வணக்கம் உறவுகளே.
நீண்ட நாட்களின் பின் ஒரு தரமான ஒரு படத்தினைப் பார்த்தேன் !
அந்தப்படம் பற்றி உங்களுடன் சிலவிடயங்களைப் பகிரலாம் என்று நினைக்கின்றேன்.

இது விமர்சனம் இல்லை
மனோஜ். (GIHAN DE CHICKERA )பட்டதாரி இளைஞ்ஞன் .அவன் உழைப்பை நம்பியிருக்கும் குடும்பம்,,வீட்டுப் பணிப்பெண் வேலைக்கு அரபுலகம் போகத்துடிக்கும் அடித்தட்டு குடும்பத்தலைவி, இரண்டு வயது போன பாட்டியுடன் தன் இயலாமையை கடிந்து கொள்ளும் இளைஞன், ஸ்டாலி .
(DHARMAPRIY A DIAS)
தன் கணவரையும் வெளிநாட்டுக்கு அனுப்பனும் என எதிர்பார்க்கும் குடும்பத்தலைவி.
,கையில் காசு வந்ததும் உன்னை கலியாணம் கட்டுறன் காத்திருப்பாயா ?என ஏங்கும் காதலன் .
வெளிநாட்டுக்கு ஆட்களைக் கடத்துவதற்கு முகவர் (மகேந்திரா )செய்யும் திருகு தாளங்கள் (மகேந்திரவைப் பார்த்து எத்தனை வருடம் ஆச்சு).
வெளிநாடுகள் ஏன் இலங்கையர்கள் வெளிநாட்டில் வேலை செய்ய ஆர்வம் இருப்போருக்கு ஒரு சந்தர்ப்பத்தைக் கொடுக்கக்கூடாதா?
, கஸ்ரப்பட்டு வாங்கிய சுதந்திரம் பற்றித் தெரியாத புதியதலைமுறையின் அரசியல் சித்து விளையாட்டு,.
படிக்க வேண்டிய மாணவன் வேலைக்குப் போகும் சமூக அவலம். கிறிக்கட் மட்டுந்தான் விளையாட்டா ?
மற்றவை எல்லாம் உங்கள் கண்களுக்குத் தெரிவதில்லையா என ஏராளமான கேள்விகள் மூலம் ஒருத்தன் சிந்தனையை சிறைப்பிடிக்க முடியுமா ?
சமூகத்தின் இயல்பு முகத்தினை தயக்கம் இல்லாமல் வெள்ளித்திரையில் காட்ட முடியுமா?
காதைக்கிழிக்கும் வாய்ச் சவால் இல்லை,
விழியை பிதுங்கவைக்கும் கதாநாயகியின் அங்கத்தை தேவையில்லாமல் காட்டும் நிலை இல்லை.
பிரமாண்டம் என்ற போர்வையில் சமூக அவலத்தைச் சொல்லாமல் போகும் அன்னிய இறக்குமதி இல்லை.
தலைவன் பொருளீட்ட வேண்டும் ஆனால் அதற்கு வெளிநாட்டிற்குப் போகனும் எப்படிப் போகலாம் வேலைவாய்ப்புக் கேட்டு வெளிநாட்டின் (ஐரோப்பிய)தூதுவர் ஆலயத்தில் விசா கேட்டு விண்ணப்பிக்கலாம் .
விண்ணப்பித்தால் உடனே விசா கொடுப்பார்களா ?
விண்ணப்பிப்போருக்கு தகுதி இல்லை என்று அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் வேறு மார்க்கம் கிடையாதா ?
ஏழ்மையில் இவர்கள் உழைத்து கடனில் இருந்து மீளவேண்டும் என கனவுகானும் இவர்களுக்கு. வழிகிடைக்காத என காத்திருக்கும் போது !
ஒரு சந்தர்ப்பம் கிடைக்கின்றது அவர்கள் வெளிநாடு போக எப்படிப் போனார்கள்?தெரிந்து கொள்ள ஆசையா ? கானுங்கள் மச்சான் திரைப்படத்தை.(2008)
.நாட்டில் எத்தனைபேருக்குத் தெரியும் இன்னொரு விளையாட்டை பற்றி.தெரிந்து கொள்ளுங்கள்
வசனகர்த்தாக்கள் கைதட்டவைத்தவை-( RUWANTHIE DE CHICKERA & UBERTO PASOLINI)
நாய் மூத்திரம் கழித்தால் நல்ல சகுனம் என்றதன் ஊடாக சாஸ்திர மூடநம்பிக்கை.
எந்தநாட்டுக்குப் போனாலும் நீ இரண்டாம் குடிமகன் தான்.
உனக்காக பிரார்த்திக்கின்றேன்(சேவிக்கின்றேன் என்ற வார்த்தையை யாரும் சுஜாத்தா போல பாவிக்கவில்லை )
இன்றும் ஒருத்தன் பெண்பார்க வந்திட்டுப் போறார்?
அம்மா இந்த சூட்கேசில் என்னையும் வைத்துக்கூட்டிக் கொண்டு போ என்று கேட்கும் சிறிமி!
இரண்டு வருடம் தானே போய்ட்டு வாரன் என்ன சொல்லுறீங்க!
கப்பல் வந்து கொண்டிருக்கு போய்விடுவீங்க!
வெளிநாட்டு விசாவுக்கு காசு வாங்கிக் கொண்டு விடலாமே (ஊழல் செய்து)
இலங்கை பற்றி இவங்களுக்கு என்ன தெரியும்.
?தேசப்பற்று (சுபீட்சமாக சேர்ந்திருந்தால் தான் முடியும்!)
புத்த பிக்கு என்றால் விசா உடனே தருவார்கள்.
அவளுக்கு என் மேல் சரியான காதல். என்னை எந்தளவுக்கு நேசிக்கின்றாள் என்று புரியுது.
சிறுவனின் வியாபார பேரம்பேசும் திறமையில் மின்னும் அழகு!
ஒவ்வொரு வார்த்தைக்கும் வார்த்தைகள் அதிகம்.
ரியாஸ்- அவரின் விமர்சனத்திற்கு http://riyasdreams.blogspot.com/2011/12/blog-post_29.html
கமராவின் மூலம் கடந்து வந்த ஊர்களை காட்சிப்படுத்தியவர் கரங்களுக்கு தங்க மோதிரம் போட நினைப்பது- (Photography: STEFANO FALIVENE).
சேரிமக்களும் இந்த நாட்டுக் குடிமகன்கள் தான்
.தொட்டலங்கா,மாதம்பிட்டிய கெசல்வத்த ,களனிப்பக்கம் போய் வாருங்கள்.கொழும்பின் இன்னொரு முகம் தெரியும்!
இப்படி வாங்க
இலங்கை வங்கிக்கட்டிடம் தான் உயர்ந்த கட்டிடம் என்று விட்டு கேக் வீதியில் இருக்கும் குடிசையைக் காட்டியது.
இப்படி நான் அலைந்த வீதிகள் எல்லாம் மீண்டும் ஞாபகம் வரவைத்துவிட்டது.
இங்கே-இயக்குனரின் இதயம் பேசுவது-UBERTO PASOLINI இத்தாலி நாட்டவராம்)
ராஜன் பள்ளிக்குப் போகாமல் வேலைக்குப் போகின்றாயா?
கையயில் இருந்த காசைக்கொடுத்துவிட்டு கடன்காரன் வரும் போது வீட்டுக்குள் ஒழிக்கும் காட்சி இயக்கியவிதம்.
கேள்வியாலயே வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் போர்வையில் இலங்கை வந்து சட்டவிரோதமாக வெளிநாட்டுக்குப் போகும் ஆசிய நாட்டவர்கள்.
பாலியல் தேவைக்காக ஹோட்டலில் இருப்போர் விலைபோகும் பொருளாதார அவலம்.
இத்தாலியில் இருந்து வந்த பார்சலைப் பார்க்கும் அன்பின் வெளிப்பாடு ,ஆற்றாமையின் நக்கல்,
அன்பைச் சொல்லும் முத்தம் .
அரவணைக்கும் தம்பதிகளின் அன்பின் வெளிப்பாடு.
வெளிநாட்டு வாழ்க்கையைச் சொல்லும் திறந்த வெளியில் அவர்கள் போகும் காட்சிகள்..
மூத்த நடிகை மாலினி பொன்சேக்காவைத் தவிர.
சின்னத்திரைப் பட்டாளங்களை பயம் இல்லாமல் இயக்கி வெற்றிகரமான ஒரு படம் ஆக்கியதற்கு இன்னும் பாராட்டவார்த்தைகள் முண்டியடிக்குது...
என்றாலும் பின்னனி இசையில் கொஞ்சம் கவனம் எடுத்திருக்கலாம்.
.
1மணித்தியாலம் 50 நிமிடம் 10 நாளிகைக்கு நல்ல படம் பார்த்த திருப்தி சகோதர மொழி புரிந்தவர்களுக்கு.
.புரியாதவர்கள் ஆங்கில மொழியில் வரும் விளக்கத்தை நோக்கவேண்டும்.
சிறிய முதலீட்டில் பலநாட்டுக்கூட்டுத் தயாரிப்பு எப்படி எல்லாம் நம் சகோதரப்படைப்பு பெருமைப்பட வைக்கின்றது.
ஈழத்து தமிழ் சினிமாவிற்கு இவை எல்லாம் வழிகாட்டுமா????என்ற ஏக்கம் என்னுள்ளே!
இந்த லிங்கில் சென்றால்
http://www.srilive.co/view/198/machan-sinhala-movie/
தெளிவாக படத்தினைப் பார்க்க முடியும். ஆங்கில சப் டைட்டில் இல்லை என்று ஞாபகம் இருக்கட்டும்! -
நன்றி ரியாஸ் நல்ல படத்தை பார்க்காமல் போயிருப்பேன் .உங்கள் பதிவு வராமல் போய் இருந்தால்! இப்படியான படங்களை தொடர்ந்து அறிமுகம் செய்யுங்கள்!

29 comments :
நல்லதொரு படத்தை அடையாளம் காட்டியமைக்கு நன்றி. படத்தை போய் பார்க்குறேன்
ரொம்ப நாள் கழிச்சி நல்ல படம் பார்த்தீங்களா? ஓ.கே. சகோ. மசாலா படங்களுக்கு இந்த மாதிரி படங்கள் எவ்வளவோ தேவலாம்.
வணக்கம் நேசன்!விமர்சிக்கவும் தெரிந்திருக்கிறது.பாராட்டுக்கள்.பொழுது கிட்டும்போது பார்ப்போம்!மொழி புரியாவிட்டால் என்ன?உங்கள் விமர்சனத்தின் மூலம் ஓஹோ,அப்படித்தான் இருக்க வேண்டும்.அவர் சொல்வது இதுவாகத்தானிருக்கும் என்று கணித்துவிட்டால் போகிறது,ஹ!ஹ!ஹா!!!!!!!(உள்ளதைச் சொன்னேன்,கிண்டல் அல்ல!)///ராஜிக்கு ஒரு பால்கோப்பி,ஸ்ட்ராங்கா!
அடடா என்னைக்கவர்ந்த ஒரு திரைப்படம் உங்களையும் கவர்ந்திருக்கிறது..
நகைச்சுவையாகவும்,விளையாட்டாகவும் அடித்தட்டு மக்களின் வாழ்க்கை நிலையை நச் என்று சொன்ன இந்த இயக்குனரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
நானும் கொழும்பில் வாழ்ந்த காலப்பகுதியில் இவ்வாறான சேரி/குடிசையில் வாழும் நிறைய கடந்து சென்றிருக்கிறேன்.. அதனால் இந்தப்படம் என்னை மிகவும் கவர்ந்துவிட்டது.
//தொட்டலங்கா,மாதம்பிட்டிய கெசல்வத்த ,களனிப்பக்கம் போய் வாருங்கள்.கொழும்பின் இன்னொரு முகம் தெரியும்!//
உண்மை.. ஏன் இந்தப்படம் அதிகம் படமாக்கப்பட்ட மோதர மட்டக்குளி மற்றும் கிரேண்ட்பாசின் சில பகுதிகள், பேலியகொட இங்கேயும் கானலாம்.
//நன்றி ரியாஸ் நல்ல படத்தை பார்க்காமல் போயிருப்பேன் .உங்கள் பதிவு வராமல் போய் இருந்தால்! இப்படியான படங்களை தொடர்ந்து அறிமுகம் செய்யுங்கள்!//
எதுக்கு இவ்வளவு பெரிய நன்றிகள்... இந்த படம் வந்தவுடன் இதன் கதையை கேள்விப்பட்டு பார்க்க வேண்டும் என நினைத்தாலும் அப்போது முடியவில்லை.. பின் எழுத்தாளர் எஸ்.ரா அவர்களின் பக்கத்தில் இப்படத்தை பாராட்டி எழுதியிருந்தார்.. அதன்பிறகு பார்த்துவிடவே வேண்டும் என்ற எண்ணத்தில் டவுன்லோட் செய்து பார்த்து விட்டேன்..
இன்னும் ஒரு சில சிங்களப்படங்கள் பார்க்க வேண்டும் பார்த்துவிட்டு எழுதுகிறேன்.
மாலனி பொன்சேகாவின் வேறு ஒரு பட ஸ்டில் போட்டிருக்கிங்க அது இதுக்கு சரிவராது என நினைக்கிறேன்..
இப்படி ஒரு விமர்சனம்.பார்க்காமல் எப்படி.நன்றி நேசன் - ரியாஸ் !
வாங்க ராஜி உங்களுக்குத் தான் முதல் பால்கோப்பி இன்று தனிமரம் பரிசாகத் தருகின்றது. நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.
வாங்க துரைடேனியல் உங்கள் முதல் வருகைக்கு நன்றிகள். இந்த மாதிரி படங்கள் கண்டிப்பாக ஊக்கிவிக்கப்படனும் சகோ. உங்கள் கருத்தும் சரியே .நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.
வணக்கம் யோகா ஐயா. நன்றி உங்கள் பாராட்டுக்கு .நிச்சயம் இந்த வகைப்படங்கள் பார்த்தால் தான் இயல்பு வாழ்க்கையை எப்படி மக்களிடம் கொண்டு போகனும் என்ற உணர்வைக்கொடுக்கும்!நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.
ராஜிவுக்கு ஸ்ரோங் பால்கோப்பி . ஹீஹீ
வாங்க ரியாஸ்!
இது படம் என்று மட்டும் சொல்லமுடியாது பலரின் வாழ்க்கைத் தொகுப்பு.
உண்மைதான் ரியாஸ் !
கொழும்பின் புறநகர்ப்பகுதி இன்னும் அதிகம் வனத்தமுல்ல முல்லேரியா தொடக்கம் அங்கோட வத்தளை என நீண்ட இடங்களை நானும் அனுபவித்திருக்கின்றேன்.
நிச்சயம் எழுதுங்கள் ரியாஸ் அப்போது தான் நேரம்கிடைக்கும் போது நல்ல கலைப்படைப்புக்களை சிலாகித்துப் பேச முடியும்.
இல்லை ரியாஸ் இதில் மாலினியின் ஸ்டில் போடவில்லையே நான் . நன்றி வருகைக்கும் கருத்துரைகளுக்கும்.
நன்றி ஹேமா வருகைக்கும் கருத்துரைக்கும்.
நல்ல படம்..
இயக்கம் மிகுந்த மக்களின்
இயல்புநிலை வாழ்க்கையை
இயல்பாக வடித்திருக்கிறது படம்..
பகிர்வுக்கு நன்றிகள் நண்பர் நேசன்..
சிறிய முதலீட்டில் பலநாட்டுக்கூட்டுத் தயாரிப்பு எப்படி எல்லாம் நம் சகோதரப்படைப்பு பெருமைப்பட வைக்கின்றது.
பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..
படத்தை அறிமுக படுத்தியமைக்கு நன்றி
நன்றி மகேந்திரன் அண்ணா வருகைக்கும் கருத்துரைக்கும்.
நன்றி இராஜராஜேஸ்வரி அம்மா வருகைக்கும் கருத்துரைக்கும்.
நன்றி தமிழ்தோட்டம் வருகைக்கும் கருத்துரைக்கும்.
நேசன் அழகான விமர்சனம் தந்திருக்கிறியள்.
சிங்களப்படம் பற்றிய பதிவு முன்னொருகாலத்தில் சிங்கள நண்பர் நண்பிகளுடன் கொழும்பில் றொக்ஸி, ஓடியன்... தியேட்டர்களில் படம் பார்த்த ஞாபகங்களை மீட்டுவிட்டது.
மாலனி பொன்சேகா ஒருகாலத்தில் எங்க கனவுக்கன்னி.
நன்றி அம்பலத்தார் பாராட்டுக்கு.
றொக்சியில் நானும் அதிகபடங்கள் பார்த்திருக்கின்றேன். உங்களுக்குப் பின்னாடி வந்த காலத்தில்.
இலங்கையின் இலங்குயில் என்னோடு கவிபாடுதோ என்று எங்கள் மாமாவும் மயங்கிக் கிடந்தார் அந்த வகையில் நீங்களும் சேர்ந்துவிட்டீர்கள். நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.
Post a Comment