24 May 2013

என் உயிரே என்னுள் இருந்து விலகும் நொடி-3


காலநிலை மாற்றமும் ,கால மாற்றமும் சொல்லிக்கொண்டு வருவதில்லை !தூரதேசத்தில் இருந்து வரும் தொலைபேசி அழைப்புப்போல!

 அப்படித்தான் குணாவும் சேகர் அழைத்தவுடன் பாபுவைத் தேடி தன் ஆட்டோவில் ஹாலி-எலவில் இருந்து பதுளைக்குச் சென்றான் .

இந்தக்கிராமம்  பதுளை நகரில் இருந்து 6 கிலோ மீற்றருக்கு அப்பால் இருக்கும் ஹாலி-எல என்றகிராமம் .

இந்த ஊர்தான் 1983கலவரத்துக்கு முன் நகரம் போல செழிப்புடன் வியாபாரங்கள் நடந்தகொண்டு இருந்தது . வடக்கில் இருந்து வந்தவர்களின் சுருட்டுக்கடை என்ற வியாபாரம் ஒருபுறம் ,என்றால் !இன்னொருபுறம் இந்த மண்ணில் இந்திய தோட்டத் தொழிலாளர் வம்சத்தின் அடுத்த சந்ததி புடவைவியாபாரம், இத்தியாதி என்று ,செழிப்புடன் இருந்த ஊரில் இனவாதம் 1983 இல் ஆடிய வெறியாட்டம் பார்த்த என்பால்ய காலம் இந்தியாவில் குஜாத் கலவரத்தைப் போல இன்னும் மறக்க முடியாது. என்பது போல நம் தமிழர் வாழ்வில் என்ன செய்வது !

இப்ப இந்த ஹாலி-எல செழிப்பும் இல்லை மார்க்கட் இழந்த தமிழ்சினிமா நடிகைபோல  பிரபல்யம் இல்லை இப்போது .எல்லாரும் பதுளையைத் தான் ஹிட்சுபடநாயகி போல சூழ்ந்து கொள்கின்றனர். 

இந்த இழவு பிடிச்ச பாபு பதுளையில் இருக்கும் எனக்கு ஒரு போன் எடுத்துச் சொல்லவில்லை .எங்கோ புலம்பெயர் தேசத்தில் இருக்கும் உதவாக்கரை சேகருக்கு மட்டும் சொல்லி இருக்கின்றான் .நட்புக்குள்ளும் இப்படியா பாரபட்சம்! ஒரே கட்சியில் இருந்துகொண்டு அடுத்த கட்சியில் சேர பேரம் பேசுவது போல இருக்கே ?

என்ன கொடுமையடா  !இப்ப எல்லாம் அவனவன் முகநூல், ஸ்கைப்  ,டுவிட்டர் ,என்று முன்னேறினாலும் முழுமையான அன்பை பகிர்வது குறைந்து போய்விட்டது .

என்ன இந்த ஆட்டோவும் சேகரின் அன்பளிப்பு என்பதால் கொஞ்சம் மனட்சாட்சியுடன் நடக்க வேண்டி இருக்கு .

 என்ன இந்த பாபு பதுளைக்கு அருகில் இருக்கும் என்னைக்கூட அவசரத்துக்கும் நினைக்கவில்லை .பாவுக்கு செவிட்டில் போடவேண்டும் ."என்னவோ நவீன உலகம் தன் கையில் இருக்கு என்று அடிக்கடி சொல்லுவானே "இப்ப உலகமே என் கையில் என்றும் !

நானும் சொல்லும் இந்தக் கைபேசியிக்கு சரி  ஒரு அழைப்பு, அல்லது குறுஞ்செய்தி கூட அனுப்பத்தெரியவில்லை கம்புநாட்டிப்பயல்.

 எனக்கு வரும் கோபத்துக்கு செந்தூரப்பாண்டி படத்தில் விஜய்காந்து வெட்டியது போல பாபுவின் தலையைச் சீவிவிடலாம் போல இருக்கு!

 என்ன செய்வது ஏதோ நண்பன் என்றாகிவிட்டான் .அதைவிட சேகரின் ஆஸ்தான நம்பிக்கைக்கு உரிய காகிரஸ் பிரதமர் போல பாபு .

இந்த நாட்டுக்கு வரமாட்டான் என்ற தைரியம் இந்த பண்ணி என் வேலையைக்கூட அதிகம் ஆக்குகின்றது .

ஏலவே என் அயர் சரியில்லை ,நேரம் கடைபிடிக்காதவன் என்று என் மனைவியே சொல்லும் நிலையில் !

நான் முன்னம்  பலதடவை எடுத்துச் சொல்லியும்  கேட்காமல் ஊடகம் என்ற ஆசையில் போகாத என்ற போதும் அந்த விற்பனைப்பிரதிநிதி வேலையில் வந்த யாழ்ப்பாண லூசன்  கொம்பு சீவியதில் கொழும்பு போய் இப்ப பதுளை ஊருக்குள் வரமுடியாத அரசியல் நிலை எல்லாம் சேகர் அனுபவதிப்பது போல இவனுக்கும் தேவையா??அந்த லூசன் விற்பனைப்பிரதிநிதி இப்ப எங்க இருக்கின்றானோ ?, ஜொல்லு விட்டக்கொண்டு!

ஒரு தகவலும் இல்லை இன்னும்!

ம்ம்


அவங்கள் தான் பிறப்பில் யாழ்ப்பாணம் பூர்வீர்கம் என்றாலும் இன்னும்

 சேகருக்கு தகவல் கொடுக்கும் பினாமி வேலை தொடர்ந்து  செய்யிறானோ ?இந்த பாபு  என்ற சிந்தனையில் ஆட்டோவை செலுத்திக்கொண்டு இருந்தான் குணால்!

.அவனின் சிந்தனை வேகத்துக்கு பதுளை நகரம் வந்துவிட்டதை எதிரில் இருந்த மணிக்கூட்டுக்கோபுரம் அதிகாலை 8.35 காட்டியது .இலங்கை நேரம்.


அதன்  முன்  எதிர் அருகில் இருக்கும் சர்வதேச தரத்தில் வாய்ந்த அந்த கொமிக்கேசன் முன் இருந்தான் பாபு!

தொடரும் '

!

6 comments :

Seeni said...

thodarattum...

thodarkiren..!

திண்டுக்கல் தனபாலன் said...

சுவாரஸ்யத்துடன் (சிறிது கோபத்துடன்) செல்கிறது... தொடர்கிறேன்...

சீனு said...

நீங்கள் எழுதும் தனில் எனக்கு புதிது...ஆனால் பிடித்துள்ளது :-)

Unknown said...

வணக்கம்,நேசன்!நலமா?///சுவை.கோபம் நியாயமானது!என் செய்ய?///இப்போதெல்லாம்,ஊரில் இருந்து செய்திகள் சுடச்சுட அடுத்த செக்கண்டே புலம்பெயர் தேசத்துக்குக் கிடைத்து விடுகிறது.நாம் தொலை பேசிக் கேட்டால் அப்படியா என்று வாயைப் பிளக்கிறார்கள்,ஹ!ஹ!!ஹா!!

முற்றும் அறிந்த அதிரா said...

அடடா தொடர் பதிவில மின்னி முழங்குறீங்க.. சூப்பர்ர்.. படங்களெல்லாம் எங்கிருந்துதான் எடுக்கிறீங்களோ தெரியவில்லை.. அத்தனையும் சூப்பர் அதுவும் இலங்கைப் படங்கள் என பார்க்க ஆசையாக இருக்கு.

சரி சரி ஒரு பால் ரீ பிளீஸ்ஸ்.. நிறைய சாயம் போட்டு:).

reverienreality said...

நலமா நேசரே..


கோபம் நியாயமானது...

தொடருங்கள்...தொடர்கிறேன்...