பல தசாப்த கால யுத்தம் நம் பலரை தனிமையில் அகநானூறு போல நெஞ்சோடு புலம்பவும்,இடப்பெயர்வு,புலப்பெயர்வு தனிமையின் கொடுமையோடு போரடவும் விட்டுப்பிரிந்த உறவுகளை நினைத்து ஏக்கப்பெரு மூச்சு விடவும் ,கரைதேடி வந்து விட்டோம் ஏதிலிகளாக !
நடுநிலமைவாதிகள் எல்லோரும் பார்த்திருக்கும் போதே எங்கள் மண்ணில் எத்தனை கந்தக்குண்டுகள் கொசுவுக்கு அடிக்கும் மருந்து போல வீசிய கதைகள் எல்லாம் பதவி சுகத்திலும், பகட்டான மாடமாளிகை அன்பளிப்பு பெற்றதில் சிலர் இன்றும் பாராளமன்றத்தில் பேச மறந்தாலும் !
பலர் பொருளாதார போராட்டங்களுடன் போராடி வெற்றிவாகை சூடவேண்டும் என்ற அங்கலாய்ப்புக்களுடன் தினந்தோறும் முரளி போல அழுதுவடிக்கும் தாயக , புலம்பெயர் வாழ்க்கையின் பின்னே தேவையான உளவியல் ஆற்றுப்படுத்தல் என்பது இன்றைய நவீன சூழலில் காலத்தின் தேவையாக இருக்கும் ஒரு விடயம் .
இதை எல்லாம் செய்ய வேண்டிய தனிநபர்கள், அரசியல்வாதிகள், புத்தியீவிகள் எல்லாம் ஏனோ இன்றும் கள்ள மெளனம் காப்பது என்பது கடந்த ஆட்சிக்கும் ,இன்றைய நல்லாட்சிக்கும் இடையில் பேச்சுவார்த்தை தீர்வு ஆலோசனை கூட்டங்கள், புதிய அரசியல் அமைப்புக்குரிய மசோதா ,என்றெல்லாம் ஒரு புறம் புலூடாவிட,
மறுபுறத்தே காணமல் போனோர், அரசியல்சிறைக்கைதிகள், மீள்குடியேற்றம் , போக்குவரத்து சேவைகள் ,பாடசாலை வளப்பற்றக்குறை என்றெல்லாம் பேசவிடயத்தை பேசி செயல்படுத்தாமல் நொண்டிச்சாக்கு சொல்லிக்கொண்டு காலம் கடத்துவதில் பிரயோசம் ஒன்றும்மில்லை!
இங்கே ஏன் வந்தாய் அகதியாக ?சட்டங்கள் மாறுகின்றது என்று நம்மவர்கள் போடும் புதிய கதைகள் எல்லாம் என்றாவது ஊடகத்தில் எழுத வேண்டும் நண்பா கமலேஷ்!
இத்தனை துன்பம் அநுபவித்த உன் தந்தையின் மனநிலை என்னால் புரிந்துகொள்ளமுடிகின்றது.
இப்படி ஏதாவது ஏடாகூடமாக எனக்கு நிகழமுன்னரே நான் நாட்டைவிட்டு வெளியேறியது ஒரு விதத்தில் மிகமகிழ்ச்சி எனலாம்.
உண்மைதான் யாழவன். நீ எப்போதும் முன்னெச்சரிக்கைவாதி!
நான் தான் சாருமதி மீதான காதல் மோகத்தில் நெஞ்சினிலே படம் போல நமக்கு என்று இருந்த அனுபவ வியாபாரம் , இணைந்த கைகள் போல பழகிய நட்புகள் , ராம் படம் போல அம்மா, எம்டன்மகன் நாசர் போல பிறர் அப்பாவை நினைத்தாலும், பாசத்தில் வானத்தைப்போல பெரியண்ணா போல அவர் உயர்ந்தவர்
!உயிரிலே கலந்தது போல தம்பிகள் என எல்லாவற்றையும் விட்டு இந்த காதல் அரசியலில் நுழைந்து கடைசியில் என் ஜீவன் பாடுது பட ராஜா போல ஒரு சூட்கேசுடன் இப்படி பாரிஸ் வீதியில் கோமாளி போல இருக்கும் நிலையை நினைதால் என் மீதே எனக்கு வெறுப்பு வருகின்றது .
இல்லை மச்சான் இனவாத யுத்தம் என்ற அரக்கனின் மூலவேரின் விழுதுகள் தான் இவை!
கவலைகள் வரும் போது யாராவது ஒருவர் ஆற்றுப்படுத்த வேண்டும் வசூல்ராஜா கமல் போல கட்டிப்பிடித்து. ஆனால் எல்லோரும் வேடிக்கை பார்ப்பதும், நமக்கு என்ன என்று தனித்தீவுகள் போல விரும்பி வந்தவன் தானே பட்டுத்தெளியட்டும் என்ற அகங்கார கறுப்புரோஜா தாய்க்கிழவியின் நிலை போலத்தான் சிந்திக்கின்றார்கள் கமலேஸ்.
நீ போதை வஸ்த்துக்கு அடிமையாகிவிட்டாய் என்று என்னால் இப்போதும் அறுதியிட்டுக் கூறமுடியாது நேரில் பார்க்கும் வேலையில்.
ஊரில் வெளிக்கிட முன்னர் உன்னைப்பற்றி வந்த கதைகள் நம்பமுடியாத அரசியல் தேர்தல் வாக்குறுதிகள் போலத்தான்! நம்மவர்களுக்கு எப்போதும் மற்றவர்களின் வாழ்வில் மூக்குநுழைப்பது தானே பழக்கம்.
ஒரு வாலிபனின் கனவு வாழ்க்கையோடு விளையாடுவது சாதாரன நிகழ்வுகள் நண்டு படம் போல விட்டுத்தள்ளு நம்மை எவர், எவர்கள் என்று புரிந்துகொள்கின்றார்களோ ?அன்று துணிவுடன் நிமிர்ந்து நின்று சாதித்துக் காட்டுவோம்!
இனித்தான் நானே பாரிசில் எனக்கு ஒரு முகவரி தேடி, சாமானிய வாழ்வில் தொடர் ஓட்டம் ஓடவேண்டும். உன்னைப்பார்த்தது மகிழ்ச்சியாக இருக்கு கமலேஸ் லித்துனியாவை விட்டுவந்தது நல்லது நன்னாட்டு அரசியல்வாதிகள் லீலைகள் அதிகம் பலர் அறியாத செய்திகள் அதை என்றாவது பகிர்வேன் பலருடன்.
இருவரும் ஒரே இடத்தில் இருவரும் இருக்க இங்கே இடவசதியில்லை என்பதால் நானும் என் நட்புக்களிடம் உதவிக்கரம் கேட்டுப்போகிறேன் .மீண்டும் சந்திபோம் உன் கைபேசி இலக்கம் மாற்றினால் என்னோடு பகிர்ந்துகொள் !
உன் அப்பாவின் கோபம் கால மாற்றத்தில் தவமாய்த் தவமிருந்து ராஜ்கிரன் போல மாறிவிடும். அவர் இத்தனை துயரம் அனுபவித்தது வேதனையாகத்தான் இருக்கு. யாரிடம் நாம் நீதி கேட்பது? இப்போது நமக்கான நீதியே தோற்றது போலத்தானே இருக்கு !
உண்மைதான் யாழவன்.
நான் வேலைக்கு போக நேரம் சரியாகிவிட்டது .இப்போது போகின்றேன் என்று போனவன் கமலேஸ் நிலை தெரியாது . பொருளாதார தொடர் தேடலில் நானும் பலரைப்போல தொலைபேசியில் சேமித்த தொடர்பு இலக்கங்கள் தொலைபேசி செயல் இழந்தால்! தொலைவது போல !
சிலரை நட்பில் தொலைத்துவிட்டேன். அப்படி தொலைத்தவர்களில் இந்த கமலேஷ்சும் ஒருவன் தான்.
சிலரை நட்பில் தொலைத்துவிட்டேன். அப்படி தொலைத்தவர்களில் இந்த கமலேஷ்சும் ஒருவன் தான்.
இப்போது லாச்சப்பல் நோக்கி அவனைத்தேடித்தான் போகின்றேன் என்ற திடீர் சிந்தனை தெளிவு ஆணஸ்ராஜ் விஜய்காந்து போல நிகழ்காலத்துக்கு வந்தான் யாழவன்!இந்த நேரத்தில் என் பாடல் தேர்வு ஒலிக்கும் இணைய வானொலி எதுவாக இருக்கும் !
இந்த இணைய வானொலிக்கு ஸ்கைப் ஊடாக நேயர் விருப்பம் இப்போது கேட்கலாம் என்று கைபேசியில் இருந்து தட்டிவிட்டுச்சென்றான் யாழவன்!அவன் கேட்ட பாடல் எதுவோ?
இந்த இணைய வானொலிக்கு ஸ்கைப் ஊடாக நேயர் விருப்பம் இப்போது கேட்கலாம் என்று கைபேசியில் இருந்து தட்டிவிட்டுச்சென்றான் யாழவன்!அவன் கேட்ட பாடல் எதுவோ?
தொடரும்!!!
2 comments :
சிலரை நட்பில் தொலைத்துவிட்டேன்
காலஓட்டத்தில் நட்பினை தொலைப்பது வேதனைதான் நண்பரே
அனுபவத்தின் நிகழ்வுகள் தொடர்கிறேன் நண்பரே...
Post a Comment