24 June 2011

திருநங்கைகள் திருவிழா!!

கோடைகால வரவில் பாரிஸ் நகரம் பல விழாக் கோலங்களையும் ,களியாட்டங்களையும் ,பதிவு செய்கின்ற நிலையில் !

இன்று வரும் இந்த விழா ஒரு (25/6/2011)வித்தியாசமானது!

1993 இல் தொடங்கப் பட்டது GAY PRIDE என்கின்ற ஒத்த பாலினத்தினரும் ,திருநங்கைகளும் , இனையும் பிரமாண்டமான பேரணியாகும் !பல லட்சம் பேர் கூடுகிறார்கள்.

ஒத்த பாலினத்தவர்களை சமுகம் அங்கிகரித்து அவர்களுக்கு அனைத்து சமத்துவமும் கொடுத்துள்ள நாடுகளில் பாரிஸ்சும் ஒன்று .(ஆனால் மற்றைய ஐரோபிய நாடுகள் போல் திருமண ஒப்பந்தத்தை மட்டும் அங்கீகரிக்கவில்லை நேற்றய தினம் சோசலிச கட்சி கொண்டு வந்த அங்கீகரிப்புத் தீர்மானம் தோல்வியில் முடிந்துள்ளது. ஆனால் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் அதைக் கட்டாயம் அங்கீகரிப்பதாக உறுதியளித்துள்ளார்கள்)

திருநங்கைகள் என்றால் மிகவும் சமுகத்தில் ஒதுக்கப்பட்டு, கையேந்தியும் ,பாலியல் நங்கைகளாகவும் வலம்வரனும் என்று கீழைத்தேசம் போல் நடத்தாமல் அவர்களையும் சம உரிமையுடையவர்களாக

 பிறப்பில், காலமாற்றத்தில் ஏற்படும் இந்த மாறுதல் நிகழ்வை உள்வாங்கி..
அவர்களையும் சந்தோசமுடையவர்களாக இருப்பதற்காகவும்.,
சகல அடிப்படை வசதி செய்து கொடுத்துள்ளது பிரென்ஸ்.

ஒத்த பாலினத்தவர்களை சுதந்திரமாகவும் ,வெட்கப்பட்டும், அஞ்சியும் ஒதுங்காமல் சுயமாக மற்றவர்களுக்கு முன் தமது தேவைகளை.
பிறர் அறியும் வண்ணம் ஒன்று கூடி அவர்கள் தமக்கான நண்பர்கள், நண்பிகளை கண்டு கொள்ளும் விழா இது.

பல்வேறு நாட்டில் இருந்து பிரென்ஸ் தேசம் வருபவர்களும் நம் தேசத்தவர்களும் ஒன்று கூடுவது MONTPARNASS  என்ற நகரின் முக்கிய பகுதியில் .

இங்கு இருந்து தொடங்கும் பேரணி எள்ளுப் போட்டால் எண்ணைய் ஆகிவிடுவது போல் அலையலையாக கொட்டொலிகள், பாதாதைகள், வர்ணஜால பார ஊர்திகளில் நடனத்துடன் ஆரம்பமாகும் ஊர்வலம் Rupublique ஊடாக வலம் வந்துbastill என்ற முன்னர் நெப்போலியனின் கோட்டை இருந்த பகுதியில் நிறைவடையும்.


பிரென்ஸ் காவல்படை ஊர்வலத்திற்கு பந்தோபஸ்த்து வழங்க கலகத்தடுப்பு படையினர் புடைசூழ இவர்களுக்கு பாதுகாப்பு ஒத்துழைப்பு வழங்கி தமது கடமையை செயலில் நிரூபித்து ஊர்வலம் அமைதியாக நடப்பதற்கு துனைபுரிகின்றனர் .

கல் எறிந்தும் காடையர் போல் உள்நுழைந்து கதர் வேட்டி கிழித்து காட்டு மிராண்டிகள் போல் அகிம்சைவாதிகளை காலிமுகத்திடலில் கதறக்கதற விரட்டியடித்த வெள்ளரசு வீரர்கள் இல்லை இங்கே கடமையில் இருக்கும் பாதுகாவலர்கள்.

பல்வேறு பகுதியில் இருந்து வரும் மக்கள் இந்த விழாவிற்கு ,வருகைபுரிந்து அவர்கள் உரிமைக்காக குரல் கொடுப்பதுடன் மக்களிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார்கள்.

தம்மைப் பற்றிய கழிவு இரக்கம் தேவையற்றது. தமக்கு உள்ள சமுககடமைகளையும் இவர்கள் பாதாதைகளில் எழுதியவண்ணம் அதிகமான கோஸங்கள்,  முழங்கவும்.

நடைப்பயணம் செல்லும் வழிகளில் பல உள்ளூர்/வெளியூர் அச்சு இலத்திர ஊடகங்கள் ஒலி/ஒளியாக முகப்பக்கத்திற்கு பதிவு செய்கிறார்கள் .

சிலரை நேர்முகம் கானுகின்றார்கள் பலர் வெளிப்படையாக சமுகத்திற்கு அறைகூவல்விடுகிறார்கள் தமது இருப்பைப் பற்றிய விடயங்களை.

பல சிற்றுண்டிகளும் ,மதுபாணங்களும் பீப்பாய்க்(குண்டுகள் அல்ல) கணக்கில் இன்று விற்பனையாகும் .

சிறப்பு அனுமதி பெற்ற சிற்றுண்டி வாகணம் தொடர்ந்து பின் செல்வதும் ,வீதியோரங்களில் சிறப்பான உணவகம் விரைவு உணவுகளையும் காவிச் செல்லும் வசதிகளையும் ஏற்படுத்தியிருக்கும்.

களியாட்டம் என்றாள் அதிகமான மதுபாணங்கள் பரிமாறப் படும் தேசம் இது .

பாதையோரம் கிடக்கும் வெற்றுப் போத்தல்கள் திக்கத்தில் காணமுடியாத அளவு.!

பேரணியின் பின்னே நகர சபையின் துப்பரவுப் பணியாளர்கள் ,குப்பைகளை வகைப்படுத்தி .பாதையோரங்களை சுத்தம் செய்துபேரணியின் பின் மக்கள் போக்குவரத்துக்கு வசதியாக இலகுவாக்கி விடுவார்கள்.

பல பொதுமக்கள் கூடி நின்று பாரதையோரங்களில் தமது வாழ்த்துக்களையும் ,இவர்களின் நடனங்களை கண்டுகளிப்பதையும் புகைப்படம் மற்றும் ஒளி/ஒலியாக
காட்சிப் படுத்துவதையும் காணமுடியும்.

வருடத்திற்கு ஒரு முறை இவர்களுக்கு இது இந்திரலோக சொர்க்க விழா நம் தேசத்தில் திருநங்கைகள்,ஒத்த பாலினத்தவர் உரிமைகள் பற்றி சிந்திக்க முடியுமா?

19 comments :

நிரூபன் said...

தூக்கம் வருது பாஸ், பின்னர் வந்து படிக்கிறேன்.

சுதா SJ said...

நல்ல பதிவு பாஸ்,
இன்றுதான் வேலை செய்யும் இடத்தில் என்னுடன் வேலை செய்யும் பிரஞ்சு நண்பன் ஒருவன் இதைப்பற்றி சொன்த னான்,
வீட்ட வந்ததும் இதைப்பற்றி பதிவு போட நினைத்தேன், சரியான தகவல்கள் இல்லாததால் விட்டுவிட்டேன்,
நான் போட நினைத்ததை நீங்கள் போட்டு உள்ளீர்கள்
வாழ்த்துக்கள் அண்ணா

சுதா SJ said...

இது எல்லோருக்குமான உலகம்,
அவர்களை ஆதரிக்கா விட்டாலும் சரி
எதிர்க்காமல் இருக்க நாம் பழகிக்கொள்ள வேண்டும்.

தனிமரம் said...

உங்கள் கருத்துரைக்கு நன்றி துசி!
இதை வலையேற்றும் போது சிறு தவறு ஏற்பட்டுவிட்டது. அதை திருத்தும் போது உங்களின் மின்னஞ்சலுக்கு பதில் போடமுடியவில்லை.மீண்டும்  நன்றி உங்களின் பாராட்டுக்கு!

தனிமரம் said...

நாங்கள் எவ்வளவு விடயங்களை பதிவு செய்யாமல் இருக்கின்றோம் என்பது பல பிரென்ஸ் நண்பர்களுடன் உரையாடும் போது உணரமுடிகிறது !
அவர்களையும் அரவனைப் போம் அன்பு கூர்ந்து!

காட்டான் said...

மாப்பிள இண்டைக்கு ஊர்வலத்தில நிற்பாய்யென்று தெரியுது ..!?

காட்டான் said...

மாப்பிள இண்டைக்கு ஊர்வலத்தில நிற்பாய்யென்று தெரியுது ..!?

தனிமரம் said...

ஊர்வலம் போகும் இடத்தில் பணி புரிகின்றேன் ஆதவன்.

vidivelli said...

நல்ல தகவல் நண்பா...
அறிந்துகொண்டேன்
உங்கள் பதிவிற்கு நன்றி
அன்புடன் வாழ்த்துக்கள்..

தனிமரம் said...

நன்றி உங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் விடிவெள்ளி!

ஹேமா said...

நல்லதொரு தகவல் நேசன்.எந்த ஒரு விஷயத்தையும் அசிங்கமில்லாமல் அதற்கேற்றாற்போல அனைவரையும் அரவணைத்துக்கொள்ளும் பழக்கம் எங்களுக்கும் வரவேண்டும் !

தனிமரம் said...

உண்மைதான் தோழி அவர்களும் மனிதர்கள்தானே படைப்பு வேறு படுகிறது என்பதற்காக அவமதிக்கக் கூடாது புலம் பெயர்ந்து பலருடன் பழகும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது அதுதான் இன்று பதிவு இட்டேன் இப்போது தான் அவர்கள் கொண்டாட்டம் முடிய நானும் வேலைவிட்டு வெளியேறினேன். 
நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.

நிரூபன் said...

யோ, இந்தப் பதிவிற்கு நான் போட்ட பின்னூட்டம் எங்கே பாஸ்?
கூகிள் சாப்பிட்டு விட்டதா.

தனிமரம் said...

நண்பா நிரூ 
நீங்கள் பின்னூட்டம் என்றது பிறகு வந்து படிக்கிறன் என்று நான் நினைத்தன் பிறகு கருத்துரையுடன் வருவீர்கள் என்று அதனால்தான் வெளியிடவில்லை இப்போது வெளியிட்டு விட்டேன்.

காட்டான் said...

வயல் வெளி

நிரூபன் said...

பாஸ், நான் அந்தக் கருத்துரையினைக் கேட்கலை, அதற்குப் பின்னர் வந்து படித்து பின்னூட்டம் போட்டேன், அதனைக் காணேல்லை.

தனிமரம் said...

அப்படியா நண்பா! கூகுள் எனக்கு சதி செய்துவிட்டது பின்னூட்டத்தை கொண்டு வந்து சேர்க்காமல்!

நிரூபன் said...

பாஸ், இந்த விழா பற்றி அறியும் போது ஆச்சரியமாக இருக்கிறது. எம் நாட்டில் மனிதர்களையே மதிக்கிறார்கள் இல்லை. ஆனால் வெளி நாட்டில் எல்லா உயிர்களுக்கும் சமூக அங்கீகாரம் கொடுத்து சம உரிமையோடு நடத்துகிறார்கள். இந் நிலை இலங்கைக்கும் வந்தால் எப்படி இருக்கும்.

இப்படியான நிகழ்வுகளைப் பார்த்தாவது எம் அரசியல்வாதிகள் தமிழ் உறவுகளை எப்படி மதிக்க வேண்டும் எனப் பழகிக் கொள்ள வேண்டும்.

திருநங்கைகளின் இந்திரா விழா பற்றிய பகிர்விற்கு நன்றி பாஸ்.

முதல் இதனை விட நல்ல ஓர் பின்னூட்டம் டைப் பண்ணினேன். அது காணமற் போய்விட்டது.

தனிமரம் said...

நன்றி நிரூ பலபணிகளிக்கிடையிலும் திருநங்கை பதிவிற்கு மீள் பின்னூட்டம் இட்டதற்கு .
உண்மையில் ஓட்டைவடையுடன் இந்தவிடயத்தில் நானும் ஒத்துப் போகின்றேன் இங்கு தனிமனித சுதந்திரம் கட்டுப்பாடு இல்லாதது சில துயரங்கள் இருந்தாலும் அவர்கள் எங்களை மதிப்பதும் அகதியான எங்களுக்கும் சகல வசதியும் செய்துள்ளார்கள்.

இங்கு நடக்கும் சிறப்புக்களையும் பதியும் போது பலருக்கு தெளிவான அறிமுகம் கிடைக்கும் அல்லவா!