30 October 2017

காற்றில் வந்த கவிதைகள்!-29

 http://www.thanimaram.com/2017/10/28.html

 ------------------


நினைவுப்பயணம்!



அடிக்கடி மனம் என்னும் 
அற்புதவிமானம் 
,ஆகாயத்தில் பறக்கும் பருந்து போல
அன்னைதேசத்தின் மூளைமுடுக்கு  எல்லாம்
அலறியடிக்கும் வர்த்தக விளம்பரம் போல 
ஆசையுடன் நினைவுப் பயணங்களாக,
அழியாத பாடல்களுடன்,
அறிவிப்பாளரின்  குரல் போல
அழகாகவும் ,அமைதியாகவும் 
,அந்திநேரச்சிந்து போல
அடுத்துவரும் கவிதைக்கு
ஆவலுடன் எதிர்பார்க்கும் 
அன்பு வாசகன் போல 
!அலைந்து ,அலைந்து நினைவுப்பயணம்
அங்கேயே தங்கிவிடுகின்றது,
ஆடிப்பட்டம் தங்கும் பனைமர வடலிபோல
சிக்குப்பட்டே அறுந்து போகின்றது
கனவுகளில்!
----///-----------------------------------

நன்றி சொல்லவே!

எத்தனை துயரங்கள் என்றாலும்,
எத்தனை சந்தோஷங்கள் என்றாலும்,
எங்கேயும் என்னோடு பயணிக்கும்
என் மூச்சுப்போல
என்னைத்தாலாட்டும் 
என் இசையே !
எப்படி உரைப்பேன் உனக்கு
என்றும் நன்றி சொல்லவே!


ஏதிலியிடம் ஏதும் வார்த்தையில்லை
என்றாலும் நன்றி சொல்லவே
எப்போதும் பாடல்கேட்பேன்!
என் ஜீவன் உள்ளவரை
என்னைக்கரைசேர்க்கும்
எல்லாப்பாடலும்.

////



-----------------------------------------


சாத்தியமாகுமா?

தேர்தல்கள் வருகின்ற பொழுதுகளில்
தேர்தலில் போட்டியிடுவோர்களின்
தேறிய வருமானம் எது ?என்று
தேர்தல் வாக்குறுதிகள் போல
தேர்வு அட்டையின் புள்ளிகள் போல
தேற்றம் போல நிறுவிக்காட்டுவார்களா
தேசத்தின் அரசியல்வாதிகள்?
தேர்தலின் முன்னே   இது சாத்தியமாகுமா?
தேனில் ஊறும் எறும்பு போல
தேர்தலின் பின்னே 
தேற்றிக்கொள்ளும் வசதிகளை
தேசிய குற்றப்புலனாய்வுத்துறை
தேசத்தின் ஊடகங்களில்,
தேற்றிய வழிகளின் திருகுதாளங்கள் இவை என்று 
தேறிய நட்டக்கணக்கில்
தேய்மானங்கள் எல்லாம் 
தேர்தல் விதிமுறை மீறல் என்று
தேசம் காப்பது சாத்தியமாகுமா?
தேவனே என்னைப்பாருங்கள் என
தேசப்புதல்வர்கள் சிரிப்பது
தேர்தலுக்கு முன் சாத்தியமாகுமா?!!

---------------------------------



3 comments :

KILLERGEE Devakottai said...

நினைவோட்டங்கள் நன்று.

பூ விழி said...

பாடல்கள் எப்போதும் நம்மை மீட்டேடுக்கும்

கரந்தை ஜெயக்குமார் said...

இசையோடு எப்போதும் பயணிக்கும் தங்களுக்கு வாழ்த்துக்கள் நண்பரே