16 May 2013

இன்னும் இல்லைத்தீர்வு! ஈழம்.


இப்படி ஒரு வாரத்தில் அங்கு
இருந்து இப்படி என்று !
இணையமும் இன்னும் பல ஊடகமும் இரங்கியும் !


இறுமாப்புடனும் இன்னும் பலசெய்தி
இங்கு வந்தது .


இன்னும் சில நாளில் ஒரு விடிவு
இனி என்ன ஈழம் போய் !
இந்த உயிரைவிட
இங்கிருந்து போக இனி
இங்கு இருக்கும் உறவுகளுடன்
இப்போதே தயாராகுங்கள் .
இங்கிலாந்து ஸ்ரேலிங்பவுண்  ஈரோ

 இன்னும் பல
இங்கேத்தே நாணயம் இன்னும் சில
இங்கத்தேய வசதி !
இப்படியும் சில
இலங்கைப்பிறப்பு!
இனி என்னவாகும் எங்கள் உறவுகள்
இப்போது என்னநிலை
இன்னும் உயிரோடு இருக்கின்றார்களா??
இணையம் 
இன்னும் கிடைக்கவில்லை .
இலங்கை ஊடகம் இன்னும் பொய் இனவாதத்துடன்
இங்கு  ஓதவில்லை.
இன்னும் வேலைக்குப் போகவில்லை
இன்று செப்பன் இங்கிதம் பேசுவான்
இன்று இரவு யாருடன் இருட்டில் இருந்தாய் என்று
இவர்களுக்கு என்ன தெரியும் .??
இடம்பெயர்ந்து இருந்த ,ஊர்பிரிந்து,
 இன்னுயிர் பிரிந்த, ஈழத்து கனவு சுமந்த
இயக்கத்தின் உண்மை முகம்.

இன்றும் வேலைக்கு வரவில்லை
இனி வேண்டாம் இன்றே தூக்கிவிடுங்கள்
இனி இல்லை வேலை.
இரவு தூக்கம் இல்லை
இன்னும் பதில் கிடைக்கவில்லை 
இணையத்தில் இருந்தேன் .
இரவு இரவாக இன்னும் இருக்கின்றோம்
இங்கு வீதியில் .

இன்னும் சாப்பிடாமல்
இந்த தலைமுறைக்கு ஈழம் தெரியாது.
இன்னும் தொப்புள்கொடி
இருக்கும் உறவு இந்தியா அறியாது.
இன்றும் சாப்பிடவில்லை
இப்போது வரும் செய்தி
இனி ஒரு விதி செய்வோம்.

இன்று உண்ணாமல் இங்கு இருக்கின்றோம்.
இந்த தேசம் எல்லாம் இறையாமை 
இருக்கும் தேசம் .
இலங்கைக்கு மட்டும்
இன்னும் ஈழம் கொடுக்கவில்லை
இனியும் ஒரு வழி பிறக்குமா?
இலங்கைத்தேசத்தில் இருட்டறையில்
இப்போதும் வாழும் இந்த ஈழக்கனவில்
இணைந்தவர்கள் வாழ்வில்!
இன்றும் வரப்போகின்றது. இலங்கையில்
இந்த இனவாதயுத்தம் வெற்றி கொண்ட
இலங்கை ஜனாதிபதி .
இந்தியா பயணம்
இன்னும் நம் பயணம்????


///



குறிப்பு-மே-18 வரவேண்டிய பதிவு சகபதிவாளர் பட்டாப்பட்டியின்  துக்கம் தனிமரமும் சேர்ந்து சகபதிவாளருக்கு அஞ்சலி செத்துவதால் மீண்டும் அடுத்த வாரம் பதிவுலகில் இணையும் உறவுகளுடன் .

சனி /ஞாயிறு மே 17/18 ஈழஅவலம் சுமந்த 4 ஆண்டு  தினம் இந்தப்பிறப்பு தாண்டும் வரை நம் இனம் மறவாது!


17 comments :

கரந்தை ஜெயக்குமார் said...

இனி ஒரு விதி செய்வோம்

Seeni said...

mmm...

unmaithaanga...

திண்டுக்கல் தனபாலன் said...

நல்லதொரு வழி பிறக்கட்டும்...

மகேந்திரன் said...

இனிய வணக்கம் சகோதரர் நேசன்...

இன்னல்கள் செய்வித்த
இடுகாட்டுப் பேய்கள்
இழிநகை புரிந்து
இகம்பரம் சுற்றுகிறது..
இனி விடியும் என
இன்னும் நாம் காத்திருப்பது
இயைபாக நாம் கொண்ட
இனிதான நம்பிக்கையில்...
====
நம்பிக்கை கனிந்துவரும் காலம் வரட்டும்...

மகேந்திரன் said...

நண்பர் பட்டாபட்டியின் மரணம்
அதிர்வடையச் செய்கிறது...
அன்னாருக்கு என் மலரஞ்சலிகள்.

இளமதி said...

இனவாதப் பேய்கள்
இயற்றிட துயரமதை
இங்குரைத்த கவிகண்டு
இதயமே கசிகிறதையா
இடர்நீங்க வரம்கேட்டு
இறைதன்னை வேண்டிடுவோம்
இகர எழுதினிலே
இயற்றிட்ட கவியழகை
இயம்பிட்ட சோகம்
இழுத்து விழுங்கியதால்
இமைகசியும் கண்ணீருடன்
இடுகின்றேன் நன்றிதனை...

த ம: 4

அம்பாளடியாள் said...

வலிகளின் சாரல் மனதை வாட்டி எடுத்துள்ளது இந்நிலை மாற
வேண்டும் எமக்கு .அருமை ! வாழ்த்துக்கள் சகோ .

மில்லியனெயார் ஆகும் அதிரா:) said...

இ ல ஒரு புரட்சியையே ஏர்படுத்தி விட்டீங்க... வாழ்த்துக்கள்..

முடிவு படித்தேன் கஸ்டமாக இருக்கு. அஞ்சலி செலுத்துகிறார்களோ ? அது எங்கு நடக்கிறது? காலமானது அறிந்தேன், ஆனா பதிவிடாமல் அஞ்சலி செலுத்துவது நான் இப்போதான் அறிகிறேன்ன்... நானும் அவருக்காகப் பிரார்த்திக்கிறேன்.

தனிமரம் said...

இனி ஒரு விதி செய்வோம்//வாங்க கரந்தை ஜெயக்குமார் ஐயா முதலில் ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ!ம்ம் நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

mmm...

unmaithaanga...

16 May//நன்றி சீனி வருகைக்கும் கருத்துரைக்கும்

தனிமரம் said...

நல்லதொரு வழி பிறக்கட்டும்...

16 May 2013 18:01 //நன்றி தனபாலன் சார் வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

இனிய வணக்கம் சகோதரர் நேசன்...

இன்னல்கள் செய்வித்த
இடுகாட்டுப் பேய்கள்
இழிநகை புரிந்து
இகம்பரம் சுற்றுகிறது..
இனி விடியும் என
இன்னும் நாம் காத்திருப்பது
இயைபாக நாம் கொண்ட
இனிதான நம்பிக்கையில்...
====
நம்பிக்கை கனிந்துவரும் காலம் வரட்டும்...

16 May 2013 19:09 //வணக்கம் மகி அண்ணா!நன்றி வருகைக்கும் நம்பிக்கையூட்டும் நட்புக்கவிதைக்கும்

தனிமரம் said...

நண்பர் பட்டாபட்டியின் மரணம்
அதிர்வடையச் செய்கிறது...
அன்னாருக்கு என் மலரஞ்சலிகள்.

16 May 2013 19:10 //ம்ம் ஆத்மா சாந்தியடையட்டும்.

தனிமரம் said...

இனவாதப் பேய்கள்
இயற்றிட துயரமதை
இங்குரைத்த கவிகண்டு
இதயமே கசிகிறதையா
இடர்நீங்க வரம்கேட்டு
இறைதன்னை வேண்டிடுவோம்
இகர எழுதினிலே
இயற்றிட்ட கவியழகை
இயம்பிட்ட சோகம்
இழுத்து விழுங்கியதால்
இமைகசியும் கண்ணீருடன்
இடுகின்றேன் நன்றிதனை...

த ம: 4//நன்றி இளமதி வருகைக்கும் கவிதைக்கும் வாக்கு இட்டதுக்கும்.

தனிமரம் said...

வலிகளின் சாரல் மனதை வாட்டி எடுத்துள்ளது இந்நிலை மாற
வேண்டும் எமக்கு .அருமை ! வாழ்த்துக்கள் சகோ .

17 May 2013 22:23 //நன்றி அம்பாளடியாள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

இ ல ஒரு புரட்சியையே ஏர்படுத்தி விட்டீங்க... வாழ்த்துக்கள்..
//நன்றி அதிரா வாழ்த்துக்கு.

தனிமரம் said...

முடிவு படித்தேன் கஸ்டமாக இருக்கு. அஞ்சலி செலுத்துகிறார்களோ ? /

அது எங்கு நடக்கிறது?
காலமானது அறிந்தேன், ஆனா பதிவிடாமல் அஞ்சலி செலுத்துவது நான் இப்போதான் அறிகிறேன்ன்.//ம்ம்18/19 விடுமுறை விடச்சொல்லி பதிவுலகில் உலகசினிமா ரசிகன் தமிழ்வாசிபிரகாஸ் என பலரும் அழைப்பு விடுத்து இருந்தார்கள் அதுக்கு நானும் ஒத்துழைத்தேன் சக பதிவாளர் நாம் ஒரே குடும்பம் தானே!

. நானும் அவருக்காகப் பிரார்த்திக்கிறேன்.

19 May 2013 12:48 //ம்ம் பிரார்த்திப்போம் ஆத்மா சாந்தியடையட்டும்!