நீண்ட காலத்தின் பின் ஊரில் சின்னவயதில் சிரித்த முகத்துடன் பார்த்த சோதி மாமா! ஈழத்தின் இனவாத யுத்தத்தில் சின்னா பின்னம் ஆன ஈழத்தவர் வெளிநாட்டு அகதி வாழ்வில் முத்த தலைமுறையில் வந்தவர் .
அவரை மீண்டும் அவர் வீட்டில் பார்ப்பேன் என்று நானும் எண்ணியது இல்லை. விடலைப்பையனாக விற்பனைப் பிரதிநிதி வேலை விரும்பிச் செய்தாலும் விளையாட்டாககூட நினைத்தது இல்லை வெளிநாடு வரணும் என்று.
வில்லங்கம் வந்ததே வியாபாரம் தொடங்கிய போதுதான் .எனக்கு ஏற்பட்டது போலத்தான் சோதி மாமாவுக்கும் பதுளையில் இனவாத அடக்கு முறையினால் வியாபாரத்தை விட்டு விட்டு வெளிநாடு வந்தவர் .
அவர் வரும் போது எங்க ஐயா தன் முதுசகமான காணி விற்று அவருக்கு கொடுத்தது 100000 லட்சம் ரூபாய் .அப்போது அது பெரிய பெறுமதி.பங்கஜம் பாட்டி தடுத்தா தன் வயிற்றில் பிறக்காவிட்டாலும் தன் தங்கையின் மகன் தனக்கும் மகன் தானே பெரியபாட்டி தான் எங்கள் குடும்பத்து ஊறவுகளுக்கு வீட்டில் ஒரு பெருச்சாளி சட்டம் பேசுவதில்.
" தறிகெட்டுப் போகாத தண்ணிகுடிக்கும் வயல் காணியை தானமாக கொடுக்காத நல்ல காணியடா அது நாங்க வம்சமாக பராமரிக்கும் சொத்துடா "கொடுத்தி என்றால் தள்ளி வைப்பேன் என் சபையில் இருந்து. குடிகாரனே குறுக்கால போனவனே என்று குந்தியிருந்து
எங்கள் வீட்டில் பெரிய பாட்டி என் ஐயாவிடம் பேசிய திண்ணைப் பேச்சு இன்று ஞாபகம் வருகின்றது. குளிர் தேசத்தில் குட்டி வீடாக தொடர்மாடியில் குடியிருக்கும் சோதிமாவைப் பார்க்கையில் !
பாட்டி தள்ளி வைத்த பரம்பரையில் நானும் கடைசிப்பேரன் எனக்கும் பிடிவாதம் அதிகம். அதனால் தான் ராகுல் என் மச்சான் என்று எங்கும் சொன்னதில்லை விற்பனைப்பழக்கம் என்று விலகிப்போ அவனையும் ,உன்னையும் யாரும் ஊரில் சேர்ந்து பார்த்தால் சொல்லு என்ற என் ஐயா எனக்கு முக்கியம்.
அவரை மதிக்காகதவர்கள் வீட்டில் விரும்பி கோப்பி கூட குடிக்காதவன் இன்று சோதிமாமா வீட்டில் சோபாவில் இருக்க வைத்திருக்கின்றது யுத்தம் .
"சின்ன வயதில் பார்த்த உன்னை இன்று மீசையோடு மாப்பிள்ளைக்களையோடு பார்க்கின்றேன் "
பிறகு சொல்லு ஊர் நிலமைகள் எப்படி?
நான் என்ன புதுசா சொல்ல இருக்கு! ஊர் அப்படியேதான்!
.ஊரில் நல்ல வேலை செய்த நீங்கள் எல்லாம் இங்க ஏன் வந்தணீங்க சட்டிகளுவவோ? என்று சோதிமாமா தொடங்கிவிட்டார் வேலைக்கதையை.
இடையில் புகுந்த ரவி!
" சோதி மாமா நீங்க வந்த காலம் வேற ,வெளிநாட்டில். நாங்க வந்த காலம் வேற உள்நாட்டில் இருந்து .ஒவ்வொரு தலைமுறையிலும் ஒவ்வொரு மாற்றம். மாறத ஒன்று இந்த இனவாதம்!
ஆது தான் தெருத் தெருவாக அலைகின்றோம்.
ஏன் வந்தணீங்க ?என்று கேட்கும் நீங்கள் எல்லாம் வந்த இடத்தில் பட்ட கஸ்ரங்கள் எல்லாம் பதிவு செய்து வைத்தீங்களா படிக்க ????
வெளிநாட்டில் இருந்து கொண்டு வேற ஒருத்தன் காரின் முன்னே நின்று சொந்தக்கார்க்காரன் என்று சோக்கா சொந்தக்களுக்கு படம் எடுத்து அனுப்பிவிட்டு. சுமையாக சுமைகளை தங்கியதைப்பற்றி ஏன் சொல்லவில்லை ???
அவசர உலகில் அதிகாலைக்குளிரில் ,அடுப்படியில், அங்காடியில் அலைந்து அலைந்து வேலை செய்து வேர்வை சிந்தி ஒரு வீட்டில் 20 பேர் உறங்க வழியில்லாமல் !அடுத்தவன் எப்ப எழும்புவான் கொஞ்சம் அலுப்புத்தீர படுப்பம் என்று காத்து இருந்த கதைகள் எல்லாம் எழுதினீங்களா ???
இங்கே நாம்படும் பாடு கஸ்ரப்பட்டு உங்க உறவுகளுக்கு நீங்கள் அனுப்பும் காசுக்குப் பின் எங்கள் குமுறல் இருக்கு அதைக் கொண்டு போய் வெள்ளவத்தை சந்தையில் வெளிநாட்டுக்காசு என்று குலுக்கிக்கியும் கிளிக்கியும் காட்டாதீங்க என்று!
நல்லமார்க்கான உடுப்பு போட்டதில்லை ,சப்பாத்து வாங்கியதில்லை, நாலுகடையில் போய் சாப்பிட்டதில்லை என்று சொல்லியிருந்தால்!
செத்துப்போனாலும் சொந்த நாட்டில் சிறையில் மிஞ்சியிருப்போம் என்று சொல்லி இருக்கலாமே ???ஏன் சொல்லவில்லை ??
நாத்தம் இந்த வாழ்க்கை என்று தாழ்வு மனப்பாண்மையா ???இல்லை மற்றவர்கள் மதிக்கமாட்டார்கள் என்ற பவுசு காட்டலா ???
இது எல்லாம் புரியாமல் எத்தனை பேர் எத்தனை வேலைகளை விட்டு விட்டு வெளிநாடு என்ற ஆசையில் அலைந்து திரிகின்றார்கள். எல்லாப் பிரச்சனைக்கும் முதலும் முடிவும் இந்த இனவாத அரசியல் தான் என்பதை ஏன் சொல்லவில்லை ???
ஆளுக்கு ஒரு கட்சி, ஒரு கொள்கை ஆளை மாறி ஆள் துரோகி, வால்பிடி, மண்டைகழண்டவன் ,என்று அறிக்கை வேறு இது எல்லாம் சொல்ல மாட்டீங்க??
இன்ஜினியர், டாக்டர் ,தான் உங்கள் கண்ணுக்கு வேலை.
மற்றது எல்லாம் கேவலமோ???
உடல் உழைப்பில் வாழும் நாம் சட்டிகளுவி, தூசு துடைத்தாலும் ,துணிந்து போராடுகிறோம் ஏழ்மையாக வாழ இது எல்லாம் தெரியாதா சோதி மாமா ???
முதலில் உங்கள் பார்வையை மாற்றுங்க இங்க எல்லாமே தொழில் தான் .
டாக்டரும் ஒன்று, சமையல்காரனும் ஒன்று ,அதுதான் பிரெஞ்சு தேசம்!
சுதந்திரம் ,சகோதரத்துவம் ,சமத்துவம் கொள்கையே இருக்கே இது என்ன கலைஞர் அறிக்கையோ மாத்திமாத்தி பேச?
கூப்பிடுங்க நிசாவை கேட்பம்?
"இவரின் கதை தெரியும் தானேடா ரவி உந்த விசர்க்கதையை விட்டுவிட்டு இந்தா தேனீர் குடி.
பிறகு சொல்லு ஜீவன். எப்படி இருக்கின்றாய் ?
இல்ல மாமி இப்பத்தான் ஜீவன் நாட்டுக்கு உள்ள வந்து இருக்கின்றான் .இனித்தான் மொழி படிக்கணும், ஊர் படிக்கணும் ,வந்தவன் மூச்சு வாங்கவில்லை அதுக்குள்ள இவர் இப்படி பேசலாமோ ?
வந்தவனுக்கு இந்த நாட்டு நல்ல விடயத்தைச் சொல்லணும் .மூத்த தலைமுறையில் வந்தவர்! வழிக்காட்டணும் தம்பி இப்படிச் செய்யாத .இங்கே இரவு விடுத்தியில் இருந்து இணையம் வரை எல்லாம் இருக்கு. விடாமல் ஒடி உழை என்று.
அதைவிடுத்து நொண்டிச் சாட்டு சொல்லி ஜீவனுக்கு தடைபோடலாமோ ??
நாங்க ரெண்டு பேரும் நல்ல தொழில் செய்தம் ஊரில் .எப்படி இருந்தம் என்று இவருக்கு என்ன தெரியும் ??
எப்பயாச்சும் ஒரு அழைப்பு எடுக்கவில்லை ??
வந்த இடத்தில் மரியாதை நிமித்தம் வந்தால் மாமா இப்படி பேசியது பிழை!
சரிடா விடு ரவி அவர் குணம் தெரியும் தானே !
நிசா
ஜீவன் வந்து இருக்கின்றான் வந்து பாரு யாரு அம்மா என்ற குரல் அந்தக்குரல்??
தொடரும்!

9 comments :
எல்லா கேள்விகளும் கேட்க வேண்டிய கேள்விகள் தான்...
தொடர்கிறேன்...
tm1
//இன்ஜினியர், டாக்டர் ,தான் உங்கள் கண்ணுக்கு வேலை.
மற்றது எல்லாம் கேவலமோ???//
இப்படித்தான் நினைக்கிறது உலகம் இந்த எண்ணம் என்று மாறுமோ?
I heard you r in Singapore...true?
mmm...
mmm...
எல்லா கேள்விகளும் கேட்க வேண்டிய கேள்விகள் தான்...
தொடர்கிறேன்...
tm1//நன்றி தனபாலன் சார்
இன்ஜினியர், டாக்டர் ,தான் உங்கள் கண்ணுக்கு வேலை.
மற்றது எல்லாம் கேவலமோ???//
இப்படித்தான் நினைக்கிறது உலகம் இந்த எண்ணம் என்று மாறுமோ?
8 November 2012 20:20 Delete//நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்
I heard you r in Singapore...true?//இல்லை ரெவெரி நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்
mmm.../நன்றி சீனி வருகைக்கும் கருத்துரைக்கும்
Post a Comment