16 November 2012

உருகும் பிரெஞ்சுக்காதலி -42


இனி வரும் தரிப்பிடத்திற்காய்
காத்திருக்கின்றேன்
அச்சத்தின் எச்சங்கள்
இன்னமும் ஒட்டிக்கொண்டு 
அழகின் இன்னொரு பரிமாணத்தை
எனக்குச் சொல்லலாம்!

(முட்களின் இடுக்கில்-மெலிஞ்சிமுத்தன் கவிதை தொகுப்பு -பாரிஸ்§§)

பாவியார் போகும் இடம் எல்லாம் பள்ளமும் திட்டியும் என்பார்கள். அது எந்தளவு உண்மை என்று அனுபவித்தால் தான் புரியும். பலருக்கு சொன்னாலும் கேட்பது இல்லையே?
வழக்கு விசயமாக ஜீவன் லாச்சப்பல் போகும் போது சுரங்கப்பாதை ரயில் பயணத்தில் எதிர்பாராத நிகழ்வுதான், அவன் கையில் இருக்கும் புதியரக சம்சுங் கைபேசியை இங்கு பிறந்து வளர்ந்த ஆப்பிரிக்க மற்றும் அடையான்(அல்ஜீரி/மொரோக்கோ) இளைஞர்கள் சிலர், உடல் உழைப்பை நம்பாமல் வழிப்பறியில் கிடைப்பதில் வாழ்க்கை வாழ எண்ணும் சுகதேசிகள் ஆக இருக்கும் வழிப்பறிக்கூட்டத்தின் ஒரு குழுவினர் ஜீவனின் கைபேசியை பறிப்பதில் ஏற்பட்ட ஓட்டப்போட்டியில், கைபேசியையும் தன் கையில் இருக்கும் தங்க மோதிரத்தையும் பாதுகாத்துவிட எண்ணி சுரங்கப்பாதைப் படிக்கட்டில் ஓடி ஒழிந்து கொள்ள நினைத்த போதுதான் படிக்கட்டில் தவறி விழுந்து அடிபட்ட நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்க வேண்டிய நிலை! 

அடி முதுகிலும் காலிலும் பலமாக இருந்தது. இப்படி வழிப்பறிகள் இந்த நாட்டில் அதிகம்; அதில் தப்பும் வழிகள் என்றால், தாயகத்தில் இருக்கும் உறவுகளுக்கு என்றாலும் இங்கு இருக்கும் உறவுகளுக்கு என்றாலும் நவீன கைபேசியில் பேசுவதை தவிர்த்தால் தான் முடியும்! இல்லை என்றால் ஆதிகால செல்டல் கைபேசி போல பழமையான வடிவ கைபேசியை பவித்தால் தான் முடியும்! புதிய மொடல் வாங்கிவிட்டால் வெற்றிப்பட நடிகை தன் முதல் படத்தில் நடிக்க வைக்க, புதிய இயக்குனர் திண்டாடுவது போலத்தான் கைபேசியை பாதுகாக்க திண்டாட வேண்டும்.
இந்த நாட்டில் இது எல்லாம் சாதாரன நிகழ்வு. புதுப்போன் வாங்க காசு வச்சிருக்கின்றான் தாயகத்து உறவுகளுக்கு அன்பளிப்பாக கஸ்ரப்பட்டு உழைக்கும் காசினை வீண் ஆடம்பரம் செய்ய அனுப்பவில்லை என்று நினைக்கும் உறவுகளுக்கு எல்லாம் எப்படிப்புரியும்; இந்தக்கைபேசியும் கடன் அடிப்படையில் நண்பன் மூலம் வாங்கியது என்று..? நினைவுக்கு வந்ததும் எண்ணிக்கொண்டு இருந்தது ஜீவன் 7 வது மாடியில் 5 இலக்க அறையில் முதுகிலும் காலிலும் கட்டுப்போட்ட நிலையில் தனிமையாக. உதவிக்கு அழைப்பு மணி அடித்தால் ஓடிவருவார்கள் அன்பான பணியாளர்.
வேலை முடிந்து வந்தான் ரவி 'இப்ப எப்படி இருக்குது? '
உடம்பு வலி அதிகமோ என்னத்தை வலி, புலன்விசாரணை என்று கழிதிண்டோமே அதைவிடவா இது வலி?
பழைசை எல்லாம் ஏன் ஞாபகப்படுத்துகின்றாய்? முதுகில் முள்ளந்தண்டு எலும்பில் அடிபட்டிருக்கு, அதில் சின்ன இரத்தக்கசிவு என்றுதான் ஒபரேசன் செய்து இருக்காம்! இடக்காலின் பாத நரம்பு உடைஞ்சுபோச்சாம், அதுக்காக ஒரு ஒப்பரேசன் என்று இரண்டு ஒப்பரேசனும் வெற்றியாம்; இப்ப தான் டாக்டர் சொல்னவர்.
ஓ அப்பவெற்றி நிச்சயம் என்ற இராணுவ முன்னேற்றம் போல அழிஞ்ச சொத்துக்கள் அதிகமோ ??
உனக்கு நக்கல் அதிகம்; ஒன்றோட ஒன்றை முடிச்சுப்போடும் பழக்க தோஸத்தை முதலில் மாத்து!
ஏண்டா கொஞ்சம் சிரிக்க விடன் ரவி அதுவும் பிடிக்கலயா ??என்ன உனக்கு அதிகம் தொல்லை, ஏற்கனவே பணக்கஸ்ரத்தில் இருக்கும் உனக்கு நானும் ஒரு அன்னக்காவடியாகிவிட்டேன் இல்ல?
இல்லடா ஜீவன் நாளைஉனக்கு விசா கிடைச்சால் ஒரு அவசரத்துக்கு 10000 ஈரோ எடுத்து தராமலா போய்விடுவாய்??
முதலில் விசாகிடைக்க கடவுளை வேண்டிக்கொள்! நீ இரு இன்னும் கொஞ்ச நேரத்தில் உன் ல்தகா சைஆ வரும். அவங்க அப்பா அம்மா கூட..

. நான் வெளிய போறன். இன்னொரு காவடி கூடுது எப்படித்தான் இந்த இம்சைகளை சுமக்கப்போறன் ஆண்டவா, ஐய்யப்பா வழிகாட்டு..
என்ன சொல்லுறாய் ரவி? நான் விமானநிலையம் வரை போறன். ராகுல் வந்து வந்துவிட்டான் பாரிசிற்கு! 

கண்முழிச்ச உனக்கு கொஞ்சம் உதவிக்கு கூட இருங்க என்று சோதிமாமாவிடம் கேட்டேன் நிசாவுக்கு நல்லாக பிரெஞ்சு தெரியும் தானே வைத்தியர்கள் சொல்வது நல்லாக புரியும். எங்களைப்போல அரைகுறை மொழியை வைத்துக்கொண்டு குசினியில் சட்டியை எடுத்துக்கொண்டு வா என்றால் தாச்சியை எடுத்துக்கொண்டு போய் நிக்கும் நிலையும், வாத்துக்கும் கழுதைக்கும் வித்தியாசமான மொழி உச்சரிப்பை புரியாமல் மேல் இருப்பவன் எங்களை கேவலமாக திட்டும் நிலை நம் அடுத்த சந்ததிக்கு வரக்கூடாது பாரு! அதை சரியாக சோதிமாமா செய்கின்றார். மோளை படிப்புக்கின்றார். நீ காதலி என்கின்றாய். முடிவு நீங்க ரெண்டு பேரும் தானே பேச வேண்டும்!

அதுதான் நண்பனாக செய்ய முடிந்தது. அவர்களை கெஞ்சி வந்து பாருங்கோ நான் இன்னொரு நண்பன் ஊரில் இருந்து வாரான் என்று சொன்னேன். நீண்ட ஜோசனைக்குப் பின் சோதிமாமா வாறம் என்றார். மாமிதான் பின் அடிக்கின்றா, நீ குடியில் விழுந்துதான் காயப்பட்டியோ இல்லை உண்மையில் அடையான் கைபேசியைப் பறிக்க வந்த போதுதான் ஓடினாயோ என்று!
அதுசரி வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்காக கமராக் கஸ்சே(ஒழித்துவைத்த வீடியோ) பண்ணியா காட்டமுடியும் ?அதுசரி ஏன் விமானநிலையம் யார் வாரா?
உனக்கு வில்லன் குடும்பம் முக்கியம் என்று போனவன் சமாதான காலம் என்று A -9. திறந்த பின் விற்பனைப்பிரதிநிதியாக யாழ்ப்பாணம் போனவன் அங்கே மறைமுக அடக்குமுறையினால் உள்ளே போக இருந்தவன் உறவுகள் யாருக்கும் சொல்லாமல் கொழும்பில் பல்தேசியக்கம்பனியின் கூட்டத்திக்கு என்று சொல்லிவிட்டு நாட்டை விட்டுவாரன் சமாதான காலம் என்று ஊடகம் சொல்லியது.

 ஒரு கதை சொல்லாமல் விட்டது பலகதை என்பான் அழைப்பில் வரும் போது இப்ப அவனே வாரான் திருந்தாத ஜென்மம் என்றாலும் நண்பன் ஆச்சே தனியாக விடவாமுடியும்? என்ன புதிர் போடுகின்றாய் முதலில் யார் அவன் எனக்குத் தெரியாமல் ?? பங்கஜம் பாட்டியின் செல்லப்பேரன் என்ன ராகுல் வாரானா? அவனுமா வெளிநாட்டுக்கு வந்து அலையப்போறான்? வந்திட்டான் நேற்று இரவு நான் தான் அவனை இறக்க உதவி செய்தேன். இங்க பொறுப்புக்கு சேர்த்த காசில் தான் கொஞ்சம் துண்டுவிழ விட்டுவிட்டாய். நீ உனக்கு இந்த புதுசு கைபேசி வேண்டாம் என்றால் கேட்கமாட்டாய். பாட்டு கேட்கணும் என்றே உயிரை வாங்கி இப்ப அடிபட்டு கிடக்கின்றாய். முதலில் இந்த பாட்டுப்பைத்தியத்தை நிற்பாட்டு! ரவி பாட்டு ஒரு ஜீவன் எனக்கு !என் மறுபெயர் பாட்டுத்தானே மச்சான் அதுதான் பாடல் எனக்குப் பிடிக்கும் எனக்கு மட்டுமா, நிசாவுக்கும் பிடிக்கும் !

எனக்கும் இனிப் பைத்தியம் பிடிச்சிடும் உன்னோடு பாட்டு கேட்டால் !
தொடரும்

17 comments :

Angel said...

நேசன் நலமா ..
இரவு உணவு சாப்பிட்டீங்களா

Angel said...

இன்னிக்கு முதல் CAPPUCCINO எனக்கே

Angel said...

நேசன் ..இந்த போன் திருடுவது அதற்கா உயிரையும் எடுக்க தயங்காத பாதகர்கள் இங்குமுண்டு ..சில வருடமுன் ஒரு ஏழை மாணவனின் உயிரை குடித்தது இந்த ப்லக்பெரி போன் ..

Angel said...

KALHONAHO ...பாட்டு மிக விருப்பமான பாடல்
ஆனால் :)))எப்பவும் ஷ்ஹருக்கைவிட SAIF கான் பிடித்த நடிகர் :)))
நாங்க சிடி வச்சிருந்தோம் தேடனும் இப்ப ::.
நல்லிரவு வணக்கம் .

Angel said...

யோகா அண்ணாவை விசாரித்ததாக சொல்லுங்க நேசன் ..

திண்டுக்கல் தனபாலன் said...

வழிப்பறிகள் வேறயா...

நல்ல பாடல்... தொடர்கிறேன்....
tm2

K.s.s.Rajh said...

ஜீவனை விட ரவியே மனதில் உயர்ந்து நிற்கின்றார் இப்படியான நண்பர்கள் கிடைக்க குடுத்துவைத்திருக்கவேண்டும்

ஹேமா said...

இப்பத்தான் கொஞ்சம் கொஞ்சமா வாசிக்கிறன் நேசன்...பின்னூட்டம் தர முடியேல்ல.ஆனால் ஒரே நேரத்தில வாசிக்குபோது கதையோட்டம் நல்லாவே இருக்கு !

தனிமரம் said...

நேசன் நலமா ..
இரவு உணவு சாப்பிட்டீங்களா//வாங்க அஞ்சலின் அக்காள் நான் நலம் முதலில் ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ!

தனிமரம் said...

இன்னிக்கு முதல் CAPPUCCINO எனக்கே// ஓம் உங்களுக்குத்தான் பால்க்கோப்பி அஞ்சலின் அக்காள்!ஹீ கப்பச்சீனிச்சோ விலை அதிகம்!ஹீ

தனிமரம் said...

நேசன் ..இந்த போன் திருடுவது அதற்கா உயிரையும் எடுக்க தயங்காத பாதகர்கள் இங்குமுண்டு ..சில வருடமுன் ஒரு ஏழை மாணவனின் உயிரை குடித்தது இந்த ப்லக்பெரி போன் ..// ம்ம் உண்மைதான் அக்காள்.

தனிமரம் said...

KALHONAHO ...பாட்டு மிக விருப்பமான பாடல்
ஆனால் :)))எப்பவும் ஷ்ஹருக்கைவிட SAIF கான் பிடித்த நடிகர் :)))
நாங்க சிடி வச்சிருந்தோம் தேடனும் இப்ப ::.
நல்லிரவு வணக்கம் .// எனக்கு அதிகம் சாரு பிடிக்கும் ஆனாலும் எல்லா நடிகர் படமும் பார்ப்பேன் ! நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்!

தனிமரம் said...

யோகா அண்ணாவை விசாரித்ததாக சொல்லுங்க நேசன் ..// நிச்சயம் யோகா ஐயா எல்லாம் அவதானிப்பார்! நன்றி அவரை நலம் விசாரித்ததுக்கு!அவர் சார்பில் என்நன்றிகள்.

தனிமரம் said...

வழிப்பறிகள் வேறயா...//ம்ம் இன்னும் ]ப்ல் வாத்தியாரே இங்கு!

நல்ல பாடல்... தொடர்கிறேன்....
tm2 / நன்றி தனபாலன் சார் வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

ஜீவனை விட ரவியே மனதில் உயர்ந்து நிற்கின்றார் இப்படியான நண்பர்கள் கிடைக்க குடுத்துவைத்திருக்கவேண்டும்

16 November 2012 19:26 // நிச்சயம் ராச் நல்ல நட்புக்கள் நல்ல வழிகாட்டிகள் நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

இப்பத்தான் கொஞ்சம் கொஞ்சமா வாசிக்கிறன் நேசன்...பின்னூட்டம் தர முடியேல்ல.ஆனால் ஒரே நேரத்தில வாசிக்குபோது கதையோட்டம் நல்லாவே இருக்கு !

17 November 2012 02:43 // வாங்க ஹேமா நலமா! நன்றி ஆறுதலாக வாசித்துவிட்டு முழுமையாக கருத்துச் சொல்லுங்கோ ! விமர்சனமாக! நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

semmalai akash said...

வாவ்! அருமை நண்பரே!
தொடர்ந்து படிக்கிறேன்.