20 November 2012

உருகும் பிரெஞ்சுக்காதலி-45


வாழ்க்கையில் நண்பர்கள் வட்டம் என்பது ஒரு இன்னொரு நம்பிக்கை ஒளி அந்த ஒளி வாழ்வில் விளக்கேற்றணும் தீபம் போல அப்படி அன்றி விளக்கை அணைக்கக்கூடாது .இப்படித்தான் ராகுலும் நீண்டகாலத்தின் பின் வைத்தியசாலை வந்த போது சொன்னான்! என்ன மச்சான் இப்படி ஆச்சு எல்லாம் ரவி சொன்னவன் .கடவுள் கைவிடமாட்டார் ஜோசிக்காத எல்லாம் நல்ல படியாக நடக்கும்.என்னாச்சுடா மச்சான் நீயும் வெளிநாட்டுக்கு வந்திட்டாய் எல்லாம் இனவாதம், மொழிவாதம் , மதவாதம்,பிரதேச வாதம் என்னையும் அகதி ஆக்கிவிட்டது என் அனுபவம் பெரிய கதை அதை நேரம் வரும் போது சொல்லுகின்றேன் என் முன் கதையை நம்ம இன்னொரு நண்பனிடம் தனியாக சொல்லிவிட்டேன் இப்ப அவன் என்ன செய்யிறான் தெரியுமா இங்க சமையல்காரானன்! ஹீ ஹீ!

அப்ப உன் அறிவிப்பாளர் கனவு எழுத்தார்வம் ,விற்பனைப்பிரதிநிதியில் மேற்பார்வையாளர் வேலை ,எல்லாம் கோவிந்தாவா??

ராகும் ம்ம் என்ன சொல்வது எல்லாம் விதிடா நான் ஏன் வடக்கில் பிறக்கணும் ?பின் யுத்தம் என்ற நிலையில் பதுளை போகணும் ?அங்கிருந்து என் ஆசைப்படி விற்பனைப்பிரதிநிதி மேற்பார்வையாளராக யாழ் பயணம் ஏன் போகணும் ?

சமாதான காலம் என்று உலகநாடுகளை ஏமாற்றிய போது அந்த நேரத்தில் ,வன்னியில் இருந்து சமாதான காலம் என்று இராணுவக்கட்டுப்பாட்டுக்குள் ஏன் கஜன் வரணும் ?

இன்றுவரை புரியாத புதிர் ஜீவன்.!


ஏன் என்னாச்சு ?? மொட்டம் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு !

நானும் போராளியாம் உளவு பார்க்க வந்தவனாம் !

என இனவாத அரசு ஒருபுறம் தெற்கே !


இருந்த நீ ஏன் வடக்கே வந்தாய் சிங்கள தனியார் துறை நிறுவனத்தில் மேற்பார்வையாளர் என்ற போர்வையில் என்று இன்னொரு அரசு ??

போதுமடா சாமி வழிவிடுங்க உயிர் முக்கியம் என்று ஒடி வந்து விட்டன் லண்டன் போகும் வழியில் உன் கதை சொன்னான் நம்ம ரவி !

உனக்கு என்னாச்சு நாம யார் பெட்டிக்கடை பேரம்பலம் யார்?


போய் கேளு நம்ம வம்சம் புகழ் சொல்லும் போயும் போயும் நம்ம பங்கஜம் பாட்டி ஒட்டு வேண்டாம் உறவு வேண்டாம் என்ற தங்கமணி மாமாவின் வானில் வந்த இந்த சோதிமாமாவின் குடும்ப உறவு எமக்கு தேவையா மச்சான் ?


இந்த நிசா என்ன சினேஹா போல அழகா ?


வேண்டாம் ஜீவன் எனக்கு ஏற்கனவே பதுளையில் வில்லன் என்று ஒரு பட்டம் இருக்கு ,பாரிசிலுமா ?

வேண்டாம் மச்சி நான் விற்பனைப்பிரதி நிதி வேடம் போடுவததே நல்லது!

ஏன் தெரியுமா ??

என் கோபம் பலருக்கு தெரியாது ?



மேல் அதிகாரி என்றாலும் கட்டி இருக்கும் கழுத்துப்பட்டியை கழற்றி விட்டு அடித்து விட்டு வருவேன் நடு ரோட்டில் !


அது கொழும்பா ,பதுளையா அல்லது யாழ்ப்பாணமா எங்கும் செய்தவன் எனக்கு என் கருத்து முக்கியம் !


பட்டதாரியா இல்ல, புகழா ,இல்லை இது எல்லாம் என் கால் தூசு எனக்கு பாரிசும் பெரிசு இல்லை!


சோதி மாமாமீது கை வைக்க !

ஆனால் அவர் என்னிடம் சொன்ன ஒரு விடயம் மிகவும் ஜோசிக்க வைக்கின்றது 7 செவ்வாய் சாத்திரம் !


நீயோ நிசாவின் செவ்வாயிலில் உள்ளதடி எனது வாழ்க்கை என்று வைரமுத்து கவிதை பேசுகின்றாய் !

அவரோ என் மகள் வாழ்கை முக்கியம் அவர் அவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாறங்கள் என்கின்றார் !

உன் பார்வையில் குடும்பம் என்ற ஆலமரமா ?இல்லை காதல் என்ற வாழைமரமா ?

நான் உனக்கு வில்லனா ?இல்லை நண்பனா ?

இல்லை துரோகியா ?

தீர்மானி ஜீவன் குடும்பம் என்பது ஒரு ஆலமரம் அது சாய்ந்தால் நான் நட்பு உறவு என்று எல்லாரையும் தாண்டிப்போகும் வழிப்போக்கன் நிசாவிடயத்திலும் என்னை வில்லன் ஆக்காதே விரைவில் லண்டன் போகணும்!



தொடரும்!

9 comments :

மகேந்திரன் said...

வணக்கம் நேசன்,
நெஞ்சில் ஊறிய கேள்விகளுடன்
இப்பகுதியை தொடர்ந்திருக்கிறீர்கள்...
இனிவரும் பகுதிகள்
இதற்கான விடைகளை
தெளிவாகச் சொல்லிச்செல்லும்
என நினைக்கிறேன்...
நானும் தொடர்கிறேன்...

திண்டுக்கல் தனபாலன் said...

ஆவலைத் தூண்டும் கேள்விகள்...

தொடர்கிறேன்...
tm2

K.s.s.Rajh said...

////வாழ்க்கையில் நண்பர்கள் வட்டம் என்பது ஒரு இன்னொரு நம்பிக்கை ஒளி அந்த ஒளி வாழ்வில் விளக்கேற்றணும் தீபம் போல////நிஜமான வரிகள் பாஸ்

Anonymous said...

விரைவில் லண்டன் போகணும்//

நமக்கும் டிக்கெட் போடுங்க...தொடர்கிறேன்...




தனிமரம் said...

வணக்கம் நேசன்,
நெஞ்சில் ஊறிய கேள்விகளுடன்
இப்பகுதியை தொடர்ந்திருக்கிறீர்கள்...
இனிவரும் பகுதிகள்
இதற்கான விடைகளை
தெளிவாகச் சொல்லிச்செல்லும்
என நினைக்கிறேன்...
நானும் தொடர்கிறேன்...//வாங்க மகி அண்ணா நலமா ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ!

தனிமரம் said...

ஆவலைத் தூண்டும் கேள்விகள்...

தொடர்கிறேன்..
tm2// நன்றி தனபாலன் சார் வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

வாழ்க்கையில் நண்பர்கள் வட்டம் என்பது ஒரு இன்னொரு நம்பிக்கை ஒளி அந்த ஒளி வாழ்வில் விளக்கேற்றணும் தீபம் போல////நிஜமான வரிகள் பாஸ்

20 November 2012 19:56 // நன்றி ராச் வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

விரைவில் லண்டன் போகணும்//

நமக்கும் டிக்கெட் போடுங்க...தொடர்கிறேன்...// வாங்க ரெவெரி அண்ணா நலமா.தொர்வேன்!ம்ம்ம்

மில்லியனெயார் ஆகும் அதிரா:) said...

ஆஹா அவரின் கோபத்தைக் கொஞ்சம் அடக்கச் சொல்லுங்கோ..:)

விரைவில் லண்டன் செல்ல வாழ்த்துக்கள்!!!...

தொடர் சுவாரஷ்யமாகப் போகுது தொடருங்கோ.