முன்னர் இங்கே-http://www.thanimaram.com/2017/10/19.html
இனி---
---------------------
/மோகத்தைக்கொன்றுவிடு இல்லை மூச்சை அடக்கிவிடு என்பதும் , நினைவுகள் நெஞ்சினில் புதைந்தனனால் நெருப்பாய் என் நெஞ்சை சுடுகின்றேன் என்பதும், சொல்லாயோ வாய் திறந்து நில்லாயோ நேரில் வந்து என்றெல்லாம் காதலின் வலிகளை கவிதையில் செருகுவது கவிஞர்களுக்கு சுகப்பிரவசம் போல!
யாழவனுடைய கைபேசி செயலற்றுக்கிடப்பது புதுமையாக இருக்கே .24 மணித்தியாள வானொலி சேவை போல அவன் கைபேசி எப்போதும் இடைவிடாது ஒலிக்குமே !

ஆனால் காதலின் தோல்வி அல்லது பிரிவு என்பது ஒரு ஆறாத காயம் போல அடிமனதில் என்றும் மண்ணுக்குள் வைரம் போல !
சாருமதி என்றாவது தன் காதலை புரிந்துகொள்வாள் என கமலேஷ் கட்டிய காதல்க்கோட்டை !கண்முன்னே மாதவி தகுதி அற்றவன் என்று வேல் கொண்டு வேட்டையாடுதல் போல வீட்டின் வரவேற்பு கூடத்திலேயே வாய்ச்சொல்லில் தூள் சொர்ணாக்கா போல வெட்டு ஒன்று என்று சொல்லியது மனதில் ஆறாத வடுப்போலனாது கமலேஸ்க்கு!

உண்மையில் இந்த நோர்வேயின் சமாதானப் பேச்சு வார்த்தை நாடகம் நடக்காது இருந்தால் !
மாதவியோ இல்லை அவள் பெற்ற சாருமதியோ !நிச்சயம் மலையகம் என்பதே அறியாத சிறைப்பறவைகள் போல இருந்து இருப்பார்கள்.
கமலேஸ் கூட அப்புத்தளையில் ஏதாவது அரச உத்தியோகம் என்றாலும், இல்லை பரம்பரையாக இயங்கும் தனியார் வியாபாரத்தை இன்றைய கால நவநாகரித்திற்கு ஏற்றது போல அங்காடித்தெரு போல மாற்றி வியாபாரத்தில் முன்னேறி இருப்பான் தனி ஒருவன் பட தம்பி ராமையா போல !
காலம் என்ற நதியில் காதலும் வந்து சேர லித்துனியா வரை நீந்தி வந்ததும் , பாரிசில் அடைக்கலம் தேடும் சம்பிக்க ஆதரவுக்கூட்டணியும் காதல் ஆசையில் வந்தவனிடம் .
இப்படியா மாமி பேசுவது? அதுவும் இதுவரை என் தாய் தந்தைகூட இப்படி ஒரு கடும் சொல் சொல்லிக்கேட்டதில்லையே .
நாட்டின் போர்ச்சூழல் ஒரு காரணி என வெளிநாட்டுக்கு புலம்பெயர்ந்து வந்தால் நம் தராதரம் எல்லாம் மாறிப்போகுமா ?
அதுவும் தந்தையின் உடன் பிறந்த தங்கையே இப்படி என்றால் !மற்றவர்கள் எத்தனை இம்சைசெய்வார்கள் .
எல்லாம் வெளிநாட்டு புதுப்பணம் படுத்தும் பாடு. இதை எல்லாம் எந்த தந்தையிடம் சொன்னால் நிச்சயம் நாட்டாமை விஜயகுமார் போல நெஞ்சைப்பிடித்துக்கொண்டே மூச்சைவிட்டுவிடுவார்.
பாவம் அவர் பிரபல்ய முதலாளி வெளியில்! ஆனால் என்மீது மூத்தவன் என்ற பாசத்தில் எதுவும் கேட்டதில்லை வானத்தைப்போல!
ஒரு சில முறை நட்புக்களுடன் சேர்ந்து போதைவஸ்த்து பாவித்த போதும். இதமாகத்தானே சொன்னார் எதையும் பழகுவது சுலபம் கமலேஸ் ஆனால் மறப்பது கடினம் .
ஒவ்வொருத்தருக்கும் ஒரு கட்டத்தில் ஏதாவது ஒரு போதைமீது ஈர்ப்பு வருவது இயல்பு பள்ளியில் காதல் போல! ஆனால் எதுவும் நம்மை ஆளக்கூடாது .
சுருட்டுக்கடையில் எத்தனை ஆயிரம் சுருட்டு விற்கின்றேன் தினமும்! ஆனால் நான் புகைத்து நீ பார்த்து இருப்பாயா? இல்லைத்தானே! என் தந்தையும் என்னை எல்லாம் அந்தக்காலத்தில் உலகம் சுற்றும் வாலிபன் போலத்தான் செல்லமாகத்தான் வளர்த்தார்! ஆனால் கோபம் வந்தால் இடுப்புப்பட்டிமட்டும் தான் பேசும் நான் ஆணையிட்டால் பட நம்பியார் போல இடையில் யாருமே வந்தாலும் சேர்தே அடிவிழும் அந்தளவு என்னைவிட கோபக்காரர் !
ஆனால் என் பிள்ளைகளிடம் நாம் அப்படி நடந்ததில்லை .நீயே தெளிவு பெற்றுக்கொள் என்று தானே ஒரு முறை சொன்னார் !
அவரைவிட சாருமதி மீதானநேசத்தில் தானே இப்படி தனித்தீவாக வெளிநாடு வெளிக்கிட்டேன். இந்த நேரத்தில் தெளிவாக பேசக்கூடியவன் யாழவன் மட்டுமே! என் நட்பு வட்டத்தில் முதன்மையானவன் தாயுமானவன் படம் போல தக்க சமயத்தில் கவிதையில் கதையே பேசுவான் ஊவா வானொலியில் போட்டிகளின் போது!
உதறிப்போகும் உன்னை எண்ணி
உருகிப்போவோனோ என்ற
உயர்ந்த எண்ணம் உனக்கு வேண்டாமடி!
உயரப்பறக்கும் பருந்து போல
உயந்துவிடுவேன் எப்போதும்
உருமி மேளம் ,உடுக்கும்
உருவேற்றும் தாரக மந்திரமும்
உறுதியோடு கற்றவன்
உருக்குழைந்து
உதறிவிடமாட்டேன் எனக்கான
உன்னத வாழ்வை!
யாழவனுடைய கைபேசி செயலற்றுக்கிடப்பது புதுமையாக இருக்கே .24 மணித்தியாள வானொலி சேவை போல அவன் கைபேசி எப்போதும் இடைவிடாது ஒலிக்குமே !
என்னாச்சு எதுக்கும் தம்பி நிலாந்தனுடன் கதைப்பம் என்று பாரிசில் இருந்து தாய்த்தேசத்துக்கு அழைப்பினை அழுத்தினான் !மறுமுனையில் தொடர்பை ஏற்றது அவன் தாய்!
தொடரும்!!!!
2 comments :
ஒவ்வொருத்தருக்கும் ஒரு கட்டத்தில் ஏதாவது ஒரு போதைமீது ஈர்ப்பு வருவது இயல்பு பள்ளியில் காதல் போல! ஆனால் எதுவும் நம்மை ஆளக்கூடாது .
உண்மை
உண்மை
நன்றி நண்பரே
அந்த தாயிடம் பேசியதை அறிய தொடர்கிறேன் நண்பா...
Post a Comment