04 June 2011

வெள்ளரிக்காய்.!!மீள்பதிவு நன்றி நிரூபன்

நாட்டு நடப்பு !
by Nesan
 இந்த வாரம் ஐரோப்பிய விவசாயிகளுக்கும் உள்ளூர் நுகர்வோர்களுக்கும் தலையிடியாக வந்துள்ள செய்திதான் வெள்ளரிக்காயில் ஏற்பட்டுள்ள ஒரு வகை பற்றீரியா நோய்!

 இதன் காரணமாக பல உள்ளூர் விவசாயிகள் தங்கள் பொருட்களை சந்தைப் படுத்தல் செய்ய முடியாது தலையில் கைவைத்த வண்ணம் கருனாநிதி போல் இலவசம் ஏதாவது அரசாங்கம் தரமாட்டாதா என ஏங்கிக் கொண்டு இருக்கிறார்கள்!

கடந்த வார இறுதியில் ஜேர்மனியில் தொடங்கிய இந்த புதிய வகை நோயின் காரணமாக இதுவரை 16 பேர் உயிர் இறந்துள்ளதாக பிரென்ஸ்  ஊடகங்கள் ஜேர்மனியின் அரசின் உத்தியோக பூர்வ அறிவிப்பை உறுதி செய்துள்ளது!

பிரென்ஸ்சில் இதுவரை 6 பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக நேற்றைய பத்திரிகைக் குறிப்பு கூறுகிறது(இன்று அரச/வர்த்தக வங்கி விடுமுறை  அதனால் பத்திரிகை வெளிவரவில்லை )

முக்கிய பல்பொருள் அங்காடிகளில் இன்று வெள்ளரிக்காய் வியாபாரம் மந்த கதியில் நடப்பதை அவதானிக்க முடிந்தது( பகுதி நேர வேலையின் புண்ணியத்தில் நாராயாணா)

இதன் காரணமாக முக்கிய விவசாய அமைச்சர்கள் பிரென்ஸ்,ஜேர்மனி,ஸ்பானிஸ்   ஓன்று கூடிய கூட்டத்தில் சரியான தீர்வை  ஆலோசித்ததாகவும் , நல்ல செய்தி விரைவில்(தமிழர் தீர்வுத்திட்டம்??) வெளியிடப் படும் என்று நேற்றைய செய்திகள் கூறுகின்றன.

 பிந்திய செய்தியில் மக்களுக்கு சுகாதார அமைச்சகம்   இந்த நோய்கள் பரவாமல் இருக்க நோய்தடுப்பு முறைகள்   பல முன்னெச்சரிக்கைகளாக  வெளியிட்டுக் கொண்டு இருக்கிறது! இலத்திரனியல் ஊடகங்களில்.

வெள்ளரிக்காயில் தோன்றி இன் நோய் இன்னும் சில விவசாயப் பொருள்களிலும் பரவியுள்ள தாக தற்போதைய செய்திக்குறிப்பில் பிரென்ஸ் வானொலி அறிவிக்கிறது  .சலாத்(salade) இது ஒருவகை கீரை (ஓட்டவடை நீதான் தமிழ்மொழியில் இதக்கு விளக்கம் கொடுக்கனும்) தக்காளி(நம்பதிவர் இல்லைங்க)  போன்ற வற்றிலும்  பரவுகிற தாக  அறிவுப்புக்கள் வந்து கொண்டு இருக்கிறது!

ஏற்கனவே விவசாய அமைச்சர்களின் வேண்டு  கோளுக்கினங்க விஞ்ஞானிகள் அவசரமாக  நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்ச்சியில் விரைந்து செயல் பட்டுக்கொண்டு இருப்பதாக வானொலி அறியத்தருகிறது (இது லங்கா புவத் இல்லை தம்பிகளே)
 
இது புதிய தலையிடி இப்போது ஐரோப்பிய அரசுகளுக்கு விவசாய ஏற்றுமதி/ இறக்கு மதியில் நோய் தடுக்கும் வழிமுறைகள் பற்றிய  குறிப்புக்களையும் சுகாதார வழிமுறைகளையும் கையாள வேண்டிய அவசியத்தை உருவாக்கியுள்ளது.

பிரென்ஸ் இல் பல  மாவட்டங்களில் கோடை மழை வரவில்லை இதனால் விவசாய உற்பத்தியில்  பல தாக்கம்கள் வந்து கொண்டும் ,வரப்போகிறது என்றும் கருத்துக்கணிப்புக்களும், ஆலோசனைகளும் கூறப் பட்டுக் கொண்டிருக்கும் இத்தருனத்தில் இன்னொரு இடியாக இச்செய்தி வந்துள்ளது.

உணவகம்களில் இதனால் பச்சைக்காய்கறிகளாக  சாப்பிடும் மக்கள் பலர் மாற்று உணவுகளை  தேடுகிறார்கள் !

 உடல் பருமன் கூடிவிடும் என்ற  (எங்களுக்கு வண்டிதான் கூடும்) காரணத்தால் பச்சை உணவுகளை உண்ணும் பிரென்ஸ் நங்கைகள் பலர் பாடு திண்டாட்டம் தான்!
இதனால் எங்களுக்கு  கொண்டாட்டம் சிலர் படுத்தும் பாடு இவங்கள் ஏதோ ஐஸ்வரியா தங்கைகைகள் என்ற நினைப்பு!

நாளை இதற்கான தீர்வுகள் ஏதாவது வரலாம் என்றாளும் இந்த நோய்த்தாக்கம் பற்றிய மக்கள் மனநிலை விரைவில் மாறுமா என்று கூறமுடியாது ! 

பக்கத்தில் நிருபன்  தனிக்கை செய்த காதல் கோட்டை பாடல் போடுகிறார் "வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா  என்னைப் பார்க்காமல் போறாளே சந்திரிக்கா!"

12 comments :

Unknown said...

வடை

Unknown said...

வெள்ளரிக்காய்

Unknown said...

இன்ட்லி,தமிழ்மணம்,தமிழ் பத்து ஒண்ணுமே அக்டிவ் இல்ல பாஸ்...
ஓஹோ இதுக்கு தானா வெள்ளரிக்காயை தடை செய்தார்கள்??

தனிமரம் said...

வடை சுட நேரம் இல்லை பால் கோப்பி தரலாம்!

தனிமரம் said...

நேற்று இரவு வெள்ளரிக்காய் வெயிலுக்கு அழகிப்போச்சு அதுதான் நிருபாஸ் மீட்டுத்தந்தார்.

தனிமரம் said...

அடிக்கடி கோளாறு வருகிறது சில நேரங்களில் கடுப்பு தாங்க முடியலையோ?!

ஹேமா said...

கொஞ்ச நாளாவே கூகிள் விளையாடிக்கொண்டேயிருக்கு.
பயமாவும் இருக்கு !

Anonymous said...

பாஸ் நம் நாட்டு மரக்கறி போல வெளிநாடுகளில் வருமா என்ன!!!

தனிமரம் said...

என்ன செய்ய முடியும்  வலைப்பின்னல் சதி செய்கிறது.

தனிமரம் said...

எங்கள் நாட்டு மரக்கறிகள் சுவைகூடியது காரணம் இயற்கையான செய்முறை இங்கே எல்லாம் செயற்கையே! என்ன செய்ய முடியும் புலம் பெயர்ந்த பின் தானே இழந்தவைகளின் வலிகள் புரிகிறது. வருகைக்கு நன்றி நண்பா . 

MANO நாஞ்சில் மனோ said...

இவங்கள் ஏதோ ஐஸ்வரியா தங்கைகைகள் என்ற நினைப்பு!///


ஹா ஹா ஹா ஹா சூப்பருங்கோ...

தனிமரம் said...

என்ன செய்வது நண்பா நீங்க அரபிகளிடம் மாட்டினது போல நாங்கள் பிரென்ஸ்காரிகளிடம் மாட்டிக்கிட்டு முழிக்கிறம். உங்கள் வருகைக்கு நன்றி!