25 October 2017

காற்றில் வந்த கவிதைகள்- 28

 http://www.thanimaram.com/2017/10/27.html

 நன்றிகள் தமிழருவி வானொலி உயிரோசை நிகழ்ச்சிக்கு!

---------------------------------------------
மரணவலி-

சந்தேகம் என்ற பாதுகாப்பு வேலிக்கு
சந்தர்ப்பம் கொடுக்காது
சாத்தியமற்ற வழிகளை எல்லாம்
சாத்தியமாக்கி !
சந்து ,பொந்துகள் எல்லாம்
சந்தனம் போல 
முகத்தில் கலர் மாற்றி
சந்தேக எல்லைகள் எல்லாம்
கடந்த சந்தோஷத்தில்!
சாலையோரம் அழகிய வீதி
சர்வதேசம் போற்றும்
நெற்போலியன் பூமியில்
சந்தித்த உன் வதனம்,
காதல் என்னும் சாமரம் வீச,
சாய்ந்து  சாய்ந்து
சாலையில் விழும் மரம் போல
சரிந்தேனடி உன் காதலில்!
சத்தியமான் போல 
சரியான வசதியில்லாதவன்!
சரிப்பட்டு வரமட்டான் என்று
சபையில் நீ எறிந்த வார்த்தைகள்
சாவிலும் மறவாத மரணவலி!
சாய்த்த அரசியல் வலிக்கு
சாபம் போலத்தானோ இன்னும் நீயும்
மரணவலி சுமக்கும் 
தாலியோடு தனிமரமாக!இன்னும்!

////-------------------------------------


---செத்துப்பிழைத்தேன்!

 காதல் என்னும் இளமைப்படகில்
கரைசேர்க்கும் துடுப்பாக 
காலம் எல்லாம் நீ இருப்பாய் என
கனவுகண்டேன்  !
 கண்டநாள் முதல்!!


கவிதையும் ,இளமைக்கால ,காவியங்களும்
கரைதேடும் கடல் அலைபோல
கடும் அலைவீசிய நாட்களில் எல்லாம்
கல்லாதவன் என்ற தராதரம் 
காதல்க்கோட்டையில் கடும்புயல் போல
கட்டவிழ்த்தாய் வார்த்தைகள் கொண்டு!
கண்ணீரில் செத்துப்பிழைத்தேன்!
காதலியே உருகும் பிரெஞ்சுக்காதலியே!


கரைசேர்த்தான் ஆன்மீகம் என்னும்
கருணை காட்டி நட்பாக
காலம் எல்லாம் தோழனாக
கணிவாக அந்த மரம்!

கண்டு கொண்டேன் அவனும்
கற்ற ஆன்மீக வழித்துணைகள்
காடு எல்லாம் இப்போது
கட்டுகின்றான் வா சேர்ந்தே
கரைகாண்போம் ஆன்மீகம் என்று!

(யாவும் கற்பனை!)

///---
திரண்டு வாருங்கள்,
தீர்வுகள் எட்டப்படும்!
திட்டமிட்டு தீர்வுகள்
தீர்க்கப்படாமலே 
திரட்டப்படும் வாக்குகள்
தீர்க்கமுடியாது என்று
பெரும்பாண்மை அரசியல்வாதிகள்
போடும் திருகுதாளங்கள் எல்லாம்!


தமிழர்களுக்கு பழகிவிட்ட ஒரு
திறந்த அரசியல் செயல்ப்பாடு!


4 comments :

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை
உண்மை

KILLERGEE Devakottai said...

உணர்வுகளை அழகாக மீட்டெடுக்கின்றீர்கள் நண்பரே...

பூ விழி said...

மரணவலி வலிக்குள் வலியாய்

மில்லியனெயார் ஆகும் அதிரா:) said...

தனிமரம் எதுக்கு இன்னும் தாலியோடு திரிகிறார்?:)... காதல் படக்கதாநாயகன் ஆகப்போகிறாரோ ஸ்நேகாவை நினைச்சு:)...