19 February 2012

மலையகத்தில் முகம் தொலைத்தவன்-8

செல்வத்தின் துயரத்தைத் தேற்றிய மாமி முத்தாச்சி.

 இனி ஆகவேண்டியதை பாரு முதலில். நீ அமைதியாக இரு .

அப்பனுக்கு கடமை செய்யனும் .என்ற பேரனும் உன்னைப்பார்த்துத் தான் என் மருமகனுக்கு (சண்முகத்திற்கு) கொல்லி போடனும் .

அவனுக்கு  அறியாத வயசு  .
இப்படி எல்லா ஆம்பிள்ளையும் இடி விழுந்த மரம்போல அழுது ஊத்தினால் நாளைக்கு பேரம்பலத்தாரின் மானம் மரியாதை யாரு காப்பாற்றுவது .

சின்ன மாப்பிள்ளை ஈசனும் யோகனும் விடியக் காத்தாலை ஊருக்குல் சாச் சொல்லட்டும்.

 மணியத்தார் நல்ல சுண்ணப்பாட்டுப் பாடுவார் .அதுவும் பேரப்பலத்தாரின் நண்பர் .அவரை நாளைக்கு பக்கத்திலே  உதவிக்கு வைத்திரு என்றுவிட்டு முத்தாச்சி மாமி சவத்தை எடுக்கும் காரியங்களில் ஆம்பிள்ளைக்கு நிகராக செயல்பட்டது .

தன் மாமி  ஒரு விதானையார் என்பது மறந்து போனதை ஞாபகப்படுத்தினான் செல்வன்.

செத்த வீட்டில் யாரும் உறங்கவில்லை .பாக்கியம் வீட்டில் சாப்பாடு தயாரான போதும் யாரும் சாப்பிடும் நிலையில் இல்லை .

பெற்றோல்மாக்ஸ் வெளிச்சத்திலும், வீட்டுத் திண்ணை மின்விளக்கு வெளிச்சத்திலும் ,காட்ஸ் விளையாடிக்கொண்டு சில ஆம்பிள்ளைகள் இரவைக்கழித்தனர்.

 அருகில் சிலர் அரசியலில் கூட்டணியின் கூத்தனியை காரசாரமாக விவாதித்தனர்.

 புதிய தலைமுறையினர் புதிய இயக்கமாக ஊருக்குல் வந்துவிட்ட புலிகள் பற்றி பறைந்து கொண்டு இருந்தனர்.

நேரம் ஓடும் வேகம் யாழ்தேவிக்கு ஒப்பானதாக இருந்தது.

 சோதி எப்போதும் விளையாட்டக இருப்பவன்.

 இப்படி வீட்டில் மூன்று பிணம் வந்ததில் இரத்தம்  எல்லாம் கொதித்தது. இவனுங்களை எல்லாம் சுடனும் என்ற தீ குடிகொண்டது.

 .இதுவரை வீட்டில் அவனை யாரும் எதற்கும் கடிந்து கொண்டதும் இல்லை. கட்டளை இட்டதும் இல்லை .

அதுவும் தகப்பன் பேரம்பலத்தார் இவனுடன் அதிகம் பேசியதே இல்லை.

 வியாபாரம் என்று அவர் தூரத்திலே இருந்த தால் இயல்பாக ஏதோ இடைவெளி இவனுடன்.

 என்றாலும் நல்லநாள் பெருநாளுக்கு காசைப்பாரமல் கைநிறைய கொடுத்துவிடுவார்.

 அண்ணன் சண்முகம் தான் கெட்டுப்போய் விடுவான் என்று கடிந்து கொள்வார்.

 செல்லத்துரை தான் அதிகம் படிக்கவில்லை என்பதால் இவன் மீது அதிகமாக படிக்கும் வழிமுறைகளுக்கும் ,பொன்ஸ் பவுடர்,பொன்ஸ்கிரீம்,டவுசர் சிங்கப்பூர் சேட் என நல்ல நல்ல உடுப்புக்களையும் என அள்ளியந்து கொடுப்பவன் .

தம்பி மீது அதிகம் பாசம் மிக்கவன் இப்படியான அண்ணன் இன்று பெட்டியில்  வந்ததைப்பார்த்து அவன் உள்ளம் கன்னியாய் வென்னீர் ஊற்றைப் போல கொதித்தது

.விடியக் காத்தாளை முத்தாச்சி ஈசன் மருமகனையும்(சண்முகத்தின் சகலன்) ,யோகனையும் கோழி கூவ முன்னர்    எழுப்பி விட்டா . சைக்கிளில் யோகனை ஏற்றிக்கொண்டு ஈசன்  முன்னே போக .

பின்னால் பக்கத்துவீட்டு நல்லம்மா மகனும் சைக்கிளில் போனார்கள். சாச் சொல்ல.

இன்று லங்காசிரியும் ,வீரகேசரியும் வீட்டுக்கு மரண அறிவித்தலைத் தாங்கி வருகின்றது .

அன்று ஊருக்குல் அப்படியல்ல!

முன்னால் போறவர் டோய் பதுளைப் பேரம்பலமும் இரண்டு மகன்களும் செத்துப் போனார்கள் இன்று சவம்  எடுக்கிறாங்க டோய் என்று  ஒவ்வொரு குறுக்குச் சந்தியாலும் சொல்லிக் கொண்டு போவார்கள் .

பின்னால் வருவர் யாராவதுவீட்டு முற்றத்தைக்கூட்டியபின் சாணி தெளித்துக்கொண்டு யாரப்பா செத்தது என்று விடுப்பும் விபரமும் கேட்டால்!

 அதுவந்து அக்காள் பதுளையில் வட்டிக்கடை போடப்போன இன்னாற்ற இன்னார் என்று பரம்பரை விளக்கம் கொடுத்து விளக்கம் சொல்வார் .

சண்முகம் .மாமா எப்போதும் தன்ற மகன் களைவிட தன் மேல் எத்தனை பாசம் வைத்திருந்தார்.

 அவருக்கு ஒரு மகள் இருந்திருந்தால் அவள் தான் எந்தப் பிரச்சனை வந்தாலும் தன் பொண்டாட்டி ஆக்கியிருப்பான் யோகன் .

இது எல்லாம் எங்கே செத்துப் போன மாமாவுக்குப் புரியும் .?

தன் மருமகன் தன்னைப்பார்பான் என்ற ஆசையில் இருந்தவருக்கு சாச் சொல்லும் வரத்தை தந்த  முருகன் மீது அவனுக்கு என்றும் கோபந்தான் .

இப்படியே சாச் சொல்லிக்கொண்டு ஊர் எல்லைத்தாண்டி பாலம் வரும் சந்தியில் வரும் போது பரிதியும் உதிர்த்தெழுந்தான் தன் கடமையைச் செய்ய .

அதுவரை அமைதியாக இருந்த வீட்டில் ஆர் எல்லாம் புதிதாக வாரர்களோ அவர்கள் எல்லாம் ஒப்பாரியை தொடங்கும் போது !

பேரம்பலத்தின் அருமை, பெருமை வந்து நிற்கும் .யாருக்கும் தெரியாத அவரின் குணநலன் இந்த ஒப்பாரியில் தெரியும் .

ஐயாவுடன் அதிகம் பேசாத சோதிக்கு அப்போது புரிந்தது.

 தன் தந்தை எத்தனை கஸ்ரப்பட்டு தன் குடும்பத்தைக் காப்பாற்றியிருக்கின்றார் என்று  .

தன் சுகம் என்ன என்று தெரியாமல் குடும்பம் என்றால் !

தான் கோயில் போல அமைதி கொடுக்கனும் என்று இருந்து வாழ்ந்தவர்க்கு இப்படியா இதை தவிர்க்கனும் என்ற வெறியில் இருந்தான் .

தொடரும்...

பறைந்து-பேசுதல் [ யாழ் வட்டார மொழி.
சாச்சொல்லல்-கிராமிய முறை.

16 comments :

Rathnavel Natarajan said...

ஆழ்ந்த அனுதாபங்கள்.

கவி அழகன் said...

Sokam , manvasanai

rajamelaiyur said...

என்ன சொல்வதென்று தெரியவில்லை

Yoga.S. said...

வணக்கம் நேசன்!இதயம் கனக்கிறது.///எங்கள் ஊரில் அந்தக் காலத்தில்,வானொலியில் மரண அறிவித்தல் சொல்வது போல் மகிழூந்தில்(கார்)குழாய்(ஸ்பீக்கர்)கட்டி ஊருக்கு மட்டுமல்ல அயலூர்களுக்கும் அறிவிப்பார்கள்!எழுபதுகளில் இந்த வேலையில் நான் பிரபலமாக்கும்!

ஹேமா said...

தொடரட்டும் நேசன் !

சுதா SJ said...

தொடர் ஒரு வித இறுக்கத்துடனேயே போகிறது நேசன் அண்ணா... சுவராசியம் கொஞ்சமும் குன்றாமல் கொண்டு போறீங்க.....:) தொடர்கிறேன் நானும் அண்ணா

Anonymous said...

சோகம்..சுவாரஸ்யம்...முக்கியமாய் உணர்வோடு நகர்கிறது தொடர்...நேசரே...

தனிமரம் said...

நன்றி ரத்னவேல் ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும். இன்று பால் கோப்பி உங்களுக்குத்தான்!

தனிமரம் said...

நன்றி கவி அழகன் வருகைக்கும் கருத்துரைக்கும்!

தனிமரம் said...

நன்றி என் ராஜாபாட்டை ராஜா வருகைக்கும் கருத்துரைக்கும்!

தனிமரம் said...

வணக்கம் யோகா ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி! நீங்கள் இப்போதும் பிரபல்யம்தான் தனிமரத்திற்கு.

தனிமரம் said...

நன்றி ஹேமா வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

நன்றி துசி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

நன்றி ரெவெரி வருகைக்கும் கருத்துரைக்கும்.

ராஜி said...

சோகம் முகத்தில் அறைந்தாலும் சுவாரசியமாய் உள்ளது. முத்தாச்சி பற்றி சொன்னவிதம் அருமை

தனிமரம் said...

நன்றி ராஜி வருகைக்கும் கருத்துரைக்கும் தங்களின் முதல் வருகை தனிமரத்தினை இன்னும் தோப்பாக்கட்டும்.