28 February 2012

பஸ்சில் ஒரு சந்திப்பும் வாழ்த்தும்.

வணக்கம் உறவுகளே.!

 இன்று வலையுறவுகளுடன் கொஞ்சம் மனம் திறக்கலாம் என நினைக்கின்றேன்.
பதிவுலகத்தில் எனக்குப் பிடித்த சில விடயங்களை என் பார்வையில் சொல்கின்றேன்.

இதுவரை நான் எழுதிய பதிவுகள் எல்லாம் நான் பயன்படுத்தும் ஐபோன் -4 மூலமாகத்தான் எழுதுகின்றேன்.

 .நண்பர்களின் பதிவுகளுக்கு பின்னூட்டம் இட்டால் என்ன, வாக்குப் போட்டால் என்ன சில  நண்பர்களின் பதிவுகளில் அதிகம் விவாதம் செய்தால் என்ன எல்லாத்திற்கும் மூலகாரணி இந்த கைபேசிதான்.


அதனால் நான் பெறும் பல நன்மைகள் ஒரு புறம் என்றால். தீமைகளும் சில இருக்கதான் செய்கின்றது.

ஏற்கனவே ஒரு கைபேசி பறித்துகொண்டு போட்டான் ஒரு ஆப்பிரிக்க அண்ணண்.

 சிலருக்கு கடுப்பான பின்னூட்டத்தை தனிமரம்  இந்த கைபேசியில் இருந்து தான் பதிவு செய்கின்றேன்.

எப்போதும் விவாதகளம் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும் .அது பள்ளிக்கூட வாழ்வில் இருந்து இன்றை பதிவுலக வாழ்வுவரை தொடர்கின்றது.

 பள்ளியில் (கடைசி வாங்கில் இருந்துதாங்க நாங்க படிப்பில் கள்ளப்பூனை)முகம் பார்த்து விவாதிப்போம் நக்கல், நையாண்டி, சிரிப்பு, கோபம் என அந்தக் களம் பார்ப்போரை ரசிக்கும் படியாக இருக்கும்அப்போது.

. இப்போது அந்த விவாதங்கள் பல இடங்களில் வருவது இல்லை ஒத்து மேவிப்போவதும் சமரசங்கள் செய்வதும் என ஓடுகின்றது .

ஆனால் வலையுலகில் வந்த சில காலத்தில் எனக்கு அதிகம் விவாதம் செய்வதற்கும் ,விதாண்டாவாதம் செய்வதற்கும் நாற்று வலைப்பூ கிடைத்தது.

 .கடந்த ஆண்டில் அவர் முன்னர் எழுத வெளிக்கிட்டவர் நானோ ஒரு கடையைத் திறந்துவிட்டு ஈ ஓட்டிக் கொண்டிருந்த காலம்.  இப்படி இருக்கும் போது எனக்குப் பிடித்த விடயம் பற்றி ஒரு விவாதமேடை.

அதில் நம் ஈழத்து இலக்கியங்களின் நிலையை என்னி கொஞ்சம் அதிக கவலை, சீற்றம் ,திட்டமிட்டு புறக்கணிப்பு ஒரு புறம் என்றால் .

ஏழுத்து ஆர்வத்தில் வருவோரிடம் பொருளாதார பின்னடைவு ஒருபுறம் , போதியளவு வாசகர்களிடம் போய்ச்சேர முடியாத பலபிரிவினைகள்  .

அதையும் கடந்து மக்களிடம்  கொண்டு செல்ல வேண்டிய இலக்கியங்கள் பற்றி விழிப்புணர்வு கொடுக்காத ஊடங்கள் நிலை .

நல்ல படைப்புக்களை ஊக்கிவிக்காத படைப்பாளிகள்மீது வரும் சீற்றம் என பல விடயங்களில் எனக்கு இன்றும் அதிக வருத்தம் இருக்கின்றது

 .இதனை பல விவாத இடங்களில் பின்னூட்டங்களாக சொல்லியும் வருகின்றேன். (முதலில் நீ எழுத்துப்பிழையுடன் எழுதுவதை நிறுத்து இல்ல பிளக்கைவிட்டு ஓடு என்று
சொன்னார்கள் கொலவெறியுடன்,
தொடரை முடித்துவிட்டு ஓடப்போறன் விரைவில் என்று சமாளிச்சாச்சு)

என் பின்னூட்டங்களைப் பார்க்கும் சில நண்பர்கள் உனக்கு ஏன் தேவையில்லாத வேலை என்பார்கள்.

நான் அதிகம் ஏழுத்துப்பிழை விடுகின்றவன்   பலபதிவுகள் அப்படித்தான் வந்திருக்கு இன்றுவரை.  அதை எல்லாரிடமும் தனித் தனியாக சொல்லும் அளவுக்கு நான் முயன்று ஒப்பாரி வைக்க நினைப்பது இல்லை .

என் பதிவுகளில் வரும் படங்கள் ,பாட்டு எல்லாம் நண்பரின்  கணனியில் இருந்து தான் வருகின்றது. (நான் ஓசியில் ஓட்டுமடம்  போறவன்)

 பதிவுகளை நாஞ்சில் மனோவும் ,சமயங்களில் காட்டானும்  இன்னும் பல நண்பர்களும் தான்திரட்டியில் இணைக்கின்றார்கள்.

 சோம்போறித்தனம் ஒரு புறம் என்றால் தொழில்நுட்பத்தை கற்றுக்கொள்ளனும் என்ற  பொறுமை இல்லை .

இதெல்லாம் தெரியாமல் எனக்கு உள்குத்துப் போட்டவர்கள் மீது எனக்கு கோபம் வரவில்லை,அவர்களை புறக்கணிக்கவில்லை. சிரிப்பு ஊட்டுபவர்கள்  மீது எப்படி கோபம் வரும்.!



  இப்படி இருக்கும் போது கடந்த ஆண்டில் வலையில் மோதிய சிலரில். . அண்ணன் யார் என்று கூட தெரியாமல் அதிகம் சண்டை போட்டு ,உங்களுக்கு என்ன தெரியும் என்று மரியாதை இல்லாமல் பின்னூட்டம் போட்டுவிட்டு அந்த விவாதப்பதிவில் இருந்து வெளியேறி விட்டன்.

அதன் பின்பு சிலகாலத்தில் அவரின் பதிவுகளைப் படித்தேன். அப்போது உணர்ந்தேன் இந்த இடம் அவர் பெற எவ்வளவு நேரம் கணனியில் இருந்திருப்பார் ?

 அதன் பின்பு அவர் மீது மரியாதை கூடியது .அவர் படத்தை நான் பார்த்தது நாஞ்சிலின் பதிவில் .

மனோவின் தம்பிகளில் அவரும் ஒருவர் எனக்கு அண்ணர் வயதில் ,அனுபவத்தில்.

பஸ் ஏறும் போது என்னோடு எறியவர் இந்த பஸ் சென்னை நேராக போகுமா?  என்றார் .நானும் அப்படித்தான் போகும் என நினைக்கின்றேன் என்றுவிட்டு நீங்க பிளாக் எழுதும்  ?அவரா இவர். என்றேன் .

ஆமா .உங்களையும்  எங்கயோ பார்த்த ஞாபகம் என்றார். (அண்ணார் பஸ்சுக்குள் கஞ்சியாக்கப் போறார் என்று உள்ளுக்குள் பயம்) .

என்னை நாஞ்சில் மனோவின் வலையில் அதிகம் பார்த்திருப்பீர்கள் என்று அறிமுகம் செய்துகொண்டேன்.

 அதன் பின் இருவரும் பதிவுலக விடயங்களையும் இந்திய அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டோம். . கடந்த  வருடத்தில் ஒரு திரட்டியின் பிரச்சனையில் அவர் வெளியேறியது எனக்கும் வருத்தம் தரும் செயல்தான் .

அதிகம் அவரின் பதிவுகளை படிக்கமுடியுது இல்லை . அந்த நண்பர் தான் தம்பி கூர்மதியான் . முதலாவது பதிவர் சந்திப்பு அவருடன் தான் .
கிறுக்கனின் கிறுக்கல் வலைப்பதிவு தம்பி கூர்மதியானின்http://kirukaninkirukals.blogspot.com/
 .இப்போது ஏனோ உள்நுழைய முடியவில்லை. வலையை மூடிவிட்டாரா ???

அதன் பின்பு துசி .துசியோட போட்ட சண்டையை  நாற்றில் பார்க்கலாம் என் முகநூலில் விடியவிடிய போட்ட பின்னூட்டங்கள் எங்கள் நட்பை இன்னும் நெருங்கி வர வைத்திருக்கின்றது.வலை உறவு குடும்ப உறவாக தொடர்கின்றது.
////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
.பல பதிவாளர்களை வளர்த்துவிடுவதில்
 இவன் ஒரு பல்கலைக்கழகம்.
பல்சுவைப்பதிவிட்டு பலரை வியக்கவைப்பான்.
இலக்கணவழு என்றால் இளைய நக்கீரன்
எப்போதும் வலைக்காக வாழ்பவன்.
அடிக்கடி இவனோடு சண்டைதான்
 அடுத்த பதிவில் அரவணைப்பான்
அண்ணா என்பான் ஐயா.பெரியவரே,பாஸ்
அடிங்கொய்யால என்று அடிக்கடி திட்டுவான்
திருந்தாத ஜென்மம் நீ என்பான்.
தனிமெயிலில் இவன் தூக்கம் கலைந்தாலும்,
 முகநூலில் முறையிட்டாலும் முடியாது என்று சொல்லாதவன் !முடித்துத்தருவேன் என்பான் .
என்ற அண்ணண் இல்ல
அடிக்கடி கடிப்பான் அன்பில் ஒரு நண்பன்.
 நேசத்தில் நேசித்த
காதலி பிரியவதனா போய்விட்டால் புலம்பெயர்ந்து என்று புலம்பும் அன்பு தம்பிக்கு (நிரூபன்)இன்று பிறந்தநாள்.(29/2)




பல்லாண்டு பல்லாண்டு காலம் கணனியும் காதலியுமாக(keybord)
விசைப்பலகையில் வீடுகட்டி
குடியும் குடித்தனத்தனமுமாக விதானையார் வீட்டுச் சீதனத்துடன் இரணைப்பாலயத்தில் இன்பமாக
வாழ வாழ்த்துகின்றேன்.

     இப்படிக்கு!
தனிமரம் -நேசன்.

குறிப்பு- இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட மணிக்குரல் விளம்பரம் 

23 comments :

Anonymous said...

நிரூபனுக்கு முப்பத்து மூன்றாவது பிறந்த தின வாழ்த்துக்கள் ;)

நிரூபன் said...

ஐயோ...ஐயோ...உடம்பெல்லாம் புல்லரிக்குதே!

நான் கொடுத்த திட்டுக்களை ஒன்று திரட்டி தனிமரம் இங்கே செல்ல குட்டாக அல்லவா குடுத்திருக்கு!

நன்றி அண்ணா.

நிரூபன் said...

கந்தசாமி. said...
நிரூபனுக்கு முப்பத்து மூன்றாவது பிறந்த தின வாழ்த்துக்கள் ;)//

இங்க பார்றா..சைட் கேப்பில ஒருத்தர் கிடா வெட்டுறாரு! நீங்க 56வது பிறந்த நாள் கொண்டாடும் போது, நான் 33 கொண்டாட கூடாதா?

நீங்க சொல்வது 33= 6 என் வயது எப்பவுமே ஆறு என்று தானே!

நன்றி பெரியப்பா

பால கணேஷ் said...

உங்கள் வலைத்தளத்தின் மூலம் அவருக்கு நான் என் இதயம் கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

தனிமரம் said...

வாங்க கந்தசாமித்தாத்தா முதலில் பிறந்தநாள் பால்கோப்பி உங்களுக்குத்தான்.
நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

வாங்க மன்னவா பிறந்தநாள் வாழ்த்துக்கள் முதலில்! ஐயோ...ஐயோ...உடம்பெல்லாம் புல்லரிக்குதே!  //புல் அனுப்பினால் தனிமரம் உரமாக்கும் ஹீ ஹீ புல் சொம்பையன்.

தனிமரம் said...

தனிமரம் குட்டவில்லை அன்பைப் பொழிந்திருக்கு.ஹா ஹா
நன்றி நிரூபன்  வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

இந்த 6 அடிக்கடி எங்யோ வருகின்றது நிரூபன் இது இலக்கம் 6 இல்லை ஓடும் ஆறு ஐமீன் ரிவர் ஹீ மீயாவ்வ்வ்வ்

தனிமரம் said...

நன்றி கனேஸ் உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்.

அம்பலத்தார் said...

நிரூபனிற்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள். நேசன் உங்களுடன் சேர்ந்து நிருபனிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்

Anonymous said...

உங்கள் மூலம் நிரூபனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்...

சந்திப்புக்கள் தொடரட்டும்...

Yoga.S. said...

வணக்கம் நேசன்!அன்புத் தம்பிக்காக ஒரு பதிவு!உங்களுக்கும் வாழ்த்துக்கள்!/////காதலி பிரியவதனா போய்விட்டாள் புலம்பெயர்ந்து என்று புலம்பும் அன்பு தம்பிக்கு (நிரூபன்)இன்று பிறந்தநாள்.(29/2)////இதென்ன புதுக்கதையா இருக்கு???ஹி!ஹி!ஹி!!!

தனிமரம் said...

நன்றி அம்பலத்தார் வாழ்த்துக்கும் வருகைக்கும்.

தனிமரம் said...

நன்றி ரெவெரி வருகைக்கும் வாழ்த்துக்கும்.

தனிமரம் said...

வணக்கம் யோகா ஐயா.
இது பழைய கதை ஹீ ஹீ.
நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

ஹேமா said...

என் அன்பு நிரூவுக்கு அக்காச்சியின் மனம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.இன்னும் இன்னும் நிறைவான வாழ்வுக்கும் வாழ்த்துகள் !

காட்டான் said...

வணக்கம் நேசன்!
இதென்ன புதுக்கத? நீங்க அடிக்கடி சண்ணடை பிடிப்பதைதானே பார்த்திருக்கிறேன்.. ;-))

சரி சரி இங்கேயும் நிருபனுக்கு எனது பிறந்த நாள் நல் வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்..!!

மகேந்திரன் said...

அன்பு சகோதரர் நிரூபனுக்கு இனிய
பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

தனிமரம் said...

நன்றி ஹேமா வாழ்த்துக்கும் வருகைக்கும்.

தனிமரம் said...

வணக்கம் காட்டான்!
சண்டை பதிவுகளில் அன்றி அன்பில் நாம் எப்போதும் அண்ணண் தம்பிதான்.
நன்றி வாழ்த்துக்கும் வருகைக்கும்.

தனிமரம் said...

நன்றி மகேந்திரன் அண்ணா !
வாழ்த்துக்கும் வருகைக்கும்.

KANA VARO said...

ஏற்கனவே ஒரு கைபேசி பறித்துகொண்டு போட்டான் ஒரு ஆப்பிரிக்க அண்ணண்.//

ஹீ ஹீ உங்களுக்குமா? நடக்கட்டும் நடக்கட்டும்..

தனிமரம் said...

பாரிஸில் பலரிடம் பறி போகும் பொருட்களில் ஐபோன் முதல் இடம் அதில் தப்புவது கடிணம்தான் வரோ அண்ணா எப்போது யார் ஒத்துவான் என்று என்ன பூதக்கண்ணாடி போட்டா பார்க்க முடியும். நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.