12 November 2012

உருகும் பிரெஞ்சுக்காதலி-38

"என் உடலில்
உயிராக ஓடிக்கொண்டிருப்பது
உன் நினைவுதான்
எனக்கு மரணம் என்பது
உன் நினைவுப் பிரிதல்தான்!

(இனிப்பு எடுத்துக்கொள்ளுங்கள் காதல் பிறந்திருக்கு -தபுசங்கர் கவிதைத் தொகுப்பு)

நண்பா முதலில் வேலை தேடு இந்த வேலை தேடும் போது இருக்கு பாரு கஸ்ரங்கள் .அதுதான் உனக்கு முதல் காதல் போல இங்கு மறக்க முடியாத பாலபாடம் வேலை என்பது இந்த நாட்டில்!

நம்மவர்களுக்கு பொதுவான தொழில் சமையல் தளங்களில் சமையல் கலைஞர்களாகவும், பல்பொருள் அங்காடியில் பொருட்கள் அடுக்குவதும், மற்றும் சுத்தம் செய்தல் ,இதர இடங்களில் சுத்தம் செய்யும் வேலை தான் முதல் தலைமுறையில் வருவோருக்கு கிடைக்கும்!அதுகூட இப்போது கஸ்ரம் எல்லாம் நவீன இயந்திரம் வந்துவிட்டது. அதை விட்டால் வேற மார்க்கம் இல்லை என்றும் சொல்ல முடியாது ஆனால் எல்லாருக்கும் இந்த நாட்டு மொழி படிக்கும் அளவுக்கு நேரகாலம் கிடைப்பது இல்லை ஏன் தெரியுமா?? !

சொந்தக்காசு இல்லாமல் இலச்சக்கணக்கில் கடன்வாங்கி இங்கு வந்துவிட்டாள்(வெளிநாடு) முதலில் கடன் கட்ட வேண்டும் .

வட்டியே குட்டி போட்டுவிடும் இது எல்லாம் ஊரில் இருப்பவர்களுக்குத் தெரியுமா?? நிச்சயமாக இல்லை.

அவன் /அவள் வெளிநாடு போய்விட்டாள் இனி என்ன !அற்பனுக்கும் ஆசை வந்தால் அர்த்தராத்திரியில் குடைபிடிப்பானாம் இனி என்ன அவர்களுக்கு ஆட்டோவிலும் ,ஸ்கூட்டரிலும் ,பறப்பினம் என்று வம்பு பேசும் அயல்வீடுகள் .அறியமாட்டார்கள் நீ இங்கு அகதியாக வேலை தேடி அலையும் நிலை?

"முதலில் ஜீவன் தெரிந்தவர்களிடம் பழகும் போதும் நட்புடன் வெட்கம் விட்டு கேள் எங்கயாவது வேலை வந்தால் சொல்லுங்கோ என்று "கேட்க கூச்சமாக இருக்கும் நல்ல தொழிலில் இருந்து விட்டு இரந்து நிற்பதோ என்று "

"அதுக்குத் தான் நான் முதலிலே சொல்லிவிடுகின்றேன் நீ படிக்காதவன் !ஊர் தெரியாதவன் ,என்று பொதுவில் வெளிப்படையாக பேசு .

இந்த நாட்டுக்குள் உனக்கு முகவரி கிடைக்கும் வரை நீ எது செய்வது என்றாலும் இன்னொருவரில் தங்கி வாழ வேண்டும் .மரத்தில் தொங்கும் கொடியைப்போல!

இந்த நிலையில் காதல் வேண்டுமா ?"நாளை முதல் வேலை தேடப்போ ஜீவன் இங்க உன்னால் இப்ப சட்டப்படி வேலை செய்ய முடியாது .

நீ அகதி அந்தஸ்த்து கோரியிருக்கின்றாய் . இன்னும் அரசு தீர்மானிக்கவில்லை உனக்கு அடைக்கலம் கொடுக்கலாமா ?இல்லையா ?என்று !
http://www.frenchlaw.com/Immigration_Visas.htm
எனவே உன் சாயல் உள்ள ஒருத்தனை முதலில் தேடணும் இதுதான் குதிரைக்கொம்பு இங்கே .காதல் அல்ல.

அப்படி ஒருத்தன் கிடைத்தாலும் அவன் முதலில் உனக்கு இந்தநாட்டு விசாவைத் தர சம்மதிக்கவேண்டும் .

பிரபல்யமான நடிகர் அடுத்த படத்திற்கு கால்சீட் தருவது போலத்தான் தந்தாலும் கவனமாக இருக்க வேண்டும் கால்சீடை குலறுபடி செய்யும் இயக்குணர் போல இருக்கக்கூடாது.

இப்படிவிசா கொடுப்பதும் சட்டவிரோதம் ஒரு புறம் என்றால் அவனுக்கும் அரசாங்கம் அதிகமான வருமாணவரி விதிக்கும் .இதர அரச சலுகை கிடைக்காமல் போகலாம் ,இது எல்லாம் கடந்துதான் அவன் விரும்பினால் விசா தருவான் .அவன் தரவில்லை என்று அவன் மீது கோபிக்க கூடாது .

ஊரில் எங்கள் குடும்பத்திடம் ஆபத்துக்கு அதிக உதவியைப் பெற்றுவிட்டு இங்கு வந்ததும் எனக்கு உதவவில்லையே இவனை பின்நாட்களில் ஒருநாள் கவனிக்க வேண்டும் என்று நினைக்கக்கூடாது மச்சான்!

இந்த நாடு ஒரு குருகுலம் இராமன் போல அரச வம்சம் என்றாலும் ,கர்ணன் போல கடலில் வந்தாலும் ,பலரையும் திருத்தி எடுக்கும் .

எப்படி மோதி மோதி வாழ்வில் முன்னேறவேண்டும் கட்டுமரம் போல போட்டி போடுத்தான் மீன் பிடிக்க முடியும் .

முதலில் ஒவ்வொரு சமையல்த்தளங்களில் போய் வேலை கேட்டுப்பார் .

உன் சாயலில் நான் இருப்பது உனக்கு இன்னொரு வசதி .என் விசாவையும் இங்கத்தேய மருத்துச் சான்றிதல் அட்டையையும் கொண்டு போ .சரியா ?

நாளையில் இருந்து 6 மாதங்களுக்கு உள் உனக்கு வேலைகிடைத்தால்!

நானே சோதி மாமாவிடம் நிசாவை கட்டிவையுங்கோ ஜீவனுக்கு என்று சம்மந்தம் பேசுகின்றேன் ஒரு நண்பனாக !

இப்ப அவள் படிக்கின்றாள் கொஞ்சம் விடுவம்.

உனக்குத் தெரியுமா நிசா ஒரு மச்சம் மாமிசம் சாப்பிடமாட்டாள். ஆப்பில் பழம் வெட்டுவது என்றாலுல் மென்மையாக வெட்டும் இரக்க சுபாவம் கொண்டவள்.

நீயோ மச்சம், மாமிசம் ,குடி என்று எல்லாம் பழகியவன். உன்னால் அவளுகாக எல்லாவற்றையும் மாற்றிவிடமுடியாது .

புரிந்துகொள் முதலில் நேரம் கிடைக்கும் போது இங்கே மொழி இலவசமாக படிப்பிக்கும் அரச உதவி மையங்கள் இருக்கு .

அங்கே போய் படி அது சம்மந்தமான விபரம் நிசா எடுத்துத் தருவாள்.

இனி எப்படியும் ஒரே பகுதியில் இருப்பதால் அவளை ரயிலில் சந்திக்க முடியும் ஜீவன் .

வீனாக இதையத் துளை என்று கவிதையோடு அழையும் நிலைக்கு போகாதே.

ஒரு நண்பனாக உன் வாழ்வில் எனக்கும் அக்கரை இருக்கு.

இனியும் நல்ல வழியில் போவது உன் விருப்பம் .

என்னடா உன்ற புலம்பல் முடியவில்லையா ?பீர் இருந்தால் எனக்கும் தா ,நானும் சேர்ந்துகொள்கின்றேன் உன்னோடு .

மவனே நீ இனி
வரும் நாட்களில் வேலை தேடவில்லையோ ?உன்னையும் வீட்டைவிட்டு இறக்கிவிடுவேன். பின் குளிர் நாட்டில் சுரங்கப்பாதை ரயில் நிலையத்திலும் ,இல்ல ரோட்டிலும் தான் நித்திரைகொள்ள வேண்டும் .

நண்பன் என்றும்கூடப் பார்க்காமல் தவிக்க விட்டுவிட்டுப் போய்விடுவேன்.

எனக்கு இந்த நாட்டில் யாரும் தேவையில்லை புரிந்துகொண்டாள் சரி!

ஒரு நாள் ,ஒரு மாதம் ,என கடந்து 9 மாத வேலை தேடலின் பின் ஒரு இத்தாலி உணவகத்தில் முதல் வேலை கிடைத்தது .

அதுவும் ரவியின் புதிய நண்பன் தயவில். ரவியின் விசாவில் அவன் தான் எப்போதும் கூடவரும் நண்பன் இந்த நாட்டில் அவன் இல்லை என்றால் இந்த நாட்டில் நானும் இன்னும் கஸ்ரப்பட்டு இருக்க வேண்டும் .

சாப்பாடு மற்றும் உடை இருப்பிடத்திற்கு அவனால் கிடைத்த இந்த உணவகத்தில் வேலை என்பது ஒருநாள் முதல்வன் போல இல்லை முதுகு எலும்பு உச்சியில் ஓங்கியடிக்கும் வரை சமையல் பாத்திரம் மற்றும் சாப்பிட்ட கோப்பை,கரண்டி கழுவும் வேலை அத்தோடு இதர பாத்திரம் மேலும் சமையளுக்குத்தேவையான முன் ஆயத்த வேலை எல்லாம் செய்யும் வேலை !

"சோதி மாமா சொல்லிய கழுவல் வேலைக்குத் தான் வந்தனியா ?என்ற சொல்லும் ஞாபகம் வந்து சென்றது "

"செய்யும் தொழிலே தெய்வம் இந்த வேலை தொடர வேண்டும் கடவுளே மனதில் எண்ணியபோது "

அருகில் இருந்த நம்நாட்டு நண்பன் சொன்னான் .

என்னவாம் ரவி ?இந்த வருடம் சபரி மலைக்கு வாராணாம் !

நாளை முதல் விரதம் தொடங்குகின்றது ஞாபகம் இருக்கட்டும் .

ஓ அப்படியா ?என்னிடம் ஒன்றும் சொல்ல்வில்லை.

அப்போது தான் ஞாபகம் வந்தது ஊரில் பங்கஜம் பாட்டியும் ,நிசாவின் தாய் வழிப்பாட்டியும் ஊரில் இருந்தே சமரிமலை தொடர்ந்து போனவர்கள் .

பின் வந்த யுத்தத்தினால் ஊர் பிரிந்து பல திக்கில் நின்ற நிலையில் யாரை நோவது !இந்த நேரத்தில் என்னையும் மலேசியாவில் இருந்து இங்கு கொண்டு வந்து சேர்த்த பெருமாள் ஐயாவும் ஒரு ஐய்யப்ப பக்தர் என்பதும் ஞாபகம் தீண்ட .

மனதில் ஒரு புத்துணர்வு கடவுளே எனக்கு இனி நீதான் வழித்துணை இந்த நாட்டில் ,ஒரு வழிகாட்டு !

அப்போது நம்நாட்டு நண்பனின் கைபேசியில் ஒலித்த பாடல் "நல்ல வாழ்வு தொடங்கும் நாளு உதயமாகுது என்ற சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி படப்பாடல் அப்ப இனி என் வாழ்வும் திந்தக்க தோமா???

தொடரும்!

//
அனைவருக்கும் இனிய
தீபாவளி நல் வாழ்த்துக்கள் உறவுகளே!

6 comments :

மகேந்திரன் said...

வணக்கம் நேசன்,
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய
தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்....

அம்பலத்தார் said...

வணக்கம் நேசன் நலமா. பின்னூட்டங்கள் எழுதாதபோதும் முடிந்தவரை தொடர்ந்து படித்துவருகிறேன்.பிரஞ்சுக்காதலி சுவாரசியமாக வலம்வருகிறார்.

Seeni said...

சொந்தமே!
நேரம் கிடைக்கவில்லை!
இப்போது அனைத்து தொடரையும் படித்துவிட்டேன்!
தொடருங்கள் தொடர்கிறேன்....

திண்டுக்கல் தனபாலன் said...

தொடர்கிறேன்...

தங்களுக்கும், தங்களின் குடும்பத்தார் அனைவருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

முத்தரசு said...


தொடருங்கள்

உங்களுக்கும் உங்களின் குடும்பத்தாருக்கும் இதயம் கனிந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

Anonymous said...

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் நேசரே மறுபடியும்...

யோகா அய்யா எங்கே இருந்தாலும் உங்களுக்கும் தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்...