21 November 2012

உருகும் பிரெஞ்சுக்காதலி-46


நட்பு என்ற ரயில் பயணத்தில் யாழ்தேவியிலும் உடரட்டையிலும் பயணத்தில் நம் நட்பில் ஒரு திருப்பம் தான் ராகுல் அன்று ஆஸ்ப்பத்திரியில் என்னோடு பேசியது.


என்ன ரவி இவன் இப்படிப்பேசுகின்றான். நீ சொல்லுமச்சான், நிசா எப்படி நல்லவள் என்று அப்பா அம்மா திட்டினாலே குற்றம் செய்தார்கள் என்று காவல்துறையை கூப்பிடும் இந்த நாட்டில், அப்பா அம்மாவின் கஸ்ரம் புரிந்த நிசா மிகவும் நல்லவள் என்று..!

இதைப்பாரு ஜீவன்! நானும் ராகுலுடன் ஒத்துப்போறன். முதலில் உன் வாழ்க்கை முக்கியம். என்றாவது ஒரு நாள் உன் குடும்பம் கேட்கலாம் நண்பர்கள் என்று எல்லா இடத்திலும் இருந்தனீங்களே இந்த ஜீவன் இப்படி காதல் போதையில் திரியும் போது நீங்கள் யாராவது தடுத்தீர்களா? என்று.
முதலில் உடம்பை பாரு! இன்னொரு நல்ல சேதி மச்சான். எகிப்திய முதலாளி உன்னை மீண்டும் வேலைக்கு வரட்டாம். உன் வேலை சிறப்பாக இருக்காம். என்ன நீ விசா இல்லாதவன் இன்னொரு நண்பன் விசாவில் வேலைக்கு வந்து பொய் சொல்லிவிட்டாய் என்று சின்ன வருத்தமாம். என்றாலும் மன்னிக்கின்றாராம். உண்மையோடா? பின்ன இங்க காதலைவிட வேலை முக்கியம்!காலச்சக்கரம் சுற்றும் அளவுக்கு கடமையும் கூடிவர என் சகோதரியின் வாழ்விலும் விடியல் திறந்து கொள்ள, எனக்கும் பாரிஸில் முகவரி கிடைத்த அந்த நேரம் தான் மிகமுக்கியமான, சர்வதேச நாளிதழ்களில் பிரெஞ் காவல்துறையினரின் தடியடியும் வேலையில்லாத திண்டாட்டமும் சேர்ந்து கொள்ள, புதிய ஜனாபதி தேர்தல் வந்து சேர்ந்தது.




 இரண்டாவது அகதி அடைக்கல மேல் முறையீடுக்குழு மூலம் தாயகத்தில் எனக்கும் உயிர் அச்சுறுத்தல் இருக்கு என்பதுக்கு சாட்டபூர்வமான அத்தாட்சிப்பத்திரங்கள் உதவி மூலம் ஏற்றுக்கொண்ட குழு எனக்கும் அடைக்கல விசா தந்த அன்றைய 2007/6/9 திகதி என் வாழ்வில் சேர்ந்தது. நிக்கோல சர்க்கோசியின் புதிய ஜனாதிபதி வருகையும் நாட்டில் மாணவர்களின் தீவைப்பு மற்றும் கல்வீச்சு ,அடிதடி என்பனவும் ஊடரங்குச் சட்டம் மூலம் தடுக்கப்பட்டது.
இந்த சூழ்நிலையில் வீதியோரங்களில் கலகத்தடுப்புப் படை காவல்துறையினரும் கண்காணிப்பதால் விசா இல்லாமல் வேலைத்தளத்தில் மற்றவர்களின் விசாவில் வேலை செய்தவர்கள் பயத்தினால் வேலைத்தளத்திலேயே உறங்கிய நாட்களைப்பற்றி யார் பேசுவார்கள்?
வெளிநாடு போட்டான் தலைக்கனம் பிடித்தவன் என்று குற்றம் சொல்லும் ஊர் குறுகுறுத்து, தலைகுனிந்து நின்ற போதெல்லாம் சாமரம் வீசியாதா சந்தணம் பூசியதா? பூசியது எல்லாம் சாணிதானே! அந்த நிலை எல்லாம் எந்த நடிகணுக்கு பரணிபாடும் ஈழத்தவன்களுக்குத் தெரியும் ?
பாரிசில் ஆட்சிமாற்றம் அமைதிச்சூழல் மீண்டும் வசந்தம் 2007 இல் வந்த போது எனக்கும் ஒளி பிறந்தது. இரண்டாவது அகதி அடைக்கல மேல் முறையீடுக்குழு மூலம் தாயகத்தில் எனக்கும் உயிர் அச்சுறுத்தல் இருக்கு என்பதுக்கு சாட்டபூர்வமான அத்தாட்சிப்பத்திரங்கள் உதவி மூலம் ஏற்றுக்கொண்ட குழு எனக்கும் அடைக்கல விசா தந்த அன்றைய 2007/6/ 9 திகதி என் வாழ்கையில் மறக்கமுடியாது. இந்த சந்தோஸமான செய்தியை ரவிக்குச் சொன்னேன்; கைபேசி மூலம் 'மச்சான் விசா கிடைச்சிருச்சு' மறுமுனையில் அவன் சந்தோஸம் ஜீவன் கடவுள் கைவிடவில்லை. அப்ப இந்த வருடம் சபரிமலைக்கு வாராய் சரியா? கையில் காசு இருக்கா? ஓம் மச்சான் வரம்போது ஒரு சுவாஸ் ரீகல் பிஸ்கி வாங்கி வா ஒரு பார்ட்டி போடுவம்.
நீண்டநாள் இல்லாத சந்தோஸம் திரும்பி இருக்கு. உனக்கு கையோட ராகுலுக்கும் லண்டனுக்கு எடுத்துச் சொல்லு அதிகம் சந்தோஸப்படுவான். நிச்சயமாக அவனும் என் நண்பன் ஆச்சே! சரிடா மச்சான், நிசாவும் வந்து இருக்கின்றாள் இன்று பார்த்தேன் சோதிமாமாவிடம் கதைச்சிட்டு வாரன்.
வேண்டாம் என்றால் நீ கேட்கமாட்டாய்! இனி நான் தடுக்க மாட்டன் மச்சான். உன் விருப்பம் சரி இன்னொரு போத்தல் இன்று கூடும் போய்வாடா... ராசா எனக்கு இன்னும் முன் ஆயத்த வேலைகள் முடியவில்லை சமையலில் என்று தொடர்பை துண்டித்தான் ரவி ! இன்று முடிவு தெரிய வேண்டும் என்ற நினைப்பில் சோதிமாமா வீட்டுக்கதவில் அழைப்பு மணியை அமர்த்தியதும் சோதி மாமா வேலையாள் அப்பத்தான் வந்தவர்.. வா ஜீவன் என்றார் இயல்பாக !
என் வருகையை அவர் விரும்பவில்லை என்பதை முகம் காட்டியது.
'சொல்லும்'
விசா கிடைச்சிருக்கு அதுதான் சொல்லிப்போக வந்தன்.
ஓ நல்லவிடயம் அப்ப ஊரில் இனி உன் கோத்தை மோணுக்கு கோடியில் சீதனமும் கொழும்பில் வீடும் யாழ்ப்பாணத்தில் கடையும் வாங்கப்போறா என்று சொல்லு..
இல்ல மாமா, அம்மா என் பேச்சை மீறமாட்டா! என் சந்தோஸம் தான் அவா சந்தோஸம்! ஐயாவும் அப்படித்தான்..நேரடியாக கேட்கின்றேன் நிசாவை எனக்குப் பிடிச்சிருக்கு கண்கலங்காமல் பார்த்துக்க முடியும். எனக்கு அவளைக்கட்டித்தாரிங்களா? கலியாணம் அவசரம் இல்லை. சம்மதம் என்று முடிவை மட்டும் இப்ப சொல்லுங்க.. எனக்கு என்று ஒரு வீடு வாங்கிய பின் தான் கலியாணம். அதுவரை நண்பர்களாக இருப்போம் மாமா!
இதைப்பாரு பங்கஜம் சீமாட்டிக்காகத்தான் உன்னை வீட்டுக்குள் கூப்பிட்டது. என்ர மோளுக்கு இன்ஜினியர் மாப்பிள்ளைதான் தகுதியாக முடியும். உன்னை மாதிரி சமையல்காரன் எல்லாம் சரிவராது. நினைப்பை விட்டுவிட்டு வேலைதேடி இனி முன்னேறுகின்ற வழியைப்பாரு. நிசாவைத் தேடி இனி இங்கு வந்தாலோ இல்லை வழியில் பேசினாவோ நானும் மரியாதை குறைய வேண்டி வரும். பங்கஜம் பேரங்களுக்கு சோத்தில் உப்பு போட்டுக்கொடுத்து இருப்பா என்று நம்புகின்றேன் ரோசம் வர... உனக்கு ரோசம் இருந்தால் இனி வீட்ட வராத !
சரிமாமா உங்க மகள் எனக்கு வேண்டாம். உங்க சம்மதம் இல்லாமல்..ஆனால் என்றாவது ஒருநாள் உங்களை கேள்வி கேட்டால்சொல்லுங்க, ஜீவனும் படித்தவன் நல்ல ஒரு பல்தேசிய கம்பனியில் விற்பனைப்பிரதி நிதியாக கெளவரமாக இருந்தவன். இனவாதம் என்னை சிதைத்தாலும் முதுகெலும்பு இருக்கு. 7985 கிலோ மீட்டர் தாண்டி அகதியாக வந்தாலும் எங்க பங்கஜம் பாட்டியின் பேரன் ரோசக்காரன். காதலுக்காக அவமானப்பட்டாலும் தாழ்ந்து போக மாட்டன்.

சொல்லுங்க நிசாவுக்கு, நான் காதலித்தது நிஜம்! உங்க சீதனத்துக்கோ இல்லை விசாவுக்கோ நான் அடிமையில்லை! எனக்கும் இந்த நாட்டில் வாழும் வழி தெரியும்! என்றாவது ஒருநாள் ஒரு சபையில் சந்தித்தால் நாகரிகமாக கைகுலுக்குவேன் நிசாவுடன்.. இதை எல்லாம் உள்ளே இருந்து நிசா கேட்பதும் எனக்குத் தெரியும். நான் போறன் என்றுவிட்டு வெளியில் வந்தவனைக் காண காத்திருந்தான் ரவி !

தொடரும்.....
மோள் -மகள்§..
கோத்தை-தாய் யாழ் வட்டார மொழி!

8 comments :

K.s.s.Rajh said...

////சொல்லுங்க நிசாவுக்கு, நான் காதலித்தது நிஜம்! உங்க சீதனத்துக்கோ இல்லை விசாவுக்கோ நான் அடிமையில்லை! எனக்கும் இந்த நாட்டில் வாழும் வழி தெரியும்! என்றாவது ஒருநாள் ஒரு சபையில் சந்தித்தால் நாகரிகமாக கைகுலுக்குவேன் நிசாவுடன்.. இதை எல்லாம் உள்ளே இருந்து நிசா கேட்பதும் எனக்குத் தெரியும். நான் போறன் என்றுவிட்டு வெளியில் வந்தவனைக் காண காத்திருந்தான் ரவி ////ஜுவன் மீது ஒரு மரியாதை வருகின்றது காதலுக்காக தன் தன்மானத்தை விட்டுக்கொடுக்காத குணம் போற்றத்தக்கது தொடருங்க பாஸ்

திண்டுக்கல் தனபாலன் said...

எதுவென்றாலும் தன்மானம் பெரிதல்லவா...

தொடர்கிறேன்...
tm2

ஆத்மா said...

பதிவுகள் தவறவிட்டுள்ளேன் படித்துவிட்டு வருகிறேன் அண்ணா

காற்றில் எந்தன் கீதம் said...

நல்ல முனேற்றம் வந்திருக்கு நேசன் எழுத்துக்களில்... மகிழ்ச்சி... நேரக்குறைவு காரணமாய் பின்னூட்டம் இட முடியாவிடினும் தொடர்ந்து கொண்டே இருக்கிறேன்.:)

தனிமரம் said...

சொல்லுங்க நிசாவுக்கு, நான் காதலித்தது நிஜம்! உங்க சீதனத்துக்கோ இல்லை விசாவுக்கோ நான் அடிமையில்லை! எனக்கும் இந்த நாட்டில் வாழும் வழி தெரியும்! என்றாவது ஒருநாள் ஒரு சபையில் சந்தித்தால் நாகரிகமாக கைகுலுக்குவேன் நிசாவுடன்.. இதை எல்லாம் உள்ளே இருந்து நிசா கேட்பதும் எனக்குத் தெரியும். நான் போறன் என்றுவிட்டு வெளியில் வந்தவனைக் காண காத்திருந்தான் ரவி ////ஜுவன் மீது ஒரு மரியாதை வருகின்றது காதலுக்காக தன் தன்மானத்தை விட்டுக்கொடுக்காத குணம் போற்றத்தக்கது தொடருங்க பாஸ்// வா ராச் ஒரு பால்க்கோப்பி குடி முதலில்!ம்ம் தன்மானம் முக்கியம் எனக்கும் நட்பு சொல்லிய பாடம்! நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

எதுவென்றாலும் தன்மானம் பெரிதல்லவா...

தொடர்கிறேன்...
tm2// நன்றி தனபாலன் சார் வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

பதிவுகள் தவறவிட்டுள்ளேன் படித்துவிட்டு வருகிறேன் அண்ணா// நன்றி சிட்டு வருகைக்கும் கருத்துக்கும்!

தனிமரம் said...

நல்ல முனேற்றம் வந்திருக்கு நேசன் எழுத்துக்களில்... மகிழ்ச்சி... நேரக்குறைவு காரணமாய் பின்னூட்டம் இட முடியாவிடினும் தொடர்ந்து கொண்டே இருக்கிறேன்.:)

22 November 2012 06:12 // நன்றி தோழி அன்பான வருகைக்கும் கருத்துக்கும்!