07 May 2013

கிறுக்கலும் கீதமும்-3.


ஏங்கும் உன் இதயம் இன்று உருகின்றதா?
ஏதிலி எந்தன்  சுவாசம்  உன்னையே 
எப்போதும் !
என்றும் நாடியதே  மெய்யுடன் .
ஏன் மறுத்தாய் ?ஏன் தொலைத்தாய்?
என் காதலை மறுத்து?
எனக்கும் ஒரு காலம் வரும் என்ற
எந்தக்கணிப்பும் உனக்கும்
எழுதிய குறிப்பு 
ஏட்டில் சொல்லவில்லையோ?
என்றாலும் உருகமாட்டேன் !


எனக்கும்
எப்போதும் பிடிக்கும்.
 எழுதிய வார்த்தைகள் 
என் முன்(னால்)காதலியே!!!!
எப்போதும் முதுகெலும்பு உண்டு
எந்தப்படம் பிடிக்கும் என்று அறிந்தவளே?
எழுதும் கவிதை நீயடி  ஏன் அறியவில்லை?
என் பாடல் சொல்லும் என் பிரியம்!

//////////

என் தோழியே எங்கிருந்தோ வந்தேன்.
என் வழியில் நீ வந்தாய் 
என் நண்பனின் காதலியாய்!
என் உயிர்காக்க
ஏதிலி ஆனேன்  !
என்நாட்டில் இருந்து.
 என்றாலும் உன் காதலுக்காக
எடுத்தேன் ஒரு காவடி!
ஏற்றிய காவடியில்
எத்தனை முள்கட் என் இதயத்தில் .
என்னை உங்கள் இருவருக்கும்
எப்போதும் பிடிக்கும். .
என்னையும் ஒருத்தி  தொலைத்துவிட்டாள்!
என்றேன் உங்களிடம். ஏன்?
ஏன் ?ஏதிலி என்றா???
என் கதை மட்டும்
என்றும் சொல்லாதவன் .



எழுதப்போகும் என் நட்பு வலையில் 
என்னையும் உங்கள் நட்பையும்
என் தோழன் 
எங்கள் ஊர் வழியே .
ஏற்றப்போகும் 
எழுத்துக் கொடியில் வழிவிட்டு 
ஏற்றுக்கொள்ளுங்கள் !
எதிர் பாருங்கள்.......

//இதன் முன் கிறுக்கல் இங்கே-http://www.thanimaram.org/2012/10/2.html

16 comments :

MANO நாஞ்சில் மனோ said...

என்னையும் ஒருத்தி தொலைத்துவிட்டாள்!//

என்னையும் ஒருத்தி தொலைத்து விட்டாள்....!

Seeni said...

thodarungal...! sako..!

மகேந்திரன் said...

இனிய வணக்கம் சகோதரர் நேசன்...
கிறுக்கல்கள் என்று என்னால் சொல்லமுடியவில்லை..
கீதமாக ஒலிக்கிறது...

இராய செல்லப்பா said...

வசதியைத் தேடிக்கொண்டால் தான் இப்போதெல்லாம் காதலி கிடைப்பாள் போலிருக்கிறது. ஹும், எங்கள் காலம்போல் இல்லை, தம்பி, இந்தக்காலம்!

திண்டுக்கல் தனபாலன் said...

கீதங்கள் அருமை...

நானும் ஒருத்தியை தொலைத்து விட்டேன்...!

reverienreality said...

நலமா நேசரே...

என்னையும் ஒருத்தி தொலைத்து விட்டாள்...:)

கிறுக்கல்கள் = கீதங்கள்

Unknown said...

வணக்கம் நேசன்!நலமா???///எங்கோ கொண்டு செல்கிறது,ஆழமான வரிகள்,ஹூம்!

Unknown said...

ஆழமான வரிகள் சொல்லும் காதல் அழகு!

தனிமரம் said...

என்னையும் ஒருத்தி தொலைத்துவிட்டாள்!//

என்னையும் ஒருத்தி தொலைத்து விட்டாள்....!//வாங்க மனோ அண்ணாச்சி நலமா ?ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ.நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

thodarungal...! sako..!//நன்றி சீனி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

இனிய வணக்கம் சகோதரர் நேசன்...
கிறுக்கல்கள் என்று என்னால் சொல்லமுடியவில்லை..
கீதமாக ஒலிக்கிறது...//வணக்கம் மகி அண்ணாச்சி நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

வசதியைத் தேடிக்கொண்டால் தான் இப்போதெல்லாம் காதலி கிடைப்பாள் போலிருக்கிறது. ஹும், எங்கள் காலம்போல் இல்லை, தம்பி, இந்தக்காலம்!

7 May 2013 20:36 //ம்ம் நிஜம் தான் ஐயா! நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும் செல்லப்பா ஐயா!

தனிமரம் said...

கீதங்கள் அருமை...

நானும் ஒருத்தியை தொலைத்து விட்டேன்...!//நன்றி தனபாலன் சார் வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

நலமா நேசரே...//ந்ல்ம் ரெவெரி அண்ணாச்சி!

என்னையும் ஒருத்தி தொலைத்து விட்டாள்...:)//ஹீஈ

கிறுக்கல்கள் = கீதங்கள்// நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.ரெவெரி.

தனிமரம் said...

வணக்கம் நேசன்!நலமா???///எங்கோ கொண்டு செல்கிறது,ஆழமான வரிகள்,ஹூம்!
//வணக்கம் யோகா ஐயா நலமா!ம்ம்ம் நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

ஆழமான வரிகள் சொல்லும் காதல் அழகு!//நன்றி சுரேந்தர் வருகைக்கும் கருத்துரைக்கும்.