28 October 2017

விழிகளில் வந்திடு கண்ணே விம்மலுடன்-24

முன்னர் இங்கே-...http://www.thanimaram.com/2017/10/23.html

இனி--/.....................!

என் சொத்து முழுவதையும் எழுதித்தருகின்றேன் எப்படியாவது என் மகனைக்காப்பாற்றிவிடுங்கள் என்று வாழ்வே மாயம் படத்தில் பாலாஜியிடம் கதறும் கமலின் தந்தை பாத்திரம் போலத்தான் தவராஜாவும் அசங்க ரட்னாயக்கவிடம் தன் வாகனத்தை பணத்துக்கு பதிலாக அவர்கள் சொல்லும் இடத்தில் ஒப்படைக்க்கின்றேன்

எப்படியாவது என் மகனை விழிகளில் கொண்டு வந்து சேருங்கள் என்று கதறிய நிலையை எந்த  ஊடகமும்  இலங்கையில் நடுநிலமையுடன் பதிவு செய்யும் ?

ஒவ்வொரு உயிர் அச்சுறுத்தல் பின்னே ஒவ்வொரு வியாபாரிகளும் நாட்டைவிட்டு வெளியேறி பிற தேசங்களில் அரசியல் /உயிர் தஞ்சம் கோருவது எத்தனை கொடுமை என்பதை ஒவ்வொருத்தரும் அனுபவிக்கும் போதுதான் உணர்வு பூர்வமாக அறிந்து/ தெளிந்து /புரிந்துகொள்ளமுடியும் இனவாதத்தின் கோரமுகத்தினை

மகன் எப்படியும் வந்திடு வேண்டும் என்று  நிரோஷனின் தாயின் பிராத்தனை பலித்ததோ ?அல்லது கப்பம் கேட்டவர்களுக்கு பணமா இல்லாவிட்டாலும் தவராஜாவின் வாகனத்தின் பெறுமதி சொத்து அதிகம்  என்பதை நன்கு அறிந்த திருடர்களுக்கு வரப்பிரசாதம் போலவோ தெரியாது !



 புத்தளம் பகுதியில் அதிக மயக்க மருந்து  குடிவகையுடன் கொடுக்கப்பட்டதால் சுயநினைவு அற்ற நிலையில் வீதியோரத்தில் கிடந்த வாலிபன் உடலினை.வழிபோக்கு ஆட்டோ ஓட்டுனர் வைத்தியசாலையில் சேர்த்தன் நிமித்தம்  !




 வைத்தியசாலையில் வைத்து பொலிஸ் விசாரணை மூலம்  தவராஜாவின் மகன் மீட்கப்பட்டான் என்ற மகிழ்ச்சி செய்தி அப்புத்தளை பொலிஸ் நிலையத்துக்கு அறிவிக்கப்பட்ட போது!

 அந்த தகவலை உடனடியாக தவராஜாவிடம் கூறிய பொலிஸ் அதிகாரியின் காலில் விழுந்து நன்றி கூறிய தவராஜா தன்னை புத்தளத்துக்கு உங்களுடன் கூடவே  அழைத்துச்செல்லுங்கள் என்று கேட்டதையும் புரிந்துகொண்ட பொலிஸ் அதிகாரி தன்னோடு கடமைவீரனாக அழைத்துக்கொண்டு சென்றார்

ஒரு வார உயிர்ப்பயம்  நீங்கி மகனை புத்தளம் வைத்தியசாலையில் பொறுப்பேற்ற தவராஜா !மகனை வைத்தியசாலையில் சேர்த்த ஆட்டோ ஓட்டுனருக்கு தன் கையில் இருந்த  தன் கடுமையான உழைப்பில் வாங்கிய  விலையுயர்ந்த மோதிரத்தனை  அன்பளிப்பாக கொடுத்து ஆரத்தழுவிக்கொண்டார் அன்பே சிவம் படத்தில் கமல் மாதவனை அனைப்பது போல  !

சொத்து தொலைந்தால் சேமிக்க முடியும்! உயிர் போனால் இந்த பூமியில் அதன் இழப்பு சோகத்தை தாங்குவது என்பது எத்தனை பேரினால் சாத்தியம் ?இந்திராகந்தி இழந்த சஞ்சய்க்காந்தி போல !என்ற மகனை பார்த்தது   போதும்  மாத்தயா எப்ப வீட்டுக்கு கூட்டிக்கொண்டு போகலாம்? என் மனைவி மிகுந்த கவலையோடு பித்துப்பிடித்தது போல  இருக்கின்றார்  மனசுக்குள் மத்தாப்பூ சரன்யா போல ஒருவாரம் சாப்பாடு ஒழுங்கில்லை  மகனை காணவில்லை என்ற வேதனையில்

தவராஜாவை அழைத்து வந்த அப்புத்தளை பொலிஸ் நிலைய அதிகாரி பியதாசவிடம்  வினைவிய  பொழுது ?நீங்க இப்போதே மகனைக்கூட்டிக்கொண்டு போங்க, நாங்க விசாரணைகளை முடித்த பின் அப்புத்தளை வந்து சந்திக்கின்றோம்! என்றவரின் பேச்சின் உள்ளர்த்தம் புரிந்த தவராஜா !வாருங்கள் மாத்தயா ,நிச்சயம் மகிழ்ச்சியடைவோம் என்ற பின் !

உடனே   மகனை புத்தளம்   இருந்து அழைத்துக்கொண்டு அப்புத்தளைக்கு   ஒரு வாகனத்தை வாடகைக்கு எடுத்துக்கொண்டு புறப்பட்டார் .நிம்மதிப் பொருமூச்சு  விட்டவாரே விழிகளில் வந்திடு கண்ணே என்ற அவரின் பிரார்த்தனை மகிழ்ச்சி என்ற நிலையில்!


நீண்ட நாட்களின் பின்  தன் புலம்பெயர் தேசத்திலிருந்து கமலேஸ் தந்தைக்கு அழைப்பினை ஏற்படுத்தினான் !

அப்பா இங்கே எனக்கு அடைக்கலக்கோரிக்கைக்கு சாதகமான பதில் வந்திருக்கு !இனி என்ன நினைத்து கவலை கொள்ள வேண்டாம் என்றவனுக்கு !

உன்னால் தானேடா! நாம் இப்படி எல்லாம் அலைச்சல் காண்கின்றோம், எப்போது என் பேச்சை கேட்டிருக்கின்றாய்? நீ ஒரு  உதவாக்கரை !என்னோடு இனிமேல் கதைக்காத! உன் வெளிநாட்டு ஆசைக்கு  எங்களின் வியாபாரத்தைதே நடுரோட்டில் விட்டு விட்டாயே யாருமற்ற ஏதிலி போல ?

 என் தங்கை மகளை கட்டிவைக்கும் ஆசையில் இருந்தேன்! வெளிநாடு போய் போதைவஸ்த்து பாவிக்கின்றாய் என்று என் தங்கை கேட்டாளே ஒரு கேள்வி? நீ எல்லாம் எப்படி அண்ணா பிள்ளை வளர்த்தாய் ?கஸ்ரத்தை உணர்த்தி வளர்த்து இருந்தால் இப்படி ஆகியிருப்பான என்று?

 அன்றே என் சிந்தனையில் மண் விழுந்து! போச்சு !இனி இங்கே அழைப்பும் எடுக்காத ,நாங்கள் சொத்துப்போட்டோம் என்று நினைத்துக்கொள்! என்ற தந்தையின்  அக்கப்போர் கமலேஸ்சுக்கு தன்  சிந்தனையை நிலையைக் அடியோடு சாய்த்த மரம் போல !

சாருமதி மீதான் தூய காதல், மாமி புரிந்து கொள்ளாத  ஆடம்பரப் பணம், அரசியல் நட்பு தந்த அடைக்கல உதவி, தந்தை அரவணைக்காத பாசம் எல்லாம் சேர்ந்து அவனை சிந்தனைப் போதையில் வாலி பட சூர்யா பாத்திரம் போல ஊமையாக்கிய போதையின் பிடியில் தொடர்ந்தும் பயணிக்க வைத்தது!

இந்த நிலையில் தான் பாரிசில் அடைக்கலம் கோரி உள்நுழைந்தான் யாழவன்!


தொடரும்...

4 comments :

KILLERGEE Devakottai said...

நெஞ்சம் பதறும் நிகழ்வுகள் நண்பரே தொடர்கிறேன்...

(ஒரு படத்தையும் பார்க்காமல் விட்டதில்லையோ)

Unknown said...

Arumaiyana padaipukkal vaalthukkal sakotharare

கரந்தை ஜெயக்குமார் said...

மனதை கனக்கச் செய்யும் நிகழ்வுகள்
தம +1

பூ விழி said...

ஐயோ இது ரொம்ப கஷ்டமா இருக்கே இதை தவிர்த்து படிப்போம் என்று தள்ளி வந்து படித்தாலும் தொண்டை அடைகிறது