26 April 2011

ஊர் விளையாட்டு-1

பட்டம் இது பள்ளிப்படிப்பை பற்றியது இல்லை!
இன்றைய இளைஞர்கள்,சிறுவர்கள் கணனியும் ,சின்னத்திரையிலும் மூழ்கிக்கிடக்கும் காலம் ஆனால் எங்கள ஊரில் நாம் வாழ்ந்த காலத்தில்  எங்களின் விளையாட்டு பட்டம் கட்டுதல்,
அழகான ஈச்சம் தடியில்,பூவரசம் தடியில்,பச்சைக்கருக்கு மட்டையில்., சாணம் பட்டம்,கொக்குப்பட்டம், மீன்பட்டம் என வசதியானதை கட்டுவோம்!..
என்னுடன் படித்தவர்கள் மட்டுமல்ல கிராமத்து விடலைகளும் எங்களுடன் போட்டி போடுவினம் பட்டம் கட்டுவதில்..
அழகான மாட்டுத்தால் கடதாசியில் ஒட்டும் பட்டம் எந்தக்காற்றுக்கும் நின்று பிடிக்கும்..
மாலை வேளையில் எல்லோருமாக அரிவி வெட்டிய அந்த வயல் வெளிகளில் மெதுவாக நைலோன் நூலின் உதவியுடன் பறக்கவிட்டு பட்டம் ஏற்றினால் மெது மெதுவாக நூலை விட்டுக்கொடுத்துக் கொண்டிருந்தால் ஆடி அசைந்து கண்னுக்கெட்டிய தூரம் தாண்டி ஏழுபனை உசரத்திற்கு ஏறும் !

இரண்டு கோம்புவில் இரு பொன்னச்சி கட்டை (வைன்போத்தல் மூடிவரும் சக்கையைப் போன்றது)கட்டி சிறு நூழை இருதடவை சுற்றினால் அழகான சத்தம்போடும் இதை வின்கூவுது என்பார்கள் வட்டார மொழியில் !நேரம்போவது தெரியாது நூழை ஆட்டி விடும் போது பலருடைய பட்டம் சிக்கிக்கொள்ளும் .!
சிலவேலையில் பட்டம் சிக்குப்பட்டு சண்டைபோட்டு காயங்களுடன் வீட்டுக்குப் போனால் அங்கே வாங்கும் பூசை தனியானது அதற்காக விழுந்து விட்டோம் என்று பொய் சொல்லுவதும் உண்டு!

மாலையில் எல்லோரும் தண்ணிக்குடத்துடன் போவார்கள்  குடிதண்ணிக்கு வயலில் போய் அள்ளுவது கிராமத்து வழக்கம் அப்படி போகும் சிலரின் தண்ணிப்பானையை உடைத்துவிட்டு ஓடும் குசும்பர்கள் எங்களை மாட்டி விடுவார்கள்!

சில விடலைகள் சிலருக்கு பட்டம் மூலம் கடிதங்கள் அனுப்புவினம் பனை இடுக்கினுல் சிக்கிக்கொள்ளும் பட்டங்கள் வாழ்வு இழந்தவை பட்டியலில் சேரும் நூழை சுருட்டிக்கொண்டு வரவேண்டியது தான்.
பலபொழுதுகள் பட்டம் விடும்போது பந்தையம் வைப்பார்கள் யாருடையது அதிக தூரம்போகுதோ அவருக்கு  கள்ளுவாங்கிக் கொடுக்கனும் சிறியவர்களுக்கு ஆட்டுக்கால் விசுக்கோத்து வாங்கிக்கொடுக்கனும்(இது இப்போது வழக்கத்தில் இல்லை) இப்படித்தான் எங்கள் பந்தையம் இருக்கும்.
...  
சூரியன் கடலில் மூழ்கும் போது நாங்கள் வீடு திரும்புவோம்,   சிறுவர்  பட்டாளம் ஒரே இரைச்சலுடன் வீடுபோகும் போது யாராவது விளக்கம் வைத்தால் பூவரசம் கம்பு தயாராக இருக்கும்!..
..
பட்டம் விடும்போட்டியில் யாரின் பட்டம் முதலில் வருகிறது என்பதற்காக நாங்கள் ஒரு சதி செய்வோம் சகுனிபோல்  நூலில் கொஞ்சம் சுண்ணாப்பை தடவி விட்டால் அந்தப்பட்டம் சில நிமிடத்தில் அறுந்து பனைக்கூடலில் விழும்  பலதடவை தப்பினாலும் ஒரு தடவை ஒருவரிடம் நையப்புடைந்த அனுபவம் என்றும் தழும்பாக என் வலது நெற்றியில்!

No comments :