30 April 2011

கேதீஸ்வரர் தரிசனமும் தொலைந்த நிம்மதியும்-நிறைவுப்பகுதி!

நாட்டில் எப்போதும் எங்கேயும் குண்டு வெடிக்க கூடிய காலகட்டம். மக்கள் எந்த சத்தம் வந்தாலும் முதலில் என்னுவது குண்டுச்சத்தம் என்றுதான் .இது தானே நாட்டில் புரையோடிப்போய் கிடக்கும் தலைமுறைப் பிரச்சனை!
.. 
நானும் முதலில் எங்கேயோ கிளைமோர் வெடித்துவிட்டது என்றுதான் தலையை குப்புறச்சாய்த்து வாகன ஆசனத்தில் சாய்ந்து கொண்டேன்!  வெளியில் இரானுவத்தினர் தயார் நிலையில் இருந்ததை ஓரக்கண்ணால் பார்த்தேன்!
..
அவர்களிடையே  பதட்டமான நிலையில் உரையாடல் நிகழ்ந்தது பின் அமையான நிலையில் இருந்தனர். நாங்கள் நினைத்தோம் இன்று எங்கள் எல்லோருக்கும் செம்பனிதான் என்று  .இரானுவத்திற்கு இழப்பு வந்தால் அருகில் இருப்பவர் உயிர் உத்தரவாதம் இல்லை எத்தனை செய்திகளை நாளேடுகளில் படித்திருக்கிரேன்!
..
சில நிமிடங்களில் ஒரு ஆமிக்காரன் வந்து சொன்னான் முன் வாகனத்தில் பெற்றோல் டாங்கி  வெடித்துவிட்டது என்று அதனுடே புலியில்லை என்று அவர்களை இகழ்ந்து கூறினான் ,..

சில இடங்களில் ஊமையாகவும், மொழி தெரியாதவனாக இருந்தால் சில பண்பற்ற வார்த்தைப் பிரயோகம் வரும் போது சும்மா இருக்கலாம். மொழி புரிந்தால் மனதில் வன்மம் வரும் .எனக்கு அவர்களின் வார்த்தைகள் செவியில் வென்னீரை ஊற்றியது போல் இருந்தது !என்ன செய்யமுடியும் இப்படித்தானே பல இடங்களில் சுயம் இழந்து போகின்ரேன்!..

அப்பனே கேதீஸ்வரநாதரே எங்கள் எல்லோரையும் பத்திரமாக மன்னாரில் சேர்த்துவிடு ! இவர்கள் தயவில்  இருந்து பயணத்தை நிறைவு செய்தால் போதும் என வேண்டிக்கொண்டேன்!
.. 
தனியாக ஏதும்  நடந்தால் அதற்கு நான் பொறுப்பு  !இப்படி மற்றவர்களுக்கு தெரிவிக்காமல் ஆசையில் போய் ஏதாவது விபரீதம் என்றாள் என் வேளைத்தளத்திற்கும்  கெட்ட பெயர் ,எல்லாவிதமாகவும் மனசு சஞ்சலப்பட்டுக் கொண்டிருந்தது!

..நாதரே இப்படி
அருமையான தரிசனம் காட்டிய  பின் இப்படி மனசை அலைபாயவிடலாமோ! 
மன ஓட்டத்திற்கும்  வாகனம் ஓடிய வேகத்திற்கும் மதியம் நகரை வந்தடைந்தோம்!
..
போன சுவாசம் மீண்டும் வந்தது !ஆமியின் காவலில் இருந்து எமது அடையாள அட்டையையும் என் வேளைத்தள அட்டையையும் வாங்கும் போது ஆமிக்காரனிடம் கேட்டேன் ஏன் டாங்கி வெடித்தது என்று!..

இரானுவத்தில் வாகனங்களை ஓட்டுபவர்கள் எந்த  பழுதும் பார்க்காமல் கணக்கு எழுதி காசை தம் டாங்கியில் போட்டுவிடும்  ராஜவிசுவாசிகள் .நீண்ட தூரம் போகக்கூடிய வாறு திருத்தி வைப்பது குறைவு  அல்லது கவனயீனம் எனலாம்.  அவர்களிடம் கேட்டால் ஊசிபோறதிற்கு கணக்கு கேட்பினம் உலக்கைபோறதிற்கு கணக்கு கேட்காயினம் இதுதான் ஊழல் என்பதா?.

நன்றி உங்களால் என் கடவுளை தரிசித்தேன்!வாகனத்தை ஓட்டியவனிடம் உன்னை பெற்றவர்களுக்கு
புண்ணியம் சேரட்டும் என்றேன் ! .
என்னிடம் அவன் எதிர்பாராத வார்த்தைத் தொடர்!..
 .. 
தம்பி உனக்கு சிங்களம் தெரியுமா!மற்றவர்கள் பேசியது எல்லாம் கேட்டாயா!நான் கூறினேன் எல்லாத்தையும் கடவுளே என்று கேட்டுக்கொண்டேதான் இருக்கிறம் 
விடிவு தெரியாமல்!
.. 
அதன் பிறகு நகரில் கானும்போது எல்லாம் நலம் விசாரிப்பான் பாவம் அவனும் ஒருதாய்க்கு   மகன்! அவன் தொழில் இரானுவ சேவை, இனவாதப் போதனைக்கு அடிமையாகி கூலிக்கு மாறடிப்பவன்!இனி எப்போது போவேன் திருக்கேதீஸ்வரம்!?

No comments :