10 June 2011

வெள்ளித்திரையில் தனிமரம்!!

வணக்கம் என் உறவுகளே இந்த தனிமரம் இன்று உங்களை நேரடி தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு அழைத்துச் செல்கிறது!

வெள்ளித்திரை,சின்னத்திரையை தாண்டி google வலை ஊடாக சர்வதேசத்து தொலைக்காட்சிகளில் முதல் முறையாக உங்களை பல்வேறு தொலைக்காட்சிகளையும் முதல் முறையாக ஒரே பண்பலையில் இணைத்து வரும் கலக்கப் போகும் கபோதி காணத்தவறாதீர்கள் ! இன்று இரவு 8.30 இற்கு
 ஒரு சிறு விளம்பரம்



புதுமணத்தம்பதிகளை விருந்துக்கு (இப்ப எல்லாம் யாரு கூப்பிடுறாங்க)வாங்கோ என்று அழைத்துவிட்டு சின்னத்திரையில் மூழ்கிக்கொண்டுப் வந்தவர்களுக்கு கோப்பி கொடுக்காமல் அவர்களையும் பிரிந்து போகவழிகாட்டும் நாடக சிகாமனிகளுக்கும் பால்க்கோப்பி அடுப்படியில் ஊற்றாமல் Tp யில் ஓடர் கொடுத்து வரவழைத்து தரும் பாட்டிமார்களையும் நோக்கி வரும் நிகழ்ச்சிதான் இனிப்பான சிற்றுண்டியை எப்படித் தயாரிப்பது என்ற இந்த டாக் சோ!

நிகழ்ச்சிக்கு போகமுன் ஒரு பாடல் "சாக்லெட் சாக்லெட் போலவே மனசு ""என்ற உன்னை நினைத்து படப்பாடல்!

என்ன நேயர்களே இன்று என்ன தயாரிப்பு என்று ஊகித்து விட்டீர்களா! சரி
இதுக்காக கண்ணைக் கசக்கலாமா ?நிகழ்ச்சிக்கு போங்கள் என்று சொல்லும் உங்களுக்கு ஒரு  சிறு வேண்டுகோள் !

இந்த நிகழ்ச்சியை பண்பலையில் இந்த தனிமரம் என்ற பிரதான கலையகத்துடன் ஒரே நேரத்தில் பலகிளைக் கலையகம்களும்  இனைக்கும் தொழில்நுட்ப வேலைகள் நடக்கும் இத்தருத்தில் .ஒரு சிறிய இடைவேளை.

பாசக்கார உறவுகளே இந்த தனிமரத்தையும் ஒரு வலைப்பதிவானாக்கி தமிழ்மணம், இண்டிலி , தமிழ்-10 ஆகியவ்ற்றில் நீங்கள் குத்தும் வாக்கு என்னை தரமான பதிவை பதியனும் என்ற ஆவலைத்தூண்டுகிறது என்னை தோலில் தாங்கும் உங்கள் அனைவருக்கும் சிரம்தாழ்ந்த நன்றிகள்!
 இதுதோ நீங்கள் ஆவலுடன் காத்திருந்த கலக்கப் போகும் கபோதி நிகழ்ச்சி தனிமரத்தின் பிரதான கலையகத்துடன் இனையும் பல்வேறு நாட்டு தொலைக்காட்சி   அலைவரிசைகள் பற்றிய குறிப்பை அறிவிக்க எங்கள் உங்கள் அன்பு ஓட்டைவடை என்னுடன் இணைகிறார் .நிகழ்ச்சியை சுவைபட தொகுக்க!
பலத்த கரகோசத்திற்கு மத்தியில்!
வணக்கம் தனிமரம். வணக்கம் ஒட்டைவடை. நேயர்கள் அதிகமாக தொலைபேசியில் வருவதற்காக திரையில் காட்சியை காண ஆவலாக ஒரு பைக்கட் சோளப் பொரியை 15 நிமிடங்கள் கொறித்துக் கொண்டும் உங்களை கடிக்கவும் காத்திருக்கிறார்கள் .

நேயர்களே இந்த தனிமரம் என்னை அடிக்கடி வம்புக்கு இழுக்குது .நானே டிவிட்டரில் வரச்சொல்லுறன் .இந்த நிகழ்ச்சிக்கு தயவாக கேட்டதால் வருகின்றேன் .மாப்பூ மனசை இப்படி பப்ளிக்கில் திறக்காத நாங்கள் உடன்பிறப்புக்கள்!

சொல்லுங்கள் நண்பா நேயர்களுக்கு எங்கள் பிரதான கலையகத்துடன் இணையும் கடல்தாண்டிய கூட்டனி ஒலிபரப்பில் இனையும் கிளை தொலைக்காட்சிகள் பற்றிய விபரங்களை!

பேரன்பு மிக்க நேயர்களே கபோதி நிகழ்ச்சியை உங்கள் வீட்டில்  வலையில் கொண்டு வருபவர்கள் இதோ!
தமிழ் சினிமா பாடல்காட்சிக்கு அதிகமாக ஓடும் பனிமழை தேசம் சுவிஸ் இல் இருந்து ஹேமா.
மத்திய கிழ்க்கிற்கு அண்ணன் மனோ . தமிழகத்திற்கு கூடல்பாலா அவருக்கு உதவியாக மதுரை சரவணன்,,தாயக உறவுகளுக்கு கொழும்பு மேற்கிற்கு மைந்தன் சிவா, கொழும்பு கிழக்கிற்கு காற்றில் என் கீதம், வடக்கின் வசந்தம் என்று  தனியாக நாற்றும் அவருக்கு உதவியாக கந்தசாமி மற்றும் மதிசுதா இவர்களுடன் இன்னும் பலர் .நிகழ்ச்சிக்கு சிறிது நேரம் என்பதால் இனைக்க முடியாத மற்றவர்களை வேறு ஒரு சந்தர்ப்பத்தில் தனிமரம் இனைக்கும் .அதனையும் நீங்கள் செம்பு அனுப்புவதைப் பொறுத்து!

எல்லோறும் ஆவலுடன் பிரதான கலையகங்களும்  ஒருசேர இணையும் இத்தருணத்தில்
 .மணிக்குரல் தொலைக்காட்சி நேரம் இரவு 8.30 இது .ஒரு கட்டணம் செலுத்திய விளம்பரம்.

வணக்கம் கபோதி இந்த இனிப்பான சிற்றுண்டி எப்படி செய்வது ?எங்கே தோண்றியது ?ஏன் இதை நீங்கள் மக்களிடம் இலவசமாக கூறுகிறீர்கள் ?எதிர்காலத்தில் விஜயைக்கு போட்டியாக வர உத்தேசமா?

தனிமரம் கடுப்பேத்தாத அங்கே அன்பு உள்ளங்கள் அடுத்த பதிவு படிக்கனும்!
சரிபாஸ்!

வணக்கம் உங்கள் இருவருக்கும் .தொலைக்காட்சியில் என்னைக்கான காத்திருக்கும் நேயர்களே இன்று தலைக்கு  கலர் பூசமறந்துவிட்டேன் அதுதான் இவர்கள் ஒளியில் என் தலையில் சூரிய ஒளி தெரியுது!

இதற்குப் பெயர்
pudding (புட்டிங்)இது போத்துக்கல் நாட்டு இனிப்பு. எத்தனை நாளுக்குத்தான் நாங்கள் வடையையும் ,பாயாசமும்,,ஐஸ்கிரிமும் சாப்பாட்டுக்குப் பிறகு விசேஷமாக சபையில் கொடுத்துக் கொண்டிருப்பது .இப்ப எல்லாம்  புதுசு புதுசுத்தானே கண்டு பிடிக்கிறாங்க அலைவரிசை ஊழல் என்று!

தேவையான மூலப்பொருள்கள்  கமராவை கொஞ்சம் கிட்ட வையுங்கோ நேயர்களுக்கு கண்ணுக்கு தெரியனும்!(கண்ணுபோகனுமாம் எப்படி விளம்பர மோகம் கபோதிக்கு)
1)
500கிராம் சீனி இதை 300கிராம் 200கிராம் என்ப்பிரித்து வையுங்கள்(சீனிவிலை தெரியாதாஎன்று உனக்கு யாரும் திட்டாதீர்கள் சிறிமா ஆட்சியில் அரைக்கு மேல் சீனியில்லை என்று முன் சங்கக்கடையில் சிரிச்சுக்கொண்டு சொல்லும்போது விளங்கவில்லை மகள் ஆட்சியில் சீனிபோட்டுக் குடிக்காமல் பட்ட துயரம் சொல்லாத காதல். இதையும்தாண்டி இலங்கையில்  சீனி ஆலை இருந்தது சிலருக்கு தெரியாத சங்கதி)

2)கோதுமை மாவு  40கிராம் ( அரிசிமாவைத் தாண்டி இந்த கோதுமையை  வீட்டில் கண்டது இடம்பெயர்ந்த பிறகுதான்)

3) மஞ்சல் கரு முட்டை 8( இப்பஎல்லாம் வீட்டில் கோழி வளர்த்தால் மதிப்பு இல்லையாம் வெளிநாட்டுக் காசு எத்தனைபேரை வடிவேல் போல்  எகிரிப்பேசவைக்குது)

4)200கிராம்தேங்காய்ப்பூ பதப்படுத்தியது(தென்னைமரங்களே ஸெல் அடியில் சிதரிய தமிழன் போல் இப்ப இருக்கும் நிலையில்)

5)500மில்லி லீற்றர் பால்(அது வில்டாமில்க் பால் ,ஆட்டுப்பால் உங்கள் வசதிக்கேற்ப)

6)இரண்டு அலுமினியம் பாத்திரம்  .ஒரு இட்லிச்சருவம் போன்று மூடியுடன் கூடிய சிரிய அலுமினியம் பாத்திரம்

செய்முறையை கவணமாக கேளுங்கள் !செல்லம்   நாடகம் பிறகும்  பார்க்கலாம் கபோதிக்கு அடுத்த சூட்டிங் கனடாவில்.

நேயர்களே முதலில் 200கிராம் சீனியை 5 தேக்கரண்டி பச்சத்தண்ணீரையும் கலந்து சிறிய சட்டியில் கொதிக்க் வையுங்கள். 10நிமிடங்களில் உமியின் நிறத்தில் சீனிப் பாணி தயார்!
அதனை குவியம் போன்றஅலுமினியம் சட்டியில் ஊற்றுங்கள் முதலில். பின் சீனி,கோதுமைமா,முட்டை மஞ்சல் கரு,தேங்காய்ப்பூ,பால், எல்லாவற்றையும் ஒன்றாக கலந்துவிட்டு நல்லாக கலக்கிய பின் சீனிப்பாணி ஊற்றிய குவியம் போன்ற  அலுமினியம் சட்டியில் நல்ல கொதிக்கும் வண்ணம் 45நிமிடங்கள் சுடுநீரில் கொதிக்க வையுங்கள்,

பின் வெளியில் எடுத்தால் அழகிய இராசவள்ளிக்கிழங்கு போன்ற  புட்டிங் சுவையூட்டி கிடைக்கும்! இதுதான் கபோதியின் இன்றைய  சிறப்புத் தயாரிப்பு.

நல்லது ரசிகர்களே இது சம்மந்தமான உங்கள் சந்தேகங்களை எழுதி அனுப்புங்கள் இதுவரை பலவலைகள் ஊடா ஓளிபரப்பான  இந்த அதிசய ஒளி/ஒலிபரப்பு இத்துடன் பிரதான கலையகத்துடன் இணைகின்றது.

இதுவரை பார்த்து ரசித்த உங்களுக்கும் நிலையம் வந்து சுவையூட்டியை செய்துகாட்டிய கபோதிக்கும் நன்றிகள் .
இதுவரை என்னுடன் இனைந்து கலக்கிய ஓட்டைவடைக்கும் நன்றி .

மீண்டும் ஒரு இனிய நிகழ்ச்சியில் சந்திக்கும்வரை உங்களிடம் இருந்து விடை பெறுவது அப்புக்குட்டியின் அடுத்தவாரிசு தனிமரம்!(காப்பாத்துங்க முட்டை வருகிறது ஓடுகிறார் இந்தியா,சீனா  என்று தீர்வுதராமல்,)

15 comments :

காற்றில் எந்தன் கீதம் said...

இந்த தயாரிப்பு முறை உண்மையா? இல்லை உங்கள் பதிவு போலவே கலாய்ப்பா?
அலைவரிசை நல்ல தான் இருக்கு :)

தனிமரம் said...

நன்றி தோழி உங்கள் வருகைக்கு இது உண்மைதான் தயாரிப்பில் ஒரு துளி பிழைத்தாலும் உங்கள் காலநேரம் பணம் எல்லாம் இழப்பே!

Unknown said...

ஹிஹி மவனே..ஏன் யா கொல்லுறா???

Unknown said...

இன்லி இல்லை

தனிமரம் said...

கொல்லும் அளவுக்கு எனக்கு இன்னும் ஆட்சி அதிகாரம் கிடைக்கல மாப்பூ!

தனிமரம் said...

சின்னப்பையன் பிழையை திருத்துகிரேன் வேனாம் அழுதிடுவன்!!!

ஹேமா said...

என்னமோ ஏதோவெண்டு வாசிக்கத் தொடங்கினால் பாட்டில தொடங்கி புடிங்ல முடிச்சாச்சு.சரியான கெட்டிக்காரன்தான் நீங்கள் நேசன் !

தனிமரம் said...

நன்றி  ஹேமா  உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்,
பாராட்டுக்கும்.

நிரூபன் said...

பல்வேறு தொலைக்காட்சிகளையும் முதல் முறையாக ஒரே பண்பலையில் இணைத்து வரும் கலக்கப் போகும் கபோதி காணத்தவறாதீர்கள்//

பாஸ்...எப் எம் ரேடியோ தான் பண்பலையில் வரும்,

தொலைக் காட்சி, பண்பலையில் ஒரு போதும் வராது சகோ.

நிரூபன் said...

புதுமணத்தம்பதிகளை விருந்துக்கு (இப்ப எல்லாம் யாரு கூப்பிடுறாங்க)வாங்கோ என்று அழைத்துவிட்டு சின்னத்திரையில் மூழ்கிக்கொண்டுப் வந்தவர்களுக்கு கோப்பி கொடுக்காமல் அவர்களையும் பிரிந்து போகவழிகாட்டும் நாடக சிகாமனிகளுக்கும் பால்க்கோப்பி அடுப்படியில் ஊற்றாமல் Tp யில் ஓடர் கொடுத்து வரவழைத்து தரும் பாட்டிமார்களையும் நோக்கி வரும் நிகழ்ச்சிதான் இனிப்பான சிற்றுண்டியை எப்படித் தயாரிப்பது என்ற இந்த டாக் சோ!//

இந்தப் பந்தியில் வசனப் பிரிப்பு இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

நிரூபன் said...

கபோதி நிகழ்ச்சி பார்வையாளர்களைக் கொல்ல வேண்டும் எனும் நோக்கோது தான் தொடங்கப்பட்டிருக்கு இல்லே...

என்ன ஒரு அறுவை, என்ன ஒரு கொலை வெறி.

தனிமரம் said...

வணக்கம் நிரூ நான் சொல்லவந்தது  சில Tv கள் பலநாட்டு தொலைக்காட்சிகளையும் உள்வாங்கும் சாட்டலைட் செயல் முறை (இதை எப்படி தமிழில் கொண்டுவாரது என்று ,எழுதுவது என்று எனக்கு ஒரு குழப்பம் அதனால்தான் பன்பலை என்று கையாண்டேன்) தவறை திருத்துக்கொள்கிறேன் ,ஒரு கற்பனைதானே! விஜய் 10 பேரை ஒரு குத்தில் சாய்ப்பது போல்தான்!

தனிமரம் said...

இனிமேல் இப்படியான விடயங்களை சீரமைக்கின்ரேன் பாஸ்!

தனிமரம் said...

இப்போது எல்லாம் நேரம் கிடைப்பதில்லை தொலைக்காட்சி பார்க்க .அப்படிப் பார்த்தாலும் இப்படி வெறி பிடித்தவர்கள் போல் செய்யும் அறுவை தாங்காமல் பயணங்கள் பற்றிய விவரணச் சித்திரங்களை பார்க்கின்றேன் பாஸ், அதில் ஒரு கற்பனைக் கலாய்ப்புத்தான் இந்தப் பதிவு நண்பா!வருகைக்கு நன்றி!

செங்கோவி said...

சில வீடியோக்களையும் இணைச்சிருக்கலாம்..