03 February 2012

வாங்க பழகலாம்.

 என்ன உறவுகளே.
 காதலர் தினம் வரப்போகின்றது.

 காதலன் /காதலிக்கு என்ன காதல் பரிசு கொடுக்கலாம் .என்ற யோசனையில் இருக்கின்றீர்களா?.

தங்கம் விற்கும் விலையில் இதயத்தைத் தவிர இனாமாக எதைக் கொடுப்பது என்று ஏகாந்தமாக கவலைப்படுகின்ற காதல் கிளிகளா?

  கண்கவரும் கல்லுவைத்த சேலையில் காதலி சினேஹாவைப் போல் சித்திரமாக இருப்பாள்!  ஆனால் பாக்கட்டில் இருப்பது  1000 ரூபாய் என்று என்னும் காதலனா நீங்கள் ?

அவருக்கு சாருக்ஹான் போல கோட் சூட் வாங்கிக் கொடுக்கனும் .பேசில் இருக்கும் கிரடிட் காட் எல்லை தாண்டிவிட்டதே  என்று வாடிப் போகும் காதலியா நீங்கள்.?

 எப்படிச் சொல்வது என் காதலை.
 அவரை /அவளை வீட்டுக்கு அழைத்து வந்து ஆத்தாவை மம்மி என்று சொல்ல வைக்கும் மாடன் காதலர்களா  நீங்கள் ? ரங்கநாதன் தெரு அட்சயபவனில்  ஒரு மாதுளை யூஸில் இரண்டு பேர்  இரண்டு மணித்தியாலத்தை  இறுக்கமாக செலவழிப்பவர்களா நீங்கள் ?

இப்படி எல்லாம் நீட்டி முழங்காமல் விடயத்திற்கு வா தனிமரம் என்று கல் எடுப்பது புரியுது !( ஹீ ஹீ வர வர பொறாமை உனக்கு ).

வாங்க பழகலாம் என்றால் .தனிமரம் முரண் பாட்டின் மூட்டை என்று முட்டை எறியும் உங்களுக்கு இன்று ஒரு இனிப்பூட்டி செய்து கை ஒடிக்கப் போறேன் . (இதை செய்து   செய்து என் கைதான் ஒடியுது).

வாங்க பழகலாம்.
.
இன்று நாங்கள் பார்ப்பது .
காதலியைக்  வீட்டுக்கு கூட்டியந்து தன் சமையல் திறமையைக் காட்டும் ஜோடிக்கிளிகள் சோதிக்கட்டும்   என்ற டாக்குமெண்டரி ..(ஏன் இந்தக் கொல வெறி)
  ஒரு சுவையூட்டியைச் செய்யும் வழிமுறை..

முதலில் வீட்டுக்கு வந்தவர்களை  வீட்டு வாசலில் வைத்துப் பேசிக் கொல்லாதீர்கள். அடி எடுத்து உள்ளே வாங்கோ என்று அன்பு மழையில் நனையுங்கள்.(அனுபவமா என்று கேட்காதீர்கள் )

 வீட்டில் இருக்கும் தொல்லை தரும் தொலைக்காட்சியைத் தீண்டாதீர்கள் (யோ அவனவன் தூங்கவே நேரம் போதல இதில தொல்லைக்காட்சியா)
..அன்பு  உறையும் அடுப்படிக்கு கூட்டிச் செல்லுங்கள் .
 (அதுதான் தொடர்களா காட்டுறாங்களே)

வந்தவுடன் மருமகளை/னை சமையல் அறையில் கருக  விட்டால் !என்று பேசுவோருக்கு சொல்லுங்கள். என்ற மருமகள் இலியானாவைப் போல சிம்புவைப்  போல இடுப்பு ஒடித்து ஆடவேண்டும் என்றால் இப்படியான உடல்பயிற்ச்சி தேவை என்று ஊர் வாயை மூடுங்கள் .

Moelleux chocolate.
.
 சாக்காலேட் கட்டி(கண்டோஸ்)- 250 கிராம்(chocolate) 
பட்டர்  (butter)  -     250 கிராம்
சீனி      --     200 கிராம்
கோதுமைமாவு -175 கிராம்
முட்டை-8
இனி செய்முறை  -1
-
முதலில் ஒரு நீர் கொதிக்கவைக்க  கூடிய ஒரு சட்டியில் .500 மில்லி லீட்டர் தண்ணீர் எடுங்கள். அதனை சூடு ஏற்றும்வண்ணம் காஸ் அடுப்பில்/விறகடுப்பில் வையுங்கள்.

இன்னொரு அகன்ற  வெள்ளிப் பாத்திரம் எடுங்கள் .பாத்திரம் எடுக்கும் போது பக்கத்தில் காதலியை முட்டிவிடாதீர்கள்  பாத்திரத்தாலேயே முதுகை நெளிக்கலாம். .

பாத்திரத்தினுள்  சாக்கலேல் கட்டியும்( கண்டோஸ்) ,பட்டரையும் சேர்த்து  .

ஆவி போகாத வண்ணம் மூடிய பின் அடுப்பில்  வைத்த சட்டியின் மீது  சூடேற்றும் வண்ணம் பாத்திரத்தை வையுங்கள்.

இனி ஒரு  15 நிமிடங்கள் கொதிக்கட்டும்.  .நான் பார்த்த பிகர் பாரு ஒரு சோனாக்கிரியுடன் திரியுது என்று என்னும் காதலிக்க மறுத்தவன் /வள் மனம் போல .(நன்றி சந்தானம்)


 செய்முறைப் படம் -1

 அதுவரை வீட்டில் இருக்கும்  நேரத்தில் உங்கள் எதிர்காலத்திட்டத்தைச் சொல்லுங்கள்..(பொருளாதாரம் வளருதாம்  மகிந்தர் சொல்லுறார்)

 இலியானவின் இடுப்பைப் போல உன் இடுப்பு என்று டாக்குத்தர் ரேஞ்சில் இம்சை பேசினான்/ள்  பூரிக்கட்டையால் புள்ளிக்கோலம் போட்டுவிடுவாள் புதுமைக் காதலியைப் புரிந்து கொள்ளுங்கள்

 இதுவரை உன்னை நேசிக்க செலவழித்த நேரங்களை எல்லாம் . இனி நீ  காதலைச் சொன்னதால் .

இனி மேல் வேலைக்கு ஒழுங்கா போகப் போறன் (இனி வலைபக்கம் லீவா தொல்லை தீர்ந்துச்சு)
.என் அடுத்த பயணம் நாடுகள் பார்கனும் நாம் ஜோடிப்புறாவாக ஊரைச் சுற்றுவோம் என்று விளக்கப்படுத்துங்கள்..


பிடித்த இசையை ரசித்து அதன்  இசையை தழுவி (காதலியை அல்ல) கவிதை வரிகளை  மீட்டிச் சொல்லுங்கள்.காதலையும் புரிந்து வாரிக் கொடுங்கள்   அன்பை மட்டும்.  

தங்கம் வாங்கித் தந்தாக் கள்வர்  பவுனைக் கொண்டு போகவும், கத்தியால் குத்துவதையும் பார்க்க என்னால் முடியாது அன்பே. !(எப்படி எல்லாம் யோசிக்கின்றாங்க)

என் செல்லத்திற்கு  நல்ல சாப்பாட்டுக்கடைக்கு நாலுவாரத்திற்கு ஒருக்கா கூட்டிக்கொண்டு போறன் ..

என்று ராஜபக்ச கூட்டணி 20 மாதம் பேசியது போல பேசுங்கள் .(.வீட்டுச் சாப்பாடு சரியில்லை என்பதை எப்படி உள்குத்து போடுறாங்கள்)

ஒன்றும் புரியாமல் முழிப்பாங்க உங்க காதலி நயந்தரா போல இவன்/ள் நல்லவனா கெட்டவனா?(.யாரப்பா தனிமரம் இப்படியா என்று திருப்பிக் கேட்பது .)


 மீண்டும் வாருங்கள் குசினிக்கு .இப்போது
சொக்கலேட் கட்டியும், பட்டரும் கரைந்து போய் இருக்கும் .

 படத்தில்  இருப்பது போல 2

சட்டியில் இருந்து இறக்குங்கள்  .

கையில் இருக்கும் அகப்பை/முட்டைக் கரண்டியால். நல்லாக கலக்குங்கள் தண்ணியாக வரும். (டாஸ்மார்க் அல்ல)

படம்  - 3
 .










அதன் பின் கோதுமை மாவையும், சினீயையும் கலக்குங்கள் ..மூன்றையும் சேர்த்து ஒரே பக்கத்திற்கு கலக்குங்கள் .பின் முட்டையை ஒவ்வொன்று ஒவ்வொன்றாக உடைத்து சாக்காலேட்  தண்ணி(முதலில் உடைத்துவைத்தால் நன்று) மீது  கலக்குங்கள் கொஞ்சத்தில் இறுக்கமாக வரும் பேசிப் பேசியே  கொன்ற காதலன் போல வேலை முடிந்தது. . 

பின்  அருகில் இருக்கும் அலுமினியக் கப்பினுல்  ஒரு கரண்டியால்  ஒவ்வொரு கப்பினுள் ஊற்றிவையுங்கள் .அதனை குளிர்சாதனப் பெட்டியில் வையுங்கள்.
 படம் -4

விரும்பிய நேரத்தில் மின்சார வெதுப்பு/ அதிகூடிய 180 பாகையில்,
அல்லது விறகு வெதுப்பில் அதிகூடிய  180 வெப்பத்தில்

5 நிமிடங்கள் வேக வைத்தால் .

அழகிய சாக்காலேட் கேக் உங்கள் வசம் .

இவர் தான் அவர்

இனிக்க கொஞ்சம் வெனிலா ஐஸ்கிரிம் உடன் அருந்தினால் உங்கள் காதலி போல தித்திக்கும்.






செய்முறையில் பிழை எனின் சேதாரம் பொருளுக்கு மட்டும்மல்ல உங்க காதலுக்கும் தான்.    ஹீஹீ


  

14 comments :

மகேந்திரன் said...

இப்பவே சாப்பிடனும் போல தோன்றுகிறது..
இனிமையானதொரு தருணத்தில்
இனிப்பு செய்யும் செய்முறை வழங்கிய
நண்பருக்கு நன்றிகள்...

இராஜராஜேஸ்வரி said...

இனிமையான பகிர்வுக்கு வாழ்த்துகள்..

ஹாலிவுட்ரசிகன் said...

செய்முறை பார்க்க லேசாத் தான் இருக்கு. ஆனா முட்டை, பட்டர் வேஸ்ட் பண்ணிட்டியேன்னு வீட்டுல அடி வாங்கப்போறேனோ தெரியல. ஹி ஹி

பகிர்ந்தமைக்கு நன்றி.

Unknown said...

அட செய்ஞ்சி பாத்துடரேன் மாப்ள நன்றி!

Yaathoramani.blogspot.com said...

விளக்கிய விதமும் படமும்
செய்து பார்க்கவேண்டும் என்கிற ஆவலைத் தூண்டினாலும்
கடைசி எச்சரிக்கை கொஞ்சம் பயமுறுத்திதான் போகிறது
பயனுள்ள பதிவு
த.ம 3

Yoga.S. said...

வணக்கம் நேசன்!இது எங்கே செய்வது என்ற ரகசியத்தை போட்டுடைத்தால்.....................சீ வேண்டாம் பிழைத்துப் போகட்டும்!(மனசாட்சி சொல்கிறது)அடுத்த வாரம் நானும் வெண்டைக்காய் குழம்பு வைப்பது எப்படி என்று சமையல் பதிவு போடப் போகிறேன்,ஹ!ஹ!ஹா!!!!!!!!!!

தனிமரம் said...

வாங்க மகேந்திரன் அண்ணா இன்று முதல்பால் கோப்பி உங்களுக்குத்தான்.
நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

Yoga.S. said...

தனிமரம் said...

வாங்க மகேந்திரன் அண்ணா இன்று முதல்பால் கோப்பி உங்களுக்குத்தான்.
நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்///நான் கேட்டனா?இல்ல நான் கேட்டனா?????மத்தியானம் நல்ல மரக்கறி சோறு சாப்பிட்டு கொஞ்சம் சரியிறதுக்கு முதல் என்ன இருக்கெண்டு பாப்பமெண்டு வந்தால்...............(மாய உலகம் ராஜேஷ் அகால மரணம்)

தனிமரம் said...

யோகா ஐயா இப்படி கோபிக்கலாமா கருதுரைகளுக்கு பதில் கொடுப்பம் என்ற போதே காப்பி கேட்டு வாடிக்கையாளர் வர ஓடிவிட்டேன் சமையல் அறைக்கு அதுதான் நிஜம். 
மற்றும் படி ஐயாவுக்கு 5 மணிக்குத்தான் அண்ணா கோப்பி  குடிப்பார் என்று தனிமரத்திற்கு தெரியும். ஹீ
ஹீ
 மாயா உலகம் ராஜேஸ் மரணமான தகவல் உண்மையா என்று தெரியாமல் தான் நானும் கருத்து எதனையும் நேற்றைய பதிவில் கூறவில்லை .அவரின் ஆத்மா சாந்தி அடையட்டும் அவர்கள் உறவுகளுக்கு அனுதாப செய்தி அனுப்பும் வழி தெரிந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள். மிகுதி நல்லிரவில் பதில் சொல்கின்றேன்.

தனிமரம் said...

நன்றி இராஜாராஜேஸ்வரி அம்மா வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

நன்றி ஹாலிவூட் ரசிகன் வருகைக்கும் கருத்துரைக்கும். முயன்று பாருங்கள். ஹீ

தனிமரம் said...

நன்றி விக்கி மாமா வருகைக்கும் கருத்துரைக்கும். முயன்று பாருங்கள்.

தனிமரம் said...

நன்றி ரமனி ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும். முயன்று பாருங்கள்.பயம் ஏன்??

தனிமரம் said...

வணக்கம் யோகா ஐயா. அங்கே பழகுவதை இங்கே பகிர்கின்றேன் மற்றவர்கள் பயன் பெறட்டும் என்று. ஐயா மீண்டும் பதிவு எழுத வந்தால் வாசிக்கும் முன்னால் வாசகனா இன்நாள் சகபதிவாளனாக மிகவும் சந்தோஸப்படுவேன் அப்படியே உங்கள் பழைய கூட்டணி மீண்டும் வரனும் .
நன்றி வருகைக்கும் கருத்துக்கும்.