20 June 2011

ஒரு நாள் விடியும்!!!

உன்னை வழியனுப்பிவிட்டு வரும்போதுதான் என்னுள் பல மாற்றங்கள்!
நீ கலங்கக் கூடாது என்று என்கண்களுக்கு கண்ணடி அணிந்து கொண்டேன் !உள்ளுக்குள் அழுதுபுலம்பும் துயரத்தை கண்ணாடி விம்பம் காட்டாதல்லவா!

சொல்லாத நேசத்தை சொல்லும் துனிவு இல்லை எனக்கு !
தொலைபேசியில் நலம் விசாரிப்புக்களுடன் தொடங்கும் கதை. வேற என்று சொல்ல நினைக்கின்றேன் !என் பூட்டிய இதயத்தில் விளக்கேற்றியவள் நீ என்று !
என்றாளும் மெனமாகிப் போகிறேன்!
உன்னைப் பிரிந்து விடுவேனோ என்ற நோர்வேயை நம்பிக் கெட்ட தமிழர் வாழ்வைப் போல்!
அருகில் இருந்தால் பல மொழிகள் பேசலாம் !
பொருளாதார இயந்திரம் என் நேசம் என்ற நேரத்தை காத்திருக்க விடாமல் கலைந்து போகும் மேகமாக யாரையோ தேடி ஓடும் ரயில் பயணம்!

இப்படியும் தேற்றிக்கொள்ள பல வலைகளைப் படிக்கிறேன்!
 உன்னிடம் யாசிக்கும் காதலைப் பெற கடல்கடந்து வர எனக்கில்லை குடியுரிமை  அனுமதி!
இப்படி எல்லாம் எழுத நினைக்கிரேன் என் ஞாபக குறிப்பேட்டில் அதற்குள் விடிந்து விடுகிறது  அழைப்பு மணியடித்து அடுத்த தேடலுக்கு!..
சொல்லப்படாத காதலும் சொல்ல முடியாத வலிகளும் தெரிவதில்லை தொலைபேசி
அழைப்புக்கலுக்கு!
காத்திருக்கும் என் கண்களுக்குள் நித்திரையும் உனக்கான என் நேசங்களும்
கரைந்து கலந்து போகிறது என்னைச் சுற்றிய உன் நினைவுகள்!
ஒரு நாள் விடியும் முடியாத நம் துயரம்!!

12 comments :

Ashwin-WIN said...

ம்ம்.. நன்றாக எழுதுகிறீர்கள்.. வாழ்த்துக்கள்..

தனிமரம் said...

நன்றி நண்பரே உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்!

Unknown said...

ஹிஹி ஆச்சரியம் தமிழ்மணம் செட் ஆகிருச்சு...
ஆனா இன்ட்லி சொதப்பிரிச்சே பாஸ்...

Unknown said...

ஆமா அது உங்கட அவங்களா பாஸ்???
ஏன் இப்பிடி ஆகி போச்சு??

தனிமரம் said...

அடிக்கடி திரட்டிகள் கடுப்பாக்குது நண்பா!

தனிமரம் said...

அவங்களை மாதிரி !ஏன் ஆகிச்சு என்று தெரியாது அதுதான் வானம் பார்க்கிறேன்

ஹேமா said...

சின்னதா அழகா காதல் கதையொன்று !

தனிமரம் said...

நன்றி தோழி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.

நிரூபன் said...

தொலை தூரத்தில் இருந்தாலும், மனைவியினைப் பிரிந்திருக்கும் நினைவுகளினையும், பாசத்தினையும் கவிதையில் செதுக்கியிருக்கிறீங்க.

தனிமரம் said...

நன்றி உங்கள் கருத்துரைக்கும் வருகைக்கும்.நிரூ!

சுதா SJ said...

நெகிழ்ச்சியான மனம் கவர்ந்த பதிவு அண்ணா,
எப்போதும் சுக ராகம் சோகம் தானே.....

தனிமரம் said...

உங்கள் வருகைக்கு கருத்துரைக்கும்  நன்றி நண்பரே!