05 November 2011

நொந்து போகும் ஓர் இதயம்-18

எனக்கு என்ன செய்யிறது என்று தெரியல? மன்னார் அனுப்பட்டா மூத்த மவ கூட!
 இல்ல பாய் .

மன்னார் கிட்ட என்பதால அவர்கள் இன்னும் நெருங்கி வர சாத்தியம்  இருக்கு
வாப்பா!

 நான் சொல்லுவது உங்களுக்குச் சரி என்று பட்டால்!

 பார்த்திமாவை உங்க தாத்தா வீட்டில் இருந்து படிக்க வழி செய்யுங்க. என்றேன்.

 அவர் தாத்தா இருக்கும் எழில் கொஞ்சும் மலையகத்தின் அந்த நகருக்கு அனுப்பும் படி கூறவும். அவர் முகக்தில் ஆனந்தம் ஒரு நிமிடம்!
" அதே மறு நிமிடம் வீட்டிலும் மற்ற  உறவுகளுக்கும் உடனே என்ன சொல்வது என்ற தோரனையில் வட்டாம் அவர் முகத்தில்!

எல்லாப் பக்கமும் ஜோசித்த போது இது சரி என்று பட்டதும். வாப்பாவும் பார்த்திமாவை வேறு இடத்திற்கு  அனுப்புவம் என்று உடன் பட்டார்.

 இது யாருக்கும் தெரியக்கூடாது பாய்.

 சின்னச் சின்ன விடயங்கள் வாழ்வில் சூறாவளியைக் கொண்டரும்.

" காதலின் பாதையில் போவோருக்கு நாம் போடும் அணை எரிகின்ற தீயில் எண்ணை வார்ப்பதைப் போல்!

 படிக்க வேண்டிய காலத்தில் இது கூடாது என்பது வாப்பாவின் தீர்மானம் .

அதை நானும் சபாநாயகர் போல் ஆதரித்தேன்.

" எப்படி மவளைக் கூட்டிப்போவது எனக்கு ஒன்றும் புரியுது இல்ல மவன். மூளை எல்லாம் மூங்கில் காடு போல் திக்குத் தெரியுது இல்ல.


"வாப்பா போனவாரம் நமக்கு நடந்தது எல்லாம் நல்லதுக்கு என்று ஜோசித்துப் பாருங்க."

அதன் படியே செயல்படுங்க.

 நாம யாருக்கும் கெடுதல் செய்யல. சில காலம் சென்றதும் வாழ்வின் அர்த்தங்கள் புரியும் .

".மவன் நீ உண்மையிலே கெட்டிக்காரன். உங்கப்பா மிகவும் தெளிவான பார்வையுடன் வளர்த்திருக்கின்றார்.

 நான் நாளைக் காலையில் தாத்தா வீட்டுக்குப் போறன் பார்த்திமாவுடன்.

 நல்லம் வாப்பா கூடவே ரிஸ்வானாவையும் கூட்டிக் கொண்டு போங்க அப்பதான் இங்கு
இருப்போருக்கு இயல்பான பயணமாக இருக்கும் .

"இல்லை என்றாள் உலைவாயை மூடினாலும் ஊர் வாயை மூட முடியாதே

!சரிப்பா நீ காலையில் பஸ் நிறுத்துமிடம் வந்துவிடு.

 இப்ப எங்க போகப்போறாய்?

 வாப்பா போன வாரப் பிரச்சனை இன்னும் முடிக்க வில்லை.

 அங்க இனித்தான் கடதாசிப் பையுடன் போகப்போறன்.

இவனுங்கள் வியாபாரம் செய்ய விடமாட்டாங்க.

 என்ன செய்வது பாய் தொழில் என்றாள் பலதும் வரும் தாங்கனும்.

 சரிப்பா இப்பதான்  மனம் தெளிந்த நீரோடை போல இருக்கு இன்ஸா அல்லா! .
 .
    // கடந்த வாரம் இப்படித்தான் வியாபார விடயத்தால் தேவன் முதலாளி,மொயூத் வாப்பா ,நான் என மூவரும் சில துயரங்களை தாண்ட வேண்டிய நிலை.

 வெளிப்பார்வைக்கும் உள் வீட்டுப் பார்வைக்கும் ஒவ்வொருத்தனின் செயலும் வேறுபாடு கொண்ட நிகழ்வுகள்.!

 எரிமலை போல் ஈழத்தைப்  பலர் பார்ப்பது ஒரு யுத்த பூமி என்று மட்டும் தான்!


  t// யுத்தம் என்ற ஒரு கொடிய அரக்கனிடம் முகம் கொடுப்பது ஒரு புறம் என்றாள்!

 குறுநில மன்னர்களும் மக்களுக்கா போராட வெளிக்கிட்டு கொள்கை மாறி ஆட்சி பீடத்தின் பின்னே சென்று மாற்றுக்குழு எனப் பலராலும் அழைக்கப்படும் பலர்!.


 இங்கு எங்கும் இருப்பார்கள் அவர்கள் பல தளங்களை வைரவப்புளியங்குளம், ,பண்டாரி குளம்,நெளுக்குளம்,கோவில் குளம் போன்ற இடங்களில் மண்மூட்டையின் துணையுடன் தகரத்தால் வேலியடைத்து வீற்று இருப்பார்கள் வேள்வி வளர்க்க.

 இவர்களுக்கு இங்கு யார் யார்  வியாபாரச் சந்தையில் முன்னுக்கு இருக்கின்றார்கள்  என்று மோப்பம் பிடிப்பார்கள். திறமையாக பின் உடும்புப்பிடி பிடிப்பார்கள்.

 அன்பளிப்பாக இவ்வளவு தொகை கொடுக்கனும் என்று ஆசையாக பேச வரச் சொன்னார்கள் என்று போனால் நம் பக்கம் சனியேஸ்வர பகவான் சத்தம் இல்லாமல் தலையில் நடணப்புயலாக  இருக்கின்றார் என்று நோக்க வேண்டியது தான்!

 முரண்டு பிடித்தால் அவர்கள் கருவி முணை  பல விடயம் சொல்லும்!
தொழில்
நிலையத்தில் // பாதுகாப்புச் சேனைகள் வியாபார நிலையைத்தை சீல் வைப்பார்கள் மறுநாள் சஞ்சிகையில் பிரபல்ய வர்த்தக நிலையைத்தில்   தேங்காய் சாக்குக்கிடையில் வெடி பொருள் மீட்கப்பட்டது என கொட்டை எழுத்தில் வரும்.

 சமயத்தில் முதலாளி வீடுகள் இனம் தெரியாத குழுவால் வீட்டுக்கு கல் எறிதல் ,தொலை பேசியில் அன்புத்தொல்லை  என
தொடர்கள் நீளும்.

 முடிவு கொண்டு வாரும் கடதாசிப் பை !

இல்லையேல் வெளியேறுவது எங்கனம் ?வீட்டில் வயசுப் பெண்கள் இருக்கும் இடத்தில் யார்தான் மோதுவார்கள்.


 அவர்கள் கேட்கும் தொகையைக் கொடுத்து விட்டு வீட்டில் வந்து பெருமிக் கொண்டு .வேங்கடவா ராமா!

 ஏன் இந்த வேதனை தந்தாய் என்று புலம்பும் வியாபாரிகள் எல்லாம் மறுநாள் தத்தம் அலுவல்களைச் செய்வார்கள்.

 சில வாரத்தின் பின் தான் இவ்வளவு கொடுத்தேன். என்று உண்மையானவர்களிடம் சொல்லி உள்ளத்தைத் தேற்றுவார்கள் .

இப்படிக் கொடுக்காதவர்கள் சிலர் ஒழித்தோடி தலைநகரில் இருந்தாலும், உருப்படியான சட்டதரனியை கையில் வைத்திருக்கும் வசதி எல்லாருக்கும் இருப்பதில்லையே!

நாங்களும் போனவாரம் எல்லாம்
வீட்டில் இருந்து இந்த சந்தடியில் சட்ட ஆலோசனையாக இருப்பதை பிரித்துக் கொடுப்போம் என்று முடிவானதன் பின் அவர்களை நாடி தேவனுடன் நானும் போனதால் தான்  பார்த்திமா வீட்டில் சாப்பிடவில்லை!

  இத்தனை எங்கள் வாழ்வாதார நிலையில் இந்த விடலைக்காதல் என்ற இன்னொரு அம்பு பட்டு துடிக்கும் கர்ணன் நிலை வாப்பாவுக்கு!

  வெளியில் இவர்கள் காதலுக்கு உதவக் காத்திருக்கும் நண்பர்கள் பார்த்திமாவைத் தூக்குவது தான் முடிவாகச் சொல்லுவார்கள்.

 அதனால் வரும் பின் விளைவுகள் .இன்னொரு குழு இவர்களை எப்படி அரசியல் செய்யும் எனதை அறிந்த படியால் தான் இந்தக் காதலை மகாவலி கங்கையைப் போல் பிரித்து விடனும் என்ற திட்டத்தில் முதல் கட்டம் பார்த்திமாவை இடம் மற்றுவது என்ற  ஜோசனையை வாப்பாவிடம் சொன்னது.!
அந்த நேரத்தில் சக்தி வானொலியில் லோசனும் )கெளரியும்  தொலைபேசியில் கேட்ட பாடலாக இப்பாடலை  ஒலிக்க

விட்டனர்!


தொடரும்

16 comments :

Yoga.S. said...

வணக்கம் நேசன்,காலை வணக்கம்!தொடர் எதிர்பார்ப்புகளுடன் நகர்கிறது,வாழ்த்துக்கள்.கொஞ்சம் எழுத்துப் பிழைகளையும் கவனியுங்கள், நன்றி!

MANO நாஞ்சில் மனோ said...

அந்தபடமெல்லாம் இந்த கதியில் உள்ளவர்களா...??

ஹேமா said...

எப்போதும் உங்கள் தொடரைப் பாராட்டிக்கொண்டேயிருக்கலாம் நேசன்.ஆனால் கதையல்ல நிஜம் என்கிறபோது எத்தனையோ உணர்வுகள் மனதில் !

கோகுல் said...

சபாநாயகர் பொறுப்பு சிலநேரங்களில் முடிவெடுக்க முடியாமல் ஆதரிக்க மட்டும் செய்ய முடியும்!

K.s.s.Rajh said...

////ன் இந்தக் காதலை மகாவலி கங்கையைப் போல் பிரித்து விடனும் என்ற திட்டத்தில் முதல் கட்டம் பார்த்திமாவை இடம் மற்றுவது என்ற ஜோசனையை வாப்பாவிடம் சொன்னது.!////

அண்ணே உங்கள் செயல் உண்மையில் பாராட்டத்தக்கது...உங்களை நம்பும் ஓரு குடும்பத்துக்கு இதுதான் நீங்கள் செய்யும் உண்மையான கைமாறு பலர் காதலை நீங்கள் பிரிக்க நினைப்பதாக நினைத்தாலும் உங்கள் செயல்பாடு மிகவும் சரி

சுதா SJ said...

அண்ணா ஒரு உண்மையை சொல்லட்டா ஆரம்பத்தில் இந்த தொடரை விருப்பம் இன்றித்தான் படிக்க ஆரம்பித்தேன் இப்போது தொடருக்குள் மூல்கி விட்டேன்..
தொடர் அருமை....... ஒவ்வொரு அத்தியாயமும் எத்ர்பார்ப்புடன் நகர்கிறது...
வாழ்த்துக்கள் நேசன் அண்ணா

தனிமரம் said...

நன்றி யோகா ஐயா முதன் முதலில் தனிமரத்தில் முதலாவதாக வந்து இருக்கின்றீர்கள் ஒரு பால் கோப்பி குடியுங்கோ!

தனிமரம் said...

நன்றி யோகா ஐயா வருகைக்கும் கதுத்துரைக்கும் முடிந்தளவு முயல்கின்றேன் எழுத்துப்பிழையைத் தவிர்க்கின்ரேன்!

தனிமரம் said...

நன்றி மனோ அண்ணாச்சி வருகைக்கும் கருத்துரைக்கும்!

தனிமரம் said...

நன்றி ஹேமா  வருகைக்கும் கருத்துரைக்கும்!பாராட்டைவிட உணர்வுகளே முக்கியம் தனிமரம் பாரட்டைக்கடந்து வந்த மரம்!

தனிமரம் said...

நன்றி கோகுல் வருகைக்கும் கருத்துரைக்கும்!

தனிமரம் said...

நன்றி ராச் வருகைக்கும் கருத்துரைக்கும்!

தனிமரம் said...

நன்றி துஷ்யந்தன்  உன்னிடம் எப்போதும் எனக்குப் பிடித்தது இந்த  வெளிப்படைதான்!
நன்றி
வருகைக்கும் கருத்துரைக்கும்!

Anonymous said...

பல உணர்வுகள் மிகுந்த கதை அழகாக நகர்கிறது... வாழ்த்துக்கள் நண்பரே!

Anonymous said...

தொடர் எதிர்பார்ப்புகளுடன் நகர்கிறது நேசன்...தொடர்ந்து கலக்குங்கள்...வாழ்த்துக்கள்..

நிரூபன் said...

அடடா,,,

காதலிலும் அரசியல் கலக்க நினைக்கிறார்களே....