06 February 2012

மலையகத்தில் முகம் தொலைத்தவன் -4

கிணற்றடிக்குப் போன பாட்டி முகம் கழுவி வேலியில் கிடந்த தாத்தாவின் சால்வையில் முகம் துடைத்தா .

. அருகில் இருந்த மணி வாழையைப் பார்த்த போது அடி வயிறு பத்தியது .

பாட்டியின் பெருமூச்சு ராகுலின் அம்மாவின் கண்களுக்குல் நீர் முட்டியது .

அந்த மணி வாழை இரண்டு குட்டி போட்டிருந்தது. வாழை நட்டுவைத்த இருவருக்கும் இன்று வீட்டில் இடம் இல்லை.

 இரண்டாவது மாமா தங்கமணி வேலைக்குப் போன பதுளையில் .

மஞ்சள் பூசும் மருதாணி வைக்கும் மூக்கையா மகள் விமலாவை விரும்பி முடித்ததில் .வீட்டில் புயல் வந்தது .

தோட்டக்காட்டில் வேலைக்குப் போனவன் .வீட்டுக்காரியாய் ஒரு இந்தியாக்காரியை இழுத்துக் கொண்டு திரிவதோ ?

என ஆத்தை எடுத்த காவடிக்கு ஆராலும் எதிர்த்துப் பேசமுடியவில்லை.

 சொத்தைப் பிரித்து (காணியும் வளவும்) சொந்தம் பிரித்த தாத்தாவும்.

 செத்துப் போனாலும் என் வீட்டு முற்றம் மிதிக்காத .என்று முழுகின கிணற்று நீரில் தான் மணி வாழையும் வளமாக வாழுது .

அன்று போன தங்கமணி மாமா விவசாயத்தில் முத்திரை பதித்தவர் .அதனால் தான்.

 அவர் கமநல சேவைத் தினைக்களத்தில் முக்கிய பதவியில் இருந்தார்

. பிடிவாதம் ,அவமரியாதை என்ற தேரில் அவரும் ஊருக்கு ஏறிவர விரும்பியதில்லை .

.முத்தவர் சண்முகம் மாமா தாத்தாவின் பேச்சை மீறாதவர் .இதை எப்படியும் சீர் செய்யலாம் என்ற கனவில் இருந்தவருக்கு கண்ணாடி வீட்டில் கல் எறிந்து கடுங்காயம் செய்தார் தங்கமணிக்கு அடுத்து வந்த செல்வா மாமா .

சொர்க்கதங்கம் போல சுண்டி இழுக்கும் சுந்தரி அடுத்த கடை அமரதாசவின் அன்னப் பதுமை லீலாவதியை .
கண்ணடித்து காதலித்து.

 ஊருக்கு போறன் என்று விட்டு கல்லாப்பெட்டியில்  எடுத்த காசு 75 ரூபாய்யுடன் இழுதுக் கொண்டு ஓடியது கல்கமுகவிற்கு.

காற்றில் வரும் சேதி போல தந்தி வந்த கடுதாசி வாசித்த கடைசிக்கு முதல் மாமா கனேஸன் .

சிங்களத்தியைக் கட்டிய மூதேவியை வெட்டிவிடுறன் .அவனை நம்பி வந்தவளையும் கொல்ல வேண்டும் என்று அப்போது இருந்த அரசியல் தாண்டவத்தில் தானும் இறங்கி .

கோபப்பட்டுப் போனது அப்போது ஊருக்குல் போராட்டக்குழுவாக முன் நின்ற ஈ.பீ.ஆர்.எல்.எப் இயக்கத்திற்கு.

இத்தனையும் பார்த்துக் கொண்டு இந்த மணிவாழையும் குட்டி போடுதே !

என் வம்சம் இப்படி ஊருக்குல் மானம் போய் விட்டதே? என்று பாட்டி பரிதவிக்கையில் .

 பிழை யார் பக்கம் என்று நோக்குவது என்று ராகுல் தாய் கண்கள் சிந்த யோகனுடன் வீட்டிற்கு வந்த சண்முகம் மாமா .

நாளை காலையில் யாழ்தேவியில் பதுளைக்குப் போறன். என்ற போது!

 என்ன அவசரம்?
 ஒரு கிழமை நின்று போகலாமே.

 இல்ல அம்மா ஐயா தனிய வரும்போதும் அவர் விருப்பம் இல்லாமத்தான் அனுப்பினவர் .

ஆவணியில் அடுத்தவன் (4 ) செல்லத்துரைக்கு முடிச்சுப் போடனும் என்று அப்பாவிற்கு ஞாபகப்படுத்து .என்ற பங்கஜம் பாட்டி தன் ஆசையைச் சொன்ன போது!

 இந்த மருமோனுக்கு ஒரு பெட்டப்பிள்ளையை பெறலயே .
என்று பகிடிவிட்ட அண்ணணுடன் குழந்தைப் புள்ளையோட பேசுற பேச்சா. அவனுக்கு இப்பத்தான் 10 வயது .

கள்ளுக்குடிக்கப்போன மச்சானும், மச்சானுமா ,

ரெண்டு பேரும் இந்தக் கதைதான் கதைச்சனிங்களோ ?

உஸ் உஸ் .
அங்கால ஆத்தையின் குரல் கேட்குது பேசாம போய் படுங்க அண்ணா .

காலையில் போறது என்றால் .புட்டு அவிச்சு கட்டித்தாரன் .

அதுவொன்றும் வேண்டாம். கொஞ்சம் புழுக்கொடியலும் ,அம்மா செய்து வெச்சிருக்கும் அரிசிமாப் பொரியும் போதும் .

தம்பிகளுக்கும் கொஞ்சம் கட்டிவை .

ஏண்டா மருமகனே யோகன் இந்த மாமாவை கடைசிகாலத்தில பார்ப்பியோ ?இல்ல பெட்டச்சியை பெத்துத் தரல என்று சின்னமேளம் காட்டுவியோ ?

சீ போங்க மாமா.

 நீங்க நேற்றுப் போன இராவணன் கூத்துப் பார்க்க கூடவரல .

கடைசி மாமா சோதி ஒழுங்கா என்னைத் தூக்கிக் காட்டல பார்க்க .

என்று தன் ஆசையைச் சொன்னான் ராகுலின் அண்ணன்.


 டேய் ராகுல் அப்பாட கூடப் போய் படுக்கலயோ.

 நாளைக்கு பள்ளிக்கூடம் வயிற்றுவலி என்று சாட்டுச் சொல்லு .

மாமாகூட தேயிலைப்பெட்டியில கட்டி அனுப்பி விடுவன்.

என்ற பேரண்கள் யாரையும் உசுறு இருக்கும் வரை வேலைக்கு ஊர்க்கடல் தாண்டி அனுப்ப மாட்டான் .

 என்ற பங்கஜம் பாட்டி .

டேய் மூத்தவனே இவங்கள் பேரண்கள் ரெண்டு பேருக்கும் .காவடி எடுக்க வைக்கின்றன் என்று சன்னதியானுக்கு நேர்த்தி இருக்கு .

நீ அடுத்த முறை வரும் போது ஆயத்தப்படுத்தனும் .

இப்ப ரெண்டு வருசமா யோகனையும் அவனேடு கந்திட்டு விடும் பழனியின் மோனையும் கூட்டிக்கொண்டு கதிர்காமத்திற்கு குஞ்சப்புவுடன் பாதயாத்திரை போறதையும் என்ர மோன்கள் செய்த வேலையால் போகவில்லை.

 அடுத்த வருஸம் சரி போகவேனும் .அதுக்குள்ள சரி தங்கமணி வருவானா ?

என்ற போது வீட்டு முற்றத்தில் .அமைதியாக அரிக்கன் லாம்புடன் சண்முகம் மாமி வந்து நின்றா .

சரிப்பா உன்னைக்கான வில்லை என்று மருமகள் வந்திட்டால் !

நீ போய்ட்டு காத்தால வா .என்று விட்டு பாட்டியும் மாட்டுத் தொழுவத்தில் மாடுகளுக்கு சரியா வைக்கோல் போட்டு இருக்கா .என்று பார்த்து விட்டு வந்து படுத்தா .

சேவல் கூவ முன்னமே சண்முகம் மாமா சாரத்துடன் முத்தமும் தந்து தன் கழுத்தில் இருந்த புலிப்பல் தங்கச் சங்கிலியையும் தன்  சின்ன மருமகன் ராகுலுக்கு போட்டு விட்டு பயணம் போனார்.

போகும் போது !

வெறுங்குடத்துடன் வேடன் பொண்டில் வந்ததால் .

வீட்டை வந்திட்டுப் போ என்ற பாட்டியின். சொல்லைக் கேளாமல் சண்முகம் மாமா போனது இன்றும் ராகுலின் மனதில் மறக்கமுடியாத நிகழ்வாக பதிந்துவிட்டது.

. அது 1983 ஆனியின் முற்பகுதியில் பாட்டியும். செல்லத்துரை மாமாவுக்கும் செங்கமலம் மாமிக்கும் கலியாணம் செய்துவைக்க ( செங்கமலம் தாத்தாவின் சின்னத்தங்கை மகள். ராகுலுக்கு மாமாவை கலியாணம் முடித்தாலும் மாமி ,இல்லை என்றாலும் மாமி தான்) தேவையான முழு ஆயத்தமும் செய்து கொண்டிருந்தா .

புழுங்கல் அரிசி அவித்தால் என்ன ,அரிசி மா இடித்து வைத்தால் என்ன ,

புதுக்குடித்தனம் போக அருகில் இருக்கும் வளவுக்குள் வீட்டு வேலை செய்ய அத்திவாரம் போட்டால் என்ன .

பங்கஜம் பாட்டி சிட்டாகப் பறந்தது.

 ஊருக்குல் அடுத்த கலியாணம் செல்லத்துரைத் தம்பிக்குத்தான் என ஒழுங்கையால் குடிக்க தண்ணி அள்ளிக்கொண்டு போகும் பொண்டுகள் பேசிக்கொண்டு !

வேலியால் எட்டிப் பார்த்தால் .

அடியே யாரடி பங்கஜம் வீட்டை விடுப்புப் பார்க்கிற குமரி .

என்று குரல் கொடுத்தால் கிழவி கிடுகுபின்னுது போல கிணற்றடிக்கு மறைப்புக்கு கட்ட என்று நக்கல் பண்ணும் பலர் .

பாட்டி ஒழுங்கைக்கு வரமுன் ஓடி விடுவார்கள் .

ஆனி ஓடி ஆடியும் வந்தது  யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே  அந்த சேதி முன்னவர பின்னே!!

//////////////////////////////


 
இணையம் வழி இதயம் நுழைந்து
மனதில் மையம் இட்ட மாய உலகம் ராஜேஸ் நண்பனுக்கு ஆழ்ந்த
அனுதாபங்கள்.


முகம் தொலைத்தவன் வருவான்.....

11 comments :

Yoga.S. said...

வணக்கம் நேசன்!இன்று பால்கோப்பி யாருக்கு?இந்த வேளையில் பால்கோப்பி குடிக்க முடியுமா?கிளான் கம்பெல் ரெண்டு பெக் அடிச்சாச்சு!கதை ஓட்டம் நன்றாக இருக்கிறது,வாழ்த்துக்கள்!இப்போது முதல் பின்னூட்டம்,பதிவுக்கு இடமில்லை!மாயா ராஜேஷ் நினைவாக!ஞாபகமிருக்கட்டும்.

Anonymous said...

நண்பர் மாய உலகம் ராஜேஸ்க்கு என் அஞ்சலி...

Anonymous said...

காவடி...வம்சம் மானம் போய் பாட்டி...சுவாரஸ்யம்...

தொடருங்கள் நேசரே...

ஹேமா said...

மணி ஓசையோசு வரும் சங்கதி கேட்க ஆசையும் ஆவலும் நேசன் !

மாயா வலையுலகத்தையே அன்பால் முடக்கிப்போட்டு வைத்துவிட்டார்.
அவரின் நினைவால் இன்னும் துவண்டே கிடக்கிறோம் !

அம்பலத்தார் said...

கதை இப்பொழுது சூடுபிடிக்க ஆரம்பிக்கிறது. கதையில் நிறைய சுவாரசியமான விடயங்கள் இருக்கும்போல் தெரிகிறது.

அம்பலத்தார் said...

சகபதிவராக இருந்த ராஜேசிற்கு அஞ்சலி. அவரை நினைவுகூர்ந்தமைக்கு நன்றி நேசன்

தனிமரம் said...

வணக்கம் யோகா ஐயா இன்று உங்களுக்குத்தான் பால்கோப்பி.நன்றி தனிமரத்தை ஊக்கிவிப்பதற்கு. தொடர்ந்து நீங்கள் தரும் ஊட்சாகத்திற்கும் கருத்துரைக்கும் நன்றி.

தனிமரம் said...

நன்றி ரெவெரி வருகைக்கும் கருத்துரைக்கும். தொடர்ந்து வரும் ஆதரவுக்கு நன்றி.

தனிமரம் said...

நன்றி ஹேமா வருகைக்கும் கருத்துரைக்கும் மயா மாயமாகிப்போனாலும் நம் மனதில் வாழ்கின்றார் என்பதை இந்த நாட்கள் நிறுவி விட்டது.

தனிமரம் said...

ராகுல் ஒரு கூட்டுக்குடும்பத்தில் இருந்தவன் அதனால் அவன் கதை நீள்கின்றது தனிமரம் அப்படி அல்ல தனிக்குடித்தனம் .ஆனாலும்
சுவாரசியம் பல காத்திருக்கு தொடர்ந்து நேரம் கிடைக்கும் போது வாருங்கள்.நன்றி வருகைக்கும் கருத்துக்கும்.

தனிமரம் said...

சகபதிவாளர் ஒரே பதிவுலகில் இருக்கும் போது அவரும் நண்பர் தானே ராஜேஸ் என்னோடு பல பதிவில் கூட இருந்தவர் அதனால் உடன் பிறவாத நண்பரை நினைவு கூர்ந்தேன் அதற்கு ஏன் நன்றி அம்மலத்தார் அது கடமை.