19 October 2017

விழிகளில் வந்திடு கண்ணே விம்மலுடன்-22

 http://www.thanimaram.com/2017/10/21.html
 --------------------------------------------------------
இரகசியங்கள் என்பது எப்போதும் ஒரு தனித்துவமான வார்த்தை. இந்த மாயமான் ஒரு விசித்திரம்மிக்கது. இதிகாசங்களில் இரகசியங்கள் புலப்படுத்த அல்லது பின்னர் யாரும் அறிந்துகொள்ளக்கூடாது என்பது போலவே எப்போதும் கட்டமைக்கப்பட்டிருக்கும்.

 பொன்னியின் செல்வனிலும் இந்த இரகசிய அறைகள், இரகசியக்கூட்டங்கள் என்று இரகசியங்கள் பேணப்பட்டே வந்து இருக்கின்றது.

பாண்டிமாதேவியில் ஆதித்தசோழன் இரகசியமாக ஈழத்தில் வாழ்த்ததாக ஒரு குறிப்பு சொல்லப்பட்டிருக்கும்.

 இன்றும் இந்த விசாரணைக்கூடங்களில்  கைதிகள்  மரணங்கள் பற்றி  நேர்மையுடன் விசாரணைகள் என்றாவது மேற்கொள்ளப்பட்டால் பல திடுக்கிடும் நிஜங்கள் வெளிவரலாம்  இது போலத்தான் இலங்கையில்  பாதுகாப்பு இரகசியங்களின் பின்னே ஒரு நீண்ட பொதுவெளியில் சொல்லப்பாடாத அதிகார துஸ்பிரயோங்கள், பொருளாதார ஊழல்கள், பாலியல் சுரண்டல்கள் , மரணித்த படையினர் உடல் உறுப்புக்கள் திருட்டு ,அதிகார போட்டியில் ஒருவரை ஒருவர்  திட்டமிட்ட படுகொலைத் துரோகங்கள், ஊடகவியாளலர்களை, வர்த்தக பெரும்புள்ளிகள், என  திட்டமிட்டு ஆட்சியாளர்களுடன் இணைந்து  படுகொலை செய்த செயல்கள், சில ஊடகவியாளர்களை நாட்டைவிட்டே புலம்பெயர வைத்த அதிகார  உயிர் அச்சுறுத்தல்  செயல்பாடுகள்தமிழர்களின் சொத்துக்களை சூறையாடியது, அதிக வெளிநாட்டு சொத்துக்குவிப்பு விடயங்கள் எல்லாம் எதிர்காலத்தில் புலன்னாய்வு தேடலில் எவராவது இரகசியங்கள் பலருக்கும்  தெரியும் வண்ணம் பரகசியப்படுத்தலாம் அடிக்கடி ஜனாதிபதி சொல்லுவது போல  இரகசியங்கள் வெளியிடுவேன் என்ற யானைப்பாகன் அங்குஷம் போல !


 இல்லையேல் தனக்குத்தெரிந்தவிடயங்கள் எல்லாம் தன்னோடு போக வேண்டும் அடுத்த தலைமுறைக்கு பயன் பெறக்கூடாது என்ற சட்டம்படித்த சில புல்லுருவிகள்  போல இரகசியங்கள் எல்லாம் விசாரணை முடிவில் மூடிய கதைகள்  இங்கே கொட்டிக்கிடக்குது  செல்வங்கள் பூமியிலே  என்ற தீர்த்தைக்கரையினிலே பாடல் போல என்றாவது ஊடகத்தில் ஒலிக்கலாம்.

. பாதுகாப்பு என்ற சதுரங்கவேட்டையில் இரகசியங்கள் வெளியில் செல்வது  தேசதுரோகம் என்ற சொல்லாடல் ஊடாகவே செல்வந்தர்கள் ஆன பல அதிகாரிகள் பற்றிய இரகசியங்கள் இணைந்த கைகள் பட நாசர் போல என்றாவது  பொதுவெளியில் நிச்சயம் வெளிவர வேண்டும்.

 அப்போதுதான் இந்த இனவாத யுத்ததின் ஊடே இன்னும் காணமல் போன உறவுகள் கதை போல ,இலங்கையின் வளங்கள்  பல அன்னிய சக்திகளுக்கு சம்பூர் அனல் மின்நிலைய  விரிவாக்கம், பரந்தன் இரசாயண க்கூட்டுத்தாபானம் ,வந்தாறுமூலை காகித ஆலை , போன்றவற்றின்  இன்றைய சீரழிவுநிலைகள் எல்லாம் விசாரிப்பு  இரகசியங்கள் நிச்சயம் வெளிப்படுத்த வேண்டும்.

 அது இன்றைய ஆட்சியிலும் நிச்சயம் சாத்தியம்மில்லாத விடயங்கள்

பாடசாலை மாணவர்கள்  கப்பம் கேட்டு கடத்தப்பட்டு  கொலை செய்யப்பட்ட வழக்கு போல ஒரு சில வெளியில் வந்தாலும்!

இன்னும்  பல விடயங்கள் இந்த புத்தனின் மெளனம் போலவே அமைதியாக பல ஆலரமங்களின் பின்னே மறைந்துகிடக்கின்றது .

கமலேஸ் அழைப்பு எடுக்கும் போது எதிர்முனையில் தாய் மிகுந்த பதட்டத்துடனே அழைப்பினை உள்வாங்கினால் .

ஹலோ அம்மா நான் கமலேஸ் பேசுகின்றேன் எப்படி இருக்கின்றாய் ?என்ற கேள்விக்கு முன்னரே பேச்சுவார்த்தை நடைபெறுகின்ற வேளையில்  கடற்படை நடத்திய கப்பல்   தாக்குதல் போலவே என்ற மோனே உன் தம்பியை சுதர்ஷனை யாரோ கடத்திவிட்டார்கள் !

உன்ற அப்பா இப்ப பொலிஸ்க்கும் , மனிதவுரிமை குழுவுக்கும் என்று அலையலையாய் அலையும் நிலையை எந்த வார்த்தை கொண்டு நான் சொல்ல!


 தயவு செய்து நீ இப்போது அங்கே இருந்து இங்க வந்திடாத என் முதல்க்கொழுந்து நீயடா .

"இரண்டாவது நிலாந்தன் தான் இப்பவும் அப்பாவுக்கு உதவியாக பொலிஸ் நிலையம் போய் இருக்கின்றான் .பள்ளிக்கூடம் போனவனை யாரோ வானில்க்கடத்தியதாக அவன் நண்பர் வந்து சொல்லிய பின் தான் எங்களுக்கு தெரியும் என்று தாய் மறுமுனையில் அழுவதை பொறுக்காத "கமலேஸ்.

இப்ப அங்க என்ன நடக்குது ?எங்க யாழவன் ?

தம்பிமோனே யாழவன் கடந்தவாரம் நாட்டைவிட்டு போய்விட்டான். இப்ப எங்க இருக்கானோ ?நாம் அறியோம்!

 இப்போதைய நிலையில் இங்கே தொலைபேசி அழைப்பை எடுக்காத  யார்? யார் ?என்ன கேட்டு தொடர்ந்து தொலைபேசி அழைப்பை எடுப்பார்களோ ?என்று மனம் அடிக்கடி அச்சத்தில்  டிக் டிக் டிக் படம் போல துடிக்குது.

நிம்மதியாக நாம் தூங்கி ஒரு வாரம் ஆச்சு. நம் துயர் எங்களுடன் இருக்கட்டும் என்ற தவிப்பில் தான். நாங்க யாருக்கும்  ஏதும் பறயவில்லை .

எப்படியாவது என் மகன் சுதர்ஷன் விழிகளில் வந்திட்டால்  கண்ணே நம் ஊர் அந்த மாரியம்மனுக்கு தீச்சட்டி எடுப்பேன்! என நேர்த்தி வைத்து.வீட்டில் படத்தில் காணிக்கை வைத்து இருக்கின்றேன்.

 நம்கடவுள் கைவிடமாட்டார் என நம்புகின்றேன் .

இப்ப நீ யார்கூட பாரிஸில் இருக்கின்றாய் ? அம்மா என்னைப்பற்றி கவலை வேண்டாம். தம்பிக்கு ஒன்றும் நடக்காது என உள்மனசு சொல்லுது  பத்ரி படம் போல!

  வீனாக கவலை கொள்ள வேண்டாம் நிலாந்தன் அப்பாவுக்கு உதவியாக இருப்பது போதும் இன்றைய நிலையில். நிச்சயம் விடிவு விரைவில் வரும்.

அப்பாவை பத்திரமாக பார்த்துகொள்ளுங்க இப்ப அப்பா எங்க போயிட்டார் ?தம்பியை மீட்புத்தருவார்கள் என்ற நம்பிக்கையில் பொலிஸ் நிலையம் இன்றும் போய்விட்டார்.

 உன் நண்பனை விசாரிக்க லித்துனியா வந்த யாரோ அசங்க ரட்னாயக்க . அவர்களை தொடர்பு கொண்டாள் நல்லது என்று.

இங்கே  ஒரு அரசியல்வாதி சொல்லியதைக்கேட்டு அவரை நாடிச் சென்று இருக்கின்றார். நம்பிக்கையுடன் பொறுத்து இருப்போம் நல்லது நடக்கட்டும்.

நீ ராசாபத்திரமாக இரு என்றுவிட்டு அலைப்பினை துண்டித்த நிலையில் !எதிரே தன் கணவர் முகம் வாடியிருப்பதை கண்டு புரியாத புதிர் சித்தாரா போல திடுக்கிட்டாள் கமலேசின் தாய்!



தொடரும். விரைந்து... வரும் 

------------------
என்றமோனே- என் மகனே-(யாழ் வட்டாரவழக்கு)

பறயவில்லை-சொல்லவில்லை(யாழ் வட்டாரவழக்கு)

6 comments :

கரந்தை ஜெயக்குமார் said...

இன்னும் பல விடயங்கள் இந்த புத்தனின் மெளனம் போலவே அமைதியாக பல ஆலரமங்களின் பின்னே மறைந்துகிடக்கின்றது .

வேதனை

KILLERGEE Devakottai said...

படங்களும், விடயங்களும் வேதனை அளிக்கிறது.

பூ விழி said...

சில்லிட்டவைக்கிறது ரகசியங்களின் கற்பனைகளும்

K. ASOKAN said...

நல்ல பதிவு

Thulasidharan V Thillaiakathu said...

பல விசயங்கள்! ரகசியங்கள் மௌனம் காக்கின்றன. அப்படி மௌனம் காப்பதால் சில சமயம் நன்மை. சில சமயம் வேதனைகள் பிரச்சனைகள்...தொடர்கிறோம்

முற்றும் அறிந்த அதிரா said...

உண்மைதான் நேசன் எத்தனையோ குடும்பங்கள் அங்கு இப்படித்தானே உயிரைக் கையில் பிடிச்சுக்கொண்டு இருந்தார்கள்... எதுவுமே வேண்டாம் உயிர் தப்பினால் போதும் எனும் நிலைமைதானே இருந்தது...