06 June 2011

மழை விமர்சனம்!!!

என் உயிரின் மேலான தமிழ் மக்களே இந்த பாசத்துக்குறிய தனிமரம் மீண்டும் ஒரு திரை விமர்சனத்தில் தன் பாசப் பிறப்புக்களுடன் உங்களை நாடி வருகின்ற மாலை வேலையில்!
 ஏனையா  ராஜா படத்தைப் போடு எங்கள் வாக்கினை தமிழ்மணம்,இண்ட்லி,தமிழ்-10 இல் பதிவு செய்யிறம் என்று நீங்கள் கூறுவது என் செவியில் விழுகிறது! உங்களை நம்பி கடல்தாண்டி வருகிறது மழை!

நீண்ட நாளாக வானம் ஒரே சூரியனையும் அதிகமான வெக்கையையும் கொடுத்துக் கொண்டிருந்த நிலையில் நேற்று இரவு தொடக்கம் எதிர்பாராமல் எதிர் பார்த்துக் கொண்டிருந்த மழை பாரிசின் முக்கிய நகரங்களை  ஸ்தம்பிக்கும் நிலையில் இல்லாவிடினும் மிகவும் மெதுவாக இனிய சாரலை வானில் இருந்து தூவிக்கொண்டிருக்கிறது.

இது விடயமாக வானிலை ஆய்வாளர் ஓட்டைவடையிடம் கேட்டபோது.!

 நானும் எதிர்பார்க்க வில்லை இப்படி நடக்கும் என்று  எப்போதும் போல பட்டு வேட்டியும்  சட்டையும் சோளாப்புரி    யும்(இலங்கையில் புகழ் பெற்ற பாதனி) காதில் கடுக்கனும் போட்டுக்கொண்டு   !நண்பனின் பிறந்த நாள் விழாவிற்கு போவம் என்று வெளியில் இறங்கினால் சோர் என்று ஒரே இரைச்சல் என்ன நாதஸ்வரம் நாடகம் நின்றுவிட்தோ? என்று ஒரு புறம்!  மனோ மாமா கொறட்டை விடுகிறாரோ !என்று மறு புரம் பார்த்தால்
வானில் இருந்து ஒரே இடியுடன் கூடிய மழை பெய்து கொண்டிருக்கிறது.

அடக்கடவுளே என் மழைக்கோட்டை நேற்றுத்தான் 2 மாதமாக(வெளிய சொல்லப்புடாது வெறும் வாசனைத்திரவியம் மட்டும் அடிப்பது மணக்கக்கூடாது பாருங்கோ) தோய்க்காத தை தோய்த்து அலுமாரியில் மடித்து வைத்தேன். இப்போது தேடுகிறேன் மகிந்தர் கிளிநொச்சியில் இன்று கோபுரம் திறந்து வைக்கிறார் என்று கேள்விப்பட்டு பதிவு போடும் அவசரத்தில் இருப்பதால்  மீண்டும் விரைவில் என் மழை அனுபவங்களை குறுவெட்டுக்களாக வெளியிடுவேன்.

இது விடயமாக தோழி ஹேமா அவர்களை இனைப்பில் இனைக்க முயற்ச்சித்தேன் .தொடர்பு கிடைக்கவில்லை வைரமுத்துவின் பாடல் சின்னச்சின்ன மழைத்துளிகள் சேர்த்து வைப்பேனோ... ஒரு கறுப்புக்குடை காட்டி யாரும் வழிமறிக்க வேண்டாம் என்ற பாடல் ஒலித்த வண்ணம் இருக்கிறது. 

இத்துறையில் அனுபவம் கூடிய மூத்த பதிவர் மைந்தன் சிவாவின் பார்வையில் மழை விமர்சனத்திற்கு அனுகியபோது மழை படத்தில் ஸ்ரேயா நடனம் பார்த்து மூன்று நாள் முதுகுவலியில் புரண்டு படுத்ததுதான்  என்னால் சொல்லக்கூடிய தற்போதைய நிலை .என்று விமர்சனம் கூறாமல் விலக்கிச் செல்ல அடுத்த  தொடர்பில் வருவது!

உங்களை பாட்டுக்கும்மியில் பரவசப் படுத்திய நாற்று நிரூபன் தன்  மழை அனுபவத்தை பகிர வரும் போது ?!

வார இறுதியிலும் இன்றும் ஏற்பட்டுள்ள இடிமின்னல் காரணமாகவும் 
பாரிஸின் மழை , காரணமாகவும் இனையத்தில் ஏற்பட்ட தொடர்பாடல் சிக்கலினால் அதிகமான மன உளைச்சலில்  தனிமரம் இருக்கிறது . 

அதையும் தாண்டி நண்பரின் மழை விமர்சனம் கிடைக்கும் அதுவரை ஒலிக்கிறது காதல் மழையே காதல் மழையே எங்கே தொலைந்தாயோ!..

கந்தசாமியின் மழை விமர்சனத்திற்கு தொடர்புகள் ஏற்படுத்தும் வரை ஒரு இனிய பாடல் அந்தி மழை  நேரம் தங்கமழை தூவும் திருநாளாம்!..
 
இப்படத்தின் விமர்சனங்களை எழுதி அனுப்பும் முதல் மூவருக்கு அச்சுவேலி லாலா சோப் நிறுவனத்தின்  அனுசரனையில் வல்லைவெளி திரைக்கூடம் வழங்கும் காத்தவராயன் கூத்து நாடகத்திற்கு அனுமதிச் சீட்டு இலவசமாக வழங்கப் படும்!

10 comments :

Unknown said...

//ம் சோளாப்புரி யும்(இலங்கையில் புகழ் பெற்ற பாதனி) /
மறந்தே போய்விட்டேன் பாஸ்

Unknown said...

ஹிஹி கந்த சாமியை இழுத்தாச்சா??அப்பச்சரி ஹிஹி
விமர்சனமா??நாம மொக்க படங்களுக்கு மட்டும் தான் அப்பன் ஹிஹி

தனிமரம் said...

நன்றி நண்பா வருகைக்கு இது ஒரு ஜாலிக்குத்தான்!

தனிமரம் said...

சோளாப்புரியை மறந்தால் என் உடலில் ஏதோ ஒன்று இழந்த மாதிரி ஓர் உணர்வு பாஸ்! இதன் விலை அன்நாட்களில் கொஞ்சம் அதிகம்தான்!

மதுரை சரவணன் said...

மழை இவ்வளவு பாதிப்பை உண்டாக்கும் என்றால் தினமும் வரலாம்.... அது சரி டி.வி சீரியல் பார்க்கும் பழக்கமும் உண்டா...? நாதஸ்வரம் ஒலிக்கிறது .. வருகின்றேன். வாழ்த்துக்கள்

தனிமரம் said...

வாருங்கள் நண்பரே நீண்டகாலத்தின் பின் நலமா? உங்களின் வரவில் ஆனந்தம் எனக்கு முதன் முதலில் தமிழக ஊறவில் நீங்கள் தான் என்னுடன் முதல் முதலில் 6மாதங்களுக்கு  முன் என்னுடன் இனைந்தீர்கள் இன்று மீண்டும் வருவதில் ஆனந்தம் !உண்மையில் நாடகம் பார்ப்பதில்லை என் நண்பரை கடிக்கும் ஒரு உத்தி தான் அது ! நன்றி உங்கள் வருகைக்கு!
நட்புடன் நேசன்!

ஹேமா said...

என்னையும் மழைக்குள்ள மறக்காம நனைச்சுப்போடியள் நேசன்.தும்முது எனக்கு !

நேற்று நானும் பாட்டுப்போட்டிக்கு வருவமெண்டால் திடீரெண்டு 5 சனம் வீட்டுக்கு வந்து சமையல் சாப்பாடு எண்டு ஆகிப்போச்சு !

நிரூபன் said...

உங்களின் எழுத்து நடை அருமை சகோ,

ஊர் ஞாபகங்களை மறக்காமல் இன்னும் இருக்கீறீர்கள் என்பதற்குச் சான்றாக இப் பதிவினைத் தந்திருக்கிறீர்கள்..

மழை..எங்களை நகைச்சுவையால் நனைத்துள்ளது என்பதில் ஐயமில்லை..

ஹி...ஹி..

தனிமரம் said...

புலம்பெயர் உறவுகளுக்கு பொழுது போக்கு என்பது கானல் நீராகிக் கொண்டு போகிறது வாழ்க்கை!

தனிமரம் said...

நன்றி நண்பா உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் .ஊர் ஞாபகங்கள் தான் என் போன்ற புலம்பெயர்ந்தவர்களை சிலித்துப் போக வைக்கிறது!