16 March 2011

இதுதான் தமிழன் விதியா?

நம் இளைய சமுதாயம் ஏன் வன்முறையின் பாதையில் போகின்றனர் பிரென்ஸ் காவல்துறை ஆனையாளர் (93)மாகாணத்திற்கானவர் ஈழத்தமிழ் மக்களின் இளையவர்கள் அதிக குழுவன்முறையில் ஈடுபடுவதுடன் சட்டவிரேதமாக கூரிய ஆயுதங்களை பயன்படுத்துவது அதிகரித்துள்ளதாகவும்,இவர்களின் போக்கு குடியேற்றவாசிகளின் அகதிக்கொள்கையில் இறுக்கம் தேவை எனப்பொருள்படும் வண்ணம் கருத்துக்கூறியுள்ளதை இவ்வார அச்சு,இலத்திர ஊடகங்கள் முதன்மைப்படுத்தி செய்தி வெளியிட்டுள்ளது.இன்று அதிக அகதிகள் வதிவிடஅனுமதி கிடைக்காமல் குடும்பத்தை பிரிந்து வேலைகிடைக்காமல் அதிக மன உளைச்சலில் இருக்கும்போது சிலபுல்லுரிவிகளின் போட்டி,பொறாமையின் செயலால் ஓட்டு மொத்த ஈழத்தவர்களையும் வன்முறையாளர்கள்,சகிப்புத்தன்மையறறவர்கள் என்றல்லவா முத்திரைகுத்தப்படுகிறோம்,நாளைய சந்ததியும் அல்லவா வேலை பெறமுடியாத அவப்பெயர் கிடைக்கப்போகிறது.ஊரில் போருக்கு அஞ்சி இங்கு வந்து அடைக்கலம் தேடி சகல அரச உதவிகளை பெற்றுக்கொண்டு சட்டத்தை மதிக்காமல் இவர்களின்செயல்பாடுகளால்   பாதிக்கப்போவது  அகதி அடைக்கலத்திற்கு விண்ணபித்துவிட்டு காத்திருக்கும் உறவுகள்தான்.எதிரியிடம் தப்பினாலும் இவர்களால் பதிக்கப்படுகிறோமே. யார் இவர்களை திருத்துவது.

1 comment :

Anonymous said...

இதுப் போன்ற செயல்களுக்கு கட்டற்ற சுதந்திரமும், ஒழுக்கமான, நல்ல வழிக்காட்டல் இல்லாத மூத்தோரும் காரணமாக அமைகின்றது ... 1999 என்ற ஈழ கனடிய படம் இதனை நன்கு பிரதிபலித்தது .... அனைவரும் அப்படத்தைக் காண்பது நல்லது ..