31 May 2012

மலையகத்தில் முகம் தொலைந்தவன் -59

பெளர்ணமியில் பார்க்க வந்தோம் லோகேஸ்வர நல்ல புண்ணியமே செய்துவிட்டோம் நகுலேஸ்வர .

என்பதைப்போல முத்தியங்கணை ரஜமஹா விகாரையில் இருந்து .

புத்தனின் தந்த தாதுவைத் தாங்கிக்கொண்டு வீதியுலா வரும் விழாதான் பெளர்ணமி விழா .வெசாக் பண்டிகை என்பார்கள் .

பெளர்ணமியில் இந்த பதுளையிலும் எசல பெரஹரா ஆண்டாண்டு காலமாக புத்தன் வருவார் வீதி உலா .

பார்க்கும் விழிகள் மொழிகடந்து ,இனம் கடந்து, கலைகள் முழங்கும் காட்சியினை பலர் புகைப்படங்களாக சிறைப்பிடிப்பார்கள்


.தேவநம்பிய திஸ்ஸன்17 ஆம் நூற்றாண்டில் கட்டிய புரதான இந்த முத்தியங்கனை புத்த விகாரை.

பலரின் அறிவுக்கணையும் ,சிலரின் இனவாத நாட்டுப்பற்றுக்கும் சில நண்பர்கள் தர்மஉபதேசம் கேட்கும் கல்விக்கூடமாகவும் ,சில கலைகளை மேடையேற்றும் .!கலைக்கூடமாகவும் பாரம்பரிய கலையைப் இன்றும் பேணும் ஒரு இடமாக இந்த விகாரை இருக்கின்றது .


நம்ம பாராம்பரிய கலைகள் எல்லாம் முகாரி வாசிக்க .தொலைக்காட்சியில் வரும் தொடருக்கும் சின்னத்திரையும் ,இணையமும் இன்னும் கலைகள் பற்றி பாராமுகத்துடன் பதிவு செய்ய மறுத்தாலும் .

அவர்கள் (சிங்களவர்)தங்கள் பாராம்பரிய நடனங்களை இன்னும் பரனில் ஏற்றிவைக்கவில்லை .

பலரும் பார்க்க ,ரசிக்க ,படிக்க என்று பல கலைகளையும் ஆடிவருவார்கள் .

முதலில் யானையில் புத்தனின் தந்த தாது வைத்துவிட்டார்கள் .

இனி வீதி உலாவுக்கு முதல் மரியாதையாக கயிற்றில் சுற்றி வெடியாக முழங்குவார்கள் .அதாவது கசயடியைப்போல இருக்கும் இதன் கயிறு 5 பேர் அதிக தூரத்தை தேர்ந்து எடுத்து சுத்தி சுத்தி சுழ்ற்றும் போது .

எங்க வீட்டுப்பிள்ளையில் எம்.ஜி.ஆர் நம்பியாருக்கு அடிக்கும் கயிறு போல இருக்கும்.

அதன் பின்னே கொடிகள் வரும் கூடவே தீப்பந்தம் வரும். இது தூக்கி வருவோர் விகாரையில் தோட்ட வேலை செய்யும் சாதாரண அம்புகாமியும் குணதாசவும் .

அவர்கள் நடந்து செல்ல பின்நாள் பாரம்பரிய கண்டி இசைமேளம் வரும் ,அதன் பின்னே வரும் ஆடல்களைகள் அடுக்கடுக்காக கண்டிய நடனம், சுழகு நடனம்,செம்பு நடனம் ,காவடி ,இடையில் வரும் வாயில் மண்னெண்ணை ஊத்தி ஊதிக்காட்டும் நெருப்புச் சுவாலை!

இப்படியே ஒவ்வொன்றாக இந்த விழா கீழ்வீதியால் பஸ்தரிப்பு நிலையம் சென்று அங்கிருந்து பசார் வீதியூடாக இந்த வீதிக்கு வரும் நேரம் நல்லிரவு 12 மணிக்கு மேல் ஆகிவிடும் .

பலரும் விரும்பிப்பார்க்கும் விழா .

செல்லன் மாமா நீண்டகாலம் இங்கே இருப்பதால் .இது எல்லாம் பார்த்துச் சலித்த ஒன்று என்பதால் யார் போறீங்களோ போய்விட்டு வாங்கோ என்று அன்று மட்டும் கட்டுப்பாடு தளர்த்தப்பட்ட போக்குவரத்து தாண்டிக்குளம் பாதை போல .எல்லாரும் நான் வாரன் நீயும் வாரியோ என்றால் ஒவ்வொரு மச்சாளும் நித்திரை வருகின்றது .

நீ போ என்பதும் சின்னவள் சுகி ராகுலுடன் வீதிக்கு இறங்கிவிட்டாள் என்றால் இவர்களும் தங்கள் பிடிவாதம் தளர்த்தி விட்டு கொஞ்சம் இருடா பெரியவளும் வாரால் கவனமாக போட்டு வாங்கோ என்பா இன்னொரு மாமி .

அருகில் வாடகை வீடு எடுத்து இருந்தாலும் இந்த திருவிழாவின் நேரத்தில் செல்லன் மாமா வீட்டில்தான் எல்லாருக்கும் சாப்பாடு .

ஆனாலும் சரோஜா மாமி போல மற்ற எந்த தந்தைவழி மாமிமார்களும் மச்சாள்மார்களும் நல்லா சமைக்க மாட்டார்கள் .

அதனால் அங்கே போனால் கோப்பியோடு வந்துவிடுவான் ராகுல் .

அதுவும் பெரிய மாமியிடம் மூன்று மச்சாள்கள் .

மூத்தவள் ராகுலுக்கு அதிகம் மூப்பு என்பதால் அவள் வாடா போடா என்று அழைக்கும் உரிமை இருக்கும் .

நல்லா பாட்டுக்கேட்கும் பழக்கம் இருக்கு நல்லா கதைப்புத்தகம் படிப்பா .

அவாக்கு இடையில் இருப்பவள் தான் கோப்பி ஊத்தித் தருவாள் .

அவள் ஊத்திவந்து மேசையில் வைக்கும் போதே !

என்ன மச்சான் நேற்றுகோப்பி குடிக்க வில்லை.

உனக்கு சூடாக ஊத்தத் தெரியவில்லை .

! நான் எவ்வளவு சூடாகக்குடிப்பன் என்று இன்னும் தெரியல இவளுக்கு.

எல்லாம் பழக்கணும் ராகுல் நான் என்ப செய்ய மூத்தமச்சாள் திட்டுவதில் கொஞ்சம் கோபம் வரும் அவளுக்கு .

இந்த கோபம் குசினியில் பேணியில் போட்டுக் காட்டுவாள் .

அது இனி கோப்பி வேணும் என்றாள் வந்தியா .குடிச்சியா என்று இருக்கணும் .

அக்காள் குசினிக்கு வரமாட்டா இந்த வீட்டில் நான் தான் சமையல்! மகாராணி .

என்பதாக இருக்கும் இது எல்லாம் பார்த்துக்கொண்டு இன்னொரு மச்சாள் சாதுவாக இருப்பாள் அடுத்த அறையில்.

இவர்கள் எல்லாம் வருவது இந்த வெசாக் பண்டிகை பார்க்க ராகுலோடுதான் !


குறிப்பு    பெரஹராவின் இன்னும் சில புகைப்படங்களை விரும்பியோர் விழிக்கு!http://nesan-kalaisiva-nesan.blogspot.fr/

24 comments :

பால கணேஷ் said...

வெசாக் பண்டிகையைப் பத்தி தெரிஞ்சக்கிட்டதும். ராகுலோட சுத்திப் பாத்த மாதிரி இருந்தது. புகைப்படங்கள் அருமை நேசன். பால்கோப்பி ரெடியோ..?

பால கணேஷ் said...

குசினி எண்டால் என்னன்னு தெரியும் எனக்கு. பேணி எண்டால் என்ன நேசன்?

தனிமரம் said...

வாங்கோ கணேஸ் அண்ணா பால்க்கோப்பி தயார் நலம்` தானே!

பால கணேஷ் said...

நான் பூரண நலம் நேசன்.

தனிமரம் said...

பேணி- டம்ளர்- கப் ஊரில் தண்ணிகுடிக்க பாவிக்கும் கப் அண்ணா!

பால கணேஷ் said...

சரி.. சரி... புரிஞ்சது. நானும் உற்வுகளோடல்லாம் பேசணும்னு ரொம்பநாளா ஆசைப்படுவேன். இரவுல ஏதாச்சும் வீட்டுப் பிரச்னை வந்துடும். இபப உங்களோட கொஞ்சம் பேசினதுல சந்தோஷம் எனக்கு, இரவு வர்ற நம் உறவுகளை நான் விசாரிச்சதா சொல்லுங்கோ நேசன். கிளம்பறேன் நான்.

தனிமரம் said...

வெசாக் பண்டிகையைப் பத்தி தெரிஞ்சக்கிட்டதும். ராகுலோட சுத்திப் பாத்த மாதிரி இருந்தது. புகைப்படங்கள் அருமை நேசன்.// ந்ன்றி க்ணேஸ் அண்ணா ப்ல்ர் இதைப்பார்க்க் வேணும் என்ப்தே என் ஆசை!ம்ம் இந்த விழாவைப்போல கொஞ்சம் சபரிமலையிலும் மஞ்சமாதா வரும் ஆனால் எல்லாம் ஆடுவது ஆண்கள் தான் அண்ணா!

தனிமரம் said...

சரி.. சரி... புரிஞ்சது. நானும் உற்வுகளோடல்லாம் பேசணும்னு ரொம்பநாளா ஆசைப்படுவேன். இரவுல ஏதாச்சும் வீட்டுப் பிரச்னை வந்துடும். இபப உங்களோட கொஞ்சம் பேசினதுல சந்தோஷம் எனக்கு, இரவு வர்ற நம் உறவுகளை நான் விசாரிச்சதா சொல்லுங்கோ நேசன். கிளம்பறேன் நான்.// நீங்க இன்று நேரில் வந்ததே எனக்கு பெரிய புண்ணியம் போல நடைவண்டிக்கு முன் நானும் உங்கள் தோழில் வருவது எத்தனை மகிழ்ச்சி கணேஸ் அண்ணா! நன்றி வருகைக்கும் கருத்துக்கும் இரவு எல்லாருக்கும் சொல்லுகின்ரேன்!

Yoga.S. said...

பகல் வணக்கம்,நேசன்!கணேஷ் அண்ணா முந்தி விட்டார் பால் கோப்பிக்கு.நான் கொஞ்சமாக மறந்து விட்டேன்.அருமை.படங்களும் அருமை.என்ன செய்ய இனிமேலும் இணக்கம் வராது போலிருக்கிறது!வந்தால் எல்லோருக்குமே நல்லது.பார்ப்போம்!

தனிமரம் said...

பகல் வணக்கம்,நேசன்!கணேஷ் அண்ணா முந்தி விட்டார் பால் கோப்பிக்கு.நான் கொஞ்சமாக மறந்து விட்டேன்.அருமை.படங்களும் அருமை.என்ன செய்ய இனிமேலும் இணக்கம் வராது போலிருக்கிறது!வந்தால் எல்லோருக்குமே நல்லது.பார்ப்போம்!

31 May 2012 03:13 //வணக்கம் யோகா ஐயா!ம்ம்ம் என்ன செய்ய அடுத்த கோப்பி இரவு வரும்!ம்ம்ம்

Anonymous said...

பகல் வணக்கம் மாமா ,அண்ணா ,அக்கா ...


படங்கள் எல்லாம் அருமை ...

ஹேமா said...

இண்டைக்கு எல்லா இடமும் பதிவு.நான் மட்டும் வேலைக்குப் போகவேணும்.ச்சீ....கருவாச்சி வருவாக.அப்பா வருவாக.ரெவரி வருவாக.நேசன் கோப்பி குடுப்பாக....ஃப்ரெண்ட் கணேஸ் வந்திட்டுப் போய்ட்டாக.....நானும் வந்தாக....ஹிஹிஹிஹி வந்திட்டேன்.கோப்பி வேண்ட்டம்.பசிக்குது பகல் சாப்பாடுதான் வேணும்.தாங்கோ ஆராச்சும் !

தனிமரம் said...

பகல் வணக்கம் மாமா ,அண்ணா ,அக்கா ...


படங்கள் எல்லாம் அருமை ...

31 May 2012 04:05 // பகல் வணக்கம் கலை நலம் தானே வேலை முடித்து இரவு வாங்கோ பால்க்கோப்பி ,குடிப்போம்!

தனிமரம் said...

இண்டைக்கு எல்லா இடமும் பதிவு.நான் மட்டும் வேலைக்குப் போகவேணும்.ச்சீ....கருவாச்சி வருவாக.அப்பா வருவாக.ரெவரி வருவாக.நேசன் கோப்பி குடுப்பாக....ஃப்ரெண்ட் கணேஸ் வந்திட்டுப் போய்ட்டாக.....நானும் வந்தாக....ஹிஹிஹிஹி வந்திட்டேன்.கோப்பி வேண்ட்டம்.பசிக்குது பகல் சாப்பாடுதான் வேணும்.தாங்கோ ஆராச்சும் !/// வாங்கோ ஹேமா கலையின் முட்டைக்குழம்பும் நல்ல புழுங்கள் அரிசிச் சோறும் சாப்பிடலாம்! ம்ம் ஆனால் வேலையிடத்தில் நித்திரை வந்தால் நான் பொறுப்பு இல்லை!ஹீஈஈஈஈஈ

31 May 2012 04:06

தனிமரம் said...

படங்கள் எல்லாம் அருமை ...

31 May 2012 04:05 //நன்றியை உரியவர்கள் பார்த்துக்கொண்டு இருப்பார்கள் வெளியில் இருந்து! கலை!

ஹேமா said...

முதல்ல சாப்பாடு...குத்தரிசிச் சோறு சாப்பிட்டுக் கனநாளாச்சு.வேலை இடத்தில ....நித்திரை....ஆட்டுமுட்டைக் குழம்பு வேணாம்.அப்பா சமைச்சிருப்பார்...கிச்சுனுக்கு நுழைவம் வாங்கோ.இப்ப என்ன வேலையே ...வயிற்றுக்கு முன்னிடம் குடுப்போம்.இதுதான் தமிழர் பண்பாடு..ஹிஹிஹிஹி !

தனிமரம் said...

நுழைவம் வாங்கோ.இப்ப என்ன வேலையே ...வயிற்றுக்கு முன்னிடம் குடுப்போம்.இதுதான் தமிழர் பண்பாடு..ஹிஹிஹிஹி !
// அதுவும் நிஜம் தான் ஹேமா!
31 May 2012 04:27

ஹேமா said...

//அவர்கள் (சிங்களவர்)தங்கள் பாராம்பரிய நடனங்களை இன்னும் பரனில் ஏற்றிவைக்கவில்லை .//

கோவமா வருது நேசன்...அவர்களது தளங்களை அவர்கள் சரியாக அமைத்துக்கொண்டு எங்களது தளங்களைக் கலைத்துவிட்டார்கள்.நாங்கள் வாழ்வதற்கே ஆதாரமில்லமால் அலைமோதித் திரிகிறோம்.ஆனலும் முடிந்தவரை எங்கள் கலைகளைக் காவித்தான் வந்திருக்கிறோம்.....இதுதான் அவர்கள்மீது மனம் ஆறமுடியாமல் வரும் கோபம் !

ஹேமா said...

எப்பவும் என்ர காதலே...அருமையான இசை.இடைக்கிடை இப்பிடியும் பாட்டு ரசிக்கலாம் நேசன்.ஆனால் நேற்றுப் பாட்டு இப்பகூட ஒருக்கா கேட்டன்.நன்றி நன்றி !

Seeni said...

anupavangal!

alaikazhikkirathu....

Anonymous said...

காலை வணக்கம் யோகா அய்யா..நேசரே...கருவாச்சி..கவிதாயினி......

இது என்ன காலையிலேயே...அஞ்சு நிமிசத்திலே மீட்டிங்....அப்புறமா சந்திக்கிறேன்...

Yoga.S. said...

ரெவெரி said...

காலை வணக்கம் யோகா அய்யா..நேசரே...கருவாச்சி..கவிதாயினி......

இது என்ன காலையிலேயே...அஞ்சு நிமிசத்திலே மீட்டிங்....அப்புறமா சந்திக்கிறேன்.////மாலை வணக்கம்,ரெவரி!அது நேற்று இரவே நேசன் சொல்லியிருந்தாரே?இது,போனஸ்!வழக்கமான பதிவு இன்னும் ஒரு முக்கால் மணி நேரத்தில் வரும்!

மகேந்திரன் said...

வணக்கம் நேசன்
நலமா?

////நம்ம பாராம்பரிய கலைகள் எல்லாம் முகாரி வாசிக்க .///
சரியாகச் சொன்னீர்கள்...
மக்களின் அதிவேக வாழ்க்கையும்
ஊடகங்களின் பாராமுகமும்
நம்முடைய பாரம்பரியக் கலைகளை
தொலைத்ததுதான் விட்டன..

ஆயிரம் சமூகங்கள் கோவில் திருவிழாக்கள் கொண்டாடினாலும்
நம்முடைய பாரம்பரியக் கலைகள் கொண்டு நடக்கும் திருவிழாக்கள்
காணும் போது வரும் இன்பம் வேறு எதிலும் இல்லை...

முற்றும் அறிந்த அதிரா said...

கொழும்பில் இருக்கும்போது எம் ரோட்டலும் பெரகரா ஊர்வலம் போகும், லைட் பூடிய யனைகள் அசைந்து போவது சூப்பராக + பயமாக இருக்கும்.