நவீன பொருளாதார மாற்றம் இன்று பதுளை நகரையும் நவீன வசதிகளுடன் கொழும்பு நகருக்கு இணையாக உள்கட்டுமான மாற்றம் செய்து வருவது எங்கள் ஊர் அமைச்சரின் தூரநோக்கும் ,அவர் ஆளுக்கட்சியில் முக்கிய துறையில் இருக்கும் அமைச்சர் என்பதால் என்றால் மிகையில்லை !
இந்த ஊரில் யானைச்சின்னம் வென்றாலும் ,கதிரையின் செல்வாக்கு அழிக்கமுடியாது .
.இன்று நவீன குளிர் ஊட்டப்பட்ட இந்த கொமிக்கேகசன் !
புதியதாக தெரிந்தாலும் முன்னர் இருந்த இந்த இடத்தின் கடையின் நீங்காத நினைவுகள் உண்டு பலருக்கு எண்ணத்திலும் ,இதயத்திலும் இன்றும்!
அதன் பழைய அமைப்பு இன்னும் என் கண்ணுக்குள் நிலவுபோல !
முன்னர் இந்த இடத்தில் இரண்டு சுருட்டுக்கடை அருகருகே இருந்திச்சு !பஸ்சில் காதலருக்கு ஒதுக்கப்பட்ட இரட்டைச் சீட் போல !
அவர்கள் வடக்கில் இருந்து வந்தவர்களின் மூன்று தலைமுறையை நானும் இந்த 30 வயதுக்குள் இங்கே பார்த்திருக்கின்றேன்.
என் தாத்தா ,பின் என் அப்பா ,அதன் பின் நான் .என்று ஆனந்தம் படத்தில் வரும் திருப்பதி ஸ்டோர் போல அந்தக்கடைப்பெயர் இன்னும் மனசுக்குள் மத்தாப்பூ .
இந்தக்டையில் வாங்கிய சில்லறைச் சாமான்கள் மறக்கமுடியாது !அதுவும் அந்த K.R மார்க் சுருட்டு வாங்கியரச்சொல்லி எங்க தாத்தா எத்தனை கதை சொல்லி இருப்பார் சின்ன வயதில் எனக்கு தெளிவத்தை ஜோசப்பின் கதைகள் போல அது மட்டுமா இங்க தானே சேகர் எங்களுக்கு அறிமுகமானது ஒரு கார்காலத்தில். பள்ளிக்கூடம் வந்தது இந்தக்கடையில் இருந்து தானே !
நாங்கள் எல்லாரும் பலகாலம் நினைச்சது அவனும் ஒரு வேலைக்காரன் என்று ,அப்புறம் தான் தெரியும் அவனின் தாய்தந்தை ,வடக்கில் நடந்தகொண்டு இருக்கும் போரில் இருந்து உயிர் தப்ப அவனை மட்டும் அவன் தாய்மாமா பதுளை கூட்டியந்து வேலைக்காரன் போல வைத்து இருக்கின்றார் என்று ! அதுவும் உயர்தரத்தில் தான் நம் நட்புக்கள் பலர் அறிந்தது .
பின் இந்தப்பள்ளியில் நடந்த ஒரு கறுப்புப் புள்ளிச் சம்பவத்துக்குப் பின் பலரும் பலகட்சியில் .யார் யார் எல்லாம் வசதியிருக்கின்றதோ ?மக்களுக்கு சேவை என்ற பெயரில் வரும் நடிகர்கள் போலத் தான் தனிக்கட்சி என்றாகிவிட்டது மதவாதம் பிரதேசவாதம்,இனவாதம் நட்புக்களுக்கு இடையிலும் முகநூலில் கூட முகம் இல்லாத நிலையை எத்தனை நண்பர்கள் அறிவார்கள் ??
இந்தச் சம்பவத்தை நன்கு அறிந்த ராகுல் கூட இதன் இணைப்பான இன்னொரு கடையில் இருந்தவன் .அவனுக்கும் அதிகமான நண்பர்கள் இங்கு இருந்ததில்லை !அவனுக்கும் ஒரு சில நல்ல நட்பு சேகர் போல பாபு போல இருந்தார்கள் !ஆனால் அந்த ராகுல் எங்களுக்கு வில்லன் போலவே இருந்தான் படிக்கும் காலத்தில்.
காதல் ஒரு வாலிபவிளையாட்டு என்று புலம்புவதே அவன் இயல்பு !இப்ப உயிரோடு இருக்கின்றானா ?இல்லை இனவாத யுத்தத்தில் கானாமல் போனோர் பட்டியலிலா என்ற தகவல் ஏதும் எனக்கு இன்றும் தெரியாது !
ஆனால் இந்த பாபுவுடன் தொடர்பில் இருக்கும் சேகர் நிச்சயம் அறிவான் !அவனும் ஒரு பனங்கொட்டை .ஆனால் சொல்லமாட்டான் என்பது இராணுவ விசாரனையில் ஸ்லோன் பட்டையால் மலவாசலில் பைப் வைத்துக் கொண்டு காதில் அடித்தாலும் ,சேகரிடமும் ஒரு விசயத்தை அறியணும் என்றால் கல்லில் நார் உரிப்பது போல !
ம்ம் இந்த பாபுவும் ஒரு சில தகவல் அறிவான் புலனாய்வு பத்தி செய்தி எழுதும் ஊடகவியளார் போல !
ஆனால் உண்மை நட்பில் கூட ஏதும் சொல்லமாட்டான். இருடா நீயும் கிரிக்கெட்டில் புக்கியிடம் மாட்டிய விளையாட்டு வீரர் போல உன்னையும் சேகரிடம் மாட்டிசிடுகின்றேன்!
நீ பேசிய கொமினிக்கேகன் எது என்ற வாரே அந்த கொமினிக்கேசன் முன்னால் இருக்கும் பாபுவைச் சந்திக்கச் சென்றான் குணால்!
தொடரும்......
நீ பேசிய கொமினிக்கேகன் எது என்ற வாரே அந்த கொமினிக்கேசன் முன்னால் இருக்கும் பாபுவைச் சந்திக்கச் சென்றான் குணால்!
தொடரும்......
14 comments :
விலகும் நொடி தலைப்பே கவிதையாய் மிளிர்கிறது. முதல் அங்கங்களை இன்னும் படிக்கவில்லை இருங்க தலைவா படிச்சிட்டு வாறன்
anupavamgal engo azhaikkirathu...
அந்த கடை என்னுடைய பால்ய காலத்தை நினைவூட்டியது நண்பா...!
ராகுல் அவர்களின் தகவல் வருத்தப்பட வைத்தது... தொடருகிறேன்...
காலை வணக்கம்,நேசன்!நலமா?///கொம்யூனிக்கேசன்!அப்போது,புதிய வரவு.///இப்போது மூலைக்கு மூலை சிறிய வியாபார நிலையங்கள்,நகரில் பெயர் பெற்ற பிரமாண்டம்,ஹூம்!
ஆஹா என்ன இது அரசியலுக்குள் கால் பதிச்சிட்டீங்களோ?:) மேலே படமெல்லாம் மாறிப்போச்ச்ச்:))..
தொடர்கிறேன்ன்.. தொடரை.
உங்கள் தொடரில் வரும் ஊரின் ஒருத்தி என்ற வகையிலும் நீங்கள் சொல்லும் பல செய்திகளின் நேரடி மற்றும் மௌன சாட்சி என்ற வகையிலும் பல சமயங்களில் மௌனமாக தொடர்ந்து கொண்டிருக்கிறேன் :)
விலகும் நொடி தலைப்பே கவிதையாய் மிளிர்கிறது. முதல் அங்கங்களை இன்னும் படிக்கவில்லை இருங்க தலைவா படிச்சிட்டு வாறன்
28 May 2013 12:59 Delete//வாங்க நெற்கொழுதாசன் ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ !நேரம் கிடைக்கும் போது படியுங்கோ! நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.
anupavamgal engo azhaikkirathu...//நன்றி சீனி வருகைக்கும் கருத்துரைக்கும்.
அந்த கடை என்னுடைய பால்ய காலத்தை நினைவூட்டியது நண்பா...!
28 May 2013 16:47 Delete//ஆஹா ம்ம் நன்றி மனோ அண்ணாச்சி வருகைக்கும் கருத்துரைக்கும்.
ராகுல் அவர்களின் தகவல் வருத்தப்பட வைத்தது... தொடருகிறேன்...
28 May 2013 20:53 Delete//ம்ம்! நன்றி தனபாலன் சார் வருகைக்கும் கருத்துரைக்கும்
காலை வணக்கம்,நேசன்!நலமா?///கொம்யூனிக்கேசன்!அப்போது,புதிய வரவு.///இப்போது மூலைக்கு மூலை சிறிய வியாபார நிலையங்கள்,நகரில் பெயர் பெற்ற பிரமாண்டம்,ஹூம்!
28 May 2013 22:48 Delete//வணக்கம் யோகா ஐயா! நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.
ஆஹா என்ன இது அரசியலுக்குள் கால் பதிச்சிட்டீங்களோ?:) மேலே படமெல்லாம் மாறிப்போச்ச்ச்:))..
தொடர்கிறேன்ன்.. தொடரை.
//ஹீ இல்லை அதிரா சும்மா ஒரு தொடர்!ம்ம் நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.
31 May 2013 08:40 Delete
உங்கள் தொடரில் வரும் ஊரின் ஒருத்தி என்ற வகையிலும் நீங்கள் சொல்லும் பல செய்திகளின் நேரடி மற்றும் மௌன சாட்சி என்ற வகையிலும் பல சமயங்களில் மௌனமாக தொடர்ந்து கொண்டிருக்கிறேன் :)//ஹீ நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும் தோழி!காற்றில் என் கீதம்!
Post a Comment