13 February 2012

காதல் வந்து கண் சிமிட்டுதே!

வணக்கம் உறவுகளே!
இன்று ஊரெல்லாம் காதலர் தினம்! என்று இந்த ஊடகங்கள் மூலம் வியாபார உலகம் கொடுக்கும் முக்கியத்துவத்தை பார்க்கும் போது அன்பளிப்புக் கொடுத்தால் தான் காதலா? அன்புக்கு முன்னுரிமை இல்லையா? என்று எண்ணத்தோன்றுகிறது.

காதலர் தினத்தில்(14/2 )காதல் சொல்லிய சில நண்பர்கள் எனக்கும் உண்டு! காதல் என்றால் என்ன? என்று இந்த தனிமரத்திற்கும் பல நண்பர்களுக்கும் விவாதங்கள் இன்றும் தொடர்கின்றது .

ஆனால் நானும் மீனாவைக் காதலிக்கின்றேன்..... என்னடா  ஒரு நடிகையைக் காதலிக்கிறேன் என்று சொல்லுறானே என்று நினைக்கின்றீர்களா?


 கொஞ்சம் தொடர்ந்து வாசியுங்கள்.

எப்போதும் கார்காலம் மிகவும் இனிமையானது...குறுந்தொகையில் பல பாடல்கள் இருக்குது.

அதிலும் ஒரு பாடலில் 'கார்காலத்தில்  வருவேன் என்ற காதலன் வரவில்லையே' என்று ஒருத்தி நெஞ்சோடு புலம்புவதாக இனிதாக உணர்வைச் சொல்லி நிற்கும்.

அப்போது இந்த தனிமரத்திற்குப் புரியாத 'கார்காலம் என்றால் என்னவென்பதை'  பாரிஸ் வந்த புதிதில் அனுபவித்து தெளிந்தேன்.

இலங்கையில் நுவரெலியாவில் அதிகம் குளிர் இருக்கும்.

 அந்த இடத்தில் வேலை செய்வதே கடினம் என வேலையை இடம் மாற்றிக் கொண்டு ஓடியவன்...!

ஆனால் பாரிசில் 'புதுவெள்ளை மழையை' வைரமுத்து கற்பனையாக வடித்ததை நேரடியாகப் பார்த்து அனுபவகிக்கும்  நாட்களின் வரத்தை பெற்றதில் நானும் ஒருவன்.

அதிகம்  மக்கள் குளிர் என்றால் நல்லாக உறங்கனும் என்ற ஆசைவரும்!

ஆனால் பொருளாதார தேடலில், அதிகாலையில் உடம்பை மூடிக்கொண்டு ஒடும் எத்தனை உறவுகள் இந்தக் குளிரையும் பொருள் படுத்தாது பொருள் ஈட்ட ஓடுகின்றார்கள் என்ற எண்ணத்தை குளிரில் நடக்கும் போது எண்ணுவேன்.

அதிலும் பனிக்கால இரவு பகல் ஒரு இன்பம் தான்!

பனிக்கட்டியை அள்ளி வீசும் சிறுவர்கள், குளிரில் நடுங்கும் நண்பனின் ஆடைக்குள் பனிக்கட்டியை செருவி குளிரில் நடுங்க வைக்கும் விளையாட்டு..!

 பனிச்சறுக்கல் போகும் சகஊழியனின் விடுமுறை நாட்கள்!

அதிகம்  மக்கள் வெளியில் வராததால் உணவகங்கள் ஈ ஓட்டும் வேலை நாட்கள் என சுகமானவைதான!

அதிலும் காதலர் தினம் என்று  குளிர்காலத்தின் இந்தநாட்களில் அதிகம் புதியவகைச் சாப்பாடு, இனிப்பூட்டிகள் செய்தல் என்று, வேலையில் வரும் கனதியான மாற்றங்கள் என   காதலர் தினம்  ஓடியே போய்விடும்.

அதுவும் உணவகங்களில் வேலை செய்வோருக்கு விடுமுறை இல்லை..

நம்மவர்களுடன் வேலை செய்தால் விடுமுறை இல்லை-எடுக்க முடியாது.

'இருபது வருடமா நானே வேலை செய்யிறன் ஒரு நாளும் காதலர் தினம் என்று விடுப்பு எடுத்ததில்லை இப்ப வந்த உனக்கு காதலியோடு கடலை போட விடுப்போ..? வேலையைச் செய்!' என்று வேதாந்தம் பேசும் சகஊழியர்...

காதலியே இல்லை இதில் வேற காதலர் தினம் பாரு அதுகளை! என்று பிரென்சு தேச காதல் ஜோடிகளை ஏக்கத்தோடு எள்ளி நகையாடும் நண்பர்கள் ஒரு புறம் என்றால் !

ரயில் பயணத்தில் வரும் நண்பர்களில் என்ன காதலர்தினத்திற்கு அன்பளிப்புக் கொடுத்தாய் புதுப்பொண்டாட்டிக்கு என்று கலாய்ப்போர் சிலர் .

'இன்று ஒரே வேலை மனிசிக்கு தொலைபேசியே எடுக்க முடியல அலைவரிசைகிடைக்கல' என்று வேதனையைச் சொல்லும் உறவுகள் என்று இந்த குளிர்கால நாட்கள் வியப்பாகச் செல்லும்.

அப்போதெல்லாம் நான் மீனாவைக் காதலிப்பேன்.!

மீனாவை ஒரு நடிகையாகத்தான் பலர் தெரிந்து வைத்திருப்பார்கள் .

ஆனால் மீனா நல்ல குரல்வளம்மிக்க பாடகி.

அழகான ஒரு  இசைத்தொகுப்பில் சில பாடலை பாடியிருக்கும் கண்ணழகி மற்றும் மனோஜ் k பாரதி.

மனோஜ்- தமிழ்த்திரை உலகில் இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மகன் தோற்றுப்போன ஒரு நல்ல நடிகன். அவர் ஒரு இணை இயக்குனர்.

அதையும் தாண்டி அவர் ஒரு இசைப்பேழை வெளியிட்டார்.  16 வயதினிலே என்று... அதில் இருக்கும் 10 பாடலில் ஒவ்வொரு பாடலும் கிராமிய மனம் கமழும் .

அந்தப்பேழை மீனாவும், மனோஜ்சும் சேர்ந்தும், தனித்தனியாகவும் என பாடல் பாடிய  இசைக்கொத்து. என் கார்கால பின்னிரவில்  மனோஜ்,மீனா தனித்தனியாக பாடிய இப்பாடல் காதோடு சங்கீதம் பாடும் .

எனக்குப் பிடித்த காதல் வந்து  என்று அதைப்பாடுவது மீனா. அந்த பாடலைத்தான் காதலிக்கின்றேன் ..

இசை முரளிதரன்

பாடல் ஆசிரியர் -புஸ்பவாசகன்.

எத்தனை தரம் கேட்டாலும் சலிக்காத பாடல் .
நான் தொலைத்தவை எத்தனையோ  அதற்கு எல்லாம் கவலைப்பட்டது இல்லை.

ஆனால் தேடினாலும் கிடைக்காத பொக்கிஷங்களாக சேகரித்து வைத்திருந்த சில பாடல்கள் போய்விட்டது... இந்தப்பாடல் கையில் தங்கிவிட்டது.

காதலைக் கொண்டாடும் உறவுகளுக்கு தனிமரம் தரும்  வாழ்த்துப் பாடல்.

39 comments :

Yaathoramani.blogspot.com said...

பொக்கிஷம் என நீங்கள் குறிப்பிடுவது மிக்ச் சரியே
இசையும் குரலும் பாடல் வரிகளும்
நம்மை சிறிது நேரம் சொர்க்கத்தில் நிறுத்திப் போவது நிஜமே
பகிர்வுக்கு நன்றி

Yaathoramani.blogspot.com said...

Tha.ma 3

ஹேமா said...

காதல் தினத்தில் பலதும் பத்துமாக பதிவு.முதல் முதலாகப் பார்த்த பனிமழை எனக்கும் மறக்கமுடியாத நினைவில்.மீனாவின் பாடலைப் பதிவில் தந்திருக்கலாமே நேசன்.அன்பான காதலர்தின வாழ்த்துகள் !

Unknown said...

மாப்ள பாடல் அப்படியே எங்கனயோ கொண்டு போகுறாப்ல இருக்குய்யா...நீர் சொன்னது சர்தான்...நன்றி!

மகேந்திரன் said...

வணக்கம் நண்பர் நேசன்,
பாடல் வந்த புதிதில்
கேட்டு கேட்டு ரசித்த பாடல் இது.
நினைவிற்கு கொண்டு வந்தமைக்கு
நன்றிகள் பல.

கோகுல் said...

இந்த பாடல் இப்பத்தான் கேக்குறேன்.
உங்க ரசனையை மெச்சுகிறேன்.
காதலை கொண்டாடுவோம்.

முத்தரசு said...

காதல் - பாடல் - சர்தான்

Unknown said...

பாடலை வார இறுதியில் வீட்டில் கேட்கிறேன்!

Unknown said...

//அப்போது இந்த தனிமரத்திற்குப் புரியாத 'கார்காலம் என்றால் என்னவென்பதை' பாரிஸ் வந்த புதிதில் அனுபவித்து தெளிந்தேன்//
தெளிஞ்சுட்டீங்களா பாஸ்? அவ்வ்வ்!

Admin said...

தாங்கள் குறிப்பிட்டது அருமையான பாடல்..இதமான காதலை சொல்கிறது..இன்றைய நாளில் அதைப் பகிர்ந்தது சிறப்பு.

ம.தி.சுதா said...

///மீனா நல்ல குரல்வளம்மிக்க பாடகி.////

நன்றி அண்ணா...

அவர் விக்ரமுடன் சேர்ந்து படித்திருக்கிறார் எனக் கேள்விப்பட்டேன் ஆனால் அதை கேட்க முடியாமல் போய்விட்டது.....

நல்ல விடயப்பரப்பு ஒன்று...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
எனக்கே ஆப்பு வைத்துள்ள இலங்கை அரசின் புதிய சட்டம்

Yoga.S. said...

வணக்கம் நேசன்!அருமையான பகிர்வு/பாடல்!காதலர் தினத்தில் பொருத்தமாக இருந்தது!வாழ்த்துக்கள்!!!!

தனிமரம் said...

நன்றி ரமனி ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

நன்றி ஹேமா வருகைக்கும் கருத்துரைக்கும்.பாடலை இசையோடு கேட்பதில் சுகம் அதிகம் என்பதால் தான் பதிவாக்கவில்லை.இனிய காதலர் தின வாழ்த்துக்கள் உங்களுக்கும் தோழி.

தனிமரம் said...

நன்றி விக்கியண்ணா  வருகைக்கும் கருத்துரைக்கும்.பாராட்டுக்கும்.

தனிமரம் said...

வணக்கம் மகேந்திரன் அண்ணா.
நீங்கள் இந்தப்பாடலை கேட்டிருப்பதைக் கேட்கும் போது சந்தோஸமாக இருக்கு சில பாடல்கள் அதிகம் பேசப்படுவது இல்லை அதுதான் எனக்குப் புரியாத புதிர்.
நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

நன்றி கோகுல் வருகைக்கும் கருத்துரைக்கும் புதியவர்களுக்கு இந்தப் பாடல் போய்ச் சேரவேண்டும் என்ற அவல் உங்களைப்போன்றோரின் கருத்தைக் கேட்கும் போது இன்னும் இருக்கும் பாடல்களை வலையேற்றனும் என்ற ஆசை.

தனிமரம் said...

நன்றி மனசாட்சி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

பாரிசில் குளிர் -8,-7 என்கின்றபோது உணராமல் இருக்க முடியுமா ஜீ! ஹீ ஹீ

தனிமரம் said...

கண்டிப்பாக கேளுங்கள் ஜீ ரசிப்பீர்கள். நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

நன்றி மதுமதி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

நன்றி மதிசுதா  வருகைக்கும் கருத்துரைக்கும் நல்ல குரல்கள் சிலதடையை தாண்ட முடியாமல் இருக்கு.

தனிமரம் said...

நன்றி யோகா ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும் எல்லாம் உங்க ஆசீர்வாதம் தான் நல்ல விடயங்களை நல்ல நாளில் பகிர காரணமாகின்றது..

தனிமரம் said...

பாடல் இணைப்புத் தந்து பதிவை அலங்கரித்த நிகழ்வுகள் கந்தசாமிக்கு பின்னூட்ட நண்பர்களுடன் சேர்ந்து நானும் சிறப்பு நன்றியைத் தெரிவிக்கின்றேன்!

நிரூபன் said...

வணக்கமுங்கோ தனிமரம் சார்,

நல்ல பாடல்,
மீனா பாடல் கூடப் பாடுவார் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. இன்று தான் மீனாவின் இனிய குரலில் ஓர் பாடலைக் கேட்டிருக்கிறேன்.

காதலர் தினத்திற்கு ஏற்றாற் போல, ஊரெங்கும் வியாபார அந்தஸ்த்து நாளில் கொண்டாட்டப்படும் காதல் பத்தி கனிவான ஓர் பதிவு

KANA VARO said...

ஆனால் நானும் மீனாவைக் காதலிக்கின்றேன்..... //

ரொம்ப பழைய டேஸ்ட்டா இருக்கும் போல இருக்கு

KANA VARO said...

மீனா பற்றி நிறையவே சொல்லியிருக்கீங்க. பாடல் அருமை. நட்சத்திர கலைவிழாக்களில் மீனா பாடி கேட்டிருக்கன்

Anonymous said...

காதல் தினத்தில் ரசனையான
பதிவு நேசன்...

காதலர் தின வாழ்த்துகள்...

MaduraiGovindaraj said...

அருமையான பாடல் மனதை வருடுகிறது

தனிமரம் said...

வணக்கம் நிரூபன் . 
தெரிந்தவிடயத்தை பகிர்ந்து கொண்டேன் நல்ல நாளில் மீனாவையும் கேட்டு ரசிக்கனும்  நண்பர்கள் என்று .நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும். 

தனிமரம் said...

ரொம்ப பழைய டேஸ்ட்டா இருக்கும் போல இருக்கு 
//பழசு என்றாலும் சுவையா இருக்கு பாடலைச் சொன்னேன் வரோ. அவ்வ்வ்

தனிமரம் said...

நன்றி வரோ அண்ணா வருகைக்கும் கருத்துரைக்கும் .மொழியைக் கொல்வோரை விட மீனா குரல்வளம் மிக்க பாடகி ஆனால் சந்தர்ப்பங்கள் அமையுது இல்லை.

தனிமரம் said...

நன்றி ரெவெரி  வருகைக்கும் கருத்துரைக்கும் .உங்களுக்கும் காதலர் தின வாழ்த்துக்கள்.

தனிமரம் said...

நன்றி கோவிந்த ராஜ் வருகைக்கும் கருத்துரைக்கும் .உங்களின் முதல் வருகையை தனிமரம்  அன்போடு வரவேற்கின்றது .

Unknown said...

நேசன்,
நல்ல பதிவு..
பாரிஸ் குளிரில் இந்தப் பாடலோடுதான் உறக்கமா?

Unknown said...

நேசன்,
நல்ல பதிவு..
பாரிஸ் குளிரில் இந்தப் பாடலோடுதான் உறக்கமா?

ராஜி said...

நானும் அந்த பாடலை கேட்டு ரசித்ததுண்டு பகிர்வுக்கு நன்றி சகோ

தனிமரம் said...

நன்றி அப்பு வருகைக்கும் கருத்துரைக்கும் .பாடல் கேட்கும் போது மயில் இறகு வருடுவது போல இருக்கும் தூக்கம் வரும் தன்னாலே!

தனிமரம் said...

ராஜி  அக்காளின் முதல் வருகை நல்வரவாகட்டும் தனிமரத்திற்கு. நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.