26 February 2012

மலையகத்தில் முகம் தொலைத்தவன்-10

கிழங்கு சாப்பிட்ட ஆத்தை மூச்சு விடமுடியாமல் மூச்சை நிறுத்தியது.அந்த நேரத்தில் தெரியாது இதயவலி (ஹாட் அட்டக்) என்ற நோய் !

. கலியாணவீடு அடுத்த செத்தை வீட்டையும் காணவேண்டிய நிலையாகிப்போனது.

சின்னத்தாத்தா ஆத்தைக்கு கொள்ளி வைத்தார்.

 ஆத்தைக்கு கொள்ளிப்பந்தம் பிடித்த பேரன்கள், பேத்திகள் ,எள்ளுப்பேர்த்திகள், எள்ளுப்பேரன்கள் என 42 உறவுகள் உடலைச் சூழ்ந்து நின்றவர்கள் அன்று அதில்  இன்று சிலர்  புலம்பெயர் தேசங்களில் ஒவ்வொரு மொழி பேசிக்கொண்டு இருக்கும் நிலை.

கொள்ளிப்பந்தம் என்று மெழுகுதிரியைப்பிடிக்கும் அடுத்த தலைமுறையினருக்கு எப்படிச் சொல்லிக் கொடுப்பது சமயச் சடங்குகள் பற்றி ??????.

செத்தவர்கள் .மீண்டும் ஏதோ ஒரு வகையில் குடும்பத்தில் இன்னொரு பிறப்பாக வருவார்கள் .என்று பெரியவர்கள் சொல்வார்கள் உண்மையா?

 செத்தவீட்டை முடித்துக் கொண்டு செல்வம் மாமா சரோஜா மாமியைக் கூட்டிக் கொண்டு பதுளை போனார்.

 அதுவரை யாருமே ஊரில் இருந்து மனைவியை கையோடு வெளியிடங்களுக்கு கூட்டிச் செல்வது இல்லை.

 செல்வம் மாமா இதில் முன் மாதிரி ஆனால் அதுவும் நல்லதுக்குத் தான் என்பது அடுத்த மாதம் எங்களுக்குச் சொல்லிச் சென்றது.

.தமிழர் வாழ்வு வேதனை சுமந்த நிகழ்வுகள் ஒரு தொடர்கதைதான் !

நாட்சார்  வீடு .மூன்று தலைமுறை வாழ்ந்து ,வளர்ந்து ,கலியாணம் பார்த்து செத்த வீடு கொண்டாடி சுகதுக்கங்களில் சுவராக இருந்த வீடும் .

சுற்றிவர வேலியால்  நீண்ட வளவு பனைக்கூடல் ஒரு புறம் மாட்டுக் கொட்டகையும். அதன் மறு பாதியில் மாரிகாலத்திற்கு பூவரசு விறகு வைக்கவும் ,ஊமல் சாக்கிலும் ,பன்னாடை கட்டி தொங்க வைத்த கொட்டில் அதனோடு இனைந்த கோழிக் கூடு.

  முட்டை எங்கே போட்டது என தேடிப் போகும் வைக்கோல் பட்டரை.

வளம் கொண்ட  நீண்ட  பேரம்பலத்தாரின் வீட்டை.

 1985 இல் பெப்ரவரி மாதம் ஈ.பீ.ஆர்.எல்.எப்(ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி) எங்கள் ஊர் கடற்படைத் தளம்மீது முதலாவது தாக்குதலைச்  திட்டமிடாது செய்த போது.
கடற்படையினரின் செல் தாக்குதலில் வீடு உடைக்கப்பட்டது. வைக்கோல் பட்டரை தீயிடப்பட்டது .

அதன் பின் பாதுகாப்பு விரிவாக்கம் என்று நில ஆக்கிரமிப்பு .அந்த வீட்டுப்பக்கம் போனதே இல்லை ராகுலும் அவனின் மூன்று தலைமுறையினரும் .

நாலாவது தலைமுறையாயவது போகலாமா ??இல்லை இன்றும் சீதனமாக தனக்குத் தந்த வீட்டை ஒரு தடவையாவது பார்க்கமாட்டோமா தன் விழியால் என ஏங்கும்  பேரம்பலத்தின்  மகளின் உணர்வை எந்த இனவாதிகளால் உணர்ந்து கொள்ளமுடியும் ?

அன்று தொடங்கிய ஒட்டம் பங்கஜம் பாட்டியை உடல் தளர்வுறச் செய்தது.

 தன் சொத்து என அரசி போல இருந்த வீடு போய்விட்டது .

உயிரைக்காவிக் கொண்டு அருகில் இருந்த ஊருக்குள் போய் இடம் பெயர்ந்து  குடியேறினோம்.

அந்த ஆண்டைத் தொடர்ந்து 1986 இல் மறக்க முடியாத நிகழ்வு வந்தது.

 செல்வம் மாமி பிள்ளைப்பெறுவுக்கு ஊருக்கு வந்திருந்தா.

உறவுகள் எல்லாம் பல இடங்களில் தனிக்குடித்தனமாக குடியேறியதால் பங்கஜம் பாட்டியும் .ராகுலின் அம்மாவும் சீத்தா மாமியும் பிள்ளைகளுமாக ஒரே வீட்டில் குடியேறினார்கள் .

வீட்டில் எல்லாம் ஆண்வாரிசுகள்.

சண்முகம் மாமாவின் வாரிசுகள் மூவர் ,எங்கள் குடும்பத்தில் அண்ணண் நானும் என் தம்பியும் என ஆறு பேர் இந்த ஆறு பேருக்கும் ஒரு தேவதையாக வந்தால் சுகி.

 .சரோஜா மாமிக்கு பிறந்த முதல்க் குழந்தை தான் சுகி.

எங்கள் பேரம்பலத்தாரின்  வம்சத்தில் வந்த முதல் பெண்குழந்தை .

அப்படியே ஆத்தையின் மறுபிறப்பு  என ஊரே புகழ்ந்து பேசியது போது பங்கஜம் பாட்டி பார்த்துப் பார்த்து பரியரித்தா .

பிறந்தவள் வீட்டில் இன்னொரு உயிரை வாங்குவாள் என்று தெரியவில்லை சில வாரத்தில் .

பேத்தி என்று  பாச முத்தம் இட்டு பார்த்து பார்த்து பணிவிடை செய்த பங்கஜம் பாட்டி உயிர் எடுக்க வந்த கிரகம் உன்ற மோள் என்று திட்டும் நாள் அன்று வந்து..

                                                        வருவான்......

மோள்-மகள்  -வட்டார மொழி

17 comments :

ஹேமா said...

ஆத்தையும்....என்ன கொடுமை !

கோகுல் said...

இறந்தவர்கள் மறு பிறப்பு எடுத்து அந்த குடும்பத்துக்கு வராவிட்டாலும் அதே குணாதிசயங்கள் சில கொண்ட பிள்ளைகளை பல குடும்பத்தில் காணலாம்.இதையே நாம் மறு பிறப்பு எனவும் சொல்லி வருகிறோம்.

சி.பி.செந்தில்குமார் said...

திட்டுமளவு செய்த செயல் என்ன?? அறிய ஆவல்......

Yoga.S. said...

வணக்கம் நேசன்!தொடர் நன்றே நகர்கிறது,வாழ்த்துக்கள்!////பிறந்தவள் வீட்டில் இன்னொரு உயிரை வாங்குவாள் என்று தெரியவில்லை சில வாரத்தில்.////இப்படிப் பழிபோடுவது ஏற்புடைத்தன்று!விதி வலியது.பிறக்கும் ஒவ்வொருவருக்கும் பிரம்மன் படைப்புக்குப் பின்னே வாழும் காலம் ஒன்று நிர்ணயிக்கப் பட்டுவிடுகிறது!தலை எழுத்து என்பார்களே?அது.நன்றி!§§§§§ Today's milk coffee winner,HEMA!

தனிமரம் said...

ஹேமா அக்காளுக்குத்தான் இன்று பால்கோப்பி. 

தனிமரம் said...

கொடுமை இன்னும் வரும் போல தமிழர் வாழ்வில். நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

. நன்றி கோகுல் வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

. நன்றி சி.பி அண்ணா வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

வணக்கம் யோகா ஐயா.
தலைவிதி என்று தலையில் குட்டிச் சொல்லும் போது மனசு படும் வேதனை பலருக்கு இருக்கும் மச்சாள் மார்களுடன் பிறந்தவர்களுக்கு. 
நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

இராஜராஜேஸ்வரி said...

"மலையகத்தில் முகம் தொலைத்தவன்

மனம் கனக்க வைக்கும் ஆக்கம்..

Unknown said...

தொடர் நல்லாப் போகுது பாஸ்! இயல்பான பேச்சு வழக்கில் அருமையாக உள்ளது!

Anonymous said...

நினைவுகள் நல்லாயிருந்தது நேசரே...தொடருங்கள்...தொடர்கிறேன்..

...αηαη∂.... said...

வட்டார வழக்க நல்லா பயன்படுத்தி இருக்கிங்க..

தனிமரம் said...

நன்றி இராஜராஜேஸ்வரி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

நன்றி ஜீ வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

நன்றி ரெவெரி  வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

நன்றி அண்ணா  வருகைக்கும் கருத்துரைக்கும்.