என் நேசம் நீயடி
என் காதல் நீயடி
என்னையும் புரியாத நீயும்
என்னைவிட்டு போய்விடு
எனக்கு எப்போதும் நீ சுமையடி
(ஜீவனின் நாட்குறிப்பில் இருந்து)
என்ன சொல்கின்றாய் நிசா நல்லா படித்து முடித்துவிட்டாய் தானே?
என் காதல் நீயடி
என்னையும் புரியாத நீயும்
என்னைவிட்டு போய்விடு
எனக்கு எப்போதும் நீ சுமையடி
(ஜீவனின் நாட்குறிப்பில் இருந்து)
கலியாணத்துக்கு எல்லா ஏற்பாடும் செய்த பின் சிங்கப்பூர் போகும் முதல்நாள் மாலையில் ஜீவன் கோவில் போனான்!
கோயிலில் கும்பிட்டு விளக்கேற்றும் போது ஆச்சரியம் அதிசயம் இந்த உலகில் கடவுள் வாழ்கின்றார் என்பதை உணர்ந்த தருணம். இதுவரை சைவம் என்றாலும் கோயில்களுக்கோ அல்லது நல்லவிழா கெட்ட நிகழ்வுகள் எதுக்கும் வெளியில் போகாத நிசா அவர்கள் எதிர்வீட்டுப் பாட்டியுடன் கோவிலுக்குள் வந்தாள். என் பிரார்த்தனை முடித்து என் குருநாதரிடம் ஆசிவாங்கி வெளியேறும் போது மனதில் சந்தோஸம் ஒரு புறம் என்றால் சங்கடம் இன்னொரு புறம்! கோவில் பிரகாரத்தில் சிறப்பான நாட்களில் குருவின் கைத்தடியாக இருக்கும் என்னிடமே குருநாதர் சொன்னார், ஜீவன் இந்தப்பாட்டிக்கும் ஒரு நெய்தீபம் கேட்டாங்க நீ எடுத்துக்கொடு என்ன அவசரம் நாளைதானே விமாணம் ஏறப்போறாய் ஓம் குருவே இந்தாங்க பாட்டி நெய்தீபம் இல்ல ஜீவன் அது நிசாவிடம் கொடு அவள் தன் ஏற்ற வேண்டும் எனக்கு குறை ஒன்றும் இல்லை நிறைவான வாழ்க்கை வாழ்கின்றேன் பேரன் பேர்த்திகள் பார்த்துவிட்டேன். நிசாவுக்கு கோவில் முறைதலை தெரியாது நீயே சொல்லிவிடன் ஜீவன் நான் என்ன சொல்ல பாட்டி எல்லாம் என் குருவின் செயல் முதலில் பிள்ளையாரிடம் நெய்தீபத்தை ஏற்றி மூன்று சுற்று சுற்றிவந்து சரனாகதியே நீ தான் எங்கள் குல தெய்வமே என்று ஆண்டவனுக்கு முன் வைத்துவிடு தீபத்தின் ஒளியில் எல்லா தீய நினைவுகளும் எண்ணங்களும் கரைந்து போகும் ஆண்டவன் கைவிடமாட்டார் நம்பினோர் ஆதரிக்கும் என் குருநாதனே!சரிதானே குருநாதா என்னோட கைகளில் நீயும் ஒருவன் தானே நீ சொன்னால் சரியாக இருக்கும் மனைவி வந்தவுடன் குருவை மறப்பியோ கடந்து வருவேன் தடங்கள் வந்தால் விலகி நின்றாலும் கூடவருவன் குரு நாதா கல்லாப்பிழையும் கருதாப்பிழையும் என் பிழைகளையும் அறிந்த குரு நீங்கள் அல்லவா! மீண்டும் சந்திப்போம் குருநாதா என்று வெளியில் வரும் போது பாட்டி தடுத்தா ஜீவன் நிசாவையும் நீ வீட்ட போற வழிதானே நிசாவையும் வீட்டில் விட்டுவிட்டுப் போ.. அவளுக்கு படிப்பு முடிந்தாலும் இன்னும் ஆவணங்கள் கைக்கு வரவில்லையாம். நான் கொஞ்சம் கோயிலில் இருந்திட்டு வாரன்.
சரி பாட்டி இருவரும் கோயிலில் இருந்து நடந்து வீதிக்கு வந்தபோது மெளனம் யுத்தம் சோதனைகள் வரும் போது சிரிக்கும் மனநிலை போய் விழியில் ஏனோ வலி என்றாலும்!என்ன ஜீவன் மெளனம் முன்னர் போல கலகலப்பு இல்லையே ஏன் சிரியஸ்பார்ட்டி போல இருக்கின்றீங்க? கலியாண மாப்பிள்ளை ஜெகஜோதியாக ஒளிக்க வேண்டாமா?
ம்ம் நக்கல் நான் எப்போதும் போலத்தான் இருக்கின்றேன். அதுசரி நீ அப்படி இருக்கின்றாய் மாயா வந்திட்டாளா? ஓம் வீட்டுக்காரி மதியம் வந்துவிட்டார்கள். நான் தான் பின்னுக்குப் போறன் பெண் வந்து காத்து இருந்து மாப்பிள்ளை திடீர் என்று போனால் தானே சாக்காக இருக்கும். எத்தனை வருடம் பார்த்து பாட்டியை?? பேர்த்தியை அப்ப தெரியாது இப்ப பார்க்கும் போது உறவுகள் விமான நிலையத்தில் காத்து இருக்க அந்தா பார் உன் மாப்பிள்ளை வருகின்றார் என்கிறபோது மாயாவை முகத்தில் வரும் வெட்கத்தைப் பார்க்க வேண்டுமே!
ம்ம் உனக்கு எப்போதும் ரசனை அதிகம் !என்னால் தான் முன்னர் போல இல்லை இயல்பு நிலையே கெட்டுவிட்டது.
ஓ படித்துவிட்டேன் ஆனால் வாழ்க்கையில் கோட்டைவிட்டு விட்டேன் !உனக்கு எப்போதும் அவசரம்டா ஜீவன்.. அவசரப்பட்டு காதலிக்கின்றன் என்று ரயிலில் சொன்னாய்! காத்து இருக்கின்றேன் என்று நம்பிக்கை தந்தாய்! ஆனால் எல்லாம் சினிமா போலத்தான் !
நீ சொல்வது புரியல நிசா உனக்கு நறுக்கு என்று சொல்லத்தெரியாது! ஜீவன் நீட்டி முழங்க வேண்டியதுதான் முதலில் உன் கோபத்தைக்குறை மிகவும் மனக்கஸ்ரம் உன்னால் உண்மையில் எனக்காக ஏன் காத்து இருக்காமல் போனாய்? இன்னொருத்திக்கு ஓம் என்று சொன்னாய்?
யாரு நான் காத்து இருக்கவில்லையா? விளையாடுகின்றாயா 5 வருசம் நீ என்னிடம் வருவாய் என்று காத்து இருந்தேனே! ரயில் பயணத்தில் தினமும் உன் முகம் காண.. தெரியாதா? அப்ப வந்து பேசி இருக்கலாமே ஒரு வார்த்தை.
நிசா எத்தனை ஆர்வத்துடன் வருவேன் தெரியுமா உனக்காக? என் இயல்பைக்கூட மாற்ரிவிட்டு மெதுவாக நடப்பேன்! நண்பர்கள் போகவிட்டுத்தான் வீட்டில் இருந்து இறங்குவேன். அது எல்லாம் எங்க உனக்குத் தெரியப்போகின்றது!
தெரியும் ஜீவன் நீ எனக்காக காத்திருந்தது. அப்பாவிடம் சண்டை போட்டது முதுகில் ஏற்பட்ட சத்திரசிகிச்சையை வைத்து அப்பா உன்னைப்பற்றி தப்பா எண்ணியது எல்லாம் தெரியும். உன் பிடிவாதம் புரியும். பாடல் ரசனை புரியும். கவிதை வாசிப்புப் புரியும். ஊர்ப்பற்றுப்புரியும். பெரியவர்களிடம் பணிந்து போகும் குணம் எல்லாம் புரியும் !
என்ன புரிந்து என்ன நிசா உன் மேல் நான் வைத்திருந்த தூய் நேசம் புரியுமா? உன் வெள்ளிக்கொலுசுக்கு நான் சத்தமாக இருக்க வேண்டும் எண்ணியிருந்தேனே அதுகூட புரியவில்லையே! இந்த நேசத்தையே புரியாத நீ எப்படி அறிவாய் உனக்கு என்ன கலர் சாரி பிடிக்கும் என்று எத்தனை சாரியை முன்கூட்டியே வாங்கியந்த என் காதல் பற்றித் தெரியுமா? உன் சம்மதம் தெரியாமலே உனக்கு தாலிக்கொடி முன்கூட்டியே வாங்கியந்து வைத்திருந்தவன் நான்! அதுகூடத் தெரியாது இது எல்லாம் பூந்தோட்டம் படத்தில் வரும் முரளி போலத்தான் நானும் இருந்தேன் நிசா ! ஆனால் அப்ப எல்லாம் உனக்கு புரியவில்லை !
விதிடா ஜீவன்! எனக்கு உன்னை அதிகம் பிடிக்கும். ஆனால் சொல்லவில்லை குடும்பத்தில் மூத்தவள் நான் வழி தவறினா என்ன ஆகும்! என் தங்கைகள் வாழ்க்கை ஜோசித்தாயா? உன் மச்சாள் வழிதவறி உனக்குப் பிடிக்காதவனைக்கக் கட்டியதில் நீ கதைக்காமல் பங்கஜம் பாட்டியின் காலத்தில் இருப்பதையும் அறிவேன்! நீ எப்படி குடும்ப காவடியைத் தூக்கி ஆடுகின்றாயோ அப்படித்தானே என் அப்பாவும்! இந்த நாட்டில் வந்து கஸ்ரப்படுகின்றார். காவடியின் வலி அதிகம்டா அதைவிட குத்தும் செடில் கம்பியின் வலி உருக வைக்கும் தூக்கி ஆடும் காவடிக்கும் தூக்குக் காவடிக்கும் வித்தியாசம் இருக்கு ஆன்மீகத்தில் போகும் உன் நிலை வெளியில் சிரிக்கின்றார்கள் ! இந்த வயதில் ஏன் இப்படி என்று எனக்கு தெரியும்டா பங்கஜம் பாட்டியின் கோயில் பங்கும் அதில் நீ கடைசிப்பேரனாகவும் இருக்கின்றாய் ஊர்க் கோயில் உனக்கு முக்கியம் அதன் ஈர்ப்புத்தான் இப்படி வெளிநாடு வந்த பின்னும் என்று அதிகம் பிடித்தவர்களிடன் அதிகம் எதிர்பார்ப்பார்கள்.
அப்பாவின் கனவு அவர் என்னிடம் எதிர் பார்த்தது. நான் உன்னிடம் எதிர்பார்த்தது காத்து இருப்பாய் என்று ஆனால் நீயோ கலியாணப்பத்திரிக்கையில் என் பெயரைப் போடும் காலம் வரும் வரை காத்திருக்காமல் மாயா என்று போட்டு எங்க வீட்டிலயே முதல் அழைப்பு வைத்தாயே! நீ உண்மையில் கோபக்காரன் தாண்டா !உண்மையில் நீ கோபக்காரன் என்றாலும் நேசிக்கின்றவன் என்பதை அறிவேன்! விதி நாம் இப்படி குடும்பம் முக்கியம் என்று நடுவீதியில் நின்று பேசும் நிலை. இது எல்லாம் யுத்தம் தந்த இன்னொரு நெருக்கடி! நெய் தீபம் ஏற்றி தந்த போது தெரிஞ்சிச்சு உன் அளுமை. நெய் தீபத்தில் உருகியது என் காதல் என்றாலும் மாயா அதிஸ்ரக்காரிதான் உன்னோடு சேர்ந்து கடல்க்கரைகள் பார்க்கவும் பாரிஸ்,லண்டன் என்று உறவுகள் சேர்ந்து உன்னோடு கூதுகலிக்க என் வாழ்த்தையும் சொல்லிவிடு.
சந்தோஸத்துடன் போ ஜீவன் நான் சுதந்திர தேசத்தில் இருந்தாலும் இன்னும் உன்னை நினைத்துக்கொண்டே தனியாக வாழ்வேன் என் தங்கைகளுக்கு ஒரு நல்ல அக்காளாக.. வழிகாட்டிகள் அழக்கூடாது ஆனால் உருகலாம் !வீடு வந்து விட்டது இனி உன் வாழ்க்கைப் பயணம் வெற்றிகரமாக இருக்க ஒரு நண்பியாக வாழ்த்துகின்றேன். போய் வா மீண்டும் வரும் போது மாயாவின் கணவனாக வருவாய். இன்னொரு ஒரு தடவை உன் தோளில் சாய்ந்து பார்க்கவா ஜீவன்? ம்ம் இது ஏன் தெரியுமா? மாயா என்றாவது என்னிடம் சண்டை போட்டால் நான் சொல்வேன் என் பூமாலையை உனக்கு பொன் ஊஞ்சல் ஆக்கியிருக்கின்றேன் என்று.. தோல்வியிலும் சுகம் உண்டு! நான் விடை பெறுகின்றேன்!
ஜீவன் கவனமாக நண்பர்கள் சகிதம் நாளை விமான நிலையம் போங்க. ரவிக்கு சொல்லுங்க ராகுலுக்கும் சேர்த்து நீங்கள் தான் வில்லன்கள் என்று.. நிசா சொன்னாள் என்று..
என்ன பார்க்கின்றீங்க? உங்க நட்பு வட்டமும் நான் அறிவேன்! நாளைக்கு என் கதையும் பலருக்கு போகும். எதுக்கும் நீங்கள் நட்பு விடயத்தில் கவனமாக இருங்கள். சம்மந்தம் இல்லாமல் பின் புலத்தையும் பொதுவெளியில் பேசும் நட்பும் வரலாம்! எப்போதும் அவதானம் பிரதானம் ஜீவன் போய் வா... !a'bientot!
23 comments :
முடிச்சிட்டீங்களா ..
அப்போ நாளைய பொழுது பூரா உங்க தளத்திலதான்...விட்டதெல்லாம் தொடரனுமே
வணக்கம் பாஸ் ஜுவன்,நிசா.......இருவரின் கதையை கேட்கும் போதும் மனம் கலங்குகின்றது
அப்பறம் ஒரே பந்தி இரண்டு தடவை பதிவாகிவிட்டது திருத்திவிடுங்கள்
அப்பறம் இன்னும் ஒரு சந்தோசமான விடயம் எதேர்ச்சையாக இன்று நீங்கள் எழுதிய பதிவுகளின் தொகையை பார்த்தேன் ஆச்சரியமாக இருந்தது....எண்ணிக்கை படி இந்த பதிவு உங்களின் 400வது பதிவு வாழ்த்துக்கள் பாஸ்
பதிவிற்கேற்ற நிறைவான கண்ணொளி...
எனது dashboard-ல் மூன்று பதிவுகள் வந்துள்ளன... கவனிக்கவும்... தமிழ்மணம் இணைத்து ஓட்டும் இட்டு விட்டேன்...
400வது பதிவு... வாழ்த்துக்கள்
நன்றி...
இந்த பகுதி அதிகம் மனதை நெகிழ வைத்து விட்டது ..
அதற்குள் முடிந்து விட்டதா ....
ஜீவனை விட நிஷா மனதில் கோபுர கலசமாய் உயர்ந்து நிற்கிறார்
நிஷாவின் நட்பு பற்றிய கூற்று மெய்தான் .
இரவு வணக்கம்,நேசன்!அருமையாக சொல்லி முடித்து விட்டீர்கள்,வாழ்த்துக்கள்.
முடிந்துவிட்டதோ தொடர்?.. நிஷா பாவம்.. ரொம்ப லேட்ட்... ஜீவனுக்கு ஏன் இவ்ளோ அவசரம்? சரி எல்லாம் விதியே. தொடர் அருமையாக முடிந்தமை மகிழ்ச்சியே.
யோகா அண்ணன் வந்திருக்கிறார். எங்க போயிருந்தீங்க? தேடினோம்.. நலமோ யோகா அண்ணன்...
hi anna it is so beautiful story
தொடர் முடிந்தது - மனதை பிழிந்தது... பிடித்து படித்தேன்...
நான் உருகும் பிரெஞ்சுக் காதலிக்கு புதிது,,, விரைவில் முதலிலிருந்து படித்துவிடுவேன் என்று நினைக்கிறேன்..
முடிச்சிட்டீங்களா ..
அப்போ நாளைய பொழுது பூரா உங்க தளத்திலதான்...விட்டதெல்லாம் தொடரனுமே
22 November 2012 17:03 //ம்ம் வாங்க சிட்டு முதலில் ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ முடித்து விட்டேன்!ஹீஈஈஈஈஈஈஈஈஈஈஈ!
வணக்கம் பாஸ் ஜுவன்,நிசா.......இருவரின் கதையை கேட்கும் போதும் மனம் கலங்குகின்றது
//வணக்கம் ராச்!ம்ம் ஓ அப்படியா!
அப்பறம் ஒரே பந்தி இரண்டு தடவை பதிவாகிவிட்டது திருத்திவிடுங்கள்!ம்ம் திருத்துகின்றேன்!நன்றி அறியத்தந்ததுக்கு நன்றி வருகைக்கும் கருத்துக்கும் ராச்!!
22 November 2012 18:29
அப்பறம் இன்னும் ஒரு சந்தோசமான விடயம் எதேர்ச்சையாக இன்று நீங்கள் எழுதிய பதிவுகளின் தொகையை பார்த்தேன் ஆச்சரியமாக இருந்தது....எண்ணிக்கை படி இந்த பதிவு உங்களின் 400வது பதிவு வாழ்த்துக்கள் பாஸ்
22 November 2012 18:39 //ம்ம் வாழ்த்துக்கு நன்றி ராச்!
பதிவிற்கேற்ற நிறைவான கண்ணொளி...
எனது dashboard-ல் மூன்று பதிவுகள் வந்துள்ளன... கவனிக்கவும்... தமிழ்மணம் இணைத்து ஓட்டும் இட்டு விட்டேன்...
400வது பதிவு... வாழ்த்துக்கள்
நன்றி...// நன்றி தனபாலன் சார் இனைப்புக்கும்
கருத்துரைக்கும்!
angelin said...
இந்த பகுதி அதிகம் மனதை நெகிழ வைத்து விட்டது ..//ம்ம்
அதற்குள் முடிந்து விட்டதா ....ம்ம் முடித்துவிட்டேன்!
ஜீவனை விட நிஷா மனதில் கோபுர கலசமாய் உயர்ந்து நிற்கிறார்
நிஷாவின் நட்பு பற்றிய கூற்று மெய்தான் .ம்ம் அதுதான் நிஜம் அஞ்சலின் அக்காள்§ நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.
23 November 2012 05:37
இரவு வணக்கம்,நேசன்!அருமையாக சொல்லி முடித்து விட்டீர்கள்,வாழ்த்துக்கள்.
23 November 2012 11:20 //வாங்க யோகா ஐயா நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.
முடிந்துவிட்டதோ தொடர்?..
ம்ம் முடிந்து விட்டது!
நிஷா பாவம்.. ரொம்ப லேட்ட்... ஜீவனுக்கு ஏன் இவ்ளோ அவசரம்?!ம்ம் குறிப்பு சாத்திரம் தான்!ஹீ!
சரி எல்லாம் விதியே.ம்ம் விதியே அதிரா!!
தொடர் அருமையாக முடிந்தமை மகிழ்ச்சியே.நன்றி அதிரா வருகைக்கும் கருத்துரைக்கும்!
23 November 2012 11:53
யோகா அண்ணன் வந்திருக்கிறார். எங்க போயிருந்தீங்க? தேடினோம்.. நலமோ யோகா அண்ணன்...//ம்ம் யோகா ஐயா நலம் அதிரா!
hi anna it is so beautiful story
23 November 2012 14:38 //நன்றி சொரூபன் வருகைக்கும் கருத்துக்கும்!
தொடர் முடிந்தது - மனதை பிழிந்தது... பிடித்து படித்தேன்...
23 November 2012 23:01 //நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்!
நான் உருகும் பிரெஞ்சுக் காதலிக்கு புதிது,,, விரைவில் முதலிலிருந்து படித்துவிடுவேன் என்று நினைக்கிறேன்..// நன்றி இரவின் புன்னகை வருகைக்கும் கருத்துரைக்கும்.
உங்க பழைய பதிவெல்லாம் தேடிப்பிடித்து படிக்கிறேன் சார். இப்பதானே வலைப்பூ தொடங்கி இருக்கிறேன். ஒவ்வொருவரின் பக்கமாக சென்று படித்து வருகிறேன் சார்.
Post a Comment