02 November 2011

நொந்து போகும் ஓர் இதயம்-15

"என்ன அக்ரம் ராத்திரித் தூங்கலயா? கண் சிவந்து இருக்கு!

 என்று நான் கேட்டதும் பதில் சொல்லாமல் புண்பட்ட
நெஞ்சை புகைவிட்டு ஆற்றிக்கொண்டிருந்தான்.

 .இவனுடன் பழகிய காலங்களில் அவன் உணர்ச்சி வசப்பட்டு இருக்கும் நேரத்தில் இந்த புகைவிடும் பழக்கம் அதிகம் என்பதை  கண்டுகொண்டேன்!

"என்ன பாய்.  ஏன் டென்ஸன் ?விற்பனை அளவைத் தாண்டலையோ?

"என்னால் யாரையும்  நம்ப முடியல !யாரும் இப்படி நம்பிக்கையை சீரலிப்பார்கள் என்று  கனவு காணவில்லை.

" எனக்கு வார ஆத்திரத்துக்கு ஏதாவது செய்யனும் போல இருக்கு.!

"என்னடா சம்மந்தம் இல்லாமல் பேசுகின்றாய் .

வெளியில் வா போய் கோப்பி குடித்துக் கொண்டு கதைப்பம் என்று நாங்கள் வெளியேறி எதிரே இருக்கும் காப்பிக் கடை மேசையில் உட்காந்திருந்தோம்..

 வழமையாக நாங்கள் என்ன கேட்போம் என்பதை அறிந்த கடைக்காரர் எனக்கு பால் கோப்பியும் ,அக்ரமுக்கு பால் தேத்தண்ணியும் பரிமாறினார்.

".இப்ப சொல்லு பாய் என்ன பிரச்சனை. "

உனக்கு ஒன்றும் தெரியாதா ?

"என்ன கேட்க வார"

 புதிர்போட்டால் எனக்கு எப்படித் தெரியும் !

நேரா தீர்வுத்திட்டத்திற்கு வராமல் வட்டமேசையில் இருந்து எழும்பினால் எப்படி பாய்!


வெளிப்படையாக பேசு.

" இல்ல நேற்று நீ எங்க வேலை செய்தாய் ?

நான் சிதம்பரபுரம்!

" அங்கிருந்து  வரும்போது  கல்வாரியில் யாரையாவது  ஜோடியாக பார்த்தியா? உண்மையைச் சொல்லு.."


"என்ன எனக்கு உதா வேலை."

 யார், யார் ஜோடியா டூயட் பாடுறாங்களா, ஜாலியா கடலை போடுறாங்களா ,என்று விடுப்புப் பார்க்க!

"உன் நண்பன் நான் என்றால் விளையாடமல் சொல்லு"

 பாய் கடுப்பேத்தாத .

"சொல்லு சொல்லு என்று பாட்டுப்பாடவா படப் பாட்டைப் பாடச் சொல்லுறியா ?


" சும்மா கோபப்படாமல் புகை ஊதாத. என் சேட்டிலும் மணக்கும்.

" நேற்று நீ யாரையும் பார்க்க வில்லையா? சாலிக்காவுடன் அந்தளவுக்கு கைபேசியில் பிஸியோ !

"பாய் கடிதாங்க முடியல "

"நேற்று வாகணத்தில் ரேடியோ கேட்டுக் கொண்டிருந்தேன். வரும் போது அதனால் யாரையும் கவனிக்க வில்லை.

" நீ யாரைப் பார்த்த விசயத்தைச் சொல்லு"

  நேற்று சின்னமதினியை ஒரு பையனுடன் கல்வாரியில் பார்த்தேன்!

" நீ என்ன சொல்லுறாய் அகர்ம் ?

பார்த்திமா அப்படிச் செய்யமாட்டாள்!

 நீ வீனாக சந்தேகப்பாடாத.

" இல்ல தனிமரம். நான் அவங்க இரண்டு பேரையும் தொடர்ந்து கவனிக்கின்றன்

 ".ஒன்றா படிப்பதால் ஏதாவது சந்தேகம் தீர்க்க போய் இருப்பாங்க.

" நானும் அவங்கள் ஒன்றாக படிப்பதால் தான் முக்கியத்துவம்  கொடுக்காமல் இருந்தன்.

 ஆனால் நேற்று அவர்கள் கல்வாரியில் இருந்த காட்சியை என்னால் அசட்டையாக இருக்க முடியாது!

 மொயூத்  வாப்பா கிட்ட இதை எப்படிச் சொல்லுறது என்று தெரியல .

பானுக்கிட்டையும் இன்னும் வாய்திறக்கல .

"நேற்று இரவு இதுதான் ஜோசனை
அதனால ஒழுங்கா நித்திரை கொள்ள முடியல "

மற்ற மதினிக்கு நிக்கா நடக்க இருக்கும் இந்த நேரத்தில் இப்படி ஒரு சூரியகதிர் நடவடிக்கையா??

 மன்னாரில் இருந்து படிக்க இங்க வந்தவள் இப்படி திசைமாறுவதா தனிமரம்!


பாய் அப்படி இருக்காது அவள் படிப்பை சீர்குழைக்கக் கூடாது.

 முதலில் அமைதியாக இரு அக்ரம்.

 நான் பேசிப்பார்க்கின்றன் பார்திமாவிடம்..


"ஆமா யாரு பையன்"

 உங்க தோஸ்த்து தான் தனிமரம்.

 யாருடா நம்ம கூட நிறைய பசங்க நட்பு "

நீயாரைச் சொல்லுறாய்?

 அதுதான் கோவில் குளத்தில் இருக்கிறானே.

 நீ போனகிழமை சாலிக்காவுடன் பேசும் போது அருகில் இருந்தானே.

 பார்த்தால் நல்ல பெண்டா சோடா கலரில் இருப்பானே.

 ஓ ரவியா!


 அவன் பெயர் ரவியா தனிமரம்.

 இதை ஒரு வழி பண்ணனும்!
"சரி நான் பார்க்கின்றன்.
 நீ வேலையைப் பாரு பாய்."

உரலுக்கு ஒரு பக்கம் இடி உலக்கைக்கு இரண்டு பக்கம் இடி என்பது போல் நான் இரண்டு பக்கமும் பொய் சொல்ல வேண்டிய நிலையை கடவுள் தந்து விட்டானே !

பார்த்த காட்சியைக் கூட நட்பின் நிமித்தம் வெளிக்காட்டிக்க முடியவில்லை.

 இந்த பாதை எங்கு போய் முடியுமோ! ஊரில் உள்ள தெய்வங்கள் எல்லாம் என் சிந்தனையில் !

பார்த்திமாவிடம் கதைப்பம் என்று அன்று மாலையில் அவர்கள் வீட்டுக்குப் போனேன். அங்கே பார்த்திமா இந்தப்பாடலை


பொதிகை அலைவரிசையில் பார்த்துக் கொண்டிருந்தால் என் வரவை கவனியாது!

11 comments :

K.s.s.Rajh said...

அட அண்ணன் பஞ்சாயத்து பண்ண கெளம்பீயிருக்கீங்க...........பொதுவாக காதலுக்கு பஞ்சாயத்து பண்ணினால் நமக்கு செம்பை நெளிச்சுடுவாங்க...ஹி.ஹி.ஹி.ஹி.......உங்களுக்கு என்ன நடந்ததோ?அடுத்த பகுதிக்கு வெயிட்டிங்

நிரூபன் said...

இனிய காலை வணக்கம் பாஸ்,
தொடர் இப்போது தான் முக்கியமான கட்டத்திற்கு வந்திருக்கிறது.
பார்த்திமாவின் காதலுக்கு என்னாச்சு?
அக்ரமின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பதை அறியும் ஆவலோடு காத்திருக்கிறேன்.

தனிமரத்திற்கு செம்பு நெளிச்சாங்களா என்பதனை அறியவும் ஆவல்

ஹே...ஹே...

செங்கோவி said...

ரொம்ப இக்கட்டான நிலை தான் நேசருக்கு..

சென்ற பகுதியும் வழக்கத்தை விட மாறுபட்டதாக இருந்தது...

தனிமரம் said...

வாங்க ராச் ஒரு பால்கோப்பி குடியுங்கோ செம்பை நெளிச்சாக்கலா பதில் விரைவில்? நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

இனியகாலை வணக்கம் நிரூ!
நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும் செம்பு நெளிச்சாங்கலா பதில் விரைவில்!

தனிமரம் said...

நன்றி செங்கோவி அண்ணாச்சி வருகைக்கும் கருத்துரைக்கும்!

பால கணேஷ் said...

நானும் படிச்சுட்டுத்தான் இருக்கேன். கதையோட அருமையான பழைய பாடலையும் இணைச்ச ஐடியா சூப்பர் ஐயா!

Unknown said...

அருமையா இருக்கு பாஸ்! எனக்கு பழக்கப்பட்ட வவுனியா ஏரியா எல்லாம் வருது! பொறுமையா முதல்ல இருந்து வாசிக்கணும்!

Anonymous said...

மறுபடியும் தொடர் திசை மற்றும் களம் மாறுகிறதோ? நேசன் "நாட்டாமை" தீர்ப்பை மாற்றி சொல்லுங்க...

MANO நாஞ்சில் மனோ said...

நாட்டாமை சொம்பை தூக்கியாச்சு இனி என்னெல்லாம் நடக்கப்போகுதோ...??

Anonymous said...

உலக்கைக்கு இரண்டு பக்கம் இடி //

செம்பை நெளிச்சாங்களா...இல்லை நசுக்கிட்டாங்களா?