19 June 2011

உன்னையே  எப்போதும் நினைக்கிறேன்!

இந்த தனிமரத்தை  இசை என்பது மொழிகள் பலதாண்டச் செய்கிறது.என் உணர்வுகள் விஜயகாந்தை தப்பாக இடைபோட்ட வடிவேல் போல் கற்பனையான  சகோதர மொழி பாடலில்.

 பூங்காற்றில் நான் வானவில்லைப் பார்த்துக் கொண்டு நடந்துசெல்வேன் என் தந்தையே!
 எப்படி என்னை பின் தொடர்வீர்கள் என மகள் குறும்பாக கேட்க?
 தந்தையோ வானத்தின் தாரகைகளைப் பின் பற்றி உன்னை பிடித்துக்கொள்வேன் .என நகைப்பாக பதில் கூறுவது எனக்குப் பிடிக்கும்.

 மகே தோனியே -.என்று இலங்கையில் மேல்(உடரட்ட) பகுதியில் வாழும் சகோதர மொழி தந்தைகள் தான் இப்படி அழைப்பார்கள் .
சகோதரமொழியில் சாதியம் இப்போதும் உண்டு இது மறுக்கமுடியாது (பாத்த ரட்ட) கீழ்பகுதியில் வாழும் தந்தைமார் மகளை( துவ) என்றே அழைப்பார்கள்.

கவிஞரின் அழகான வார்த்தையாலம் என்னைக் கவர்ந்தது. மகளின் குறும்பான கேள்வியும் தந்தையின் பாசமும் விவேகமான பதிலும் மென்மையான இசையும் இனைந்த கலவை. .

மகே தோனியோ/மகளுக்கு -தமிழில் பலவர்ணனைகள்  கொடுத்தாலும் மூலப்பொருள் சிதையும்.

மகள் குறும்பாக தூசுவிழுந்தாலும் ,இடி இடித்தாலும்  ,கண்கள் சிவக்கஅழுவேன் என்று குறும்புத்தனமாக கண்களில் இந்த சிறுமி காட்டும் கண்ணழகு ஒரு தந்தையாக(கற்பனை) இருந்து பார்த்தால் தான் புரியும்

.தந்தைமார் சொல்லாத மகள் மீதான பாசம் என்பது மருமகன் என்ற உறவு வரும்போதுதான் .அவர்கள் கனவு கற்பனை எல்லாம் மகளின் வாழ்வு என்ற சக்கரம் சுற்றுகிறது என்பதை எத்தனை மருமகன்கள் சீதனம் என்பதைத் தாண்டி ஜோசிப்பார்கள்?

.மகள் என்பவள் தந்தை குடும்பத்தலைவன் ,அதிகாரம் காட்டுபவர் என்பதைத் மீறி தன் மீதான பாசத்திலும் கடமையிலும் (பொருளீட்ட பல வழிகளில் பிரிந்திருக்க நேர்ந்தாலும்) தன் பிள்ளைகளின் வாழ்வு என்பதை தாங்கும் ஆலமரம் என்பதை புரிந்து கொள்ளும் திறமையானவர்கள் எத்தனை பேர்..!?

அப்படி புரிந்து கொள்வார்கள் எனின் தந்தையின் ஆசிர்வாதம் இன்றி தன்வாழ்வை தீர்மானிப்பார்களா..? என்று ஒரு ரமனிச்சந்திரன் கதையில் வரும் பாத்திரப்படைப்பு ஆதங்கப்படும்.!

ஆற்றுனீர்-  இதை தனியாக ஒரு கட்டுரை எழுதலாம் கம்பன்,விபுலானந்தர் போன்றோரை மேற்கோல்காட்டலாம்!

சமதா சன சன்னே (எப்போதும் உன்னையே நினைக்கிறேன்) இதுக்கும் வர்த்தையாலம் இருக்கு தமிழில்.

மங் ரேக்ககன்னவா- நான் பாதுகாப்பேன்(இதையும் பல பொருள் கொடுக்கலாம்)இப்படி நான் ரசித்த வார்த்தைகள் அதிகம்.

இசையமைப்பாளர் பல சகோதரமொழி மேடைநாடகங்கள் சின்னத்திரை , ,தொலைக்காட்சி விளம்பரங்களுக்கும் பின்னனி இசை மீட்டும் ரோகணதர்மகீர்த்தி.

கவிப்புலமையில் பல அழகிய சகோதர மொழி இலக்கிய வார்த்தைகளை பூமாலையாக்கி இருப்பவர் A.ஆனந்தகேவாரன்ஹிந்த என்பவர் .இவரின் மொழி நடை என்னை இன்னும் சகோத மொழியில் புலமை காணமல் விட்டுவிட்டோமே என்று ஏங்க வைக்கிறது.

பாடகர் காட்சியில் தோன்றும் அதே எட்வட்ஜெயக்கொடி சகோதரமொழியில் பல பாடல்களை தொலைக்காட்சியிலும் ,இசைத்தட்டுக்களாகவும் வெளியிட்டவர். கண்டிய சாஸ்திரிய சங்கீதத்தை முறையாககற்றவர் .

ரூபவாஹினி தொலைக்காட்சியில் பல மேடைப்பாடல்கள் பாடுவதில் முன்னனியில் இருந்தவர்(கீத்த பஹ ,போயாநாட்கள் பாடல்கள் என பலதில் இவர் முன்னனிப் பாடகர்) இவருடன் பாடுவதில் அன்நாட்களில் தொலைக்காட்சியில் பலர் முண்டியடித்தை சில இசை நிகழ்ச்சிகள் பார்க்கும் போது தெரிந்து கொண்டவை


.இவரிடம் எனக்குப் பிடித்தது. எப்போதும் எளிமையாக உடை அணிந்து கொள்வது ,பண்பானவர் மற்றவர்களை மனம்திறந்து பாராட்டுபவர்.
எப்போதும் மெல்லிசையே இவரின் தாரகமந்திரம் பைலாபாடி நான்கண்டதில்லை.

பண்டித் அமரதேவுக்கு இவரை அதிகம் பிடிக்கும் என்று இரகந்த பத்திரிகையில் ஒரு வாசகர் கேள்விக்கு.பதிலாக இருந்தது.

பாடி நடித்திருக்கும் இந்தச்சிறுமி நாதாஸா பெரேரா குரல் வளம் , குறும்புப் பார்வையில் ரசிக்கவைக்கிறார் சில சகோதரமொழி நங்கைகளுடன் தொழில் நிமித்தம் பழகியதில் அவர்கள் செய்யும் குறும்புகளை இவரின் நடிப்பில் பார்க்கின்றேன்.

இப்போது இந்தச் சிறுமி சகோதரமொழியில் பல அப்புஹாமியின் பேரன்களின் இன்றைய கனவுத்தாரகை சில தொலைக்காட்சி நாடகங்களில் நடிப்பதாக எனதுசகோதர மொழி நண்பர் கூறியிருந்தார்.

இப்போது பலர் சிவப்பு ரோஜாக்களுடன் ராஜகிரியப் பக்கம் திரிவதாகவும் கூறியிருந்தார்!
ஹான்சிக்ஹாவுக்கு போட்டி போடும் வலைப்பதிவு மூத்தவர்கள் போல்!எனக்கும் தனியாக பதிவுக்கடிதம் கொடுத்துவிடுவாயா??

இப்பாடலின் காட்சியமைப்பில் வரும் வைக்கோல் பட்டறை,தேமாமரம் ,இயற்கை அழகு, பசுமாடு,தாயப்பெட்டி விளையாட்டு, எல்லாம் என் சிறு வயதுகளில் பார்த்தும் ,விளையாடியும்  ரசித்தவைகள் தொலைந்து போய் விட்டதே யுத்தம் என்ற புயல்க்காற்றில்!

என்னைய்யா தனிமரம் பாட்டு வருமா என்று திட்டாதீர்கள் இதோ காட்சியும் காணமும் ..!




 ஒட்டுப் போடுங்கள் பாசப்பிறப்புக்களே ! ஒரு நிமிடம் கருத்துக்களையும் சொல்லிவீர்களா!

19 comments :

MANO நாஞ்சில் மனோ said...

ஹான்சிக்ஹாவுக்கு போட்டி போடும் வலைப்பதிவு மூத்தவர்கள் போல்!எனக்கும் தனியாக பதிவுக்கடிதம் கொடுத்துவிடுவாயா??//

ஹா ஹா ஹா ஹா செமையான உள்குத்துய்யா....!

MANO நாஞ்சில் மனோ said...

யோவ் முதல்ல தமிழ்மணம் இனச்சி விடுய்யா, அப்பதானே ஓட்டு போட முடியும்....

தனிமரம் said...

வாங்க மனோசார் பயணம் முடிந்து திரும்பின கையோடு தனிமரத்தில் இனைவதில் மிக்க மகிழ்ச்சி !
யாருக்கும் உள் குத்து கிடையாது இது ஒரு தந்தையின் பாசத்தை சொல்ல வந்தேன் இப்படியும் சிலதை சேர்த்தால் பலரிடம் போகலாம் என்ற நட்பாசை!
வருகைக்கு நன்றி!

Unknown said...

//ஹான்சிக்ஹாவுக்கு போடும் வலைப்பதிவு மூத்தவர்கள் போல்!எனக்கும் தனியாக பதிவுக்கடிதம் கொடுத்துவிடுவாயா??//
ஏலே ஏலே யார ஆஹ்???

Unknown said...

//ஹான்சிக்ஹாவுக்கு போடும் வலைப்பதிவு மூத்தவர்கள் போல்!எனக்கும் தனியாக பதிவுக்கடிதம் கொடுத்துவிடுவாயா??//
ஏலே ஏலே யார ஆஹ்???

Unknown said...

//Nesan கூறியது...
வாங்க மனோசார் பயணம் முடிந்து திரும்பின கையோடு தனிமரத்தில் இனைவதில் மிக்க மகிழ்ச்சி !
யாருக்கும் உள் குத்து கிடையாது இது ஒரு தந்தையின் பாசத்தை சொல்ல வந்தேன் இப்படியும் சிலதை சேர்த்தால் பலரிடம் போகலாம் என்ற நட்பாசை!
வருகைக்கு நன்றி!//

ம்ம் சேர வேண்டும் என்பதே எங்களதும் அவா..

Unknown said...

//Nesan கூறியது...
வாங்க மனோசார் பயணம் முடிந்து திரும்பின கையோடு தனிமரத்தில் இனைவதில் மிக்க மகிழ்ச்சி !
யாருக்கும் உள் குத்து கிடையாது இது ஒரு தந்தையின் பாசத்தை சொல்ல வந்தேன் இப்படியும் சிலதை சேர்த்தால் பலரிடம் போகலாம் என்ற நட்பாசை!
வருகைக்கு நன்றி!//

ம்ம் சேர வேண்டும் என்பதே எங்களதும் அவா..

தனிமரம் said...

கடிதம் போட நேரம் கிடைக்கு இல்லை பாஸ்!

தனிமரம் said...

அதேதான் நண்பா!

நிரூபன் said...

ஒட்டுப் போடுங்கள் பாசப்பிறப்புக்களே ! ஒரு நிமிடம் கருத்துக்களையும் சொல்லிவீர்களா!//

என்ன ஒரு கொலை வெறி..
பாஸ், ஓட்டுப் பட்டைகளைத் நீங்கள் அந்தத் தளங்களோடு இணைக்கவில்லையே, எப்படி ஓட்டுப் போட முடியும்?

நிரூபன் said...

மாப்ளே, தமிழ் மணம் குத்திட்டேன்,
மற்றைய தளங்களில் குத்த முடியலை.

தனிமரம் said...

தமிழ்மணம் குழறுபடி மற்றதில் இன்னைத்துள்ளேன் நண்பா!

தனிமரம் said...

நன்றி நண்பா முக்கியமான கருத்தை எதிர் பார்த்தேன்  அது கிடைக்கவில்லை!

நிரூபன் said...

மொழி புரியா விட்டாலும், அதனைப் புரிந்து கொள்ளும் வண்ணம் விளக்கத்துடன் எழுதியிருக்கிறீங்க.

மென்மையான/ மெலோடி பாடல்,
பகிர்விற்கு நன்றி சகோ.

தனிமரம் said...

உங்கள் வருகைக்கு நன்றி இதில் தந்தையின் பாசம்தான் என் நோக்கம் நிரூ!

ஹேமா said...

தந்தையர் தினத்தில் அருமையான பதிவு நேசன்.சகோதர மொழியின் இசை அசைவும் கேட்க இனிமைதான்.முழுதாகப் புரியாவிட்டாலும் நானும் ரசிப்பதுண்டு !

தனிமரம் said...

எல்லா வார்த்தைகளையும் எழுதினால் மொழிபெயர்ப்பாகிவிடும் என்பதால்தான் சிலவிசயங்களை சுருக்கி விட்டேன் .
நன்றி உங்கள் வருகைக்கு தந்தையின் துயரங்களைப் புரிந்து கொண்டதன் விளைவு  இது.

K.s.s.Rajh said...

அருமை பாஸ் உண்மையில் சகோதரமொழிப்பாடல்கள் பல ரசிக்கக்கூடியவை.இந்தப்பதிவை எப்படியும் கும்மி இருபாங்களே ஏன் கும்மவில்லை..ஒரு வேளை நீங்கள் சொல்லும் உண்மை விளங்கிவிட்டது போலும்

தனிமரம் said...

நன்றி ராச் வேண்டுகோளுக்கு செவிசாய்த்து கருத்தினைப்புரிந்து கொண்டதற்கு மொழிகள் மீது எனக்கு வேற்றுமை கிடையாது. வருகைக்கு நன்றி மீண்டும் ஒரு முறை!