07 June 2011

போவோமா ஊர்கோலம்!?

 கடந்த வருடம் தனிப்பட்ட பயணமாக சென்னை சென்று இருந்தேன். போன அலுவல்கள் முடிந்ததும் எங்கே போவது சுற்றுலா என்று ஜோசித்த போது எனது மைத்துனர்  மாமல்ல புரம் போகும் படி கூறினார்! 


சரி என்ன தான் இருக்கு என்று நானும் மனைவியும்  தாம்பரத்தில் இருந்து மாமல்லபுரம் போய்ச் சேர்ந்தோம் !பலமார்க்கங்கள் உண்டு எனினும் நாங்கள் தங்கியிருந்த பகுதிக்கும் தாம்பரத்திற்கும் சில நிமிட பல்லவன் பஸ் பயணம்.அங்கிருந்து சொகுசு பஸ் மாமல்ல புரத்திற்கு நேரடியாக செல்கிறது. பாண்டிச்சேரி பேருந்துகளிலும் போகலாம் வசதியான நேரங்களில்.
 நாங்கள் போன நேரத்தில் நல்ல கோடை வெய்யில்  தாகத்திற்கு இளநீர் அருந்திவிட்டு மாமல்ல புரத்தில் புகழ் பெற்ற பல்லவர்காலத்தில் வடிக்கப்பட்டதாக வரலாறு கூறும் மாமமல்ல புர கற்சிலையில் 
அழகிய ஒவியங்களை ரசித்தோம்! ஒரு படத்தில்  வரும் "கல்லிலே கலைவண்ணம் கண்டேன்." என்று
நீண்ட தூரங்கள் அமைதியான எண்ணத்தை தோற்றுவிக்கும் மனநிலையில்    
பலர் எங்களைக் கடந்து ஓவியங்களை ரசித்துப் பார்த்தவண்ணமும் புகைப்படம் எடுத்தவண்ணமும் சென்றார்கள்.

பலநிலைகளில் ஓவியத்தை இப்படி கல்லில் தீட்டிய சிற்பியின் மனதில் என்ன சிந்தனை ஆட்சி செய்திருக்கும் என மனதில் கேள்விகள்? அழகிய மிருகங்கள் மனிதர்களின் இனைந்த உறவு நிலை .,மக்களின் வாழ்வுகள் என பலதை மனதில் பதியும் வண்ணம் ஓவியமாக தீட்டப்பட்டுள்ள அழகிய கருங்கற்களில் இப்படி எல்லாம் சிற்பம் செதுக்கிய அந்த ஓவியன் பெயரைத் தேடினால்  அது விபரங்கள் ஏதும் தென்படவில்லை!

.ஒரு இடத்தில் !

முக்கியமாக மகிடாசுரமர்த்தினி சிற்பம் எங்கள் புராணக்கதையில் மகிடாசுரன் அரக்கனை அன்னை காளி எவ்வாறு வதம் செய்தாள் என்பதை இங்கு சிறப்பாக செதுக்கப்பட்டதை பார்த்தேன்.பிரமித்துப் போனேன் .கோயில் கோபுரங்களில் பார்த்த சிலைகளைத் தாண்டி இப்படி பொதுமக்கள் பார்வைக்கு கட்டுப் பாடுகள் இல்லாமல் (இங்கு பாதுகாப்பு கெடுபிடியைச் சொல்கிரேன் அஜந்தாவை பார்க்கப் போய் அனுராத புரம் பொலிஸில் அண்ணதானம் வாங்கியது தனிக்கதை).முழுமையாக பார்த்தோம்.சுற்றிக்காட்ட வரும் முகவர்களை தவிர்ப்பது  உங்கள் நிதி நிலையில் துண்டு விழும் நானாவித செலவை குறைக்கலாம்!
 இனிய தென்றல் காற்று புத்துணர்ச்சி ஊட்ட தொலைந்து போன நண்பன் ஒருவனைப் பார்த்தேன். இத்தனை ஓவியங்களுக்கு இடையிலும் !
ஆம் எங்களை வாழவைத்த பனை ஒன்று சிரித்துக்கொண்டும் சிங்காரித்துக் கொண்டும் இருந்தது! பனையுடன் வாழ்ந்த பருவம் தாலாட்ட சில நிமிடங்கள் அசுவாசித்துக் கொண்டேன்!
என்னவள் கேட்டாள் கள்ளுக்கடைப் பக்கம் போனனீங்களோ ?இப்படிப் சாய்ந்து கொண்டு நிற்கிரியல்?
ஊரில் கள்ளுக்குடிக்கும் இளசுகள் இப்படி சாய்ந்து பிழாவில் குடிப்பது ஒரு தனிச்சுகம் .....காற்றுவாக்கில் என்னவளும் ஞாபகப்படுத்தினால்!

அழகிய அர்ச்சுனன் தபசு ,விஸ்னு கோயில் பாண்டவர்  இரதம் ,புதுமையான சுரங்கத்தில் அமைக்க்பட்ட சயண நிலை பெருமாளை அதிகமானவர்கள் சேவிக்கும் காட்சியை கானும் போது விடுபட்ட திருப்பதியர் எப்போது கானும் வரம் தருவாரோ? என ஒருகனம் சிந்தனை வசப்பட்டேன். 

வெயில் அதிகமாக  நீண்ட பாறைகளில் பலர் குழுக்கலாக வந்தவர்கள் சிற்றுண்டிகளை பகிர்ந்து உண்டார்கள் . நல்ல கொய்யாப்பழம் விற்றுக் கொண்டிருந்த  தாய் ஒருவரிடம் நானும் கொய்யாபழம் வாங்கினேன்.

 இவர்களைப் பார்க்கும் போது அன்நாட்களில் கோயில் பிரகாரங்களில் கச்சான் விற்கும் சில முகம் தொலைந்த பாட்டிமார்களின் ஞாபகம் என்னை ஆட்கொண்டது. ராசா ராசா என்று தம்பிள்ளைகள் போல் எங்களுக்கு கச்சான் மட்டும் விற்காமல் அன்பையும் விற்றவர்கள்.


 எங்களை யுத்தம் பிரித்தாலும், அவர்களுக்கு என்னை ஞாபகம் இல்லாட்டியும் ,இன்னும் எனக்கு அவர்கள் என் மனக்கண்ணில் வந்து போகிறார்கள்.! 
அழகிய வெட்டுப்பாறைகளில் குடும்பமாக வந்தவர்களும் ,ஜோடியாக வந்தவர்களும் தனியாகவும் குழுவாகவும் இருந்து கதைத்துக் கொண்டும் விளையாடியவாரும் கலகலப்பாக இருந்தனர் . 

நடந்த களைப்பை போக்க நல்ல குச்சி ஐஸ் சாப்பிட்டோம் லிங்கம் கூல்பார் சுவை அதில் இல்லாட்டியும் குடித்தோம்!

பாறைகள் இடையே!ஜோடிகள் காலிமுகத்திடல் குடைகளை ஞாபகப் படுத்தியது என்னவள்  நீங்கள் வெளிநாடு  போய் கெட்டுப் போனீங்கள்  என்றதையும் ரசித்தேன் .!எங்களை  வேலிதாண்ட விட்டதில்லை கிராமத்துப் பெரிசுகள்! பட்டணம் போனால் கெட்டுப் போவாய் என்று பூட்டிவைத்தவர்கள் எத்தனை துயரத்தில் புலம் பெயரவிட்டார்கள் . என்று நான் அறிவேன்.

ஓவியங்களைப் ரசித்துவிட்டு வெளியில் வந்தால் கோல்டன் பீச் வரவேற்கிறது.அமைதியான கடல் அலைகள் நல்லபடகுப் பயணம் போகலாம் கொஞ்சம் பணம் கொடுத்தால் குதிரையில் வேண்டிய தூரம் சவாரி  போகலாம்.

பிரபுதேவா  அனுமதியில்லாமல் ,நயன்தாராவுடன் கைகுழுக்கலாம் புகைப்படம் எடுக்கலாம்  !ஆம் திறந்த வெளி  புகைப்படக்காட்ச்சியகம் பல இடங்களில் உண்டு  .உங்களை  நடிகர் நடிகைகளுடன் படம்பிடித்து தருவார்கள் இவர்களிடம் ஜெயகாந்தனின் சினிமாவிற்குப் போன சித்தாளு போல் உங்கள் பணத்தினை  பாதுகாப்பது உங்கள் சாமர்த்தியம்!

கடற்கரையோரம் பல நரிக்குறவர் வழிவந்த ஜக்கம்மா பாட்டிமார் உங்கள் எதிர்காலத்தை  புட்டுப்புட்டு வைப்பார்கள் ஒரு  குச்சி மூலம். கடல்தாண்டி  போவீர்கள் , மகாராசி இந்த அம்மா போகும் வீடு
 செல்வம் கொழிக்கும். அடுத்த வாரிசு அம்மாவிற்கு ஐய்யாவைப்  போல் என்று அடுக்கி பணத்தை ஆட்டை போடும் இவர்களிடம் கருணாநிதி போல் ஆட்சியில் பங்கு கொடுக்காமல் இதயத்தில் இடம் கொடுப்பது உங்கள் தந்திரம்.

கடற்கரையில் இனிய காற்றின் ஊடே  வடை ,சுண்டல் பால்கோப்பி  எல்லாம் கிடைக்கும்!

கடல்தாண்டி வந்தால் தலசயனப் பெருமாள் கோயில் வரவேற்கும் .அருகில் பல தங்கும் விடுதிகள்  இருக்கிறது.  இரவில் பூசைகள் கடலில் சந்திரோதயம் .காலைச் சூரிய உதயம் ,கடல் குளியல் என சிறப்பான குதுகலமாக்குவது நீங்கள் போடும் குறுங்காலத் திட்டத்தில் இருக்கிறது.

வரும்வழியில் சொர்க்கமே என்றாளும் அது நம்மூரைப்போலாகுமா என்று பாடல் ஒலித்தால் உங்கள் வலிகளுக்கு ஒரு பெரு மூச்சே தீர்வு!

20 comments :

ஹேமா said...

லிங்கம் கூல்பார்....ஞாபகம் இனிக்குது.

பதிவோடு படங்களும் போட்டிருக்கலாம் நேசன்.சுற்றுலாப் பதிவுகள் இனித் தொடரும் !

தனிமரம் said...

உங்கள் வருகைக்கு நன்றி தோழி படங்களை இனைக்கும் ஆசையுண்டு எனக்கும் ஆனால் போதிய அவகாசங்களை புலம் பெயர் பொருளாதார தேடல் வழங்கமறுக்கின்றது .புரிந்து கொள்வீர்கள் என நம்புகின்றேன்.

Unknown said...

ஹிஹி தமிழ் மணம் செட் ஆகிருச்சு

Unknown said...

லிங்கம் கூல்பார் முன்னணியில் இருக்கிறது பல வருடமாக...இப்ப நல்லூரில் ரியோ ஐஸ்க்ரீம் கொஞ்சம் பேமஸ்

Yaathoramani.blogspot.com said...

இயல்பான வார்த்தைகளில் சொல்லிப் போவது
ரசித்து படிக்க வைக்கிறது
இடையிடையே "என்னவளை" சேர்த்துக்கொள்வது கூட
நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

தனிமரம் said...

ஒரு நண்பரின் தொழில் நுட்ப உதவியால் என்று கூறலாம்! அவரின் அரவனைப்புத் தான் வலையில் ஏற்படும் முன்னேற்றம்கள்!

தனிமரம் said...

லிங்கம்  பொடிநடையில் போகக்கூடிய இடமாக இருந்தது ரியோ அதிகமான தூரம் சைக்கிளில் போகனும் அதையும் தாண்டி நான் அறிந்த அவர்களின் தனிப்பட்ட துயரம் இனிவரும் காலத்தில் பதிவாக வரும். நன்றி உங்கள் வருகைக்கு.

தனிமரம் said...

நன்றி ரமனி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.

நிரூபன் said...

கடந்த வருடம் தனிப்பட்ட பயணமாக சென்னை சென்று இருந்தேன். போன அலுவல்கள் முடிந்ததும் எங்கே போவது சுற்றுலா என்று ஜோசித்த போது எனது மைத்துனர் மாமல்ல புரம் போகும் படி கூறினார்!//

மாப்பிளை சென்னை மாமலபுரம் எல்லாம் போறீங்க, நம்ம ஊருக்கு வரமாட்டீங்களா?
மாமல்லபுரம் மாதிரி ஓவியங்கள் இல்லாவிட்டாலும் இப்போ கசூரினா பீச் இல் நீங்கள் கூறும் குடைகளை அதிகமாகப் பார்க்கலாம்.

ஹி....ஹி....

நிரூபன் said...

அஜந்தாவை பார்க்கப் போய் அனுராத புரம் பொலிஸில் அண்ணதானம் வாங்கியது தனிக்கதை).முழுமையாக பார்த்தோம்.சுற்றிக்காட்ட வரும் முகவர்களை தவிர்ப்பது உங்கள் நிதி நிலையில் துண்டு விழும் நானாவித செலவை குறைக்கலாம்!//

ஆஹா...தல தான் பெற்ற வையகம் பெறுக இ வையகம் எனும் நோக்கில் இந்தியா போக வைக்க எங்களின் ஆசையினைத் தூண்டி விடுறாரே..
ஹி...ஹி...

முந்தியெல்லாம் காலி முகத்திடலுக்குப் போகவே நம்மாளுங்க பயப்படுவாங்களாம், காரணம்.....
ஹி..
தெரியாது மாத்தே

நிரூபன் said...

ஊரில் கள்ளுக்குடிக்கும் இளசுகள் இப்படி சாய்ந்து பிழாவில் குடிப்பது ஒரு தனிச்சுகம் .....காற்றுவாக்கில் என்னவளும் ஞாபகப்படுத்தினால்!//

யோ தவறணைக்குப் போன ஆளுக்குத் தானே எப்படிப் ப்ளாவில் குடிப்பார்கள் என்று தெரியும்,
ஹி...ஹி..

சைட் கப்பில் பெரிசுங்க என்று சொல்லி எஸ் ஆகிறீங்க.

நிரூபன் said...

பாறைகள் இடையே!ஜோடிகள் காலிமுகத்திடல் குடைகளை ஞாபகப் படுத்தியது என்னவள் நீங்கள் வெளிநாடு போய் கெட்டுப் போனீங்கள் என்றதையும் ரசித்தேன் .//

ஏன் பாறைகளுக்குப் பின்னாடி உற்றுப் பார்த்திட்டீங்க போல இருக்கே.

நிரூபன் said...

வரும்வழியில் சொர்க்கமே என்றாளும் அது நம்மூரைப்போலாகுமா என்று பாடல் ஒலித்தால் உங்கள் வலிகளுக்கு ஒரு பெரு மூச்சே தீர்வு!//

ஆஹஹா...

பயணக் கட்டுரையினை, எம் மனங்களிற்கும்- இந்தியா போகும் ஆவலைத் தூண்டும் வண்ணம் அருமையாக எழுதியுள்ளீர்கள்.
நன்றி சகோ.

தனிமரம் said...

ஊருக்குப் போகனும் என்ற ஆசை உண்டு எனக்கு இருக்கும் வதிவிட அனுமதி இலங்கைப் பரப்பில் பாதம் பதிக்கமுடியாது !
கயூனா பீச் கதைகள் பலகாற்று வாக்கில் காதில் விழுகிறது என்ன செய்வது ஆள் இல்லா ஊருக்கு இலுப்பம் பூ சக்கரையாம் அப்படி உள்ளது நம்நிலை!

தனிமரம் said...

இப்போது பாலும் தேனும் ஓடு என்று இங்கு பிரச்சாரம் நடக்குது!

தனிமரம் said...

தவறனையில் சுண்டல் வித்தவனும் பார்த்திருக்கலாம் தானே! இது எப்படி 

தனிமரம் said...

பக்கத்தில் மனைவி இருக்கும் போது இப்படி எல்லாம் குதர்க்கம் பண்ணலாமோ!நாங்கள் சாதுவான அப்பிரானிகள்!

தனிமரம் said...

நன்றி உங்களின் வருகைக்கும் கருத்துக்கலுக்கும் நண்பா!

காற்றில் எந்தன் கீதம் said...

நல்ல பகிர்வு நேசன்... சாதாரணமாக பேசுவது போலவே பதிவு செய்திருப்பது நன்றாக இருக்கிறது. நான் மிகவும் ஆசைப்பட்டும் இன்னும் போகாத ஒரு இடம் மாமல்லபுரம்..... விரைவில் செல்லும் அவளை தூண்டி இருக்கிறீர்கள் :)
(அனுராதபுரத்தில் இருப்பது சீகிரிய குகை ஓவியம் தானே நேசன். அஜந்தா குகை ஓவியம் இருப்பது இந்தியாவில் மகாராஷ்டிராவில்......(ஆனால் இரண்டுக்கும் பல ஒற்றுமைகள் உண்டு ))

தனிமரம் said...

முடிந்தால் போய் வாருங்கள் பார்க்கலாம் அதிகமான விடயங்களை!
நீங்கள் சொல்வது சரிதான் சிகிரிய ஓவியம் என்பதே ஆனால் என்னை பிடித்துச் சென்ற அதிகாரி அஜந்த மெண்டிஸ் அவரை நினைத்து பெயரை மாத்திவிட்டேன். அஜந்தாவையும் பார்த்திருக்கிறேன் முன்னைய ஆண்டு .ஓவியங்கள் சொல்லும் வரலாறுகள் பல . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!