16 February 2012

மலையகத்தில் முகம் தொலைத்தவன்!-6

பங்கஜம் பாட்டி கலியாண வேலையில் வீட்டை சுன்னாகம் சந்தை போல ஆக்கிவிட்டா !

வடக்கு வேலியை அடைக்கும் சின்னராசுவை. காலையிலே கத்த வெளிக்கிட்டா .

டேய் சின்னராசு மாடுகள் வேலியில் உரசிக்கொண்டு போகமல் இருக்க நல்ல கருக்குமட்டையை குறுக்கால போட்டு காவோலை வேலியை அடை .
வேலியை அடைக்கும் முறை பார்க்கவேணுமா இங்கே செல்லுங்கள்-
என்று சொல்ல
என்ன ஆத்தா .

இந்தவீட்டு வேலியை எத்தனை வருசமா நான் அடைக்கிறன் .வேலியை அடைக்கும் விளக்கத்தை இங்கே பார்க்கலாம்
http://www.thanimaram.org/2011/05/blog-post_3429.html
எனக்கு வேலை சொல்லுறியலோ?
 என்று அவன் கோபமாக கேட்க.

 ஆமா இப்ப எதிர்துப் பேசு  மழைக்காலத்தில் பின்னாடி வந்து அரிசி கொடு ,தேங்காய் கொடு ,என்று இந்த பங்கஜத்திட்டத்தான் வரனும்.

 அப்ப பாரு பங்கஜத்தின் குத்தல் பேச்சை .

அடுத்த கிழக்கு வேலியை கிடுகு போட்டு அடைக்கனும் .

வளவில் சின்னவனின் எல்லையை ஒழுங்கா கதியால் போட்டு அடைக்கனும்.

 பொட்டுப் பிரிச்சு பேரண்கள் போகம இருக்க நல்ல சீமேற்கிழுவையும் கிளுவங்கதியாலும் போட்டு நெருக்கி அடைக்கனும்.
 என்று சின்னராசு வேலைக் காரணிடம் விடாமல் சொல்ல .

ஏன்ன கலியாணமாப்பிள்ளை எங்களுக்கு கோப்பிக் கொட்டையும், தேயிலையும் கொண்டு வருவாரோ ?

 டேய் அவன் கலியாண மாப்பிள்ளை .ஒன்றும் காவிக்கொண்டு வரக்கூடாது என்று சொல்லி விட்டு இருக்கின்றன்.

 முன்னதுகள் செய்த செயலால் நான் நாளு வீட்டுக்குப் போக முடியாத படி வசைப்பேச்சுக் கேட்கின்றன்.

 என்ர மோனுக்கு எங்க பொண்ணு எடுப்பாய் என்று எள்ளி நகையாடும் நல்லல்மாவிடம் என்ர மருமகள் கையில் இருக்கும் போது வெண்ணையை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவதோ என்று சண்டை போட்டனான் .

இந்த வேலையைச் செய்ய வேண்டிய ஆண்பிள்ளைகள் எல்லாம் அங்கால போய்ட்டாங்க.

 இப்படி நான் ஓடிப்பறக்கிறன் .

நீ கதை கொடுத்து வேலைக்கள்ளனாக இருக்கின்றாய்.

 டேய்  பந்தல் போடனும் நாளைக்கு மறந்திடாத.

 வீட்டு வாசலில் இருந்து படலைவரை பந்தல் நீளம் வரனும் .

மணவறை வைக்கிறது வாறசனம் நிம்மதியாக இருந்து சாப்பிடனும்.

சொல்லிவிட்டீங்கதானே !
எல்லாம் நல்ல வடிவா செய்து தாரன் கொஞ்சம் காசைப் பார்த்துப்பாராமல் கொடுத்தாச் சரி .

உன்னட்ட காசு கொடுக்க மாட்டன்.

 நீ கள்ளுக்குடித்துப் போட்டு படுத்திடுவாய்.

 பிறகு நான் பையப்பைய உன்னப்பிடிக்க விடியக்காத்தால  ஓடிவரனும்.

 எனக்கு எத்தனை வேலை இருக்கு .

உன்ர பொண்டாட்டி நெல்லுக்குத்த வரும் போது கொடுத்து விடுறன் .
என்று பங்கஜம் பாட்டி சத்தம் போட்டால் சின்னராசு பெட்டிப்பாம்பாக அடங்கி விடுவான் .

என்ன சத்தம் போட்டாலும் பங்கஜம் பாட்டி வளவுக்குல் 5பனையை கள்ளுச் சீவ அவனுக்கு கொடுத்திருப்பதாலும் ,மாரிக்காலத்தில் விறகு ,குத்தரிசி,என அள்ளிக் கொடுப்பதாலும் சின்னராசு பங்கஜம் பாட்டி வீட்டு வேலை என்றால் தட்டாமல் ஓடியந்து செய்துவிடுவான்.

 இங்கே தடல் புடலாக வேலை ஆடியில் அமர்க்களப்பட .

அங்கே 5 வது மாமா செல்வனுக்கு சரியான காய்ச்சல் .

அப்போது பதுளையில் பரவியது கொலறா என்ற ஒருவகைக் காய்ச்சல் .

பலகுடும்பத்தில் இந்த இந்தக் காய்ச்சலால் மரணித்தவர்கள் பற்றி யாரும் பதிவு செய்ததாக நான் அறியேன்.

ராகுலும் இதைப்பற்றி பின்னால்  சிலர் வாய் மொழியாக கேட்டதே அன்றி எழுத்தில் தெரிந்து கொள்ளவில்லை என்கின்றான்.

காய்ச்சலிற்கு அப்போது  வெதமாத்தயா(நாட்டு வைத்தியர்)  தரும்  கசாயம் குடித்துக் கொண்டும் தன் நலத்தில் அக்கரை கொள்ளாதும் இருக்கும் போதுதான் அந்தக் கொடூர சம்பவம் நடந்தது.

... வருவான் முகம் தொலைத்தவன்!

24 comments :

Muruganandan M.K. said...

பதுளை நான் முதல் முதலாக மருத்துவனாக வேலை செய்யத இடம். படிக்க சந்தோசமாக இருந்தது.
நிறக் கொலரா என்பது காச்சல் அல்ல. கடுமையான வயிற்றோட்டம்.

Anonymous said...

கொடூர சம்பவம்..?

மலரும் நினைவுகள்...அனுபவம் தொடரட்டும் நேசரே

தனிமரம் said...

நன்றி மருத்துவர் ஐயா இந்தப் பதிவில் தவறு வராமல் இருக்க நீங்கள் தந்த ஆலோசனையை அடுத்த பதிவின் முதலில் சேர்த்துவிடுகின்றேன்.இந்த தனிமரத்திற்கு நீங்கள் தரும் ஆதரவுக்கு சிரம் தாழ்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

சம்பவங்களை நேர்த்தியாக
தொடுத்து கதைக்கும் நடை...
தங்களின் தனிச் சிறப்பு நண்பரே...

கொடூர சம்பவமா??
அடடா..

தனிமரம் said...

நன்றி ரெவெரி வருகைக்கும் கருத்துரைக்கும் .

தனிமரம் said...

நன்றி மகேந்திரன் அண்ணா வருகைக்கும் கருத்துரைக்கும் காத்திருங்கள் வலிகள் வரும் ..உங்களின் ஊக்கிவிப்பு இன்னும் எழுதத் தூண்டுகின்றது.

ஹேமா said...

எனக்கு என்ர அம்மம்மான்ர ஞபகம் வருது.அவவும் இப்பிடித்தான் நாட்டாமை பண்ணுவா !

MANO நாஞ்சில் மனோ said...

எதோ நினைவுகள் மலருதே நெஞ்சினிலே, எங்க அண்ணியும் இப்பிடித்தான் நாட்டாமை பண்ணுவாயிங்க...!!!

ஹாலிவுட்ரசிகன் said...

தொடரட்டும். உங்கள் பதிவுகளை கொஞ்சம் அழகாக்கலாமே? (Formatting)அப்போது வாசிக்க இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும்.

எல்லா ஊர் வழக்கையும் சரியாக தருகிறீர்கள். தொடரட்டும் ...

அம்பலத்தார் said...

வணக்கம் நேசன், முன்னையகாலத்தில் ஒரு கல்யாணம் என்றால் பந்தல்கால் நடுவது பந்தல்போடுவது பலகாரங்கள் சுடுவதென குறைந்தபட்சம் 1, 2 வாரங்களாவது வீடே ஒரு திருவிழாக் காலம்போல களைகட்டும். உங்கள் கதை அந்த ஞாபங்களை அசைபோட வைக்கிறது.

Yoga.S. said...

வணக்கம் நேசன்!மருத்துவர் பால்கோப்பி குடிக்க மாட்டாரோ,ஹ!ஹ!ஹா!!!!!!அருமையான தொடர்.படிக்கும்போது என்னை அறியாது ஒரு மகிழ்வும்,சோகமும்,நீ.....................ண்ட பெருமூச்சும்.

தனிமரம் said...

நன்றி ஹேமா வருகைக்கும் கருத்துரைக்கும் மூத்தவர்கள் பாட்டிமார் நல்ல நிறுவாக திறமைமிக்கவர்கள் இழந்து அவர்கள் அன்பை மட்டும் அல்ல அறிவுரைகளையும் தான்.

தனிமரம் said...

நன்றி மனோ அண்ணாச்சி வருகைக்கும் கருத்துரைக்கும் .வீட்டுக்கு ஒருவர் தொடர்கின்றார்கள் என்பதில் சந்தோஸம்.

தனிமரம் said...

நன்றி ஹாலிவூட் ரசிகன் வருகைக்கும் கருத்துரைக்கும் இனி வரும் காலத்தில் முயல்கின்றேன்.நன்றி உங்கள் ஆலோசனைக்கு..

தனிமரம் said...

வணக்கம் அம்பலத்தார். இன்றைய சந்ததிக்கு நம் அருமைகள் வாழ்வு முறைகள் தெரியாமல் போகின்றது அவசர உலகில் அவசரக்கலியாணம்கள் எல்லாம் அன்பை இணைக்க முடியாமல் போகும் தலைமுறையாகிவிட்டது.

தனிமரம் said...

நன்றி அம்பலத்தார் வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

வணக்கம் யோகா ஐயா!
மருத்துவர் ஐயா என் பக்கம் வந்த சந்தோஸத்தில் விருந்தாளிக்கு காப்பி கொடுப்பதைக் கூட மறந்து விட்டன். அத்தோடு எங்களின் சந்தேகத்தையும் போக்கிவிட்டார் காய்ச்சல் இல்லை வயிற்றோட்டம் என்று தெரிந்து கொண்டதில் வரவேற்ற மறந்ததை சுட்டிக் காட்டியதற்கு நன்றி அவருக்கு ஒரு ஸ்பேஸல் பால்கோப்பி கொடுப்போம். ஹீ ஹீ

தனிமரம் said...

என் பதிவுகளில் யோகா ஐயா எவ்வளவு சிரத்தையுடன் கவனிக்கின்றார் என்று நினைக்கும் போது மிகவும் பாக்கியசாலி நான். உங்கள் அன்புக்கு நன்றி. அடுத்த தலைமுறையினர் கிராமத்தை இழந்தது வேதனையே  எங்களை வளர்த்த பாட்டிமார் போல இந்தக்கால சந்ததிக்கு  வாய்க்க வில்லை நல பாட்டிமார் அன்பு வெளிநாட்டு வாழ்வோருக்கு. நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

shanmugavel said...

ஆவலத்தூண்டுகிறது.தொடருங்கள் அய்யா!

KANA VARO said...

எழுத்து நடை நன்றாக இருக்கின்றது. தொடர்ந்து படிக்கின்றேன்.

தனிமரம் said...

நன்றி சண்முகவேல் ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்!

தனிமரம் said...

நன்றி வரோ அண்ணா வருகைக்கும் கருத்துரைக்கும்!

காற்றில் எந்தன் கீதம் said...

பதுளை பற்றிய நினைவுகள் சுகமானவை
உங்கள் தொடர் மூலம் அவை மீட்டப்படுவது மகிழ்ச்சி நண்பா...

தொடருக்கு வாழ்த்துக்கள்...
தொடருங்கள் தொடர்கிறேன்

தனிமரம் said...

நன்றி தோழி காற்றில் என் கீதம். நிச்சயம் சில நினைவுகள் நீந்திச் செல்லும் தொடரில் வருகைக்கும் வாழ்த்துக்கும் கருத்துரைக்கும் நன்றி.