08 November 2011

நொந்து போகும் ஓர் இதயம்-20

வியாபாரம் என்றாள் பலதையும் பார்க்கனும் தானே என்ன தீடீர் என்று வழமையாக ரவியுடன் தானே வருவாய் நான் உங்களிடம் தான் ஒரு குற்றப்பத்திரிக்கை வாசிக்க வந்தனான் ஏப்பா புதுசா ஏதாவது தொடர் வந்திருக்கோ சரசவியவில் அம்மா இது பேப்பர் இல்ல வாழ்க்கை என்ன சொல்லுகின்றாய் யாரைப்பற்றி! நம்ம ரவி யாரையோ இஸ்லாமியப் பெண்னை விரும்புரானாம் இப்ப படிக்கனும் இந்த நேரத்தில் அவங்க பக்கத்தில் இது தெரிந்தாள் பட்டானிச்சூர்ப் பக்கம் பட்டம் விடுவாங்க இவன் படத்தை வேண்டாம் என்று நான் சொல்லியும் கேட்கின்றான் இல்ல நீங்க தான் திருத்தனும் ஒரே மகன் என்று வந்த விடயத்தை குசுமாவதி அம்மாவிடம் சொன்னேன்!

என்ர மகன் ஒரு நாளும் அப்படிச் செய்யமாட்டான்.

 படிக்கத்தான் நான் அனுப்பினான்.
 இப்படி உங்களைப்போல கண்டவர்கள் கூடச் சேர்ந்து தான் கெட்டுப்போறான்.

என்னம்மா!" என்னையும் பிரிச்சுப் பேசுறீங்க .

என்ர மகனைப்பற்றி இப்படித் தப்பாக கதைக்கும் போது சும்மா இருக்கமுடியுமா?

 அவன் தங்கமான குழந்தை.
 இந்த வயசில் யாரோ மருந்தோ மாயமோ செய்து மயக்கியிருப்பினம் என்ர புள்ளையை அப்பவே அயலில் இருப்போர் சொல்லிச்சினம் உங்களைப் போன்ற சந்தைப்படுத்தலில் இருப்போரிடம் இவனைப் பழகவிடவேண்டாம் என்று .

செக்குக்கும், சிவலிங்கத்திற்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் என்று.

 நானும் நண்பன் என்று பழகவிட்டன் இப்போது உங்க ஊர் புத்தியை காட்டுகின்றாய் .

இனி இப்படி ஏதாவது சொல்லிக்கொண்டு இந்த வீட்டை வரவேண்டாம்

.உன்னையும் மகனாக நினைச்சுத்தான் ஆஸ்பத்திரியில் இருந்து பார்த்தது .

கடைசியில் நீயும் ஒரு பச்சோந்தி என்று காட்டிப்போட்டாய்

.இங்கு இருந்து போயிடு என் முகத்தில் இனிமேல் முழிக்கக் கூடாது கேட் திறந்து இருக்கு .

அம்மா ஒரு நிமிடம் ஜோசித்துப் பாருங்க ?ரவிக்கு நல்லது செய்யனும் என்று தான் நான் இதைச் சென்னது.

 உங்களுக்கு இப்படிக் கோபம் வருவது அவன் மீதான பாசம்.

 ஆனாலும் உண்மையைச் சொல்லாவிட்டால் பின்னாடி என்னிடம் நீங்கள் எதுவும் கேட்கலாம் ஒரு வார்த்தை முன்னால் சொல்லியிருந்தால் என் பிள்ளையை நல்ல வழிப்படுத்தியிருக்கலாம் என்று. அவ்வளவுந்தான்.

 மதியாதார் வீடு மிதியாமை ஒரு கோடி பெறும் என்று ஒளவையார் வாக்கு.

  அன்பாக வரவேற்கின்றோம் என்பது சகோதரமொழி.

 எங்கு  மனம் அமைதி இல்லையோ? அங்கே வார்த்தைகள் முண்டியடிக்கும் மூர்க்கமாக.

 நான் இனி உங்க வீட்டை வரமாட்டன் என்று விட்டு அங்கிருந்து வெளியேறினேன்!

என் சிந்தனையில் குசுமாவதி அம்மா ஏன் இப்படி புரிஞ்சுக்கவில்லை!

 மகன் மீது இப்படி ஒரு பாசமா?மூடத்தனமான நம்பிக்கை ஏன் ?

கண்டிக்கச் சொல்லலாம் என்றாள் என்னை அல்லவா தண்டிக்கின்றா!

 நல்லதே நடக்கட்டும் என் வியாபார விடயமாக ஒருத்தரை இந்திரா தியேட்டரில் பார்க்க வருவதாக சொல்லியிருந்தேன் .

மாலையில் வேலைத்தளத்தில் இருந்த இறுக்கமான மனநிலையில் கம்பளைக்கு உடனடியாகப் போகமுடியாது என்று சுகயீன லீவு( மெடிக்கல்) தொலைநகல் மூலம் அனுப்பி விட்டு கொஞ்சம் பகல் தூக்கம் போட்டேன்.

 உண்டகளைப்பு தொண்டனுக்கும் உண்டு!

மனதுக்குள் ஒரே சஞ்சலம் இவர்கள் காதலில் என் வியாபாரமும் பாதிக்கப்படுகின்றது.

 ஒழங்கா வேலையில் கவனம் செலுத்தலாம் என்றாள் குசுமாவதி அம்மா இப்படி பேசிப்போட்டா.

 எது எப்படியோ ஒருத்தி போய் விட்டால் பிரச்சனை குறைவு .

வாப்பா இன்னும் அழைப்பு எடுக்கவில்லையே இந்த நேரத்திற்கு அவர்கள் ரந்தனிக்கல ஊடாக பதுளை போய் இருக்கனுமே?

 பகவானே நல்லதே நடக்கனும் என்ற எண்ணங்கள் ஊடே இந்திரா தியேட்டருக்குள்  பொன் அந்திப் பொழுதில் உள்ளே சென்றேன்!

தொடரும்
///////:
சரசவிய-சிங்கள வாரச்சஞ்சிகை.

பட்டானிச் சூர் -வவுனியாவில் ஒரு மக்கள் குடியிருப்பு

23 comments :

K.s.s.Rajh said...

முதல் பால் கோப்பி

K.s.s.Rajh said...

இப்படி பஞ்சாயத்து பண்ணப்போய் நான் கூட பல நண்பர்களை இழந்திருக்கின்றேன்....

அந்த அம்மா தன் மகன் மீதுவைத்திருக்கும் பாசம்+நம்பிக்கை உயர்வானது ஆனால் இப்படி பல பிள்ளைகள் தங்கள் பெற்றோரின் எதிர்பார்ப்புக்களை சிதறடிப்பது வேதனையானது..அதிலும் பிள்ளைகள் கெட்டுப்போக
நண்பர்கள் மீது பழிசுமத்துவது மிகவும் வேதனையானது

கவி அழகன் said...

Supper kathaii valthukal.

செங்கோவி said...

இப்படித் தான் பல பெற்றோர், பிள்ளை மேல் உள்ள பாசத்தால் கண்டிக்கத் தவறுகிறார்கள்..பிள்ளைகளும் அதனாலேயே நல்வழிப்படுத்த ஆளின்றி கெட்டுப்போகிறார்கள்.

செங்கோவி said...

பஞ்சாயத்துக்குப் போனால், வியாபாரம் பாதிக்கப்படத்தான் செய்யும்...என்ன செய்ய..

Yoga.S. said...

காலை வணக்கம்!அருமையாக தொடர்கிறது,வாழ்த்துக்கள்!

தனிமரம் said...

வாங்க ராச் சூடாக இதமான பால் கோப்பி குடியுங்கோ!

தனிமரம் said...

என்ன செய்வது கெட்டுப்போக நண்பன் தான் காரணம் என நினைப்போரை எப்படித் திருத்துவது!

தனிமரம் said...

நன்றி ராச் வருகைக்கும் கருத்துரைக்கும்!

தனிமரம் said...

நன்றி கவி அழகன் வருகைக்கும் கருத்துரைக்கும்!

தனிமரம் said...

நன்றி செங்கோவி அண்ணாச்சி வருகைக்கும் கருத்துரைக்கும்! வியாபாரம் பாதித்தால் வருமானம் குறையுமே!

தனிமரம் said...

காலை வணக்கம் யோகா ஐயா!
நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் ஊக்கிவிப்புக்கும்!

MANO நாஞ்சில் மனோ said...

உண்டகளைப்பு தொண்டனுக்கும் உண்டு!//

ஹா ஹா ஹா ஹா கலைஞர் தொண்டனுக்கும் உண்டு, அம்மா தொண்டனுக்கும் உண்டு....

MANO நாஞ்சில் மனோ said...

பிள்ளைகளை சற்று பிரம்பாடியே வளர்க்க வேண்டும்...

MANO நாஞ்சில் மனோ said...

என்னய்யா நேற்றைக்கும் இன்ட்லி இணைப்பு நான்தான் குடுத்தேன் இன்னைக்கும் நாந்தேன் ஹி ஹி...

நிரூபன் said...

குசுமாவதி அம்மாவின் மன நிலை கொஞ்சம் குழப்பத்தை தருகின்றது,

கூடவே ரவியின் நிலை அடுத்தது என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பினையும் தருகின்றது.

நிரூபன் said...

இந்தப் பாகத்தில் நீண்ட நாளைக்குப் பின்னர் தனிமரம் எழுத்துப் பிழைகள், வழுக்கள் இன்றி எழுதியிருக்கு.

இதனையே அடுத்த பாகத்திலும் மெயிண்டேன் பண்ணிட வாழ்த்துகிறேன்!

Anonymous said...

பெற்றோர் பாசத்தில் வழுக்கி விடுகிறார்கள் பல நேரங்களில்...ஆம் உண்ட களைப்பு எனக்கும் எப்போதுமே...அதிகம் உண்டதால்...-:)

shanmugavel said...

சமூகத்தை அருமையாக கவனிக்கிறீர்கள்.நன்று அய்யா!

தனிமரம் said...

நன்றி மனோ அண்ணாச்சி வருகைக்கும் கருத்துரைக்கும் இணைப்புக்கும்!
இட்ண்லி எனக்கு சட்னி கொடுக்கு அண்ணாத்த அது தான் தமிழ்-10,இலும் இட்ண்லியிலும் மினக்கடுவது இல்லை!

தனிமரம் said...

நன்றி நிரூபன்  வருகைக்கும் கருத்துரைக்கும்!
தாய் மனதில் குழப்பம் வருகின்றது பிறத்தியான் குற்றம் சொல்வதா என்ற எண்ணத்தில் போலும்! ம்ம்ம்

தனிமரம் said...

நன்றி ரெவெரி  வருகைக்கும் கருத்துரைக்கும்!

தனிமரம் said...

நன்றி சண்முகவேல் ஐயா  வருகைக்கும் கருத்துரைக்கும்!