05 June 2011

சிந்தீர்பீர்களா?!!

L


அன்புக்கினிய உறவுகளே! என்னைய்யா பாரதிராஜா படமா என்று கேட்கும் நண்பர்களே ஒரு நிமிடம்!
வார இறுதி எங்கே போகலாம் என்று மனதை குடைந்து முடிவெடுத்து சினிமாவிற்குப் போகும் நபர்கள் நீங்களா
 இதையும் படித்து விட்டுப் போங்கள்!

சுதந்திரம் என்பது எல்லாருக்கும் உண்டு தல அஜித்  ஒரு படத்தில் சொல்லுவார் உன் மூக்குவரைதான் உனக்கு சுதந்திரம் என்று அதே போல் நேற்று ஒரு நண்பன் முன்னால் நண்பன் என்னுடன் தொடர்பில் வந்தான். 

உன்னை மாதிரி வெளிநாட்டுக்காரனால் (அவன் சொல்வது இலங்கை தாண்டி உழைக்க வெளியேறிய மத்திய கிழக்கில் பணிபுரிபவர்களையும் சேர்த்துத்தான்)தான் இங்கு(கொழும்பில்  ) ஒழுங்கா படம் பார்க்க முடியல என்று? மிகவும் வார்த்தையில் கூறமுடியாததை 3 தரமானவார்த்தைகளை உரிமையுடன் என்னிடம் கொட்டினான்.
இன்று இந்த குள்ளநரியும் வலை எழுதுகிறது என்று தெரியாதவன் ஓசி விளம்பரம் கொடுக்க இது என்ன மணிக்குரல் விளம்பரமா ? விரும்பினவர்கள் படிக்கிறார்கள். 
விசயம் இது தான் பொது இடங்களில் நீங்கள் எப்படி நடந்து கொள்கிறீர்கள்

 கொழும்பில் பலருக்கு வெளிநாட்டில் இருந்து தகப்பன், சகோதரங்கள், சகோதரிகள்,  தங்கள் ஆசாபாசங்களை அடக்கி, தன்னை எண்ணாமல்  தன் குடும்பம் உறவுகள் என்று எண்ணிஅளவுக்கதிக மாக பணம் அனுப்புகிறார்கள்.இது ஒருவகை தியாகம் அல்லது நோய் என்றும் சொல்லலாம்! 
தனக்குக் கிடைக்காத சந்தோஸங்கள் தன் உறவுகளுக்கு கிடைக்கட்டும் என்று இங்கு குளிரில் ஒரு கோப்பி குடிக்க கணக்குப் பார்த்து பணம் அனுப்பும் பலர் ஒருபுறம்!

மத்தியகிலக்கில் கடும் வெயிலுக்கும் வீட்டு முதலாளிகளின் காமப்பசிகளுக்கு தப்பித்து பணிப் பெண்களாக கஸ்ரப்பட்டு பணம் அனுப்பும் சகோதர மொழி  தாய்மார்கள் , சகோதரங்கள் என பலர் பல துன்பத்திலும் பணம் அனுப்புகிறார்கள்.

ஆனால் அவர்கள் அனுப்பும் பணம் எப்படி செலவாகிறது தெரியுமா? பணம் மட்டும் மல்ல குடும்ப மரியாதை எல்லாமும் தான்!
மேல்தட்டு வசதிபடைத்தவர்கள் தங்களுக்குப் பிடித்த/பிரியமானவர்களுடன்/ சொகுசான வாகனம் ,மத்தியதரத்தினர் ஆட்டோக்களில் வந்து இறங்குவது மெஜிக்சிட்டி ,லிபட்டி, சமந்தா(தெமட்டக்கொட) கொங்கோட் (தெகிவலை) திரையரங்குகளுக்கு  நுனி நாக்கில் ஆங்கிலம் பேசுவார்கள் கையில் பணம் இல்லாட்டியும் கைபேசி இருக்கும் . சிலர் நேரடியாக லவ்வர் என்பார்கள் இவர்களுக்கு வயது ஆகக்கூடினால் 16 இல் இருந்து 21  உள்தான் இருக்கும் கண்டிப்பாக நாகரிகமான பாடசாலையில் படிப்பார்கள் (பெயரளவில்) மேலதிகமாக ஏதாவது தனியார் கல்வி நிறுவனங்களில் புதிய பட்டப்படிப்பு என்று ஒன்றில் கையில் விளம்பரங்களையும் வைத்துக் கொண்டு நான் இந்தக் கோஸ் செய்கிறன் என்று விளங்காதவன் இருக்கிறான் என்று விளக்கம் கொடுப்பினம் ஆங்கிலத்தில்!

எல்லாவகையான உணவுகளும் இவர்களுக்கு தெரியும் சமைக்க அல்ல! சாப்பிட இதில் சுவாரசியம் தமிழ், சிங்கள இஸ்லாமிய ஒற்றுமைகள்!

படம்பார்க்க உள்ளே யாராவது பினாமி டிக்கட் எடுத்து வைத்திருப்பான் அவனுக்கு ஏதாவது தாக சாந்தி இலவசமாக கிடைக்கும் லயன் லாகர் தொடக்கம் ஜின் வரை மவுஸ் ஏறும்!

பிரச்சனை  எங்கு தெரியுமா படம் தொடங்க விளக்குகள் அனைக்கப் பட்டதும் படத்தில் கவனிக்கிறார்களோ இல்லையோ இவர்களின் அனைப்புக்கள் ஸ்கிலா படம் தோற்றுப் போய்விடும்! 

நீங்கள் கேட்கலாம் படம் பார்க்கப் போனால் படத்தை விட்டு ஏன் இவர்களின் சந்தோசத்திற்கும் இறுக்கமான(நெருக்கமான)  அன்புக்கு குறுக்கே வாரீர்கள் என்று பலவயதினரும் படம் பார்க்க திரையரங்குக்கு வருகிறார்கள் .அவர்களுக்கு இவர்களின் முக்கல்,முணங்கல்கள் கண்ணிலும் காதிலும் விளுகிறது.  சில கேள்விகளுக்கு பதில் கூற எங்கள் சம்பிரதாய முறைகள் சங்கடப்படுத்துகிறது..
ஒரு முறை  சமந்தாவில் நானும் நண்பரும் 
காக்க காக்க படம் பார்த்தோம் முடிவில் நண்பனிடம் ஏண்டா ஜீவன் நல்லா வில்லன் பாத்திரம் பொருந்தியிருக்கு என்றேன் அவன் சொன்னான் நீ கூறுகெட்டவண்டா நல்ல ஸகிலா படம் பக்கத்தில் ஓடும் போது படத்தில்  எவன்  நடிப்பு
 முக்கியம் இதில் நான்  யாரை குறை கூறுவது !

நீங்கள் போவதற்கு எத்தனையோ விடுதிகள் குளிர்சாதன அறையுடன்(குளியல்) தாராளமாக இருக்கும் போது ஏன் இப்படி பொது இடத்தில் உங்கள் இச்சை/ இன்பங்களை மற்றவர்கள் முதுகு நெளியும் வண்ணம் நடந்து உங்களையும் பிறர் கண்களுக்கு தப்பான பார்வை பார்க்கும் வண்ணம் மற்றவர்கள் இழிவான வார்த்தைகள் பேசுவதுடன் உங்கள் உண்மையான்(நீங்கள் நம்பும்) அன்பர்களுக்கு கெட்ட பெயரையும் அல்லவா தேடிக் கொடுக்கிறீர்கள்!

இதுக்கு எவ்வாறு புரியும் வண்ணம் எடுத்துரைப்பது?!!இதில் நம்பிக்கையில் பெற்றோர் செய்யும் தியாகம் விழலுக்கு இறைத்த நீரா?..

18 comments :

Anonymous said...

///////தனக்குக் கிடைக்காத சந்தோஸங்கள் தன் உறவுகளுக்கு கிடைக்கட்டும் என்று இங்கு குளிரில் ஒரு கோப்பி குடிக்க கணக்குப் பார்த்து பணம் அனுப்பும் பலர் ஒருபுறம்!/// நிதர்சனம் பாஸ் ...

Unknown said...

அதே அதே,...உங்களுக்கு நல்ல எழுத்தாற்றல் இருக்குது பாஸ்

Unknown said...

இன்றும் தமிழ்மணம் வேலை அவுட்...இன்ட்லியில் மட்டுமே பங்களிப்பு

Mohamed Faaique said...

////தனக்குக் கிடைக்காத சந்தோஸங்கள் தன் உறவுகளுக்கு கிடைக்கட்டும் என்று இங்கு குளிரில் ஒரு கோப்பி குடிக்க கணக்குப் பார்த்து பணம் அனுப்பும் பலர் ஒருபுறம்////

100% உண்மை....

தனிமரம் said...

உங்கள் வருகைக்கு நன்றி நண்பரே இது என் அனுபவத்தை ஒரு வழிப்போக்கனாக பதியும் முயற்ச்சி.

தனிமரம் said...

நீங்கள் சொல்வதைப் போல் தொடர்பு கிடைக்கவில்லை. ஏன் இப்படி நடக்கிறது.?

தனிமரம் said...

உங்கள் வருகைக்கு நன்றி நண்பரே!

தனிமரம் said...

உங்கள் வருகைக்கு நன்றி நண்பரே!

MANO நாஞ்சில் மனோ said...

எழுத்தின் தரம் கூடிட்டே இருக்கு வாழ்த்துகள்...

தனிமரம் said...

உங்களைப் போன்றவர்களின் வழிகாட்டல்தான் மாமா என்னை மெருகேற்றுகிறது.நன்றி உங்களின் வாழ்த்துக்களுக்கு!

நிரூபன் said...

அன்புக்கினிய உறவுகளே! என்னைய்யா பாரதிராஜா படமா என்று கேட்கும் நண்பர்களே ஒரு நிமிடம்//

பாராதிராஜா படத்தில் என் இனிய தமிழ் மக்களே! என்று தான் வரும்....

பைனலா நீங்க என்னையைக் கடிக்கிறீங்க...
ஹி....
நான் அன்பிற்கினிய உறவுகளே என்று தான் எழுதுவேன்....
பிச்சுப் புடுவேன், பிச்சு.

நிரூபன் said...

கண்டிக்கபட வேண்டிய விடயம், சகோ.

பெற்றோரை எமாற்றி இக் காலத்தில் தமது காமப் பசியைத் தீர்த்துக் கொள்ள இளையவர்கள் தேடிக் கொள்ளும் இடம் தான் இந்தத் தியேட்டர்கள்.....

தண்டிக்க யாரும் இல்லை எனும் நினைப்பில் அவர்கள் இப்படிச் செய்கிறார்கள்.

நிரூபன் said...

இன்றைய கால கட்டத்தில் வெளி நாட்டு உறவுகளின் உழைப்புத் தான் வீண் விரயமாகிறது.. பலர் கொட்டும் பனிக்கு மத்தியில் நின்று அனுப்பும் பணத்தில், உழைப்பின் அருமை புரியாது செலவு செய்பவர்களே நம் நாட்டில் அதிகம் சகோ.

தனிமரம் said...

எழுதும்போது எண்ணத்தில் வந்தவர் பாரதிராஜாதான் இப்போது நீங்கள் சொல்லத்தான் புரிகிறது சிந்தனையில் அவரும் செயலில் நீங்களும் இனைந்திருப்பது .கைப்புள்ளையை பீச்சுப்புடாதீங்க தாங்கமாட்டன் அழுதிடுவன்.

தனிமரம் said...

பெற்றவர்கள் விழிப்பாக இருக்கனும்!

தனிமரம் said...

யார் எல்லாம் நல்லா இருக்கனும் என்று கனவுகளுடன் சிந்தும் வேர்வை இப்படி சீரழிகின்றது என்ற கவலைதான் இப்பதிவின் நோக்கம்!

ஹேமா said...

ஆதங்கமான பதிவு நேசன்.நாகரீகம் எண்டு சொல்லிச் சொல்லியே அழிஞ்சுபோகுதுகள்.என்ன செய்யலாம் !

தனிமரம் said...

உண்மையில் நமது இளைய சந்ததி இப்படி தடம்புரல்வது கவலையளிக்கிறது. உங்கள் வருகைக்கு நன்றி தோழி!