09 October 2017

விழிகளில் வந்திடு கண்ணே விம்மலுடன்-19

 http://www.thanimaram.com/2017/10/18.html

 ------------------
விசாரணை என்ற அரச நாடகமும்விசாரிக்க அரசு நியமிக்கும் தாம் தேர்ந்து எடுத்த ஆணைக்குழுத் தலைவர்களும் என்றும் ,எப்போதும், தன் எஜமான் விசுவாசத்தை  கடந்து   /உதறி நேர்மையுடன் தூய முற்போக்கு எண்ணத்துடன் எதையும் இலங்கை ஆட்சி  நிறுவாகத்தில்  என்றும் நடுநிலையுடன் நடந்ததில்லை!

காலத்துக்கு காலம் அரசு நியமிக்கும் விசாரணைஆணைக்குழு/ சுயாதீன விசாரணைக் குழு, ஜனாதிபதி ஆணைக்குழு   ,சுதேச ஆணைக்குழு எடுத்துரைத்து இருந்தால் !இன்றும் பட்டலந்த விசாரணை போல, காணமல் போனோர் விடயம் போல ,கொலன்னாவ துப்பாக்கிச்சூட்டு விடயம் போல ,மீரிபொத்த மண்சரிவு விசாரணைக்குழு போல ,இப்படியே காணமல் போன விசாரணைக்குழுகள் பற்றி இலங்கை ஆட்சி அதிகாரத்தில் தேடினால் !இந்த வெள்ளையானைக்கதை போலத்தான் !


பல அரச பணம், பல நேரத்தில் பலரின் சுகபோக வெளிநாட்டு பயணங்கள் ஊடாக எந்த நீதியும் வெளியே சொல்ல மறுக்கும் தேசக்கொள்கை/அரச உத்தரவு என்ற சிவப்பு நாடாக்குறிப்பு ஊடாக பலர் இன்றும் தேசத்தில் வாழ்வது நீதியின் சாபம் என்பதா? இல்லை ஆட்சியாளர்கள் உண்மையை கிடப்பில் போடும் யுத்தி என்பது போலவா



அப்படித்தான் லித்துனியாவில் மாணவர்கள் கைகளப்பில் ஈடுபடக்காரணம் அவர்களை தேசிய அரசாங்கத்துக்கு சில நேரத்தில் ஆதவாகவும், சில நேரம் புதிதாக வரும் சட்டத்துக்கு எதிராக  செயல்பட வேண்டும் என்ற அந்த இலங்கையின் பிரபல்யமான அரசியல்வாதியின் நிலைப்பாட்டுக்கு எதிராக சில மாணவர்கள் செயற்பட சிந்தித்தன் விளைவுகள் தான் மாணவர்கள் கலங்கங்களும் எதிர்பாரத தாக்குதல்களும்!

இறந்த மாணவர்கள் நெருப்புடா ரவுடி நிலை போலத்தான் அந்த அரசியல்வாதியின் மகனும் காயம் ஏற்பட்டது !





 விசாரணை செய்ய வந்த அசந்த ரட்னாயக்க சம்பிக்கவின் புகைப்பட ஆதாரங்களை உரிய இடத்தில் சேர்த்து! நீதி பெற்றுத்தருவதாக சொல்லிச் சென்றவர் கனடாவில் பிரபல்யமான இடத்தில் தன் மகன் பெயரில் பெறுமதியான வீட்டினைப்பெற்றுக்கொண்டது மட்டும் வெளியே சொல்லப்படதா விசாரணை அறிக்கையின் தொகுப்புரையாக முடிந்த நிலையில் தான்.

 இனியும் இங்கே(லித்துனியாவில்) இருப்பதில் தனக்கு உயிர் ஆபத்து நிகழும் என்ற முன்னெச்சரிக்கையில் சம்பிக்க பிரெஞ்சுதேசத்தில் அடைக்கலம் புகுந்த போது !

அவன் கூடவே கமலேஸ்சும்  அவனோடு ஒத்தோடினான் அரசியல் விடிவு கிடைக்காவிட்டாலும், தன் காதலுக்கு ஒரு விடிவு கிடைக்கும் என்ற தூரதேச நோக்கம் கமலேஸ் வாழ்வில் மற்றொரு  வர்தா புயல் போல வேகமாக காற்று வீசத்தொடங்கியது!!


பிரெஞ்சில் அடைக்கலம் தேடுவதுக்கு முதலில் தேவையான ஒரு முகவரி பெற்றுக்கொள்வதில் ஏற்படும் நெருக்கடிகள் தனிமரம் முன்னரே சொல்லிய நட்பின் கதை போல !

தன் மாமி மாதவி வீட்டில் முகவரி கேட்கலாம் அவள் பெற்ற அத்தை மகள் சாருமதியுடன் சுந்தரி நீயும் சுந்தரன் நானும்  போல, பெண் ஒன்று கண்டேன், செந்தூரம் ,எனக்கே நீ என்பது போல  காதல்வலை பின்னலாம் என்ற கற்பனையில் வந்தவனுக்கு !

மாதவி சட்டம் ஒரு இருட்டறை போல மாமி கதவு  சாத்தினா !நீ என்மகளுக்கு ஏற்ற அணழகன் அல்ல, நீ அரசியல்வாதிகளுடன் உடன் போக்கு நட்புக்கொள்பவன், கூடவே அரசியல் போதை போல போதைவஸ்த்து பாவிக்கும்(.  Drogue    ) உன்னை நம்பி என் மகளைக்கட்டிக்கொடுக்க மாட்டேன் !






.ஊரில் இதைச்சொல்லி இருக்கவேண்டும்! ஆனால் சட்டென்று தீர்மானம் எடுக்க இது என்ன ஐடி வேலை போலவா வாழ்க்கை


இதுக்காக  என் அண்ணா மீது அன்பு இல்லாதவள் என்று நினைக்காதே! உன்னைவிட எனக்கு மகள் மீது. அதிக பாசம் இருக்கு .

நீ தாய்தேசம் போவதே சிறப்பானது. இங்கே உன் நட்புக்களுடன் போய்சேர்கின்றேன், வாழ்ந்து காட்டுகின்றேன் என்ற வெற்றுச்சாவல்கள் எல்லாம் வேண்டாம்  மருமகனே


உனக்கு தாய்த்தேசம் தான் பொருத்தமானது. அங்கே போய் பரம்பரை வியாபரம் செய்வதுடன் ,



 யாரையாவது அண்ணா பேசிக்கட்டிவைப்பார் என்ற இலவச ஆலோசனையும் வழங்கி அனுப்பி வைத்த போதுதான்!


 தன்னை உணர்ந்தான் கமலேஸ்! நடு வீதியில் வீசி எறிந்த பழைய பாட்டுப்பொட்டி போல  இத்தனை உபதேசங்கள் வீட்டில் நடக்கும் போது !ஒரு தடவைகூட முகம் காட்டவில்லை உன் வட்ட முகத்தில் நான்இட்ட நிலவு பாடல் போல என் தேவி  ஏன் இன்னும் சாருமதி என் தூய்மையான காதலை புரிந்துகொள்ளவில்லை ?

அவள் நம் நாட்டுக்கு வந்த போது என்னோடு அவள் பழகிய நாட்கள் அழகான நாட்கள் போல ,ஆனந்தம், உள்ளம் கொள்ளை போகுதே போலஉயிரோடு உயிராக, என் ஜீவன் நீதானே, உன்னாலே உன்னாலே ,நீதானே என் பொன் வசந்தம் என்று அன்று உரைத்தவள்!

 இப்போது தெற்குத்தெரு மச்சான் போல, கேடி , கேடி ரங்கா கில்லாடி ரங்கா போல  பில்லா போல அதிசயப்பிறவி, என்றெல்லாம் சிந்திக்கின்றாலோ ?என்ற மனக்குழப்பத்தில் வெளியேறினான் கமலேஸ் .


அப்போது இருந்த மனநிலையில் அடுத்த கட்டம் பற்றி பேசும் ஆசையில் யாழவனுக்கு தாய்தேசத்துக்கு அழைப்பினை எடுத்தான் கமலேஸ் !



 மறுமுணையில் அழைப்பு செயலற்று இருப்பது ஏன் என்று நிஜம் அறியாத தேடலில்


தொடரும்!!

2 comments :

KILLERGEE Devakottai said...

தொடர்கிறேன்...

K. ASOKAN said...

மிகவும் நன்று