23 October 2017

விழிகளில் வந்திடு கண்ணே விம்மலுடன்-23

 http://www.thanimaram.com/2017/10/22.html
 --------------------
புத்திரசோகம் என்பது தசதரனுக்கு மட்டுமல்ல முன்னாள் ஜனாதிபதிக்கும் கண்ணீர்விட வைக்கும் விதியின் பாதை. ஒவ்வொரு கண்ணீருக்கும் பின்னும் ஒவ்வொரு கவிதை போல எங்கோ சொல்லமுடியாத ஒரு துயரம் ஒழிந்து இருக்கும்.

ஒரு பிள்ளையைபெற்று வளர்த்து அது திருமணம் செய்யும் காலத்தில் காணாமல் போனால்  பெற்றோர் மனதில் எப்படி ஒரு இதயத்தில் ஒரு வலி உருவாகுமோ ?அது போலத்தான் வியாபாரம் என்ற கோட்டையை செதுக்கி !

தினமும் அன்றாட சந்தோஷங்களை எல்லாம் விற்பனை வருமான மூலதனமாக்கி வென்றுவிடுவோம் போட்டி வியாபாரத்தில் என்று சிந்திக்கும் போது இனவாத கண்னோட்ட புயல்த்தாக்கம் தரும் துயர் இருக்கே !சரத்பவார் கூட அறியாத காங்கிரஸ் விவசாய  அமைச்சர் பதவி சீரழிவு போல !

இப்படித்தான் இலங்கையில் இனவாத யுத்தம்  ஈழத்து தமிழர்களை அடக்கி ஆளுவோம் என்ற பாதையில் அடி எடுத்த நிலைகள் வியாபார நிலையங்கள் எரிப்பு எல்லாம் 1983 உடன் முடிந்தது என்று என்னக்கூடாது .

பல்வேறு சந்தர்ப்பங்களில் ,பல்வேறு ஆட்சியில் ,பல்வேறு இடங்களில் ,பலரின்  கடைகள் எரிக்கப்படுவது இங்கே சர்வசாதாரண விடயமாகிவிட்டது ஒரு பக்கம் என்றால்  !

மறுபுறம் கடத்தல்/ கப்பம் கோருதல் என்ற இன்னொரு கூரிய ஆயுதம் கொண்டு வியாபார சமுகத்தை அடக்குமுறைக்கு ஆளாக்குவதன் ஊடாக !

அரச சேவை இனவாதிகள் சேர்க்கும்  முறையற்ற சொத்துக்கள் பற்றி எங்கே ?யாரிடம் முறையீடு செய்வது? ஆளும் வர்க்கத்துக்கு அவசியமான அதிகாரிகளாகிவிட்டார்கள் நிறுவாக மட்டத்தில்ஒரு வியாபாரியிடம் 50  லட்சங்கள் ,ஒரு கோடி என்பது எல்லாம் சொத்தாக எழுத்துமூல ஆவணத்தில் இருந்தாலும் உடனடியாக 30 இலட்சங்கள் கையில் பணமாக இருப்பது என்பது என்ன குரங்குப்பொம்மை  படம் போலவா லாக்கரில் பூட்ட

அன்றாடம் வியாபாரத்தில் புழங்கும் பணத்தில் பல்வேறு நாளந்த  கடன்களும் கட்டியபின் ,மறுநாள்  வங்கியில் வருகின்ற காசோலைக்கு முதல்நாள் மாலையில் வங்கி நேரம் முடிவதுக்குள் பணம் வைப்பில் இடும் முதலாளியின்  அவசரம் எல்லாம் கணக்குப்பிள்ளைக்குத்தான் புரியும் தாரக மந்திரம்


இப்படித்தான் தவராஜாவும் மூன்றாவது மகன் சுதர்ஷனை மீட்க அசங்க ரட்னாயக்கவிடம் உதவிக்கரம் நீடிய போது .இந்த அதிகாரி கந்துவட்டிக்காரன் போல கேட்டதொகை 40 இலட்சங்கள் பணமாகத் தந்தால் !உங்கள் மகனை கடத்தல் கும்பலிடம் இருந்து மீட்கலாம் என்ற போது அவரின் இதயத்தில் எரிந்த தீயினை யார் அணைப்பார்கள். அவ்வளவு பணத்தினை எப்படி இரண்டு நாளுக்குள் சேர்ப்பது?

 சாத்தியமற்ற விடயங்களை சாத்தியமாக்கும் செயலுக்கு பிள்ளைப்பாசம் தூண்டுகின்றது.அம்மா கணக்கு படம் போல  பணம் கொடுத்தால் மகன் உயிரோட வருவானா? இல்லை சிதைந்த சடலமாக மீட்பார்களா ?என்ற நாளைய செய்தி ஊடக  கோணத்தை இங்கே யாரும் இலக்கியத்தில் பதிவு செய்ய மறுப்பது ஏன் ?தேவையில்லாத வேலைக்கு போனால் இங்கெ காணமல் போவோர் பட்டியல் நீளும் என்ற தன் உயிர்ப்பயம் எனலாம்.


 பேய்கள் ஆட்சியில் பிணம் திண்ணும் கழுகுகள் போல  ஆனநிலையில்  தவராஜவின் சிந்தனை முகத்தளர்ச்சியை நோட்டமிட்ட அசங்க ரட்னாயக்க  .

உங்கள் பரிதாப நிலை புரிகின்றது தவராஜா ஒரு மகன் லித்தினியாவில் படிக்கப்போனவன் !இப்ப பிரெஞ்சில் தஞ்சம்கோரியிருப்பதும், இங்கே உள்ள அரசியல்வாதியும் மகனின் அரசியல் செயல்களை விமர்ச்சிக்கும்  சம்பிக்க ஊடக நண்பனுடன்  இன்னும் நட்பாக இருப்பதால் தான் !

உங்களின் மகனை அவர்கள் கடத்தியிருப்பதாக எங்க புலனாய்வுக்குழு விசாரணை மூலம் அறிந்து இருக்கின்றது .

இப்போது உங்களின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்று தெரியவில்லை .அதனால் தான் உங்களின் இளையமகனை வெளியில் இருக்கவைதுவிட்டு உங்களுடன் கதைக்கின்றேன் .

என்னிடம் அவ்வளவு பணம் இப்போது உடனே பிரட்டமுடியாது. நீங்க தான் ஏதாவது மாற்றுத்தீர்வு சொல்லவேண்டும் ஐயா .உங்களைத்தான் கடவுள் போல நம்புகின்றேன். !


பொலிஸ் விசாரணையாளர்கள் எதுவும் துப்புத்துலங்கவில்லை .விசாரிக்கின்றோம் என்றே காலதாமதம் செய்யும் நிலையில் என் மகன் நிலை என்னவாகுமோ ?என்ற கவலை என்னை பரதேசி போல


  குற்றப்பொலிஸ்துறை ,மனித உரிமை ஆணைக்குழு/காணமல் போனோர் விசாரணைக்குழு என்று அலையவிடுது ஐயா என்று அவரின் காலினை பற்றிய நிலையில் தான் !

அசங்க ரட்னாயக்க அவர்கள் கேட்டது உங்க பாசப்போராட்டம் என்னால் உணர்ந்து கொள்ளமுடியும் .நீங்க அவர்கள் கேட்ட தொகையை கொடுக்க இன்னொரு வழி சொல்லட்டா !

உங்க வியாபார வாகத்தை அவர்களுக்கு கொடுத்துவிடுங்க!

ஐயா அந்த வாகம் ன்னும் லீசிங்க அடிப்படையில் வங்கியில் வாங்கியது .அதன் முழுப்பெறுமதியும் இன்னும் கட்டி முடிக்கவில்லை ஐயா .

இந்த பாருங்க தவராஜா எப்படியும் பிள்ளையை விழிகளில் பார்க்கும் ஆசையிருந்தால் இதுதான் என்னால் சொல்லக்கூடிய கடைசி ஆலோசனை!

 எதுக்கும் வீட்டுக்குப்போய் உங்க மனைவியுடன் ஆலோசித்து !அவர்கள் மீண்டும் தொலைபேசி அழைப்பு எடுக்கும் போது உங்க பதிலை சொல்லுங்க. இடையில் ஏதாவது பொலிஸ் துப்பு துலக்கி கப்பம் கேட்கும் குழுவை  பொதுமக்கள் உதவி பொதுவில் கிடைத்தால். நிச்சயம் நம் பணி விரைந்து வந்து உங்க மகனை  மீட்பதும், அவர்களை கைதி செய்வதுடன் நம் பணி முடியாது

இதன் பின்னால் இருப்போர் பற்றியும் தேடல் கொண்டு பல பைல்கள்  விசாரணைக்கு முடிவு கட்டலாம் என்று அசங்க ரட்னாயக்க கூறியதை கண்டு மாற்றுவழி இல்லாத நிலையில் தான்  முகவாட்டத்துடன் கரைசேரும் அலை போல வீடு வந்தார் தவராஜா

தொடரும்..

பிரட்ட-திரட்ட 


1 comment :

KILLERGEE Devakottai said...

விடயங்கள் வேதனையைத் தருகிறது நண்பரே...