08 June 2011

தொலைந்து போகும் தூதுவன்

தபால் அட்டை நீண்ட செவ்வகத்தில் தடித்த கடுதாசியினால் செய்யப்பட்டு முத்திரையை பதித்தவண்ணம் தாங்கியிருக்கும் .இது இன்று எத்தனை பேர் பயன்படுத்துகிறார்கள் என்று நான் அறியேன் !
!ஆனால் இது ஒரு காலத்தில் என் பெயரை ஒரு இசைக்கூடத்திற்கு தூது சென்ற புறா!

எங்கள் வீட்டில் இருந்து 15 நிமிட  பொடிநடையில் போய் தபால் கந்தோரில் 25 சதம் கொடுத்து ஒரு கட்டு (12)வாங்கியந்தால் இரண்டு நாளில் அதில் என் கற்பனையை சுமந்து செல்லும் .இன்று போல் வானொலிகள் அன்று இல்லை இப்போது கருணா படத்தில் கவுண்டர் சொல்லுவார் சுத்துராஜா சுத்து டெலிபோல் அடிக்குது  என்று அடித்தால் விரும்பிய பாடல் ஓலிக்க விட ஆயிரம் அலைவரிசைகள் காத்திருக்கிறது.

முன்னர் நாங்கள் பிடித்த பாடல்களை கேட்க வேண்டும் என்றாள் இலகுவான அதிக செலவு இல்லாத வழிமுறைதான் தபால் அட்டையில் எழுதி அனுப்புவது.
இலங்கை ஒலிபரப்பில் மத்திய/சிற்றலையில் எங்களின் பெயரை இனிய குயில்களின் குரல் ஊடாக பாடல் விரும்பிக் கேட்டவர் வரிசையில் என் பெயர் வரும் வரை காத்திருந்த நிலை எப்போது கனிமொழி வெளியில் வருவார் எனக்காத்திருக்கும் கருணாநிதி போல்தான்!
அன்நாட்களில் அதிகாலையில் வரும் பொங்கும் பூம்புனல் நிகழ்ச்சி என்றாளும் நீங்கள் கேட்டவை,நேயர் விருப்பம் என்றாளும் கதம்பமாலை என்று பல்வேறு நிகழ்ச்சிகளில் என் பெயரை இனைத்துக் கொள்ள நான் எழுதிய தபால் அட்டைகள்தான் காரணமாக இருந்தது. 


தூர தேச உறவுகளுக்கு சுறுங்கச் சொல்லில் அதிக விளக்கம் தரும் திருக்குறள் போல் நலம் விசாரிப்புக்களை தாண்டி!

சிலரின் காற்றுவாக்கில் காதல் சொல்லவும் இந்த தபால் அட்டை தூதுவனாக இருந்தது.
நம்கிராமத்தில் உப தபால் கந்தோர் நாட்சாரம் வீட்டில் முன் பக்கத்தில் இருக்கும் அவ்வீட்டில் சில புள்ளிமான்களில் ஒன்று சிலகனங்கள் விழியில் விழுந்து இதையம் நுழைந்து தினமும் தபால் அட்டை வாக்கும் சாட்டில் உருவான உறவுகள்  ஒருகவிஞன் வரிகளில் வரும் அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் அவள் அப்பனும் நோக்கினான் என்று! அதில் சொல்லாதது அவள் அண்ணனும் நோக்கியதில் ரோட்டுப் புழுதியில் வேறு ஒரு பிரச்சனையை சாட்டாக்கி புழுதிமணலில் கட்டிப்பிடித்து பாசமலர் போல் பாசம் பொழிந்ததும், பின் "சில காலம்." நான் ஒரு ராசியில்லா ராஜா என் ஆசைக்கு இல்லை  இதுவரை ரோஜா "என்று பாடித்திரிந்த இளசையும் இந்தப் பச்சமண்ணும் அறியும்!
 தபால் அட்டைகள் இலகுவில் தொலைந்து போகாது காரணம் அதிக மான முகவரியில் அஞ்சல் பெட்டி குறீயீட்டு இலக்கம் பின்பற்றப்பட்டது அதனால் என்னைப் போன்றோரின் கோழி கிளரிய கையெழுத்தை எல்லாம் விளங்காத கந்தோரில் அட்டைகளை தரம்பிரிப்பவர்கள்(இலங்கையில் தரப்படுத்தல் என்பது எங்கள் சொத்தான பல்கலைக்கழகம் புகும் கல்விக்கு வைக்கப்பட்ட முதல் மரன அடி இதனால் மாறிய எங்கள் வரலாறு உலகம் அறிந்தது)இலகுவில் அஞ்சல் குறியீட்டுப் பெட்டியுள் சேர்ப்பினம்.

ஏதோ ஒரு கிராமத்து வானொலி,பாட்டு ரசிகன் பன்பலையிலும் பிற்காலத்தில் பிராந்திய சேவையில் வந்த யாழ் சேவை, வன்னி சேவை என பல தளங்களில் பாடல் கேட்கும் அன்பு நேயர்கள் வரிசையில் பல ஆயிரம் பேர்களில் நானும் ஒருவனாக இருக்க எரிக் சொல்ஹைம் தூதுவன் போல் சதிவலை பின்னாமல் என் தபால் அட்டையும் 574 ஊடாக இனிய பாடல்களையும் கவிதைகளையும் இந்த தபால் அட்டை தாங்கிவந்திருக்கிறது.

காலமாற்றம் நாட்டின் பொருளாதார பணவீக்கம்  அஞ்சல் அட்டையின் விலையிலும் எங்களை இடம்பெயர வைத்தது போல் விலை ஏற்றம் கண்டது !என்றாளும் என் நினைவில் இந்த தபால் அட்டை காலம் எல்லாம் நினைவில் வரும்!அவை சிதைந்து போகும்  வீட்டுச் சுவர் அல்ல சிந்தனையில் ஊறிப்போன ஞாபகங்கள்!

20 comments :

jagadeesh said...

எங்களின் பெயரை இனிய குயில்களின் குரல் ஊடாக பாடல் விரும்பிக் கேட்டவர் வரிசையில் என் பெயர் வரும் வரை காத்திருந்த நிலை எப்போது கனிமொழி வெளியில் வருவார் எனக்காத்திருக்கும் கருணாநிதி போல்தான்!

well example i like it!

Unknown said...

ஆமா நானும் இரண்டாயிரம் ஆண்டு வரையில் பயன் படுத்தினேன்..அப்புறம் வழக்கொழிந்த மாதிரி போய் விட்டது பாஸ் ...
யார் கண்ணு வைச்சாங்க??இன்னிக்கு ஒரு பட்டையிலும் இணைக்கப்படவில்லை??

தனிமரம் said...

உங்கள் வருகைக்கு நன்றி நண்பரே!

தனிமரம் said...

இருவரும் இந்த விடயத்தில் ஒத்த பயன் அடைந்திருக்கிறோம் சிவா.இனைப்பில் எல்லாம் அடிக்கடி இப்படி ஏந்தான் வருகிறதோ! நன்றி உங்கள் வருகைக்கு!

கூடல் பாலா said...

உண்மையிலேயே பரவசமான நினைவலைகள் .....த்ரில்லின்கானதுகூட ......

தனிமரம் said...

நன்றி நண்பர் கூடல்பாலா உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்!

Unknown said...

மாப்ள அந்த அட்டை எவ்வளவு பேரின் இதயங்களை தாங்கி வந்து கொண்டு இருந்தது.....!

Yoga.s.FR said...

அருமையான பதிவு!நினைவுகளை தொலை தூரம் அழைத்துச் சென்றது.தரம்பிரித்ததால் தான் இன்றும் தரம் கெட்டுப்போய்.................................!

தனிமரம் said...

@விக்கி உலகம் மாமா உங்கள் வருகைக்கு தனிமரத்தின் நன்றிகள்! இதயங்களை இனைப்பதில் உதவி புரிந்ததை அறிவேன் ஆனால் ஆராட்சி செய்யவில்லை !

தனிமரம் said...

நன்றி யோகா அண்ணா உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.

ஹேமா said...

இந்தப் போஸ்ட் காட் பற்றி அப்பா பேசிக்கொள்வார்.உண்மையில் நான் காணவில்லை.அருமையான நினைவுப் பதிவு நேசன் !

தனிமரம் said...

நன்றி தோழி ஹேமா உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்

நிரூபன் said...

!ஆனால் இது ஒரு காலத்தில் என் பெயரை ஒரு இசைக்கூடத்திற்கு தூது சென்ற புறா!//

வணக்கம் ஐயா,
எப்படிச் சுகம்?
தாமதமான வருகைக்கு மன்னிக்கவும்,
மேற்படி வரிகளில் கொஞ்சம் கவனம் எடுத்திருக்கலாம்.

நிரூபன் said...

இன்று போல் வானொலிகள் அன்று இல்லை இப்போது கருணா படத்தில் கவுண்டர் சொல்லுவார் சுத்துராஜா சுத்து டெலிபோல் அடிக்குது என்று அடித்தால் விரும்பிய பாடல் ஓலிக்க விட ஆயிரம் அலைவரிசைகள் காத்திருக்கிறது.//

பாஸ், இன்றும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனம் இந்தத் தபாலட்டை மூலமான சேவையினைத் தன்னகத்தே வைத்திருக்கிறது.

கொழும்பு சர்வதேச வானொலியின் ஊடாக இந்தியாவில் இருந்து பாடல் கேட்கும் உள்ளங்கள்,
லீவியின் சினிமாப் பாடல், ஜில் சோப்பின் பளிச்சிடும் ஜில் ராகங்களிற்கு
இந்த தபாலட்டையில் தான் பெயர்களை எழுதி அனுப்புவார்கள்.

நிரூபன் said...

நேயர்களே! பொங்கும் பூம்புனலில் உங்கள் பெயர்களும், இடம் பெற வேண்டுமா?
உங்கள் விபரங்களை எழுதி, மறக்காமல் தபாலட்டையில்
இலங்கை வானொலி
வர்த்தக சேவை,
.......
.....
என்ன ஒரு அருமையான அறிவிப்பு பாஸ் அந்தக் காலத்தில...
அதெல்லாம் மீண்டும் வருமா

நிரூபன் said...

தபாலட்டை பற்றிய நினைவு மீட்டல் அருமை சகோ.

தனிமரம் said...

வணக்கம் பேராண்டி !
நலம் நலம் அறிய ஆவல். 
எல்லோருக்கும் வேலைப்பளு அதிகம் இதில் எதற்கு மன்னிப்புக்கோரல்கள்.
அதிகமான பாடல்கள் கேட்டதால் அப்படி எழுதினேன் இன்னும் கற்பனையைச் சேர்த்தால் அந்தக்கூடத்தின் அருவருடி என்று சிலர் நினைப்பார்கள் என்பதால் சுருக்கமாக்கிவிட்டேன்!

தனிமரம் said...

உங்கள் தகவலுக்கு நன்றி இப்போது எல்லாம் இவைகளை செவிமடுப்பதில்லை நம் நவீன உறவுகள் தொலைபேசியில் விசாரித்தால் நீ இன்னும்1980 இல் இருக்கிறியா? என்று கேட்பவர்களிடம் எப்படிச் சொல்வது என்காதில் அவர்களின் ஒவ்வொரு குறியிசையும் தேனாக ஒலிக்கிறது என்று!

தனிமரம் said...

வர்த்தகசேவை தென்றலாக மாறிய சிலகாலத்தில் அதனுடன் என் தொடர்புகள் அறுந்து விட்டாலும் அப்படியான ஒரு காலம் இனியும் வராது என்பது உறுதி ஆனாலும் அவர்கள் சேவையை என்போன்ற பாமர மக்கள் பெரிதும் நம்பி இருந்தோம்!

தனிமரம் said...

தபால் அட்டையால் தொலைந்து போன காலங்களை பதிவு செய்ய உதவிய google  வலைப்பின்னலுக்கும் இந்தப்பதிவுகள் பலரை சென்றடைய தொழில்நுட்ப உதவி புரிந்த நண்பன் நிரூபனுக்கும் என் நன்றிகள் பல வேலைப் பளுகளுக்கு இடையிலும். உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்த அந்த கனனிக்கைகளுக்கும் நன்றிகள்.