் ராஜ்)அந்தப் பாத்திரமாகவே,இல்ல,இல்ல உயிர் கொடுத்திருக்கிறார்,அந்த ஆதங்கத் தந்தைக்கு!

Yoga.S. said...

பாடல் தெரிவும் அருமை ,நேசன்!!!!!

தனிமரம் said...

மனசுக்கு கஷ்டமான பழைய நினைவுகள்// வாங்க கவிக்கிழவன் ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ!ம்ம் ,கஸ்ரம் பல இருக்கு பலருக்கு அனுபவம் அப்படி.. நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

ம்ம்மம்ம் கலோ..கலோ..யாரது உளளே! நான் கதவு தட்டுவது கேட்கவில்லையோ// வாங்க கலாப்பாட்டி நலமா . ..கேட்கின்றது ஹீ குரல் வலையில்.

தனிமரம் said...

இரவு வணக்கம்,நேசன்!மறந்தே விட்டேன் இன்று சனி பதிவு காலையில் வருமென்று.நல்ல வேளை,இப்பவாவது,கலா வந்து தட்டி எழுப்பி விட்டுப் போகிறா,ஹ!ஹ!ஹா!!!!!!!!

16 June 2012 10:52// இரவு வணக்கம் யோகா ஐயா. கலாப்பாட்டி அடி போட்டா என்று சொல்லுங்கோ!ஹீ

தனிமரம் said...

அதைக் கற்பித்திருந்தால்/கற்றிருந்தால்,இலட்சக் கணக்கில் இழந்திருக்க வேண்டாமே,உயிர்களை??????????????????

16 June 2012 10:55 /*/ம்ம் உண்மைதான் யோகா ஐயா.

தனிமரம் said...

கலா said...
இங்கு யார் இருக்கிறார்களெனப் பார்த்துவிட்டுத் தூங்கலாமெனப் பார்த்தால்... ஒரு காக்கா,குருவியைக்கூடக் காணோம்!////யார் கலையைக் கேட்கிறீர்களா?ஊரில் தான் ஊர் உலா!!!தெரியாதா?ஹ!ஹ!ஹா!!!!!!!

16 June 2012 10// பாட்டி வலையில் உலாவுவதைக்கேட்டா போல!ஹீ

தனிமரம் said...

நல்லதொரு படம் பார்த்திருக்கிறா,கலா!பிரகாஸ் ராசா (பிரகாஷ் ராஜ்)அந்தப் பாத்திரமாகவே,இல்ல,இல்ல உயிர் கொடுத்திருக்கிறார்,அந்த ஆதங்கத் தந்தைக்கு!

16 June 2012 10//ம்ம் இன்னும் பார்க்கவில்லை நான் கலாப்பாட்டி

தனிமரம் said...

பாடல் தெரிவும் அருமை ,நேசன்!!!!!

16 June 2012 11:04 // நன்றி யோகா ஐயா.