16 June 2011

காதல் தேவதை!!

அக்கரைச் சீமை அழகினிலே மனம் ஆடக்கண்டேனே "!என்று ரஜனி பாடும் போது தெரியாத சிங்கப்பூர் அழகை .!

.புலம்பெயரும் பொருட்டு உள் நுழைந்து .சில காலம் இருந்தபோது வெளியில் போக முடியவில்லை.!

என்ற ஆதங்கம் பல தடவை உறுத்தியதை ,புலம் பெயர்ந்து அகதி வாழ்வின் அவலங்களுக் கிடையிலும் அசுவாசித்துக் கொள்ள. அப்பப்ப ஓடி ஒளிந்து கொள்ளும் தேசமாக!

இந்த உல்லாச புரி வந்தோரை சுற்றுலா பயணிகளாக உள்வாங்குகின்ற.

இந்த இனிய நாட்டில் நான் பலதடவை ஒரு நாடோடி பாட்டுக்காரன் போல் என் பயணங்களை அமைத்துக் கொள்வது என் தேவதையான கடல் தேவதை தோன்றும் அழகைக் கான!


சுற்றுலா பயணிகளின் சொர்க்கம் என்று சொல்லக் கூடிய இந்த சிறிய நாடு .இலங்கைக்கு ஒரு முன்னோடியாக இருக்கும் என்று ஒரு தலைவர் எங்களிடம் வாக்குக் கேட்கும் போது!

"சிங்கப் பூரைப் போல் இலங்கையை மாற்றுவேன் என்றவர் "சின்னாபின்னம் ஆக்கியது  தமிழர் வாழ்வைத்தான்!

சிங்கப்பூரில் பல சுற்றுலாப் பகுதிகள் இருக்கு .நீங்கள் இயற்கைத் தாயை செயற்கையின் ஊடே சென்று பார்க்க விரும்பும் பயணியானால்!.
 உங்களை இருகரம் கூப்பி வாரியனைக்கும் .
செந்தோசா இயற்கை கடல்களியாட்டங்களுக்கு ஒதுக்கப் பட்ட பெரும் பரப்பளவு!

ஒவ்வொரு நிகழ்ச்சிகளும் வரவேற்பு பகுதியில். நீங்கள் விரும்பும் வண்ணம் விளக்கப் படத்துடன் அட்டவணைகளைத் தாங்கிய வண்ணம் .சிங்கார செந்தோசா சுற்றுலாமையத்தில் வரவேற்புப் பணியாளர்கள் விளக்குகிறார்கள் .

உள் அனுமதி சிங்கை நாணயத்தில் 3$.. அதன் பின் நீங்கள் விரும்பும் நிகழ்ச்சிகளுக்கு நிர்னையக் கட்டணம் .

..இங்கும் ஒரு நிகழ்ச்சியுடன் மறு நிகழ்ச்சியை பார்க்கும் வண்ணம் விம் பவுடருடன் இலவச இனைப்பாக வரும் மற்றைய விம் பவுடர் போல் இனைப்பு நிகழ்ச்சிநிரல் இருக்கும்.

நானும் கடலால் சூழ்ந்த இனிய வயல்கள் தாலாட்ட, மாட்டுவண்டிகளைத் தொலைத்த கிராமத்து ,சிறுபாராயம் ..யுத்தம் என்ற அரக்கனின் கோரத்தில் இடம்பெயர்ந்தும் !

,புலம் பெயர் தேசத்தில் கடலை தேடிபோகும் தூரம் அதிகம் என்பதால்!

சிங்கைக் கடலில் கருணாநிதி போல் கடலில் தூக்கிப் போட்டாலும் கட்டுமரம் ஆவேன் என்பதை பரீட்ச்சித்து கடல்கரையில் சூரிய குளியல் முடித்து.

விளையாட்டுத்
தாண்டி வந்தது. கடல் தேவதை பாடும் நிகழ்ச்சிக்கு(sogs of sea).

இந்த நிகழ்ச்சி ஒருநாளைக்கு ராஜா தியேட்டரில் 3 காட்சிகள் போல் மாலையில் 3காட்சிகள் நடத்தப் படும் .
ஒரு அழகிய குறுங், மாயாஜால பிரமிப்பூட்டும் நாடகம்!

ஜெனிவா நகரத்திற்கு நீதிகேட்டுப் போன புலம் பெயர் தமிழர் மாதிரி பார்வையாளர்கள் நிகழ்ச்சி தொடங்க முண்ணமே முண்டியடித்தனர் .

தனிமரம் இரண்டாவது காட்சியைத்தான் எப்போதுமே நாடும்.!
7.30 க்கு தொடங்கும் நிகழ்ச்சி சிங்கையின் தேசிய கீதத்துடன் ஆரப்பமாகும்."
"..... நல்லொளி பொழி சிரனி நமோ விற்கு இல்லாத தேசிய ஓற்றுமை "
இந்த நாட்டில் இருக்கிறது .
பார்வையாளர்களை சிங்கை மாணவ சமுதாயம். இங்கு பகுதி நேரப்பணியாளர்களாக இருந்து சுற்றுலாவாசிகளுக்கும் விளங்கும் வண்ணம் சேர்ந்து தேசிய கீதத்தை இசைக்கிறார்கள்!

பொன்னியின் செல்வனில் பரிசல்காரியின் பார்வையில் வரும் தேவதையின் ஏக்கம் போல் !
செந்தோசா கடல் தேவதையின் வரவை அறிவிக்கும் ஒலிவாங்கி K.s. ராஜாவை ஞாபகம் ஊட்ட!

சூரிய தேவன் வானில் விடை பெறும் அந்த செவ்வாணம் எங்கள் கிராமத்தில் வடக்கன் மாட்டை வீட்டுக்கு ஓட்டிவந்து கொட்டிலில் கட்டுவது போல்!

சூரியன் மறையும் தருணத்தில் !பார்வையாளர்கள் கடற்கரையில் சீமெந்தால் செய்யப் பட்ட நீண்ட ஆசனங்களில்,அமர்ந்திருப்பவர்களைப் பார்த்து இரானுவத்தின் வெளிச்ச ஒளியை ஞாபகப் படுத்தும் .

தீச்சுவாலையை கடலில் மூங்கினால் ஆனா குழாய் ஊடாக வெளிச்சம் இட்டவாறும் கரடிப் போக்கு வான்கதவு திறந்து விட்டதைப் போல நீரினைக் கிழித்துக் கொண்டும்

கடல் தேவதையும், நாடக சிகாமணிகளும் கடற்கரையைப் பார்த்தவண்ணம் இருக்கும் பார்வையாளர்களுக்கு அறிமுகம் ஆகிறார்கள்.

தேவதையைக் காட்டும் அந்த சில வினாடிகள் பார்வையாளர்களின்,இயற்கையுடன் ஒன்றிய சூழ்நிலையில்.
பலத்த கரவோசம் விண் அதிர பல புகைப்படக்கருவிகளும் காட்சியை உள்வாங்குகிறது. காட்சியாகவும் ஒலி/ஒளியாகவும்.!

தேவதை மறைந்து விட நாடக மாந்தர்கள் தம் குறும்புத்தனமாக கடற்கரையில் ஒடியாடி கதையைத் சொல்கிறார்கள்.!

கடல் காதலன் ஒருவன் கடல் தேவதையை ஒரு நாள் கானுகின்றான்.
அவளை மீண்டும் கான ஆசைப் படுகின்றான். அதுக்காக அகத்தியர் போல்தவம் புரிகின்றான்.

 இவன் தவத்தினால் ஒவ்வொருத்தராக கடல் காவலர்கள் தோன்றி அவனை தேற்றுகிறார்கள்.

தேவதை நித்திரையில் இருப்பதாக அவளின் தோழிகள் கூறுகிறார்கள் .

.அவளை தான் நேசிப்பதாக அவன் கூறுகின்றான்.
நித்திரையில் இருக்கும் தோழியை யார் எழுப்புவது என ஜோசிக்கும் அவன். பார்வை யாளர்களுடன்,
சேர்ந்து எழுப்புவம் என்று !பார்வையாளர்களிடம் உதவி கோருகிறான்.

சர்வதேசம் கைவிட்ட ஈழத்தமிழர் போல் அல்லாமல் பார்வையாளர்கள் ஒத்தவண்ணம் அவன் பாடும் அறைகூவளை மக்களும் சேர்ந்து பாட கடலில் மேகத்தை கிழித்துக் கொண்டுதேவதை !

அழகிய திரையில் பலவண்ண கதிர் இயக்க(லேசர்) ஒலி/ஒளியுடன் பார்வையாளர்களை மகிழ்விக்க வரும் பொழுது பல வான வேடிக்கை முழங்க !

சினிமாவிலும்,சின்னத்திரையிலும் கிடைக்காத,திருப்தி!

ஆண்டாள் பாடியது போல !
மத்தளம் கொட்ட  வரிசங்கு முழங்க நாரணன்நம்பியின் வரவைப்போல தேவதையின் ஒளி மயக்கிறது!

வானம் இருண்டு கருமை நிறம் கொள்ள கடலை ரசிக்கும் பலவண்ணம் கொண்ட வெளிச்சத்தில் பார்வையாளர்கள் வெளியேற !

சினிசிட்டியில் பாய்ஸ் பாடத்திற்கு உள்நுழைய முட்டுப்படும் ரசிகர்கள் போல் அடுத்த இரவுக் காட்சிக்கு தயாராகிறார்கள் பார்வையாளர்கள்!



நம்தேசத்தில் இப்படி பல இடங்களில் அமைக்கும் வளம் இருந்தும் என்ற பெருமூச்சு எனக்குள்!..

10 comments :

Unknown said...

என்னாச்சு பாஸ் திரட்டிகளுக்கு??

Unknown said...

ஹிஹி சுவையான ஒப்கிர்வு..அடிக்கடி இலங்கையின் ஞாபக கலவைகலுமாய்..
அப்புறம் என்ன போட்டோவும் போட்டாச்சு ஹிஹி

தனிமரம் said...

தாய்நாட்டு சூழல் மறக்க முடியவில்லை எங்கு போனாலும்!
யாராவது ஹான்சிஹாவிற்கு வில்லன் பாத்திரம் தரமாட்டாங்களா என்று தான் படம் சொல்லும் சேதி!

ஹேமா said...

எல்லாப் பதிவுகளிலும் மண்வாசனையைக் கலந்தே எழுதுகிறீர்கள்.அருமை !

தனிமரம் said...

நன்றி தோழி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மண்வாசனையில் மயங்கிய காலங்கள் அதிகம்!

ம.தி.சுதா said...

ஃஃஃஃஜெனிவா நகரத்திற்கு நீதிகேட்டுப் போன புலம் பெயர் தமிழர் மாதிரி பார்வையாளர்கள் நிகழ்ச்சி தொடங்க முண்ணமே முண்டியடித்தனர் .ஃஃஃஃ

நல்ல உவமானங்கள் அருமைப்பா...

தனிமரம் said...

நன்றி மதி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.

நிரூபன் said...

"சிங்கப் பூரைப் போல் இலங்கையை மாற்றுவேன் என்றவர் "சின்னாபின்னம் ஆக்கியது தமிழர் வாழ்வைத்தான்//

ஹா...ஹா..
அது பாஸ் தேர்தல் வாக்குறுதி.
அந்த நேரத்திற்கு மட்டும் தான் செல்லுபடியாகும்,
ஓட்டு வாங்கி முடிந்ததும், காற்றில் பறந்து விடும்.

நிரூபன் said...

மாப்ளே, நான் சிங்கப்பூரிற்குப் போனேன், ஆனால் செந்தோசா ஐலண்டினை மிஸ்ட் பன்ணி விட்டேன்,
அந்தக் குறையினை உங்களின் பதிவும், பகிர்வும் நிவர்த்தி செய்துள்ளது.
அப்புறம் ஒட்ரம் பார்க் போயிருக்கிறீங்களா?
அப்புறம் செரங்கூன் ப்ளாசா....

தனிமரம் said...

நம்பி ஏமாந்தவர்கள் அதிகம் அதற்கு சாட்சி இன்று அங்கு வேலை செய்யும் பட்டதாரிகள் பலர் நண்பா!