12 June 2012

மலையகத்தில் முகம் தொலைந்தவன் -- -எழுபத்தைந்து

குருவே சரணம் என்பது சராணகதி தத்துவம். குருவின் வழியில் தான் தெய்வத்தைக்காண முடியும். இது புரிதலில் இருக்கும் நிலை. சரனாகதியில் எப்போதும் சந்தோஸம் பிறக்கும் மனதுக்கு . 


அப்படித்தான் யசோ டீச்சரிடம் ராகுல் மன்னிப்புக்கேட்டான்". மன்னிச்சிடுங்க டீச்சர் தப்பு செய்து இருந்தால் . " "இல்ல ராகுல் நான் எதுவும் மனசில் வைத்துக்கொள்ளவில்லை படிப்பிக்கும் முறை வெவ்வேறுதானே . சந்தோஸமாக இருக்கு எல்லாச் டீச்சரும் ராகுல் இப்படி செய்யமாட்டான் என்று சொல்லும் போது கேட்க சந்தோஸம். யுத்தத்தால் ஓடியந்து வசதியான இடத்தில் இருந்துவிட்டால் படிக்க நல்ல வசதி இருந்தும் சிலர் படிக்கணும் என்ற படிக்கும் ஆர்வம் எல்லாருக்கும் வராது இல்லை நீங்க நல்ல பரீட்சை செய்யணும்!


 எனக்கு ஹட்டனில் வேலை நிரந்தரமாக கிடைத்திருக்கு நாளை ஹட்டன் போறன் .






சீலா சொன்னால் கடையில் வேலை செய்து கொண்டுதான் படிக்கின்றீங்க என்று! நல்ல நண்பர்களில் சிலர் மோஸமானவங்கள் இருப்பார்கள் தானே !


" இல்ல டீச்சர் என் நட்புக்கள் முக்கிய உறவுகள் யார் என்று எனக்கு ஒரளவு தெரியும் .மற்றும்படி ஓடும்புளியம் பழமும் தான்.


 "இனிமேல் ராகுலைக் காணும் போது நல்ல பெறுபேறு எடுத்து நல்ல படிப்பு படிக்கும் மாணவனாக பார்க்கணும்


." இல்ல டீச்சர் இதுக்கு மேல நான் யாரையும் படிப்புக்கு! செலவழிக்கச் சொல்லும் எண்ணம் இல்லை. இதே எனக்கு போதும்.!! ஆமினா டீச்சரிடம் போகணும் நான் விடைபெறுகின்றேன்.. சரி ராகுல் எப்ப சரி ஹட்டன் வந்தால் டீச்சரைப் பார்க்க வரணும் சரியா . நிச்சயம் டீச்சர்! 




ஆமினா டீச்சர் மதம் மீது அதீத பற்றும் எல்லாரும் கவனமாக படிக்கணும் என்ற தூய நோக்கத்தில் இருக்கும் ஆசிரியை. அந்த டீச்சர் கோபம் அதிகம் வரும் போது மாணவர்களை திட்டுவது கொஞ்சம் ரோஸம் வரவேண்டும் என்றதான். அதனால் மாணவர்கள் படிப்பார்கள் என்று ஆனால் அது எல்லா மாணவர்களுக்கும் புரியாது. சிலருக்கு பிடிக்காது. தங்களை இழிவாக நினைக்கின்றா என்ற பார்வை சில மாணவர்களுக்கு. மதவெறி டீச்சர் என்று சிலர் நினைப்பது ஆனால் இந்த ஆசிரியர் வீட்டில் ஒரு இந்து மாணவன் வாடகைக்கு இருந்து படித்தான். மதவெறி டீச்சர் என்றால் இது எப்படிச் சாத்தியம்? 


கலைத்தாயின் பல புதல்வர்கள் இன்று பல தேசத்திலும் பல பெரிய பதவியில் இருக்க அந்த ஆசிரியரின் ஆரம்பகால ஆங்கிலம் தான் காரணம். 


அவரிடம் படித்த மாணவர்களுக்குத் தெரியும் அந்த ஆசிரியையின் சித்தாந்தம் .அரபுலகில் 5 வருடம் ஆசிரியர் பணி செய்துவிட்டுத்தான் கலைத்தாயின் கல்லூரியில் கற்பிக்க வந்தது. 


அறிவுச் சோலையில் இருந்து வந்து ஆங்கிலம் படித்த பூக்களுக்குத் தெரியும் அந்த ஆசிரியையின் சமுக கணிப்பு.


 அதனால் தான் ராகுல் ஆமினா டீச்சரிடம் மரியாதை அதிகம். உயர்தரத்தில் மாணவர்தலைவர்கள் என்ற பதவி பலருக்கு கிடைக்கும் ஒரு உயர்பதவி .அந்தப்பதவி கிடைக்க கூடாது என்பதில் குமரன் சேர் செய்த சதியை ஆமினா டீச்சர் சொல்லியிருந்தா தனிப்பட்ட முறையில்


ஆனால் அதுக்காக நீ யாரோடும் முரண்படாத அது எல்லாம் வெறும் ஆளுனர் பதவி போல டம்மிதான் என்று அந்தளவுக்கு டீச்சர் புரிந்துணர்வு மிக்கவா.


 அதனால் தான் ராகுல் .அயிசா சுகுமாரை விரும்புவதைப்பற்றிக் கேட்டபோது உண்மை சொன்னது . 


"ஓம் டீச்சர் அவங்க ரெண்டுபேரும் காதலாம் .நான் சொல்லிப் பாத்திட்டன் இருவரும் இரு பிரிவுகள் என்று ஆனால் கேட்கும் நிலையில் இல்லை .நீங்க ஒருக்கா அயிசாவுக்கு கூப்பிட்டுச் சொல்லுங்க.


" சரியல்லா நீங்க போய் அயிசாவ வரச் சொல்லு.


 வெளியில் ராகுல் வந்து சுகுமாருக்கும் சங்கருக்கும்  எல்லா உண்மையும் சொல்லியிருந்தான். அன்று வகுப்பில் பாடங்கள் ஒழுங்கா நடக்கவில்லை. பள்ளி முடிய நேராக அறிவுச் சோலைக்கு டியூசன் போகும் வழியில் .


சுகுமாரிடம்.! "மச்சான் அயிசா விடயம் நமக்கு ஒரு பிரிவைத் தரும் போல இருக்கு .வேண்டாம் இந்த விளையாட்டு "


 ",வாயை மூடிக்கிட்டு வா அது எல்லாம் நான் பார்க்கின்றன் .நான் கோழையில்லை உன்னைமாதிரி"


 ஓ அப்படியா !உன் விதி அப்படி என்றால் நான் ஒன்றும் செய்ய முடியாது .


 ஏண்டா இப்படி சரியான பயந்தாங்கொள்ளி நீ ?


 "போடாங்கோ சண்டை வந்தால் அடிவாங்கினால் சுருட்டுக்கடையில் நீயோ வேலை செய்வாய் ? "


சரி நமக்குள் ஏன் வாக்குவாதம் .நீ உன் வழியில் வா ,நான் என் வழியில் வாரன் வகுப்புக்கு"


 ஏன் என்னால் தனியாக அறிவுச் சோலைக்குள் போக முடியாதோ ? 


முடியும் முடியும் அங்குதானே உன் இதய தேவதை தனியாக கரும்பலகையோடு பேசிக்கிட்டு இருப்பா? 


என்ன லவ்டுடே படம் ராத்திரிப் பார்த்தியோ ?


சேம் டயலாக வருகின்றது.
 ம்ம் !!


ஆளுமை என்பது ஊறிவரணும் கடையில் வாங்கும் தண்ணீர் அல்ல காசு கொடுத்து பதவி வாங்க .தன் திறமை எப்படி என்பதை தயக்கம் இன்றி வெளியில் சொல்லணும் .அது கல்பனாவிடம் இருக்கு 42 பேர் படிக்கும் இடத்தில் மற்றப்பூக்கள் அச்சம், நாணம் என்றும் தயக்கம் ,தெரியாது மற்றவர்கள் குறை கூறுவார்களோ ?என்று ஒதுங்கும் போது. சரியோ ,பிழையோ முன்னுக்கு வந்து கரும்பலகையில் எழுதுவது நல்ல விடயம் தானே !


அதைப்போய் கரும்பலகையோடு பேசுறாள் என்று ஆணாதிகமாக பார்க்கதா. 


நீ தயங்கும் போது நான் தானே கணக்கு போடுகின்றேன் வசந்தா டீச்சர் வகுப்பில் . டீச்சர் எங்க ரெண்டு பேரையும் மாறி மாறி விடுவது மற்றவர்களும் முன்னுக்கு வரணும் என்ற தூர நோக்கில் தானே.


 "இது மட்டும் நல்ல பேசு. 


ஆனால் கல்பனாவிடம் வழி."


 சொல்ல வேண்டியது தானே!


. எண்ணத்தை ? 


இதோ பாருடா ஜோக்கு. 


அதுதான் ஜொல்லுவிடுறீயே அவளைப்பார்த்து நீ செய்யும் ஒவ்வொரு செயலையும் நானும் பார்க்கின்றேன். போடா அப்படி ஒன்றும் இல்லை !


அந்தப்பிள்ளை நல்ல பிள்ளை. 


அயிசா மாதிரி இல்லை இதுதான் உன்பழக்க தோஸமே எங்கே தொடங்கி எங்கேயோ முடிச்சுப் போடுவது. 


". நீயே சொல்லு என்னோட ,சங்கரோடு  வரும் போது கல்பனா தூரத்தில் வரும் போது பின்னால் வரும் நீ .காதல் தேசம் வினித் போல முன்னல் வாரதும் அவா எதோ தபு போலவும் செய்யும் அலப்பறை  தாங்க முடியல. கல்பனா வணக்கம் சொல்லுவதும் காற்றுப்போன வண்டிபோல நீ வணக்கம் சொல்லுவதும் .! 


"போடா விசர்க்கதை கதைத்தால் உன் நட்பையும் விட்டுவிட்டு போய்விடுவன் சொல்லிப் போட்டன் " "சரி சரி கோபிக்காத வா அறிவுச்சோலை வந்துவிட்டது உள்ளே நல்ல பொடியங்களாக போவம் .அப்புறம் உன் வில்லன் இமேஸ் கமடியன் போல ஆகிவிடும்" நான் சொன்னனா ஹீரோ என்று? நீயா ஏதாவது .கற்பனை பண்ணினால் நான் என்ன செய்யமுடியும் சுகுமார்.? அன்று உள்ளே போகும் போது நினைக்கவில்லை அடுத்துவரும் நாட்கள் நட்பு என்ற ஆலமரத்தில் பிரதேசவாதமும் மதவாதமும் வேரோடு சாய்க்கும் நட்பை என்று!

தொடரும்



131 comments :

ஹேமா said...

ஆஆஆஆஆஆஆஆ...வந்திட்டேன்,பதிவு வாசிக்காமல் வந்தால் கோப்பி கிடைக்குமோ நேசன் >>>>>!

ஹேமா said...

கருவாச்ச்சி...........அப்பா.......ரெவரி ......இண்டைக்கு எனக்காக விட்டுக்கொடுத்துப் போட்டினம் அப்பாவும் கருவாச்சியும் ......!

தனிமரம் said...

வாங்க ஹேமா நலமா இரவு வணக்கம் வாசிக்காவிட்டாலும் பால்க்கோபி கிடைக்கும் ஆனால் சீனி இல்லாமல்!ஹீ

தனிமரம் said...

கருவாச்சி தூக்கம் யோகா ஐயா மழை என்பதால் கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஹீஇ

ஹேமா said...

நேசன்.....சுகமா சமையல் சாப்பாடு எல்லாம் ஆச்சா?நான் சுகம்.இண்டைக்கும் நேற்றும் சுவிஸ் சாப்பாடோட போச்சு....இப்பத்தான் வாசிக்கிறன்.அப்பாவும் அருவாச்சியும் வரட்டும்.எல்லாரும் சேர்ந்தே குடிப்பம் கோப்பியை.சூடா வச்சிருங்கோ !

அப்பா...இந்த நேரத்துல நித்திரையாகமாட்டார்.குட்டீஸ் கணணி குடுக்காம வச்சிருப்பினம்.கருவாச்சி கட்டாயம் வருவா !

Yoga.S. said...

இரவு வணக்கம்,நேசன்!நானும் பதிவு படிக்கவில்லை.எனக்குக் கோப்பி கிட்டுமோ?ஹ!ஹ!ஹா!!!இரவு வணக்கம் கவிதாயினி,அம்முக்குட்டி,கறுப்பி(கலை பாஷை):நலமா?

தனிமரம் said...

அப்பா...இந்த நேரத்துல நித்திரையாகமாட்டார்.குட்டீஸ் கணணி குடுக்காம வச்சிருப்பினம்.கருவாச்சி கட்டாயம் வருவா !

12 June 2012 11:08 //ஆஹா அவருக்கும் அசதி இருக்கும் தானே!

Yoga.S. said...

அப்படியே நேரில் பார்த்தது போல் சொல்லுறா!ஸ்கைப்பில் இருந்தார்கள்,கனடா விலிருந்து அழைப்பு.

Anonymous said...

ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ

Yoga.S. said...

வழக்கமாக,மதிய சாப்பாட்டுக்குப் பின் குட்டித் தூக்கம்!

தனிமரம் said...

இரவு வணக்கம்,நேசன்!நானும் பதிவு படிக்கவில்லை.எனக்குக் கோப்பி கிட்டுமோ?ஹ!ஹ!ஹா!!!இரவு வணக்கம் கவிதாயினி,அம்முக்குட்டி,கறுப்பி(கலை பாஷை):நலமா?

12 June 2012 11:09 // இல்லை இரண்டுநாள் ஒன்றுமே கருத்துச் சொல்லவில்லை யோகா ஐயா ஆகவே பால் இல்லாத தனிக்கோப்பி மட்டும் கிடைக்கும் ஹீஈஈஈஈஈஈ

Anonymous said...

மீ விட்டுக் கொடுக்கலா ..நெட் இஞ்சயும் மக்கர் பண்ணுதே ...


மாமா அண்ணா அக்கா?...சாப்பிடீன்களா ...

Yoga.S. said...

கலை said...

ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ/////என்ன ஆஆஆஆஆஆ ?லேட்டா வந்ததுமில்லாம?இரவு வணக்கம்,மருமகளே!

Anonymous said...

மீ பதுவி படிச்சிட்டு வாறன் அண்ணா

ஹேமா said...

அப்பா வாங்கோ.கருப்பியும் வரட்டும்.எல்லாரும் ஒண்டாக் குடிப்பம் இண்டைக்கு.முதல்ல பதிவை வாசியுங்கோஓஓஓஓஓஓஓ !

தனிமரம் said...

அப்படியே நேரில் பார்த்தது போல் சொல்லுறா!ஸ்கைப்பில் இருந்தார்கள்,கனடா விலிருந்து அழைப்பு.// ஆஹா இண்டர்நேசனில் பிசி யோகா ஐயா/ஹீஈஈஈஈஈஈஇ

தனிமரம் said...

வாங்க கலை மக்கரா ஹீ இப்படித்தான் சிங்காரச் சென்னை!ஹீ

Yoga.S. said...

தனிமரம் said...

இல்லை இரண்டுநாள் ஒன்றுமே கருத்துச் சொல்லவில்லை யோகா ஐயா ஆகவே பால் இல்லாத தனிக்கோப்பி மட்டும் கிடைக்கும் ஹீஈஈஈஈஈஈ///குடுக்காட்டி போய்யா,போ!நீங்க குடுக்காட்டி என்ன?என் மகளும்,மருமகளும் குடுப்பினம்!ஹ!ஹ!ஹா!!!!!

ஹேமா said...

அந்த ரெயின் படம்....என்னை இரத்தினபுரி வாழ்கைக்குக் கொண்டு போகுது.எத்தனை தரம் இந்த ரெயின் பயணம்.ஆனால் ஒத்துக்கொள்ளாது.ஒரே வாந்தி யெடுப்பன் !

Yoga.S. said...

என்னோட ,சங்கரோடு வரும் போது கல்பனா தூரத்தில் வரும் போது பின்னால் வரும் நீ .காதல் தேசம் வினித் போல முன்னல் வாரதும் அவா எதோ தபு போலவும் செய்யும் அலப்பறை தாங்க முடியல!///ஹ!ஹ!ஹா!!!!!!!!!!!!என்ன ஒரு உவமானமும்,உவமேயமும்!

Yoga.S. said...

ஹேமா said...

அந்த ரெயின் படம்....என்னை இரத்தினபுரி வாழ்கைக்குக் கொண்டு போகுது.எத்தனை தரம் இந்த ரெயின் பயணம்.ஆனால் ஒத்துக்கொள்ளாது.ஒரே வாந்தி யெடுப்பன் !///க்குவாக்.............பேபி!

Anonymous said...

ஆனால் கல்பனாவிடம் வழி."

ஹ ஹ ஹா இங்கயே சிரிச்சிட்டேன் அண்ணா

இதோ பாருடா ஜோக்கு. ....திரும்படி இதுவும் போட்டு காமெடி ...

காமெடி ஆ இருக்கு அண்ணா இன்டைக்கு பதிவு

தனிமரம் said...

இல்லை இரண்டுநாள் ஒன்றுமே கருத்துச் சொல்லவில்லை யோகா ஐயா ஆகவே பால் இல்லாத தனிக்கோப்பி மட்டும் கிடைக்கும் ஹீஈஈஈஈஈஈ///குடுக்காட்டி போய்யா,போ!நீங்க குடுக்காட்டி என்ன?என் மகளும்,மருமகளும் குடுப்பினம்!ஹ!ஹ!ஹா!!!!!

12 June 2012 11:14// ஹீ மகள் போய் விடுவா மருமகள் என்று மருமகள் போய்விடுவா தாய் வீடு என்று கடைசிலில் மகன் தான் சமைப்பான் அம்மா ஐயா என்று!ஹீஈஈஈஈஇ

Anonymous said...

மாமா என் பங்கு உங்களுக்கு மட்டும் தான் ..குடியுங்கோ ...

தனிமரம் said...

அந்த ரெயின் படம்....என்னை இரத்தினபுரி வாழ்கைக்குக் கொண்டு போகுது.எத்தனை தரம் இந்த ரெயின் பயணம்.ஆனால் ஒத்துக்கொள்ளாது.ஒரே வாந்தி யெடுப்பன் !// ஆஹா உடரட்டையில் ஒரு சீட் கவிதாயினிக்கு ரிசேவ் செய்யுங்கோ மாத்தயா!ஹீஈஈஈஈஈ

ஹேமா said...

//" இல்ல டீச்சர் என் நட்புக்கள் முக்கிய உறவுகள் யார் என்று எனக்கு ஒரளவு தெரியும் .மற்றும்படி ஓடும்புளியம் பழமும் தான்.//

நேசன்....ராகுலுக்கு வாழ்க்கை அனுபவம் நிறைய எண்டு சொல்ல இந்த வசனம் ஒண்டே போதும்.நானும் சொல்றன் சில உறவுகளோடு ஓடும் புளியம்பழமும் போல இருக்கிறதுதான் சிறப்பு !

Anonymous said...

ஹீ மகள் போய் விடுவா மருமகள் என்று மருமகள் போய்விடுவா தாய் வீடு என்று கடைசிலில் மகன் தான் சமைப்பான் அம்மா ஐயா என்று!ஹீஈஈஈஈஇ///

மகன் எல்லாம் மச்சாள் பேச்சை கேட்டு செண்டு விடுவினம் ...

மகளும் அப்படிதான் ..

மருமகள் தான் நிரந்தரம்

Yoga.S. said...

தனிமரம் said...

ஹீ மகள் போய் விடுவா மருமகள் என்று மருமகள் போய்விடுவா தாய் வீடு என்று கடைசியில் மகன் தான் சமைப்பான் அம்மா ஐயா என்று!ஹீஈஈஈஈ!!!!///சத்தமாச் சொல்லுங்கோ,நேசன்!ஹ!ஹ!ஹா!!!!!

தனிமரம் said...

என்ன ஒரு உவமானமும்,உவமேயமும்!// ஹீ நான் படிக்கவில்லை அவன் சொன்ன விடயத்தை எழுதும் சப்பாணி!ஹீஈஈஈஈஈஇ

Anonymous said...

மாமா ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ

Yoga.S. said...

கலை said...

மகன் எல்லாம் மச்சாள் பேச்சை கேட்டு செண்டு விடுவினம் ...

மகளும் அப்படிதான் ..

மருமகள் தான் நிரந்தரம்.///அப்பிடிச் சொல்லுடா என் செல்ல மருமகளே!

Anonymous said...

ஹீ மகள் போய் விடுவா மருமகள் என்று மருமகள் போய்விடுவா தாய் வீடு என்று கடைசிலில் மகன் தான் சமைப்பான் அம்மா ஐயா என்று!ஹீஈஈஈஈஇ///


அண்ணனுக்கு கருக்கு மட்டை வாங்கி கொடுக்க மாமா க்கு பிளான் ஒ

தனிமரம் said...

ஆனால் கல்பனாவிடம் வழி."

ஹ ஹ ஹா இங்கயே சிரிச்சிட்டேன் அண்ணா

இதோ பாருடா ஜோக்கு. ....திரும்படி இதுவும் போட்டு காமெடி ...

காமெடி ஆ இருக்கு அண்ணா இன்டைக்கு பதிவு

12 June 2012 11:18 //ம்ம் அப்படியா அப்ப அவன் கமடியிலும் சூப்பர் என்று சொல்லிவிட்டா இளவரசி! ஹீ

Yoga.S. said...

கலை said...

மாமா ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ///பக்கத்து வீட்டில குழந்தைங்க முளிச்சுக்கப் போவுது!இங்க தாம்மா இருக்கேன்!

ஹேமா said...

ஆமினா டீச்சர் வீட்டில் இந்து மத மாணாவன்...இதுதான் படித்தவர்களுக்கான பண்பு !

Anonymous said...

அப்பா வாங்கோ.கருப்பியும் வரட்டும்.எல்லாரும் ஒண்டாக் குடிப்பம் இண்டைக்கு.முதல்ல பதிவை வாசியுங்கோஓஓஓஓஓஓஓ !
///


வந்துட்டேன்... இப்பக குடிப்போமோ அக்கக்கா ...

தனிமரம் said...

நேசன்....ராகுலுக்கு வாழ்க்கை அனுபவம் நிறைய எண்டு சொல்ல இந்த வசனம் ஒண்டே போதும்.நானும் சொல்றன் சில உறவுகளோடு ஓடும் புளியம்பழமும் போல இருக்கிறதுதான் சிறப்பு !

12 June 2012 11:20 //ம்ம் அதை நானும் வழிமொழிகின்றேன் அவன் அனுபவம் அப்படி நான் சாமானியன்!ம்ம்

ஹேமா said...

//மருமகள் தான் நிரந்தரம்.///அப்பிடிச் சொல்லுடா என் செல்ல மருமகளே!//

சூ...சூ.....காக்கா தொல்லை இங்க.அதுதான் கலைச்சிட்டேன் !

Yoga.S. said...

அடுத்துவரும் நாட்கள் நட்பு என்ற ஆலமரத்தில் பிரதேசவாதமும் மதவாதமும் வேரோடு சாய்க்கும் நட்பை என்று!
///ஹும்!!!!!!!!!

Yoga.S. said...

ஹேமா said...

//மருமகள் தான் நிரந்தரம்.///அப்பிடிச் சொல்லுடா என் செல்ல மருமகளே!//

சூ...சூ.....காக்கா தொல்லை இங்க.அதுதான் கலைச்சிட்டேன் !////சுவிசிலுமா???????????????????

ஹேமா said...

//வந்துட்டேன்... இப்பக குடிப்போமோ அக்கக்கா ...

ஒன்..டூ..த்ரீ...சொல்லி நேசனும் வாங்கோ....கோப்பி குடிப்பம் எல்லாரும் !

தனிமரம் said...

மருமகள் தான் நிரந்தரம்//ம்ம் அதுவும் சரிதான்!ஹீ சண்டை வேண்டாம் குடும்பத்தில்!ஹீஈஈஈஈஈ நாத்தனார் கலாப்பாட்டியும் அக்காள் அஞ்சலின் சொன்னது! தம்பிக்கு! ஹீ

Anonymous said...

சூ...சூ.....காக்கா தொல்லை இங்க.அதுதான் கலைச்சிட்டேன் !////சுவிசிலுமா???????????????????//


சுவிஸ் ல இருப்பது அக்கா காக்கா...

தங்கைச்சி காக்க இந்திய

தனிமரம் said...

ஹீ மகள் போய் விடுவா மருமகள் என்று மருமகள் போய்விடுவா தாய் வீடு என்று கடைசியில் மகன் தான் சமைப்பான் அம்மா ஐயா என்று!ஹீஈஈஈஈ!!!!///சத்தமாச் சொல்லுங்கோ,நேசன்!ஹ!ஹ!ஹா!!!!!// ஹீ அது நிஜம் இப்போது சில இடங்களில் ஹீ

Yoga.S. said...

கலை said...

அப்பா வாங்கோ.கருப்பியும் வரட்டும்.எல்லாரும் ஒண்டாக் குடிப்பம் இண்டைக்கு.முதல்ல பதிவை வாசியுங்கோஓஓஓஓஓஓஓ !
///
வந்துட்டேன்... இப்ப குடிப்போமோ அக்கா ...///அதான் இல்லேன்னு உங்க அண்ணா சொல்லிப்புட்டாரே?அப்புறம் என்னத்தக் குடிக்கிறது?

தனிமரம் said...

மருமகள் தான் நிரந்தரம்.///அப்பிடிச் சொல்லுடா என் செல்ல மருமகளே!// ஆஹா கவுத்திட்டார் ஐயா!ஹீ

Anonymous said...

//மருமகள் தான் நிரந்தரம்.///அப்பிடிச் சொல்லுடா என் செல்ல மருமகளே!/////



அலோ அலோ எல்லாரும் நல்ல எழுத்துக் கூடி படிச்சி கொள்ளுங்கள் மாமா சொல்லுவதை ...


சுவிஸ் ல இடுந்து ஒரே புகையா வருமே

ஹேமா said...

நேசன்....அந்த போட்டோ யார் ?
நீங்களா ?

Yoga.S. said...

கலை said...

சூ...சூ.....காக்கா தொல்லை இங்க.அதுதான் கலைச்சிட்டேன் !////சுவிசிலுமா???????????????????//
சுவிஸ் ல இருப்பது அக்கா காக்கா...

தங்கைச்சி காக்கா. இந்தியா.//// நல்ல வேள,பிரான்சில இல்ல!!!!

தனிமரம் said...

அண்ணனுக்கு கருக்கு மட்டை வாங்கி கொடுக்க மாமா க்கு பிளான் ஒ// சீச்சி அப்படி இருக்காது!

ஹேமா said...

//மருமகள் தான் நிரந்தரம்.///அப்பிடிச் சொல்லுடா என் செல்ல மருமகளே!// ஆஹா கவுத்திட்டார் ஐயா!ஹீ//

ஐயா...அப்பப்ப கவுந்து கவுந்து எழும்புவார்.கண்டுக்காதீஈஈஈஈஈஈஈங்கோ ஓஓஓஓஓஓ நேசன் !

Anonymous said...

மருமகள் தான் நிரந்தரம்.///அப்பிடிச் சொல்லுடா என் செல்ல மருமகளே!// ஆஹா கவுத்திட்டார் ஐயா!ஹீ///

மாமா உண்மைய தான சொல்லி இருக்கவர் ...

கலா அண்ணி ரேயிணிக் ஆ உங்களுக்கு

Yoga.S. said...

கலை said...


அலோ அலோ எல்லாரும் நல்ல எழுத்துக் கூடி படிச்சி கொள்ளுங்கள் மாமா சொல்லுவதை ...

சுவிஸ் ல இடுந்து ஒரே புகையா வருமே?/////காதாலயா ?மூக்காலியா?ஹி!ஹி!ஹி!!!!!!!

தனிமரம் said...

ஆமினா டீச்சர் வீட்டில் இந்து மத மாணாவன்...இதுதான் படித்தவர்களுக்கான பண்பு !/*/ம்ம் உண்மைதான் அவன் இப்போது முக்கிய பதவியில் கொழும்பில் இருக்கின்றான் நண்பன் மூலம் நானும் அவனோடு யாத்திரை போனேன் ஒரு முறை சபரிமலை!ம்ம்

தனிமரம் said...

சூ...சூ.....காக்கா தொல்லை இங்க.அதுதான் கலைச்சிட்டேன் !

12 June 2012 11:25// ஹீஈஈஈஈஈஈஈஈ

Yoga.S. said...

ஹேமா said...

//மருமகள் தான் நிரந்தரம்.///அப்பிடிச் சொல்லுடா என் செல்ல மருமகளே!// ஆஹா கவுத்திட்டார் ஐயா!ஹீ//

ஐயா...அப்பப்ப கவுந்து கவுந்து எழும்புவார்.கண்டுக்காதீஈஈஈஈஈஈஈங்கோ ஓஓஓஓஓஓ நேசன் !////ச்சீ.................கவுத்திட்டா!!!!!!!!!!

Anonymous said...

ஐயா...அப்பப்ப கவுந்து கவுந்து எழும்புவார்.கண்டுக்காதீஈஈஈஈஈஈஈங்கோ ஓஓஓஓஓஓ நேசன் !///



என்னாது என் மாமா வை அப்புடி சொல்லுரிங்க ...மாமா எவ்வளவு ஸ்ட்ராங் தெரியுமா ...

ஹேமா said...

//கல்பனா வணக்கம் சொல்லுவதும் காற்றுப்போன வண்டிபோல நீ வணக்கம் சொல்லுவதும் .! //

ஆகா.....என்னமா ஒரு கண்டுபிடிப்பு....இப்பத்தான் பாட்டுக் கேட்டுக்கொண்டிருக்கிறன்.மனசுக்கு இதமாயிருக்கு !

தனிமரம் said...

அடுத்துவரும் நாட்கள் நட்பு என்ற ஆலமரத்தில் பிரதேசவாதமும் மதவாதமும் வேரோடு சாய்க்கும் நட்பை என்று!
///ஹும்!!!!!!!!//ம்ம் அனுபவங்கள் பெற்றால் பணிவு வருமாம் என் குருநாதர் யாத்திரையில் மதுரையில் சொன்னது!ம்ம்

Anonymous said...

ஐயா...அப்பப்ப கவுந்து கவுந்து எழும்புவார்.கண்டுக்காதீஈஈஈஈஈஈஈங்கோ ஓஓஓஓஓஓ நேசன் !////ச்சீ.................கவுத்திட்டா!!!!!!!//


இந்தாங்க மாமா என் கைய அப்பிடியே பிடிச்சிட்டு எழும்பி வாங்கோ ....உங்கட செல்ல மகளுக்கு நீங்களே கருக்கு மட்டை கொடுங்கோ

ஹேமா said...

//சுவிஸ் ல இடுந்து ஒரே புகையா வருமே?/////காதாலயா ?மூக்காலியா?ஹி!ஹி!ஹி!!!!!!!//

தயிர் சாதத்துக்கே கொழுப்பு இவ்ளோ கருப்பிக்கு.....கருப்பன் வரட்டும் பாத்துக்கொள்றன் !

தனிமரம் said...

ஒன்..டூ..த்ரீ...சொல்லி நேசனும் வாங்கோ....கோப்பி குடிப்பம் எல்லாரும் !

12 June 2012 11:27//ம்ம் எல்லாரும் பால்க்கோப்பி குடிப்போம் எனக்கு சீனி அதிகம் பிடிக்கும்!ஹீ

Yoga.S. said...

கலை said...

ஐயா...அப்பப்ப கவுந்து கவுந்து எழும்புவார்.கண்டுக்காதீஈஈஈஈஈஈஈங்கோ ஓஓஓஓஓஓ நேசன் !///



என்னாது என் மாமா வை அப்புடி சொல்லுரிங்க ...மாமா எவ்வளவு ஸ்ட்ராங் தெரியுமா ...////ஹும்,என்ன நினைச்சுக்கிட்டிருக்கீங்க எல்லாரும்,ஆங்????

Yoga.S. said...

தனிமரம் said...

ஒன்..டூ..த்ரீ...சொல்லி நேசனும் வாங்கோ....கோப்பி குடிப்பம் எல்லாரும் !

12 June 2012 11:27//ம்ம் எல்லாரும் பால்க்கோப்பி குடிப்போம் எனக்கு சீனி அதிகம் பிடிக்கும்!ஹீ!!!///சீனி அதிகம் பிடிக்குமுங்களா?நல்லா குடிங்க,பிறகு குளிசை குடியுங்க!

ஹேமா said...

//இந்தாங்க மாமா என் கைய அப்பிடியே பிடிச்சிட்டு எழும்பி வாங்கோ ....உங்கட செல்ல மகளுக்கு நீங்களே கருக்கு மட்டை கொடுங்கோ..

பாருங்கோ நேசன் உங்கட நபுத் தங்கச்சியை.எப்பிடியாச்சும் இண்டைக்கு வாங்கிக் குடுக்க கங்கணம் கட்டுறா.......அப்பாதான் பாவம்.கையைப் பிடிச்சு இழுத்துக் குடுக்கிறா.....வாத்துக்காரி.4 வாத்து வேணுமெண்டா வாங்கித் தாறன்.அப்பான்ர கையை விடுங்கோ குஞ்சு !

Yoga.S. said...

கலை said...

இந்தாங்க மாமா என் கைய அப்பிடியே பிடிச்சிட்டு எழும்பி வாங்கோ ....உங்கட செல்ல மகளுக்கு நீங்களே கருக்கு மட்டை கொடுங்கோ.////அக்கா பாவமில்ல?அண்ணாக்குக் குடுப்பமா?ஹ!ஹ!ஹா!!!!!

தனிமரம் said...

நேசன்....அந்த போட்டோ யார் ?
நீங்களா ?

12 June 2012 11:/ஹீ அது சங்கர் பாத்திரம் அவன் யார் !நேசன் யார் !அயிசா யார் தனிமரம் யார் /இந்த வாரம் பதிவுலகில் சொல்லுகின்றேன் ஹேமா கொஞ்சம் பொறுமை! அது நான் இல்லை!

தனிமரம் said...

தங்கைச்சி காக்கா. இந்தியா.//// நல்ல வேள,பிரான்சில இல்ல!!!!

12 June 2012 11:30 // ஹீ எனக்கும் தான்! இருப்பது லண்டனில்!

Yoga.S. said...

ஹேமா said...

//இந்தாங்க மாமா என் கைய அப்பிடியே பிடிச்சிட்டு எழும்பி வாங்கோ ....உங்கட செல்ல மகளுக்கு நீங்களே கருக்கு மட்டை கொடுங்கோ..////ஏதோ நான் ஏலாம இருக்கிறது போலையும்,கையப் பிடிச்சுத் தூக்கி விட்டாத்தான் எழும்புவன் போலயுமெல்லோ இருக்கு?

தனிமரம் said...

ஐயா...அப்பப்ப கவுந்து கவுந்து எழும்புவார்.கண்டுக்காதீஈஈஈஈஈஈஈங்கோ ஓஓஓஓஓஓ நேசன் !

12 June 2012 11:32 //ம்ம் இந்த அப்பாக்களே/ஐயாக்களே இப்படித்தான்!ம்ம்

ஹேமா said...

//.மாமா எவ்வளவு ஸ்ட்ராங் தெரியுமா ...////ஹும்,என்ன நினைச்சுக்கிட்டிருக்கீங்க எல்லாரும்,ஆங்????//

கருப்பின்ர மாமான்ர ஸ்ரோங்க் கண்டுபிடிச்சிட்டோமே.கருப்பி போனதிலயிருந்து ஒரே புலம்பல்.என்ர பிள்ளை என்ர பிள்ளையெண்டு....மருமகள் இல்லாட்டி மாமா புஷ் பலூன் !

Anonymous said...

தயிர் சாதத்துக்கே கொழுப்பு இவ்ளோ கருப்பிக்கு.....கருப்பன் வரட்டும் பாத்துக்கொள்றன் !///

akkaa உங்களுக்கு எப்படி தெரியும் மீ தயிர் சாதம் சாப்பிட்டது ...ஆஆஆஆஆஆஆஆ

தனிமரம் said...

கலா அண்ணி ரேயிணிக் ஆ உங்களுக்கு// ஹீ கலாப்பாட்டி லீவில் இருக்கின்றா சத்த நாளிகை பொறுங்கோ நாத்தனார் வருவா ஆத்தில் இருந்து!ஹீஈஈஈஈஈ

Anonymous said...

ஹீ அது சங்கர் பாத்திரம் அவன் யார் !நேசன் யார் !அயிசா யார் தனிமரம் யார் /இந்த வாரம் பதிவுலகில் சொல்லுகின்றேன் ஹேமா கொஞ்சம் பொறுமை! ...
///

ஆஆஆஆஆஆஆ அண்ணா இந்த கதையில சுகுமார் அண்ணனோ ஹ ஹ ஹா ஆ

Yoga.S. said...

கலை said...

தயிர் சாதத்துக்கே கொழுப்பு இவ்ளோ கருப்பிக்கு.....கருப்பன் வரட்டும் பாத்துக்கொள்றன் !///

akkaa உங்களுக்கு எப்படி தெரியும் மீ தயிர் சாதம் சாப்பிட்டது ...ஆஆஆஆஆஆஆஆ!!!////இன்னிக்கு செவ்வாக்கிழமை ஒரு ஊகமாயிருக்கும்!

Anonymous said...

கருப்பின்ர மாமான்ர ஸ்ரோங்க் கண்டுபிடிச்சிட்டோமே.கருப்பி போனதிலயிருந்து ஒரே புலம்பல்.என்ர பிள்ளை என்ர பிள்ளையெண்டு....மருமகள் இல்லாட்டி மாமா புஷ் பலூன் !///


ஒம்மாம் ...என் மாமாக்கு நான் தான் பலம் ...மீ எங்க போனாலும் மாமா வ கூட்டிட்டு போயடுவேநேல்லோ ..
நான் இஞ்ச இருக்கும்போது மட்டும் தான் மாமா மனசு இஞ்ச இருக்கும் ....

ஹேமா said...

//akkaa உங்களுக்கு எப்படி தெரியும் மீ தயிர் சாதம் சாப்பிட்டது ...ஆஆஆஆஆஆஆஆ//

உங்கட குரு சொல்லித் தந்த உள்ளுணர்வுதான்.வேறயென்ன !

தனிமரம் said...

என்னாது என் மாமா வை அப்புடி சொல்லுரிங்க ...மாமா எவ்வளவு ஸ்ட்ராங் தெரியுமா ...

12 June 2012 11:35 //ஹீ தாயி நம்ம நாட்டில் ஸ்டாங் இந்தியாவில் தாவுசன் டாஸ்மார்க்கப்போல நம்ம பங்காளிங்க போனால் விட மாட்டாங்க என்னடா பாரிசில் இருந்து வந்திட்டு ஒரு கவனிப்பும் இல்லையே தோ வூட்காரி!ம்ம்ம்ம்ம்ம்ம்

Yoga.S. said...

தனிமரம் said...

கலா அண்ணி ரேயிணிக் ஆ உங்களுக்கு// ஹீ கலாப்பாட்டி லீவில் இருக்கின்றா சத்த நாளிகை பொறுங்கோ நாத்தனார் வருவா ஆத்தில் இருந்து!ஹீஈஈஈஈஈ////ஒரு முடிவோட தான் எல்லாரும் இருக்கிறியள் போல?

Anonymous said...

ஹீ தாயி நம்ம நாட்டில் ஸ்டாங் இந்தியாவில் தாவுசன் டாஸ்மார்க்கப்போல நம்ம பங்காளிங்க போனால் விட மாட்டாங்க என்னடா பாரிசில் இருந்து வந்திட்டு ஒரு கவனிப்பும் இல்லையே தோ வூட்காரி!////

ஹீ கலாஅண்ணி லீவில் இருக்கின்றாங்க சத்த நாளிகை பொறுங்கோ நாத்தனார் வருவாங்கள் ஆத்தில் இருந்து!ஹீஈஈஈஈஈ/உங்களுக்கும் தான் அண்ணா

Yoga.S. said...

எங்க எல்லாரும் போட்டியள்?

தனிமரம் said...

ஆகா.....என்னமா ஒரு கண்டுபிடிப்பு....இப்பத்தான் பாட்டுக் கேட்டுக்கொண்டிருக்கிறன்.மனசுக்கு இதமாயிருக்கு !

12 June 2012//ஹீ இந்தப்படம் ஒரு தோல்விப்படம் ஆனால் பாட்டு சூப்பர் ஹிட் வையேந்திமாலாவின் பேரன் ஹீரோ யோகா ஐயாவுக்கு இந்த நடிகை தெரிந்து இருக்கலாம்! தேவா சொந்த இசை இப்படி அடுக்கலாம் அதிகம் ஹேமா எனக்கு அதிகம் பிடித்த பாடலில் இதுவும் ஒன்று! காட்சியில் சேர்க்க வேற வழி இருக்கு ஆனால் இந்த வாரம் !ம்ம் பேசலாம் பின் சூழ்நிலை!ம்ம்

ஹேமா said...

கலாவுக்கு லீவு முடிஞ்சுபோச்சு.இப்ப ரெஸ்ட் எடுக்கிறா.சாப்பாடு,காலேல ஓடுறது,ஃபேசியல் எல்லாம் நிண்டு போச்செண்டு கவலை.இனி எல்லாம் ஃப்ரஸ் ஆகி வருவா பாருங்கோ கருப்பு பெல்ட்டோட.....அதிரும்ல !

Anonymous said...

ரே ரீ அண்ணா வைக காணும் ...


இண்டைக்கு செய்வாய் அண்ணா வர்ற நாள் தானே

தனிமரம் said...

தயிர் சாதத்துக்கே கொழுப்பு இவ்ளோ கருப்பிக்கு.....கருப்பன் வரட்டும் பாத்துக்கொள்றன் !

12 June 2012 11:38 //ஹீ இன்று பிரியாணியாம் ஹேமா!ஹீஈஈஈஈஈஈஈஈஈஇ

Anonymous said...

மீ இங்க தான் மாமா இருக்கேன் ...

கொஞ்ச தூக்கமும் அதான்

Yoga.S. said...

ஹேமா said...

கலாவுக்கு லீவு முடிஞ்சுபோச்சு.இப்ப ரெஸ்ட் எடுக்கிறா.சாப்பாடு,காலேல ஓடுறது,ஃபேசியல் எல்லாம் நிண்டு போச்செண்டு கவலை.இனி எல்லாம் ஃப்ரஸ் ஆகி வருவா பாருங்கோ கருப்பு பெல்ட்டோட.....அதிரும்ல !////இங்கயுமா??????????????????..........

தனிமரம் said...

12 June 2012 11:27//ம்ம் எல்லாரும் பால்க்கோப்பி குடிப்போம் எனக்கு சீனி அதிகம் பிடிக்கும்!ஹீ!!!///சீனி அதிகம் பிடிக்குமுங்களா?நல்லா குடிங்க,பிறகு குளிசை குடியுங்க!

12 June 2012 11:41 //ம்ம் வீட்டுக்காரியும் இதே தான் கூடவே அம்மாவும்!ம்ம் குறைப்போம்!

Anonymous said...

மாமா ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ நீங்க இப்போ எங்க போய்டீங்க

ஹேமா said...

//ஹீ இன்று பிரியாணியாம் ஹேமா!ஹீஈஈஈஈஈஈஈஈஈஇ..

பிரியாணி சாப்பிட்டா இன்னும் கலாய்ப்பு அதிகமா இருக்கும்.இண்டைக்கு அடக்கி வாசிக்கிறா....அதுதான் அப்பிடிச் சொன்னன் நேசன்.சிலநேரத்தில கலாய்ப்புக்கு பதில் சொல்ல ஏலாம எத்தினை நாள் ஓடியிருக்கிறன் நான் !

Yoga.S. said...

கலை said...

மீ இங்க தான் மாமா இருக்கேன் ...

கொஞ்ச தூக்கமும் அதான்.///சரிம்மா,போய் தூங்குங்க.மணி பன்னெண்டு ஆவுது!பேசின வரைக்கும் சந்தோசம்.நாளைக்குப் பாக்கலாம்!நல்லிரவு,குட் நைட்!!!

தனிமரம் said...

பாருங்கோ நேசன் உங்கட நபுத் தங்கச்சியை.எப்பிடியாச்சும் இண்டைக்கு வாங்கிக் குடுக்க கங்கணம் கட்டுறா.......அப்பாதான் பாவம்.கையைப் பிடிச்சு இழுத்துக் குடுக்கிறா.....வாத்துக்காரி.4 வாத்து வேணுமெண்டா வாங்கித் தாறன்.அப்பான்ர கையை விடுங்கோ குஞ்சு !
// ம்ம் அவா அப்பாவுக்கு எப்படி என்று இன்னும் சொல்லவில்லை அண்ணா எப்படி என்று பேசவே இல்லை /ம்ம்
12 June 2012 11:41

Anonymous said...

ஹீ இன்று பிரியாணியாம் ஹேமா!ஹீஈஈஈஈஈஈஈஈஈ///


பிரியாணியா ஆஆஆஆஆஆஅ வானம் ....நாளைக்கு பிரியாணி வீட்டில் ,,,,,
அப்பா சமையல் கட்டு பக்கமே நாளை போமாட்டேன் எண்டு உறுதி அளித்து இருக்கங்கள் .

Yoga.S. said...

ஹேமா said...

//ஹீ இன்று பிரியாணியாம் ஹேமா!ஹீஈஈஈஈஈஈஈஈஈஇ..

பிரியாணி சாப்பிட்டா இன்னும் கலாய்ப்பு அதிகமா இருக்கும்.இண்டைக்கு அடக்கி வாசிக்கிறா....அதுதான் அப்பிடிச் சொன்னன் நேசன்.சிலநேரத்தில கலாய்ப்புக்கு பதில் சொல்ல ஏலாம எத்தினை நாள் ஓடியிருக்கிறன் நான் !///ஹ!ஹ!ஹா!!!ஹி!ஹி!ஹீ!!!!!

தனிமரம் said...

ஆஆஆஆஆஆஆ அண்ணா இந்த கதையில சுகுமார் அண்ணனோ ஹ ஹ ஹா ஆ//ம்ம் அவன் தான் பேசலாம் முடிந்தால் இந்த வார இறுதியில் இரு பால்க்கோப்பியோடு!ம்ம்

ஹேமா said...

//மாமா ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ நீங்க இப்போ எங்க போய்டீங்க//

கடவுளே.....நடுவில அங்க இங்க அசையிறதும் கண்டு பிடிக்கிறாள்.கமெரா பூட்டி வச்சிருக்கிறாளோ காக்கா !

Anonymous said...

வாத்துக்காரி.4 வாத்து வேணுமெண்டா வாங்கித் தாறன்.அப்பான்ர கையை விடுங்கோ குஞ்சு !///


சில நேரம் எனக்கும் கொஞ்சம் பயமாவும் இருக்கு ...மாமா மேல நிறைய இன்தரக்கட் ப்ரீசசர் போடுறேனோ ன்னு ...

தனிமரம் said...

kkaa உங்களுக்கு எப்படி தெரியும் மீ தயிர் சாதம் சாப்பிட்டது ...ஆஆஆஆஆஆஆஆ!!!////இன்னிக்கு செவ்வாக்கிழமை ஒரு ஊகமாயிருக்கும்!

12 June 2012 11:// ஹீஇ நான் சனிமட்டும் தான் தயிர்சாதம் மற்ற நாளில் பாய்கடைதான்!ஹீஈஈஈஈஈ

Anonymous said...

ம்ம் அவா அப்பாவுக்கு எப்படி என்று இன்னும் சொல்லவில்லை அண்ணா எப்படி என்று பேசவே இல்லை /ம்ம் ///


அண்ணா அப்பா நல்லா சுகம் ...அன்னும் நல்லா இருக்கிறவர் ..அம்மா வும் நல்லா இருக்காங்க ..

அப்புறம் மீ யும் சூப்பர் ஆ இருகேனே ஏஏஏஏஏஏஏஏ

Yoga.S. said...

கலை said...

வாத்துக்காரி.4 வாத்து வேணுமெண்டா வாங்கித் தாறன்.அப்பான்ர கையை விடுங்கோ குஞ்சு !///


சில நேரம் எனக்கும் கொஞ்சம் பயமாவும் இருக்கு ...மாமா மேல நிறைய இன்தரக்கட் ப்ரீசசர் போடுறேனோ ன்னு .../////அதெல்லாம் ஒண்ணுமில்லேம்மா.அக்கா சும்மா,கலாய்க்கிறதுக்கு.உங்ககிட்ட குஸ்தி போடாட்டி தூக்கமே வராது அவங்களுக்கு!

ஹேமா said...

கலைம்மா....நித்திரை வந்தால் போய் படுங்கோ.நாளைக்கும் கதைக்கலாம்.நல்ல சந்தோஷமாயிருக்கு கனநாளைக்குப் பிறகு !

தனிமரம் said...

உங்கட குரு சொல்லித் தந்த உள்ளுணர்வுதான்.வேறயென்ன !

12 June 2012 11:50 //ம்ம்ம் இந்த உள்ளுணர்வும் ஒரு சக்திதான்!ம்ம்

தனிமரம் said...

எல்லாரும் இருக்கிறியள் போல?

12 June 2012 11:53 //ம்ம் அடிவிழும் தானே!ஹீஇ

Anonymous said...

சிலநேரத்தில கலாய்ப்புக்கு பதில் சொல்ல ஏலாம எத்தினை நாள் ஓடியிருக்கிறன் நான் !///ஹ!ஹ!ஹா!!!ஹி!ஹி!ஹீ!!!!!///


போங்க மாமா ...நான் எப்படி உங்களை கலாயிப்பேன் ....என் கையே உங்க கண்ணை குத்துமா மாமா


ஹேமா அக்காள்,அஞ்சு அக்காள்,கலா அண்ணி கிரி அக்கா அவங்கள தான் கலா யிப்பேன் .

Yoga.S. said...

கலை said...

ம்ம் அவா அப்பாவுக்கு எப்படி என்று இன்னும் சொல்லவில்லை அண்ணா எப்படி என்று பேசவே இல்லை /ம்ம் ///


அண்ணா அப்பா நல்லா சுகம் ...அன்னும் நல்லா இருக்கிறவர் ..அம்மா வும் நல்லா இருக்காங்க ..

அப்புறம் மீ யும் சூப்பர் ஆ இருகேனே ஏஏஏஏஏஏஏஏ!!!!!!!!!!!////அது தான் நமக்கு வேணும்.

ஹேமா said...

//சில நேரம் எனக்கும் கொஞ்சம் பயமாவும் இருக்கு ...மாமா மேல நிறைய இன்தரக்கட் ப்ரீசசர் போடுறேனோ ன்னு ...//

எதுக்கு பயம் நாங்க நாலு பேருமே ஒருத்தரை ஒருத்தர் நல்லாவே புரிஞ்சு வச்சிருக்கிறம்.பிறகென்ன....!

Anonymous said...

சரி அக்கா ...நான் கிளம்புறேன் கொஞ்சம் தூக்கம் தான் ...

நாளைக்கு வரேன் ...நாளன்னைக்கு வர மாட்டேன் ..திருநெல் வெளி ,மதுரை க்கு போறேன் ...அங்க நெட் கிடைக்குமான்னு தெரியலா ...மூணு நாள் அங்க தன் இருப்பேன் ..அடம் பிடிசாவது நெட் வாங்கி வருவேன் நு நம்புறேன் ....

தனிமரம் said...

ஹீ கலாஅண்ணி லீவில் இருக்கின்றாங்க சத்த நாளிகை பொறுங்கோ நாத்தனார் வருவாங்கள் ஆத்தில் இருந்து!ஹீஈஈஈஈஈ/உங்களுக்கும் தான் அண்ணா

12 June 2012 11:56//ஐய்யோ நாங்க எல்லாம் சாமிகிட்ட இரண்டுமாசம் போறகூட்டம் வூட்டுக்காரி சுத்த சைவம்! எல்லாம் வெளியில் மட்டும் நண்பர்கள் விசேசம் என்றால்! ம்ம்

Anonymous said...

மாமா மீ கிளம்பவா ...கொஞ்சம் தூக்கம்...


அக்கா டாட்டா


டாட்டா மாமா


அனா டாடா


நாளை சந்திக்கணும் ....


நள்ளிரவு மாமா ...குட் நைட்

தனிமரம் said...

கலாவுக்கு லீவு முடிஞ்சுபோச்சு.இப்ப ரெஸ்ட் எடுக்கிறா.சாப்பாடு,காலேல ஓடுறது,ஃபேசியல் எல்லாம் நிண்டு போச்செண்டு கவலை.இனி எல்லாம் ஃப்ரஸ் ஆகி வருவா பாருங்கோ கருப்பு பெல்ட்டோட.....அதிரும்ல !

12 June 2012 11:57//ம்ம் ஓம் அதிரப்போகுது எனக்கும் தான்!ஹீஈஈஈஈஈஈ

Yoga.S. said...

போயிட்டு வாங்க,விடுமுறைய சந்தோஷமா கழிக்கணும், குட் நைட்!!!

தனிமரம் said...

பிரியாணி சாப்பிட்டா இன்னும் கலாய்ப்பு அதிகமா இருக்கும்.இண்டைக்கு அடக்கி வாசிக்கிறா....அதுதான் அப்பிடிச் சொன்னன் நேசன்.சிலநேரத்தில கலாய்ப்புக்கு பதில் சொல்ல ஏலாம எத்தினை நாள் ஓடியிருக்கிறன் நான் !

12 June 2012 12:00 //ம்ம் என்னையும் கலை நேற்று கலாய்த்து விட்டது பிரெஞ்சு அண்ணி பாவம் என்று!ம்ம்

Yoga.S. said...

கலை said...

மாமா மீ கிளம்பவா ...கொஞ்சம் தூக்கம்..///கிளம்பச் சொல்லி சொன்னது கால் மணி நேரம் முன்னே!

தனிமரம் said...

அனா டாடா// நன்றி கலை வருகைக்கும் கருத்துரைக்கும் குட் நைட் நாளை சந்திப்போம்!

Yoga.S. said...

வெள்ளாந்தி மனசு,மனசில படுறத டக்கெண்டு நயமோ,நட்டமோ உடன சொல்லுவா!

தனிமரம் said...

நாளைக்கு வரேன் ...நாளன்னைக்கு வர மாட்டேன் ..திருநெல் வெளி ,மதுரை க்கு போறேன் ...அங்க நெட் கிடைக்குமான்னு தெரியலா ...மூணு நாள் அங்க தன் இருப்பேன் ..அடம் பிடிசாவது நெட் வாங்கி வருவேன் நு நம்புறேன் ....

12 June 2012 12:12//ம்ம் அழகருக்கு அண்ணா வணக்கம் வைச்சது சொல்லுங்கோ!ஹீஈஈஈஈஈஈஈஈஇ

ஹேமா said...

கலை.....போய்ட்டு வாங்கோ.நாளைக்கும் சந்திப்பம்.அப்பா...நேசன்....நல்லிரவு வணக்கம்.நாளைக்கும் சந்திப்பம் !

Yoga.S. said...

நேசன் சாப்பிட்டாச்சோ?அம்முக்குட்டி சாப்பிட்டாச்சோ?

தனிமரம் said...

வெள்ளாந்தி மனசு,மனசில படுறத டக்கெண்டு நயமோ,நட்டமோ உடன சொல்லுவா!//ம்ம் உண்மைதான் ஆனால் பதிவுலக அரசியல்!ம்ம்ம்

Yoga.S. said...

உங்களுக்கும் இனிய நல்லிரவு வணக்கம்,மகளே!சந்திப்போம்!

Yoga.S. said...

உங்களுக்கும் இனிய நல்லிரவு வணக்கம்,நேசன்.காலை வேலை.சாப்பிட்டுப் படுங்கள்.பேசியவரை சந்தோஷம்,சந்திப்போம்!

தனிமரம் said...

கலை.....போய்ட்டு வாங்கோ.நாளைக்கும் சந்திப்பம்.அப்பா...நேசன்....நல்லிரவு வணக்கம்.நாளைக்கும் சந்திப்பம் !

12 June 2012 12:24// நன்றி ஹேமா வருகைக்கும் கருத்துக்கும் நேரம் இருந்தால் நேற்றைய் பதிவில் பாடல் கேளுங்கோ பாடகி சோபா சேகர் சவுத்தாப்பிரிக்கா வாழும் இந்திய வம்சாவளி!ம்ம்

தனிமரம் said...

நேசன் சாப்பிட்டாச்சோ?அம்முக்குட்டி சாப்பிட்டாச்சோ?

12 June 2012 12:24 // இனித்தான் யோகா ஐயா சாப்பாடு்!ம்ம்

தனிமரம் said...

உங்களுக்கும் இனிய நல்லிரவு வணக்கம்,நேசன்.காலை வேலை.சாப்பிட்டுப் படுங்கள்.பேசியவரை சந்தோஷம்,சந்திப்போம்!

12 June 2012 12:27 // நன்றி யோகா ஐயா வருகைக்கும் கருத்துக்கும்! நாளை சந்திப்போம் குட் நைட்!

கலா said...

என்ன நடக்குதிங்க...?
ரொம்பதான் என்னை இழுக்கிறாப்பல...

யாருக்கும் பயமில்லாமல் போச்சு
இருக்கட்டும்!இருக்கட்டும்!!
என்னோட அவருகிட்டச் சொல்லி
எல்லோரோட வாய்க்கும் விலங்கு
போட வைக்கிறன்.

என்நாத்தனாரு நல்லாத்தான் ஊரு சுத்திறாவுபோல....
கவனம் புளள யாராச்சும் கொத்தித்துப்
போகப்போறாக....
போறதுதான் போறீக..அந்தத் திருநெல்வேலியில அல்வாவும்,அந்த மதுரையில மல்லிகையும்...வாங்கி
ஒரு எட்டுவந்து குடுத்திகிட்டுப் போகலாமில்ல...
ஹேமா, உப்புப்பிரம்போட வாறன் என்
மானத்தவாங்கிறதற்கு நான் அடிக்கமாட்டன் "அங்க"கொடுத்துப் போடச்சொல்லுவன் கவனம்.
தனிமரத்துக்கு ஜோடியில்லாமக் கொழுப்பு ரொம்ப ஜாஸ்தி இனி உப்புதான் சாப்பாடு .சிங்கைக்கு வாங்கோ நல்லா வறுதெடுக்கிறன்.
யோகாத்தான் ரொம்பக் கிண்டல் பண்ணினால்...அக்காகிட்டச் சொல்லிச்...சொல்லி.....அப்புறம் !!
போச்சு>!!!!!

காற்றில் எந்தன் கீதம் said...

பிரதேச வாதமும் மதவாதமும் பிரித்த நட்புகள் பல...ஹ்ம்ம்
என்ன சொல்ல... தொடருங்கள் தொடர்கிறேன்...

Yoga.S. said...

காலை வணக்கம்,நேசன்!§§§§§வாங்க மச்சினிச்சி!நலமா?ரிலாக்ஸா இருக்கிற மாதிரி தெரியுது?நான் ஒண்டுமே சொல்லயில்லையே?முழுக்கப் படிச்சுப் பாருங்கோ,நான் உங்கட பேரையோ,பட்டத்தை?!யோ ,யூஸ் பண்ணவே இல்லையே?ஹி!ஹி!ஹி!!!

கலா said...

ஹைஆஹாஆஆ....நாத்தனாரே!உங்க மாமாவுக்கு வந்த பயத்தப் பாத்தீகளா? ஏதாவது மாமாவுக்குப் பக்கம் பாடி வந்தீக....

Yoga.S. said...

கலா said...

ஹைஆஹாஆஆ....நாத்தனாரே!உங்க மாமாவுக்கு வந்த பயத்தப் பாத்தீகளா? ஏதாவது மாமாவுக்குப் பக்கம் பாடி வந்தீக....///இருக்கும்மா உங்களுக்கு(கருக்கு மட்ட) கட்டாக் வந்தப்புறம்,ஹ!ஹ!ஹா!!!!!!

தனிமரம் said...

கலா said...
என்ன நடக்குதிங்க...?
ரொம்பதான் என்னை இழுக்கிறாப்பல...

யாருக்கும் பயமில்லாமல் போச்சு
இருக்கட்டும்!இருக்கட்டும்!!
என்னோட அவருகிட்டச் சொல்லி
எல்லோரோட வாய்க்கும் விலங்கு
போட வைக்கிறன்.

என்நாத்தனாரு நல்லாத்தான் ஊரு சுத்திறாவுபோல....
கவனம் புளள யாராச்சும் கொத்தித்துப்
போகப்போறாக....
போறதுதான் போறீக..அந்தத் திருநெல்வேலியில அல்வாவும்,அந்த மதுரையில மல்லிகையும்...வாங்கி
ஒரு எட்டுவந்து குடுத்திகிட்டுப் போகலாமில்ல...
ஹேமா, உப்புப்பிரம்போட வாறன் என்
மானத்தவாங்கிறதற்கு நான் அடிக்கமாட்டன் "அங்க"கொடுத்துப் போடச்சொல்லுவன் கவனம்.
தனிமரத்துக்கு ஜோடியில்லாமக் கொழுப்பு ரொம்ப ஜாஸ்தி இனி உப்புதான் சாப்பாடு .சிங்கைக்கு வாங்கோ நல்லா வறுதெடுக்கிறன்.
யோகாத்தான் ரொம்பக் கிண்டல் பண்ணினால்...அக்காகிட்டச் சொல்லிச்...சொல்லி.....அப்புறம் !!
போச்சு>!!!!!// நன்றி கலா வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

பிரதேச வாதமும் மதவாதமும் பிரித்த நட்புகள் பல...ஹ்ம்ம்
என்ன சொல்ல... தொடருங்கள் தொடர்கிறேன்...

12 June 2012 20:27//ம்ம் நன்றி தோழி வருகைக்கும் கருத்துரைக்கும்!