20 April 2011

அப்பாவிகள்!!!

இப்படியான ஒரு வாரங்களில்தான்
கிலக்கில் இருந்து அந்த யுத்த அரக்கன் 
எங்கள் வாழ்க்கையை துவசம் செய்துகொண்டு இரத்தவெறியுடன் கோரத்தனமாக நெறிகெட்டு இராட்சதசேனைகளுடன் படையெடுத்தான்!
........,,

இரத்தவாடை அவனை இதயம் துடிக்கவிடவில்லை !வெற்றி என்ற வேதாளம் மூலைச்சலவை செய்யப்பட்டு !போதை ஏற்றப்பட்டு !எங்கள் பூமி எங்கும் புயலாக
அக்கினி சுவாலையை வீசினான்!

எடுத்துச் செல்ல ஏதுமில்லை எல்லாம் கைநழுவிப்போய்க்கொண்டிருக்குது!
எல்லைபோட்டு வாழவைத்த வேங்கைகள் வேள்வியில் ஆகுதியாகும் போது !அபலைகள் கண்ணீருக்கு ஆறுதல்கூற அயலவர் இல்லை!

குடும்பங்கள் பிரிகின்றது ,குற்றுயிராக நம்பிக்கை  குதறப்படுகிறது!
காமப்பிசாசுகள் வேட்டையாடுகிறது புலிமான்கள் என்று தமிழ் மாதர்களை!
வானரக வல்லூருகள் வாரி இறைக்கிறது
பொசுபரசு பொதிகளை குடம் குடமாக!

..............,,,.
வற்றாத குளம்கள் எல்லாம் வன்னியின் மானிட  கொடுமைதாளாது பெருக்கேடுக்கிறது வாழ்ந்தது போதும் ஓடிஓடிக் கரைசேர்வோம் என்ற ஒளியில்லா
ஒருதிசைக்கு!

போதனை சொன்னவன் புதல்வர்கள் தறிகெட்டு தாண்டவம் ஆடுகிறார்கள!
மதிகெட்டு பிண்டங்கள்,பிதற்றல்கள்,அழுகுரல்கள்,கதறல்கள்,காப்பாற்ற யாருமில்லை!
கண்ணீர் வற்றிய பார்வையில் உதவிக்கு உடன்யாருமில்லை ,
யாருக்கு யார் கொள்ளிவைப்பது பிணக்குவியலில் கொழுத்துவதுதான் என்னால் முடிந்தபணி கால் இல்லாதவன் 
வேற என்ன சாதிக்க முடியும்!

எத்தனை ஒட்டம் ஓடிவிட்டேன் இப்போதுபோல் முன்னர்வந்ததில்லை!
வல்லரசுகளும் ,அசோகச் சின்னத்தாரும்,
ஆட்டுவிக்கும் அராஜகத்திற்கு ஆல்பவர்கள்
மத்துக்கடைகிறார்கள் தமிழர் வாழ்வில்!
கலிங்கத்துப்பரனி படித்தேன் !இன்று பார்க்கின்றேன் எங்கள் சந்ததிகள் அறுபட்ட பனைகளாக்  குற்றுயிரும் பிணங்களாகவும்!

ஓரு ஒலித்திசையில் நானும் ஊர்ந்து போகிறேன் நாளைய விடிவு  நல்லதா!
வரும் என்ற உந்துதளில்!பாவிகள் நாம்
பாவிகள் அப்பாவிகள்!

2 comments :

ஹேமா said...

நேசன்...கண் கலங்கிப்போச்சு.பெருமூச்சோடு போகிறேன்.வலி வலி.ஆனால் நிச்சயம் விடியும்.உலகில் எத்தனையோ நாடுகளின் சரித்திரம் எங்களுக்கும் பாடமாக இருக்கிறது !

தனிமரம் said...

நன்றி சகோதரி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.நானும் விடியும் என்ற வலிகளுடனே  காத்திருக்கிரேன் .!