03 May 2011

பாட்டியின் பிரிவில்!!

ஏய் பேராண்டி என்னடா மணி 6 ஆச்சு இன்னும் முழிக்கலயா !போ பாட்டி என்று 
திட்டிக்கொண்டு எழுந்தால்! பால் கோப்பியுடன் அருகில் இருந்த பாட்டிக்கு
கடைசியில் பால் ஊத்தமுடியாத பாவியாய்
நாடுகடந்த வேதனையை யாருக்கு உரைப்பேன்!

நீ நீண்ட ஆயிலுடன் வாழனும் என்று அம்பாளிடம் வேண்டுகிறன்! என்று நேற்றும் தொலைபேசியில் பாசம் பொழிந்தவள் !
இன்று பெட்டியில் போகையில் சுமந்து செல்ல வேண்டியவன் பாவியாக பாத்திரம் தேய்க்கிறேன்!
..
முன்னர் அவள் கைபிடித்து  கோயிலுக்கும்
பள்ளிக்கும் போகையில் நீ தாண்டா எங்கள் வம்சத்து முதல்வாரிசு என்று புகழ்பாடும் பாட்டிக்கு என்னத்தை உரைப்பேன் நாட்டுக்குவர எனக்கில்லை அனுமதி! என்று!

..
எப்போதும்  சீலைத்தலைப்பில் முடிந்து வைத்திருந்து பாக்குச்சீவல் வாசனையுடன் பெரியபடிப்பு படிக்கிறவன் இதைக் கொண்டுபோ என்று தரும் பணம் மட்டுமா தன் வஞ்சனையில்லா பாசத்திற்கும் எத்தனை ஆயிரம் தந்து கடன் தீர்ப்பேன்!
..
ஆயலவர் அமைதியென்று வந்து அட்டுழியம் செய்த போதெல்லாம் இவன் என் பேரன் அவனைவிட்டிடுங்கோ என்று அடைகாத்தாலே! எங்கேல்லாம் அடிச்சாங்கள் என் ராசா என்று இல்லாத கிரீடத்தை எனக்குச் சூட்டினாலே!
கொள்ளிப்பந்தம் கூடபிடிக்கமுடியாத அபலை நான்! ..

அப்பர் அடிக்கும் போதெல்லாம் அவள் முந்தானைக்குள் ஒழிந்தாள் தப்பிக்கலாம் என்று தற்காத்த பொழுதில் உங்கட செல்லம்கூடிப்போச்சு என்று பெட்டிப்பாம்பாகும் அப்பர் இன்று முன் சுமக்கும் போது முண்டு கொடுக்க வேண்டியவன் முதுகெலும்பில்லாமல் மூலையில் முக்கியழும் என் வேதனையை அறிவாளா பாட்டி!.
..
பேராண்டி உன்னைத்தாங்கிய இந்தக்கையில் உன்ர வாரிசை காட்டாமாட்டாயா?என்றவளுக்கு விரைவில் வருவேன் என்று எத்தனை ஒப்பந்தம் போட்டு கடைசிவரை பார்க்காத தீர்வுத்திட்டம் போல் கண்மூடிவிட்டாளே!
..
அன்னை மடியைவிட அதிகம் கிடந்தது எண்ணைவாசம் வீசும் அவள் மடியில்தானே!
கொள்ளிபோடும் தந்தையை தாங்க வேண்டியவன் தாண்டமுடியாத தூரத்தில்!
எப்போதுமே சினக்காத பாட்டி முகம் இன்னும் கண்னுக்குள்!
..
என்றாளும் கெட்டிக்காரி 11 பிள்ளை பெற்றும் எல்லாருக்கும் பூட்டப்பிள்ளை கண்டுவிட்டாள்!

2 comments :

காற்றில் எந்தன் கீதம் said...

கடல் கடந்து சென்ற ஒருவனின் வலிகள் நன்கு தெரிகிறது உங்கள் வரிகளில்

தனிமரம் said...

நன்றி தோழி உங்களின் கருத்தை பதிவு செய்ததற்கும் வருகைக்கும்!