21 May 2013

என் உயிரே நீ என்னுள் இருந்து விலகும் நொடி-1

எங்கிருந்தோ இந்தவழியால் ஏன் வந்தேன்?
ஏன் தொலைந்தேன் ?

என்பூர்வபூமியில் இனவாதம் எல்லையில்
எழும்பி ஓடு என்றது வெறியாட்டத்தில்!
என் உயிர் தப்பி ஏன் வந்தேன்?
என்ற கேள்விக்கு ஏது பதில்?
என்றாலும் 
எனக்குள்ளும் இலக்கிய /இசையாசையில்
எங்கோ இன்னும் வாழ்கின்றேன்.
ஏதோ முகம் தொலைந்து
என்னுயிர்த்தோழியே என்பிழையும்
எழுத்துப்பிழையும்
ஏதிலிப்பிழையும் எப்போதும் என்னை அறிவாய்
என்ற எதிர்பார்ப்பில்
எங்கள் குலதெய்வம் ரெக்கில் அன்னையின்!
 எல்லையில் தீபம் ஏற்றி
எடுத்துவருகின்றேன் எந்தன் காவடி!

      என்றும் நட்புடன் நண்பனுக்கு
           ஏழுத்தாணி ஏற்றும்
              தனிமரம்.
என்று சொல்லிச் செல்லும் !

எனக்குப்பின் இருக்கும் சேகர் வாழ்வில்

எந்த முட்கள் நெஞ்சில் குத்தினாலும்
என்றும் கேட்காதே எங்கள்
ஊருக்கு எப்போது வருவீர்கள்?
எல்லோரையும் பார்க்க .எங்களை
எல்லாரையும் என்றும் அன்புடன்,
எப்போதும் சந்தோஸத்துடன்,
எப்போது வாழ்த்துவீர்கள்?
எங்களுக்கு நீங்கள் இன்னும் 
எங்கள் உயிர் நாயகனே!


எங்கள் நட்பில்  நீங்கள் 
என்றும் இலகணம் 
எங்களுக்குப் பிடிக்கவில்லை
எந்த பிடிவாதமும் உன்னிடம்
என்னையும் மன்னிக்க வேண்டும்
  ...........,என்றும் இவள் மீருனா!

          எழுதியது--18/1/2008 (நாட்குறிப்பில்)

பாரிஸ்வானில் குளிர்கால நேரமாற்றம், இன்னும் கொஞ்சநேரம் குறட்டைவிட ஆசையிருந்தாலும் !அடுத்து அடுத்து அடிக்கும் அலாரம் மணிகேட்டு எழும்பினான் அந்த 18  அடி அறையில் படுத்திருக்கும் சேகர் .அருகில் மேல்தளத்தில் படுத்திருக்கும் அஜய் என்னடா ?இப்ப தான் அதிகாலை  4 மணி அதுக்குள்ள அங்கிருந்து அழைப்போ? அங்க  இப்ப என்ன நேரம் என்று நீர்கொழும்பு முத்துலிங்கம் எழுதிய  நூல் படிக்காட்டியும் இங்கு என்ன நேரம் என்று தெரியவேண்டம் உன் உறவுகளுக்கு ?

நல்ல சினேஹா கனவில் படுத்துதிருக்கும் போது பாதியில் எழுப்பும் பாவிகளின் தொலைபேசி அழைப்பை தூக்கிவை ரிசிவரை இனி தூக்கிவைத்துவிட்டுத்தான் படுக்கணும் .


காலங்காத்தாலேயே கடுப்பூ ஏத்திராங்க நீயும் தூங்காமல் இப்படி ஏண்டா வீணாப்போகின்றாய் சேகர் .இப்ப எல்லாம் நம்நாட்டில் இருப்பவர்கள் வெளிநாட்டில் இருப்போர் என்ன புக்கிள் போலவா காசு பரிமாற்றம் செய்ய தினமும் எங்கள் வாழ்க்கையே அன்றாடம் காட்சித்தான் இது என்ன சினிமாவில் இருந்து அரசியலுக்கு வரும் சின்னப்புள்ளத்தனமான செயல்போலவா இருக்கு? என்று சீண்டிவிட்டு மீண்டும் படுத்தான் அஜய் .!

தொடரும்.....
அறிமுகம் இங்கே....http://www.thanimaram.org/2013/05/blog-post_20.html.

6 comments :

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல சினேஹா...?!

சுவாரஸ்யம்... தொடருங்கள்...

சீனு said...

அதானே நீங்கள் மிகப் பெரிய சினேஹா ரசிகரோ :-)

Unknown said...

காலை வணக்கம்,நேசன்!நலமா?///நல்ல சினேஹா,ஹி!ஹி!!ஹீ!!!///நம் வீட்டின் பின்புறத்தில்(பணம்)காய்க்கும் மரம்!

தனிமரம் said...

நல்ல சினேஹா...?!

சுவாரஸ்யம்... தொடருங்கள்...

21 May 2013 21:03//ஹீ ஹீ வாங்க தனபாலன் சார் முதல்க்காப்பி குடித்து வாழ்த்தியிருக்கும் உங்களுக்கு நன்றிகள். உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

தனிமரம் said...

அதானே நீங்கள் மிகப் பெரிய சினேஹா ரசிகரோ :-)

21 May 2013 22:26 //ஹீஈஈஈஈஈஈஈ! இல்லை சீனு !ம்ம் நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்

தனிமரம் said...

காலை வணக்கம்,நேசன்!நலமா?///நல்ல சினேஹா,ஹி!ஹி!!ஹீ!!!வணக்கம் யோகா ஐயா நான் நலம்!ம்ம்

///நம் வீட்டின் பின்புறத்தில்(பணம்)காய்க்கும் மரம்!ம்ம்ம் என்ன செய்ய! நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

21 May 2013 23:09