எதிர்பாரத நேரத்தில் ,எதிர்பாரத விடயங்கள் வந்து !நிதானமாகப்போகும் வாழ்வில் இடையூறுகளையும், இன்னல்களையும் ,இதயத்தின் இருப்பில் சுருட்டுக்கடையின் பணப்பெட்டியில் வைக்கும் முற்பணம் போல தங்கிவிடும் .
அதுபோலத்தான் சேகருக்கு வந்த தொலைபேசி அழைப்பும் உடனடியாக பண்டாரவளைக்கு புதிய விற்பனைப்பிரதிநிதியாக போகும்படி மேலிட உத்தரவு என்ற பண்டாரவின் கட்டளையை மீறமுடியாதநிலை ஒரு புறம் !
என்றால் எந்த ஊர் வேலை என்றாலும் ,என்ன நேரத்திலும் இராணுவக்கட்டுப்பாட்டின் பகுதி எங்கும் போகும் அவன் துடிப்புள்ள விற்பனைப்பிரதிநிதி என்று பண்டார சேர் பலருக்கு முன் அவனை தூக்கி நிறுத்தினாலும் தலைவா படம்போல சறுக்குவது இந்த மலையகத்தின் ஊவாவிற்கு போகும் நிலையில் தான்!
அங்கு என்றும் விற்பனைப்பிரதிநிதியாக விரும்பிப்போகக்கூடாது என்பது அவன் மனதில் இருக்கும் ரகசியத்தீவு போல் ஒரு வெறி.
முன்னர் இந்த மலையகம் என்றால் அவன் ஆற்றில் அனந்தமாக குளிர்த்தவன் பெற்றோரை யுத்தத்தில் இழந்தாலும் .வளர்த்த உறவுகள் அவனை கட்டுப்படுத்த நினைத்த போதுதான் காட்டாறு போல தனியாக பிரிந்து தலைநகரமும், பின் யாழ்ப்பாணமும் ,வன்னியும் என புதிய தொழில் தேடி ஓடியவன் .அதனால் அவன் வளர்த்தவர்களை என்றும் மீண்டும் அவர்களை நேர் முகத்துடன் சந்திக்கும் சூழல் இன்று வரை எதிர்கொள்ளா வண்ணம் தன் முயற்ச்சியில் விற்பனைப்பிரதியாக உருவானாலும் நண்பர்களை தன் நட்புச்சுவராக கொண்டவன் சேகர்
! இது எல்லாம் அறிந்தவன் பாபு!
என்ன மச்சான் ரொம்ப அப்செட்டாக இருக்கின்றாய் ?இல்ல பண்டாரவளைக்கு திங்கள்கிழமை முதல் புதிய இடத்தில் வேலை செய்யட்டாம் அதுதான் ஜோசிக்கின்றேன். சரி நடப்பது எல்லாம் நன்மைக்கே.
நாளை மாலை பண்டாரவளை போக வேண்டும் அதுக்கு முன் இப்போதே மிரூனாவை நான் சந்திக்கப்போறன். நீ நம் அறைக்குப் போ பாபு.
வேண்டாம் மச்சான் சேகர் நீ அதிகமாக குடிச்சு இருக்கின்றாய்.தெரியும் பாபு அதுதாண்டா நண்பன் நீ .ஆனாலும் இன்னும் நிதானம் எனக்கு இருக்கு பாபு!
கவலையைவிடு !
இப்போதே மட்டக்குளி போறேன்!
தொடரும்......

6 comments :
தொடர்கிறேன் ஐயா
எத்தனை அனுபவங்கள் உங்களிடம் குவிந்து போய் இருக்கிறது அண்ணா! தொடருங்கள்!
தொடருங்கள்,நேசன்.தொடர்கிறேன்.சில நாட்கள் கடல் கடந்திருந்ததால் கருத்துரைக்க முடியவில்லை,மன்னிக்கவும்.
தொடர்கிறேன் ஐயா
10 August 2013 18:19 Delete// வாங்க ஐயா ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ! நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.
எத்தனை அனுபவங்கள் உங்களிடம் குவிந்து போய் இருக்கிறது அண்ணா! தொடருங்கள்!
11 August 2013 01:13 Delete// அப்படி எல்லாம் இல்லை மணீ சார்!ம்ம் நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.
தொடருங்கள்,நேசன்.தொடர்கிறேன்.சில நாட்கள் கடல் கடந்திருந்ததால் கருத்துரைக்க முடியவில்லை,மன்னிக்கவும்.
12 August 2013 11:39 Delete//ம்ம் இதுக்கு எல்லாம் ஏன் மன்னிப்பு ஐயா நேரம் கிடைக்கும் போது சந்திப்போம்!ம்ம் நன்றி வருகைக்கும் கருத்துரைக்கு.
Post a Comment