ஐஸ்கிரீமுக்கும் உனக்கும்
ஒரேயொரு வித்தியாசம்,
அது வெளியே வந்தால்
உருக ஆரம்பிக்கும்!
நீ வெளியே வந்தால்
உருக்க ஆரம்பிப்பாய்!
(பா.விஜய் காதல்@காதலிகள்.காம் கவிதைத் தொகுப்பு)
ஒரேயொரு வித்தியாசம்,
அது வெளியே வந்தால்
உருக ஆரம்பிக்கும்!
நீ வெளியே வந்தால்
உருக்க ஆரம்பிப்பாய்!
(பா.விஜய் காதல்@காதலிகள்.காம் கவிதைத் தொகுப்பு)
ரவியின் நண்பனுடன் இத்தாலியன் சமையல்த்தளத்தில் வேலை காலை 10 தொடங்கும் வழமையாக, என்றாலும் ஜீவன் கண் விழித்துத்துக்கொள்ளுவது 7 மணிக்கு; காரணம் நிசாவை நேரில் பார்க்க !
எங்கள் ஊரில் உயர்தரம் படித்துவிட்டு பல்கலைக்கழகம் புகுவதுக்கு இடையில் ஏதாவது ஒரு கற்கை படிப்பது போலதான் பாரிசிலும் பல்கலைக்கழகம் போக முன் சிலர் bac pro என்ற தொழில் துறை சம்மந்தமான குறுங்கால (2 வருடங்கள்)பாடத்திட்டம்..
இதில் அவர்கள் விரும்பினால் தொடர்ந்து படித்து பல்கலைக்கழகம் புகும் வசதி இந்த நாட்டுச்சட்டப்படி இருக்கின்றது. இந்தப்பாடத்திட்டத்தில் கணக்கியல் படிக்கும் நிசாவை தினமும் பின் தொடர்வதே முதல்பொழுபோக்கானது. அடிமனதில் ஒரு பயம் வந்ததில் இருந்து வீட்டுக்கு போய் வருவதிலும் சரி, வரும் வழியிலும் சரி, எங்கு கண்டாலும் சிநேகபூர்வமாய் காலை ,மாலை வணக்கம் சொல்லி நலம் விசாரிக்கும் இந்த நாட்டு சூழலில் இருந்து அவளும் விலகியது இல்லை; நானும் பழகிக் கொண்டேன்.
தினமும் அவள் வரும் நேரம் தெரிந்துகொண்டேன். படிப்பு பற்றிய உரையாடலுடன் தொடங்கிய பேச்சுக்கள் எதிர்கால கனவுகள் என்ன என்று அறியும் ஆவல் வரை மனம்விட்டுப் பேசும் அளவுக்கு நட்பாக வளர்ந்து இருந்தது! இந்த 6 மாத இடைவெளியில் இத்தாலியன் உணவுகள் பற்றி அவளோடு உரையாடும் போது, தான் இத்தாலி முன்னர் போய் வந்த கதை பேசும் அளவுக்கு நம் இருவருக்கும் நெருக்கம்! இது பாரிஸ் ரயிலில் சகஜம். பொதுவாக பல விடயங்கள் தெரிந்தவர்களிடம் பேசுவது அதிலும் ஒரு அலாதி இன்பம் இருக்கின்றது! அதுவும் மனதிற்குப் பிடித்தவர்களிடம் மனம் விட்டுப்பேசுவது என்பது விக்கிரமனின் நான் பேச நினைப்பது எல்லாம் புத்தகம் போல சுவையாக இருக்கும்.
நாங்கள் கதைப்பது சோதி மாமாவுக்கும் மாமிக்கும் நன்கு தெரியும் என்றாலும் அவர்கள் இதுவரை ஒன்றும் சொல்லியது இல்லை. காதல் என்று நோக்கவில்லை. இங்கு பெண்களும் ஆண்களும் நட்புடன் பழகுவது சர்வசாதாரணம் ஒரு புறம் என்றால், ஊரில் வேறு குடும்பத்தின் உறவு நிலை தெரியும் என்பதால் போலும்; என்றாலும் எத்தனை நாள் தான் இந்த நட்புப்பயணம்?.. ரயில் தொடர் முடிவு என்பது எல்லாவற்றுக்கும் வரவேண்டுமே! காதலுக்கும்அப்படித்தான்.
நான் அன்று என்னோடு ரயிலில் வந்த நிசாவிடம் வெளிப்படையாக கதைத்தேன்!
. 'நிசா எனக்கு சினிமாவில் போல சுத்தி வளைச்சுப் பேசத் தெரியாது. உன் கூட சேர்ந்து நீண்டகாலம் வாழ வேண்டும் என்று ஆசைப்படுகின்றேன்! உன் கனவுகளுக்கு கூட இருந்து துணைவரணும் என்று நினைக்கின்றேன்! என் மனதில் நீ நீண்டநாளாக நர்த்தனம் புரிகின்றாய்! தளபதி சோபனாபோல உன்னை எனக்கு அதிகம் பிடிச்சு இருக்கு. நல்லாக ஜோசி ?நாம் ஏன் சேர்ந்து வாழக்கூடாது?? விருப்பம் உடனடியாக சொல்ல வேண்டாம். நல்லா ஜோசி, இரண்டு வருடம் கழித்துத் தான் கலியாணம்!
எனக்கும் தங்கைகளின் பொறுப்பு இருக்கு, உனக்கும் தங்கைகள் படிப்பு முடிக்க உதவியாக இருக்கணும். இடையில் இந்த மாதிரியே நட்பாக கதை. குறுஞ்செய்தி அனுப்பு. பாரிஸ் வீதிகளை விடுமுறை நாளில் சுற்றுவோம். நல்ல படங்கள் வந்தால் சேர்ந்து போவோம். முடிவு உன் கையில் வரும். தரிப்பிடத்தில் இறங்கப்போறன். Je t'aime nisha je veux ne marier avec toi !' அகன்ற விழியில் என் பேச்சையே கேட்டுக்கொண்டு வந்த நிசா முகத்தை உயிர் உள்ளவரை மறக்க முடியாத நாள் மே மாதம் 9 திகதி 2003 !

நீண்ட குழப்பத்தின் பின் காதலைச் சொல்லிய சந்தோசத்தில் !
உணவகத்தில் உள்ளே நுழைந்தேன் காலை
வேலை செய்ய..
உணவகத்தில் உள்ளே நுழைந்தேன் காலை
வேலை செய்ய..
கழுவல் தொழிலில் இருந்து படிப்படியாக முன்னேறி, உதவி சமையல் பணியில் இப்போதைய நிலையில் என் வேலையில் மூழ்கியிருந்தேன். சில சமையல் தளங்களில் முக்கிய பொருட்கள் கீழ் தளத்தில் இருக்கும். அன்றும் அப்படித்தான், முக்கிய சாப்பாடு செய்யும் நூடில்ஸ் எடுத்துக்கொண்டு வரும் போது!
14 comments :
வணக்கம் நேசன்.....அடிக்கடி உங்கள் குரலை புரட்சியில் கேக்கிறன்.சந்தோஷமா இருக்கு.அதனால சுகம் கேட்கத்தேவையே இல்ல.சுகமா இருக்கிறீங்களெண்டு தெரியுது!
அன்பான தீபத் திருநாள் வாழ்த்தும் நேசன் உங்களுக்கும் உங்கள் துணைக்கும் !
உண்மையில் உங்கள் தொடர் நிறையவே தவறவிட்டாச்சு நேசன்...நேரமெடுத்து வாசிக்கவேணும்.வாசிப்பேன் !
அன்றும் அப்படித்தான், முக்கிய சாப்பாடு செய்யும் நூடில்ஸ் எடுத்துக்கொண்டு வரும் போது!//
கர்ர்ர்ர் :))சஸ்பென்ஸ் ....அடுத்த பார்ட் எப்போ ..நாளைக்கா ??
நேசன் நலமா .
தீபாவளி எப்படி இருந்தது ...என்ன ஸ்பெஷல்
ஆ!!! ஹேமா !!! நலமா ..தீபாவளி ஸ்பெஷல் என்ன ?
இங்கே ஒரே பட்டாசு போடறாங்க ...நிறையா சீக்கியர் /குஜராதிக்காரங்க இருக்காங்க ..கலர் கலரா வான வேடிக்கை
ஹேமா அன்ட் நேசன் இருவருக்கும் நல்லிரவு வணக்கம் ..
ஏஞ்சல்....சுகம்.சுகம்தானே நீங்களும் வீட்ல குட்டீஸ்ம் ?’அதிரச’த்துக்கு மிக்க மிக்க நன்றி...எல்லாரும் சேர்ந்து நல்லாவே ’அரியாதார’மெண்டு குழப்பிபோட்டினம் ...ஒரே சிரிப்புத்தான்.ஊர்வரை என்ர மானம் கப்பலில போய்ட்டுது ஏஞ்சல்....சரி சரி சமையலில இதெல்லாம் சகஜமப்பா...ஹிஹிஹி !
அருமையான கவிதையோடு ஆரம்பித்து, அடுத்த பகிர்வை ஆவலுடன் எதிர்ப்பார்க்குமாறு முடித்துள்ளீர்கள்... தொடர்கிறேன்...
நன்றி...
tm1
நிஷாவின் பதில் என்னவாக இருக்கும் என்று ஆவலுடன் காத்து இருக்கின்றேன் அடுத்த பகுதிக்கு
நலமா நேசரே...தீபாவளி நல்லாயிருந்ததா?
தொடருங்கள்...
வணக்கம் நேசன்.....அடிக்கடி உங்கள் குரலை புரட்சியில் கேக்கிறன்.சந்தோஷமா இருக்கு.அதனால சுகம் கேட்கத்தேவையே இல்ல.சுகமா இருக்கிறீங்களெண்டு தெரியுது!
அன்பான தீபத் திருநாள் வாழ்த்தும் நேசன் உங்களுக்கும் உங்கள் துணைக்கும் !
உண்மையில் உங்கள் தொடர் நிறையவே தவறவிட்டாச்சு நேசன்...நேரமெடுத்து வாசிக்கவேணும்.வாசிப்பேன் ! .. வாங்கோஓஓஓஓஓஒ ஹேமா நலமா! தீபாவளி நல்வாழ்த்துக்கள் பிந்திய !நேரம்எடுத்து வாசிங்கோ மொக்கைதான் அதிகம் ஹீ நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்!
அன்றும் அப்படித்தான், முக்கிய சாப்பாடு செய்யும் நூடில்ஸ் எடுத்துக்கொண்டு வரும் போது!//
கர்ர்ர்ர் :))சஸ்பென்ஸ் ....அடுத்த பார்ட் எப்போ ..நாளைக்கா ?? ..ம்ம் வாங்க அஞ்சலின் அக்காள் இனிய பிந்திய தீபாவளி நல்வாழ்த்துக்கள்§
நேசன் நலமா .
தீபாவளி எப்படி இருந்தது ...என்ன ஸ்பெஷல்
13 November 2012 13:30
//நான் நலம் அஞ்சலின் அக்காள் தீபாவளி வேலையுடன் போய் விட்டது இஸ்பெசல் இல்லை!ம்ம்
varumpothu...
Post a Comment